!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Wednesday, May 25, 2011

கனிமொழி வழக்கு: ஓபனிங் நல்லா இருக்கும், ஆனால்...


அரசியல் என்றாலே அது ஒரு சாக்கடைதான் என்றாகிவிட்டது. இங்கே அரசியல்வாதிகள் மட்டுமின்றி அது குறித்து விமர்சிப்பவர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் தப்பிக்க முடியாது. ஒரு தரப்பின் குறைகளை விமர்சிக்க ஆரம்பித்தால் உடனே நீ `அந்த பக்கத்து ஆளா?` என்ற விமர்சனம் வந்துவிடுகிறது. விமர்ச்சனங்களை வீசும் போது யார் முன்னே (அதிகாரத்தில்) இருக்கிறார்களோ அவர்கள் மீதுதான் அதிகம் படும் என்ற யதார்த்தத்தை பலர் புரிந்துகொள்வதில்லை. தற்போது ஜெயலலிதா அதிகாரத்திற்கு வந்து விட்டதால் இனி இவர் இந்த யதார்த்தத்திற்கு உட்படுத்தப்படுவார்.

அதேபோல் ஒப்பிடுதலும் அரசியலில் தவிர்க்க முடியாத ஓன்று. கலைஞரையும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கும் போது `இவர் மட்டும் யோக்கியமா?` என்று எதிர்த்தரப்பையும் சேர்த்துதான் விமர்சிக்க வேண்டியிருக்கும்.

Tuesday, May 17, 2011

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.

தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை வேகமாக பகிர்ந்துகொண்டார்கள். தற்போது எனக்கு `அரசியல் பதிவர்` என்ற பட்டமும் பதிவுலகில் கிடைத்திருப்பதால் லேட்டானாலும் தேர்தல் முடிவுகள் குறித்து எனது கருத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால்  நான் எதிர்பார்த்தது `அரசியல்வாதி` என்ற பட்டத்தைத்தான். டாக்டராக, இன்ஜினீயராக, வக்கீலாக, கலெக்டராக அல்லது பணக்காரனாக வேண்டும் என்பதுதான் பலரின் கனவாக இருக்கும். ஆனால் அரசியல்தான் விவரம் புரியாத வயதிலிருந்து என் சிந்தனையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.ஜெயிலுக்கு போனால்தான் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று நினைத்த போது, அந்த முயற்சியையும் துணிந்து எடுத்தேன். சரி, என் கதையை இன்னொருநாள் பார்ப்போம். இனி அரசியல்..

Saturday, May 14, 2011

தேர்தல் முடிவுகள்: இது வலைபதிவு நண்பர்களுக்கு.

திமுகவை எதிர்ப்பதில் போராடிய நண்பர்களுக்கெல்லாம் இனிப்பை பகிர்ந்து கொள்ள ஆசை. அது சாத்தியமில்லாததால் இப்படி.
    

இது திமுக படுதோல்வி அடைந்ததற்கு 

ஜனநாயக நாடுகளின் சர்வாதிகாரமும், சர்வாதிகாரிகள் விரும்பும் ஜனநாயகமும்.தீவிரவாதப்பாதையில் செல்பவர்களால்  தங்கள் நோக்கத்தை அடையவும் முடியாது அதேசமயம் அவர்களுக்கு அழிவும் நிச்சயம் என்பதை ஒசாமாவின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

ஒசாமா விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நேர்மையானவராக இருந்தும் அவருடைய ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெறவில்லையா? தேர்தல் செலவினங்கள், கூட்டணி ஆட்சி என்று பல நிர்பந்தங்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு இருகிறதே! அதேபோல் பாகிஸ்தான் அரசியலையும் நாம் கொஞ்சம் யதார்த்தமாக புரிந்து கொள்ள முயற்சிப்போம். அவர்களுக்கும் பல நிர்பந்தங்கள் இருக்கலாம்.  

தவறான பாதையில் சென்று விட்ட பிறகு, சினிமாவில் சில வில்லன்கள் திருந்துவது போல் திடீரென்று திருந்திவிட முடியாது. மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரும். அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது அமெரிக்காவின் கடந்த கால தேவைக்காகவோ இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்துவிட்ட பாகிஸ்தான், திடீரென்று அதை அறுத்துவிட முடியாது. விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே இருதரப்பையும் திருப்தி செய்யும் போக்கை பாகிஸ்தான் கடைப்பிடித்து வந்தது. ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா, கடைசியில் அது வந்தேவிட்டது.

இந்த பதிவு ஒசாமா இறந்ததை பற்றி அல்ல. மேலும் பல ஒசாமாக்கள் உருவாகாமல் தடுப்பதை பற்றி.  

Monday, May 2, 2011

சிறை அனுபவம்: திரும்பி பார்க்கிறேன்.நான் சிறையிலிருந்து விடுதலை ஆகி ஆறு மாதம் ஆகிவிட்டது. சிறைகள் குற்றவாளிகளை தண்டிக்காமல்/திருத்தாமல், அவர்களை வளர்த்து விட்டுகொண்டிருந்ததை பார்த்த போது இதைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்ற வெறி இருந்தது. இந்தியாவில் தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவதே அபூர்வம். அப்படியே தண்டனை கிடைத்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிக்கும் விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சிறையைப்பற்றி நாம் தெரிந்து கொண்டதை எழுதுவோம் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சிறையைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது எனக்கும் போரடித்தது. அத்துடன் தேர்தலும் வந்துவிட, எனது கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. எனவே அரசியல் குறித்தும் எனது பார்வைகளை பகிர்ந்துகொண்டேன். தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் எனது சிறை வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். சிறை வாழ்கையில் எழுதுவதற்கு பல அனுபவங்கள் இருக்கிறது. அதில் ஓன்று இங்கே.