அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Sunday, September 6, 2026
கச்சத்தீவு - என்ன நடந்தது ?
அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
Wednesday, September 2, 2026
வா மணி வா
Saturday, August 29, 2026
டில்லியை நோக்கி விஜய்..
....தமிழ்நாட்டில் ஸ்டாலினை நம்பி பல கட்சிகள் ஏமாந்து (மோசம்) போனதைப் போல், டெல்லியில் ராகுல் காந்தியை நம்பி ஏமாற யாரும் தயாராக இல்லை. எனவே, தவெக - காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தொகுதிப் பிரச்சினை காரணமாக தவெக இவர்களைக் கழற்றிவிடலாம்; மற்ற உதிரி மற்றும் புதிய கட்சிகளுக்குக் கௌரவமான தொகுதிகள் கிடைக்கலாம்.
பிற தென் மாநிலங்களில் தவெக தனியாகவோ அல்லது அங்குள்ள பிற கட்சிகளுடனோ சேர்ந்து ஒரு மூன்றாவது அணியாக மாறலாம்...
இது அந்த பதிவின் கடைசி பகுதி.
இப்போது இதுதான் நடக்கும் என்பது உறுதியாகிறது. ஒரு இடத்தைப் பிடித்துவிட்டால், அடுத்த இலக்கை நோக்கிப் பயணிப்பதைப் போன்றதுதான் இது. ஆனால் இது உடனடியாக சாத்தியமாகுமா?
Wednesday, August 26, 2026
பறக்காத பரந்தூர் விமான நிலையம்.
Sunday, August 23, 2026
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : இங்கேயும் கிரீமி லேயர் வரும்
Saturday, August 22, 2026
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்; இது சரியா?
Wednesday, August 19, 2026
திருமாவளவன் - இவரும் திருந்தமாட்டார்
Sunday, August 16, 2026
உதயநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும்
Saturday, August 15, 2026
இவர்கள் (விவசாயிகள்) திருந்தவே மாட்டார்கள்!
Tuesday, August 11, 2026
மரிய வில்சன் - இது ரொம்பவே ஆபத்து
மரிய வில்சன் தற்போது பிரபலமாகிவிட்டார். நல்ல விஷயத்துக்காக என்றால் பாராட்டலாம். ஆனால், இவர் அடாவடி பேர்வழியாக, ரவுடியாகப் பிரபலமாகியிருக்கிறார்.
அதேசமயம், இதை ஒரு வகையில் குறை சொல்ல முடியாது. முன்கோபக்காரர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள் இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் கோபம் வர வேண்டும், அதுதான் மனித இயல்பு.
இவருடைய தனிப்பட்ட குடும்ப உறவில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்காக இவர் அடிதடியில் இறங்கியதை நாம் பார்த்தோம். அங்கே நியாயம் யார் பக்கம் என்பது நமக்குத் தெரியாது; அதுமட்டுமின்றி, அது அவர் அரசியலுக்கு வரும் முன் நடந்த சம்பவம். எனவே, அதை ஏதோ ஒரு வகையில் மன்னித்துக் கடந்துவிடலாம்.
Saturday, August 8, 2026
கேரளம் ஒரு புது அபார்ட்மெண்ட்

Friday, August 7, 2026
வார்த்தைகளில் இருக்கும் கொழுப்பு ...
நான் ஏற்கனவே 'ஒருவேளை இப்படியும் இருக்குமோ?' என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அது உண்மைதான் போலிருக்கிறது; ஆதவ் அர்ஜுனின் சட்டமன்ற பேச்சு அதை உறுதிப்படுத்துகிறது. இது வெளிப்படையாகக் கொடுத்த பணமாக இருக்கலாம். கருப்பாக எவ்வளவு கொடுத்தாரோ?
உதயநிதி "எங்கப்பா யார் தெரியுமா?" என்று அதிகாரத் திமிரில் ஏதோ ஓர் இடத்தில் விஜய்யிடம் தெனாவட்டாகக் கேட்டிருக்கிறார்.
இந்த பக்கம், அப்பா—அதாவது ஸ்டாலின்—மார்ட்டினிடம் "உங்களுக்கு நான் ஏதாவது செய்கிறேன்" என்று சொல்லி 900 கோடி வாங்கி நாமம் சாத்திவிட்டார். இந்தச் செய்தி சட்டமன்றத்திலேயே பதிவாகிவிட்டது.
Wednesday, August 5, 2026
உதயநிதியின் ‘அந்த’ பேச்சு
கட்ட துரைக்கு (உதயநிதி) நேரம் சரியில்லை
Saturday, August 1, 2026
விஜய் கர்நாடகா போகிறாராம்!

Tuesday, July 28, 2026
கரூர் தீர்ப்பு — இது நல்ல விஷயம்தான்!

