!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, August 4, 2025

ஆணவக்கொலை - ஏன், எதனால், என்ன செய்யவேண்டும்?



இது போன்ற செய்திகளை அதிகம் படித்தால் தலை சுற்றும். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு கொஞ்சம் அதிகமாகவே சுற்றும். காரணம், நான் கொஞ்சம் எதார்த்தவாதி. இப்போதிருக்கும் பரபரப்பு பரதேசிகளான பத்திரிகையாளர்களை போல் இவர்தான் குற்றவாளி என்றும், இதுதான் நடந்தது என்றும் உடனடியாக நான் முடிவெடுத்துவிடுவதில்லை.

தற்போது யூடுப் பத்திரிகையாளர்கள் எனும் புது பரதேசிகள் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. 10 மணிக்கு ஒரு சம்பவம் நடந்தால் 12 மணிக்கு உடனடியாக அதை பற்றி விவாதித்து, கருத்து எனும் பல வாந்திகளை எடுத்து நம்மை குழப்பி விடுவார்கள். உண்மை என்னவென்று கொஞ்சம் தாமதமாக வெளிவரும்போது, அதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு அவர்கள் வேறு ஒன்றில் வாந்தி எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இங்கே இந்த விஷயத்தில் சில தியரிகளும், லாஜிக்களும் முக்கியமாக கவனிக்கவேண்டியிருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.

முதல் கேள்வி தலித் சமூகத்தை பிற சமூகத்தினர் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

பல ஆயிரம் வருடங்களாக எல்லா ஜாதியினரும் குலத்தொழிலாக ஏதாவது ஒரு தொழிலை செய்தார்கள். அங்கே கணவன் வேலை செய்ய, மனைவி உதவியாளராக இருந்திருக்கிறார்கள். அதாவது எல்லோரும் அவர்கள் வீட்டிலேயே வேலை செய்திருக்கிறார்கள்.

இங்கே விதிவிலக்கு தலித் சமூகம் மட்டும்தான். இவர்களுக்கு வீட்டுக்கு வெளியே துப்புரவு மற்றும் கூலி வேலை என்ற நிலை இருந்திருக்கிறது. இங்கே கணவனுக்கு உதவியாகவோ அல்லது தனியாகவோ தலித் பெண்களும் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். இங்கேதான் சிக்கல் உருவாகிவிட்டது.

நீங்கள் வேலைக்கு போகும் இடத்தில் உங்களுக்கு முதலாளி என ஒருவர் இருப்பார். அவரிடம் இருந்து சம்பள முன்பணம், கடன் என ஏதாவது வாங்க வேண்டுமென்றால், நீங்கள் அவரிடம் குடும்ப கஷ்டத்தை சொல்லித்தான் வாங்கவேண்டும். இங்கே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அளந்துவிடலாம். ஆனால் முதலாளிகளிடம் கஷ்டத்தை சொன்னாலதான் காசை வாங்க முடியும். இது இயற்கை.

அந்த காலத்தில்  வேலைக்கு போன தலித் பெண்கள் தங்கள் முதலாளிகளிடம் காசை பெற என்ன சொல்லியிருப்பார்கள்? அதிலும் வேலைக்கு போகும் பெண் திருமணமானவளாகத்தான் இருப்பார்கள். நீங்களாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இங்கே நான் சில டெம்ப்லேட்களை சொல்கிறேன்.

'கணவன் குடும்பத்தை கவனிப்பதில்லை... குடித்துவிட்டு வந்து என்னை அடித்தார், எனவே நான் நேற்று வேலைக்கு வரவில்லை... கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார். எனவே நானும் குழந்தைகளும் ரொம்ப கஷ்டப்படுகிறோம். இப்படி பல விஷயங்களை அவர்கள் தங்கள் முதலாளிகளிடம்  காசு வாங்குவதற்காக சொல்லியிருப்பார்கள் அல்லது மிகைப்படுத்தியிருக்கலாம்.

இன்னொரு பக்கம் ஆண் தலித்துகள் துப்புரவு பணி செய்ததால் அங்கே 'சரக்கு' மற்றும் மன அழுத்தம் தவிர்க்கமுடியாது. அவர்களுக்கு சமூகத்தில் ஏற்பட்ட புறக்கணிப்பு அவமானம் போன்றவற்றால் அவர்களும் மனஉளைச்சலில் இருந்திருப்பார்கள். அந்த கோவத்தை அவர்கள் எங்கே கொட்டுவார்கள்? அவர்கள் வீட்டு பெண்களிடமே காட்டியிருக்கலாம். எனவே இங்கே தலித்துகள் பட்ட அவமானம் கடுமையானது என்றால் தலித் பெண்கள் பட்டது அதைவிட கொடுமையானது.

