கூடங்குளம் மீண்டும் பரபரப்பாகிவிட்டது. இது குறித்து சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இருந்தாலும் செய்திகளில் சிலவற்றை மட்டுமே உண்மையாக இதன் எதிர்பாளர்கள் பரப்புரை செய்யும்போது, அதற்கு பதில் எழுத வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.
அணுஉலை விற்கும் நாடுகள் தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவர்களுக்கு ஒரு கொள்கை என ஓரவஞ்சனை செய்யவில்லை. எந்த ரிஸ்கை அவர்கள் எடுக்கிறார்களோ அதேதான் நமக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை நாட்டின் முன்னணி கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. எனவே நாடு இந்த யதார்த்தமான பாதையிலிருந்து விலக முடியாது.