பிராமணர்களும் பிற ஜாதியினரும் எங்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை என்று புலம்பும் இதே தலித்துகள்தான் பெண்களை, அதாவது அவர்களது சக மனைவியை, ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

இங்கேயும் தலித் பெண்களுக்கு மனவேதனை. அதை அவர்கள் எங்கே சென்று கொட்டுவது?

இப்படி தலித் பெண்கள் வாயாலேயே அவர்களுடைய கணவர்களின் இப்படிப்பட்ட கதைகளை பிற ஜாதி மக்கள் பல நூற்றாண்டுகளாக கேட்டிருந்ததால், தற்போது காலம் மாறியிருந்தாலும், பெரும்பாலான மக்கள் இன்னமும் தலித் என்றாலே சந்தேகத்துடன் பார்க்கும் நிலை வந்துவிட்டது.

எனவேதான் தலித் வீட்டில் பெண் எடுத்தாலும் பரவாயில்லை ஆனால் தலித் ஆணுக்கு பெண் கொடுக்கக்கூடாது என்ற மனநிலைக்கு மக்களை வந்துவிட்டார்கள். இது காலத்தின் கோலம், இயற்கையின் விளையாட்டு. இங்கே யாரையும் குறை சொல்லமுடியாது.

அதற்காக மற்ற ஜாதியை சேர்ந்த ஆண்கள் எல்லாம் யோக்கியன் என்று அர்த்தமல்ல. அங்கே இந்த அளவுக்கு இருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக  அந்த வீட்டு பெண்கள் வெளியே வேலைக்கு போகவில்லை. எனவே அவர்களுடைய வண்டவாளம் வெளியே தெரியவில்லை. அவ்வளவுதான்.

சரி, தற்போதுதான் காலம் மாறிவிட்டதே. இனி என்ன பிரச்சினை என்று கேட்கலாம். மாற்றம் வரும், அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும் என்பதுதான் நிதர்சனம்.

இப்போதும் பெண்கள் படித்து வேலைக்கு போனாலும், எவ்வளவுதான் சம்பாதித்தாலும், வேலையை விட்டு வந்து அவர்கள்தான் சமைக்கவேண்டும் என்று ஆண் எதிர்பார்பதில்லையா. சமீபத்தில் ஒரு பெண் கணவனுக்காக சமைத்து வைத்துவிட்டு, `நான் ஒரு Working Maid' என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டாரே. அதே கதைதான்.  எல்லா இடத்திலும் மனமாற்றம் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது.

அதே சமயம் நானும் சில விஷயங்களை கவனித்திருக்கிறேன். தலித் மக்களின் வாழ்க்கை முறையை கடலூரில், சிறையில், இங்கே அகமதாபாத் தலித்துகளின் வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் கவனித்தால் ஒரு பேட்டர்ன் தெரிகிறது. அதை சொன்னால் தலைவலி வரும். அதை குற்றம் என்று சொல்லவும் முடியாது, எழுதவும் முடியாது, தாண்டி போகவேண்டியதுதான்.

இனி ஆணவக்கொலைகளை தடுக்க என்ன செய்யவேண்டும்?

இப்போதைக்கு எதுவும் செய்யமுடியாது. ஏனென்றால் இப்போது திராவிட கட்சிகள் திராவிட சக்கைகளாக மாறிவிட்டன. அதாவது கரும்பு ஜூஸ் குடித்திருக்கிறீர்களா. அங்கே கரும்பை மிஷினில் போட்டவுடன் அது ஜூஸாக வரும். மீண்டும் போட்டால் கொஞ்சம் குறைவாக வரும். அடுத்து இன்னும் கொஞ்சம் குறைவாக வரும் நான்காவது முறை அது சக்கையாகத்தான் இருக்கும். இப்போது அது போக வேண்டிய இடம் குப்பை தொட்டி.

திராவிட கட்சிகளின் வரலாறும் அப்படித்தான். பெரியார் கரும்பாக இனித்தார். அடுத்த தலைமுறைகள் வர வர இப்போது திராவிடம் என்பது நான்காவது தலைமுறையாக, சக்கையாக மாறிவிட்டது. அவர்களுக்கு ஓட்டையும் பணத்தையும் தவிர எதை பற்றியும் கவலை இல்லை. பெரியார் குலத்தொழிலை எதிர்த்தார். இப்போது திமுக குடும்ப கட்சியாக மாறிவிட்டது.

பெரியார் சுயமரியாதை என்றார். எடப்பாடியார் பதவி கொடுப்பீர்கள் என்றால் தலைவி என்ன, தலைவியின் தோழியின் காலில் கூட விழுவேன் என்று விழுந்தார். இவர்கள் பெரியாரின் தொண்டர்களாம். சரியான மாற்று இல்லாததால் இன்னும் இவர்களின் வண்டி ஓடுகிறது. 

*****

இந்த கவின் வழக்கில் ஐந்து ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும்? மக்கள் மறந்திருப்பார்கள். சுர்ஜித் தனது எதிர்காலத்தை தொலைத்துவிட்டு சிறையில் வாடலாம். ஆனால் சுபாஷினி காயங்களை மறந்துவிட்டு, பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க வேறு ஒரு துணையை, அவர் ஜாதியிலேயே தேர்ந்தெடுப்பார். இப்போது ஜெயித்தது கொலை செய்த சுர்ஜித்தானே? தன்னை பலி கொடுத்து தன் லட்சியத்தில் அவன் ஜெயித்துவிட்டான் என்றுதானே அர்த்தம். இதில் என்ன நீதி வாழ்கிறது?

இந்த கொலையில் அந்த பெண்ணுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் ஜெயித்தாலும் சுர்ஜித் ஜெயித்ததாகத்தான் அர்த்தம். எனவே இனி அந்த பெண்ணுக்கு திருமண வாழ்க்கையே கிடையாது என்ற நிலை வரவேண்டும். நானெல்லாம் முதல்வராக இருந்தால் எந்த பெண் ஒரு ஆணவ கொலைக்கு காரணமாக இருப்பாரோ அவருக்கு திருமண வாழ்க்கையே கிடையாது என்று தடுத்துவிடுவேன். ஜாதி வெறியில் ஊறிப்போன ஒரு குடும்பம் எந்த வகையிலும் வாரிசு இல்லாமல் நாசமாக போகவேண்டும்.

ஒரு வேளை அவர்களுக்கு மனமாற்றம் வந்து மீண்டும் ஒரு தலித்தையே மாப்பிள்ளையாக ஏற்க அவர்கள் சம்மதித்தால், அது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும். ஒருவேளை சிறையில் வாடும் சுர்ஜித்துக்கும் உலகம் புரிந்து, செய்த தவறை உணர்ந்திருந்தால், அவனையும் மன்னித்து விடுதலை செய்துவிடுவேன்.

இங்கே இன்னொரு முயற்சியையும் செய்யலாம். குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் சொல்கிறது. அதேபோல் எந்த ஜாதியினர் இது போன்ற ஆணவக்கொலைகளில் ஈடுபடுகிறார்களோ, எந்த மாவட்டத்தில் நடக்கிறதோ, அங்கே அந்த ஜாதியினருக்கு ஓட்டுரிமையை ஆறு ஆண்டுகளுக்கு ரத்து செய்யலாம்.

இதன் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அந்த ஜாதியை பார்த்து பயப்படவேண்டிய அவசியமும் இருக்காது, அந்த ஜாதியை சேர்ந்த அரசியல்வாதிகளும் தங்கள் எதிர்காலம் போய்விடும் என்ற பயத்தில் ஜாதி வெறியை கொஞ்சம் அடக்கி வைப்பார்கள்.

இங்கே சொல்லப்பட்ட கருத்துக்கள் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் ஒரு நபரை தண்டிப்பதை விட அந்த நபர் எந்த நோக்கத்துக்காக குற்றங்களை செய்கிறாரோ அது நிறைவேறாமல் தடுப்பதுதான் அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.

இதெல்லாம் நடக்கப்போவதில்லை. ஒருவேளை  இப்படியெல்லாம் நடந்தால் சமூகம் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் வந்து விழுந்த வார்த்தைகள் இவை.

0 comments:

Post a Comment