Friday, July 24, 2026
நீட்- என்ன செய்யலாம்?
Saturday, July 18, 2026
மகாத்மா காந்தி, பெரியார், இப்போது விஜய்
Thursday, July 16, 2026
பழனி முருகனுக்கே பஞ்சாமிர்தமா?
Saturday, July 11, 2026
இவர்களுக்கு அரசு வேலையா?
Sunday, July 5, 2026
இந்த வியாதிக்கு மருந்தில்லை
Thursday, July 2, 2026
இதுதாண்டா அரசியல்!
Saturday, June 27, 2026
சோஃபா (கவுண்டமணி) மாடல்
Friday, June 26, 2026
மோடியின் `நீண்ட நாள் பிரதமர்` சாதனை?
Tuesday, June 23, 2026
பேசுங்கள் CM சார்...
Wednesday, June 17, 2026
தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையும், மிஸ்டர் கோபிநாத்தும்
Friday, June 12, 2026
மார்ட்டின்.... ஒருவேளை இப்படி இருக்குமோ?
இரண்டே காரணங்கள்தான். திராவிடக் கட்சிகளின், முக்கியமாக திமுகவின் தியரியின்படி, நீங்கள் அவர்கள் பக்கம் இருந்தால் சமூகப் போராளி, அறிவாளி, நல்லவர், நாலும் தெரிந்தவர். ஆனால், எதிர்ப்பக்கம் போய்விட்டால் கதை முடிந்தது; இது அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
Saturday, June 6, 2026
அண்ணாமலை சாதிப்பாரா?
Friday, June 5, 2026
ரொம்ப யோசிக்கறாங்களாம்...!
அதிமுக - பிஜேபி கூட்டணி இப்படித்தான் கடும் இழுபறியில் மிக விரைவாக முடிவெடுத்தார்கள். கடைசியில் இருவருக்கும் நஷ்டம். காங்கிரஸ் - திமுக கூட்டணியும் இப்படித்தான் இழு இழு என இழுத்து விரைவாக கூட்டணி அமைத்தார்கள். அங்கேயும் இருவருக்கும் கோவிந்தாதான். தேமுதிக ஒரு வருடமாக யோசித்து விரைவாக முடிவெடுத்தார்கள். அதுவும் அதோகதி.
Thursday, May 28, 2026
ஐயா விஜய் சாமி நியூஸ் கொடுங்க... ஊடகவியலாளர்கள்!
தமிழகத்தில் தற்போது இந்த குரல்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்துவிட்டன. இது இந்தியா முழுவதுக்கும்னா வியாதி என்றாலும் தமிழ்நாட்டில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற முதல்வர் விஜய்யை பார்த்து டில்லியில் இருந்த ஊடகவியாளர்களின் அந்த குரல், எனக்கு நிஜமாக தெருக்களில் அடிக்கடி கேட்கும் `அந்த குரல்களை` நினைவுபடுத்திவிட்டது.
ஏன் இந்த நிலைமை?
முதல் காரணம், தமிழகத்தில் கல்வி அறிவு அதிகம். அதைவிட அதிகம் வாசிப்பு ஆர்வம். ஒரு காலத்தில் பத்திரிக்கைகளாக இருந்த அவை தற்போது கூடுதலாக இணையமாகவும் மாறி இருக்கிறது. எனவே அவர்களுக்கு செய்தி என்ற தீனி அடிக்கடி தேவை.
Tuesday, May 26, 2026
தவெக வை நோக்கி.. வரிசையில் மற்ற எம் எல் ஏக்கள்...
முடிவெடுப்பது எப்படி முக்கியமோ அதேபோல் அதை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும், அப்போதுதான் அது பலனளிக்கும்.
காங்கிரஸ், விசிக போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே விஜய் பக்கம் திரும்பியிருந்தால், இன்று கணிசமான எம் எல் ஏக்களும் மேலும் பல மந்திரிகளும் கிடைத்திருக்கும், கோட்டைவிட்டுவிட்டார்கள்.
இப்போதும் அதே நிலைதான். தற்போது தவெக வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளும் மட்டமான அரசியல் செய்யும் கட்சிகள் அல்ல, எனவே விஜய்க்கு ஆபத்து இல்லைதான். இருந்தாலும் ஒரு நிரந்தர ஆட்சியை உறுதி செய்ய, அடுத்த தேர்தலுக்கு முன் மேலும் ஒட்டு வங்கியை கூட்டுவதற்கும், சில `இழுபறிகள்` விஜய்க்கு தேவை. இதைத்தான் எல்லா கட்சிகளும் செய்தன, செய்கின்றன. எனவே அரசியல்வாதியாக விஜய்யும் அதைத்தான் செய்வார்.
Saturday, May 23, 2026
இனி விஜய்யை எதிர்க்க வேண்டும்
Tuesday, May 19, 2026
திராவிட கட்சிகள்.....கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு
Sunday, May 17, 2026
கட்டாயப் போக்குவரத்துச் சேவை
Sunday, May 10, 2026
எது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?
விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சை எழுந்தபோது, இதற்கான சம்பிரதாய நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று நானே யோசித்தேன். இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில் இதில் ஒரு குழப்பம் இருப்பது இயல்புதான். ஆனால், இதற்கான சரியான வழிமுறை என்ன?
Saturday, May 9, 2026
தேர்தல் சீர்திருத்தங்கள்: அளவுச் சாப்பாடு
Wednesday, May 6, 2026
விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்
டிவி சீரியல்களில் யாரோ ஒரு பெண், ஒரு குடும்பத்தைப் பற்றி ஏதாவது போட்டுக் கொடுத்து அவர்களின் நிம்மதியைக் கெடுக்கப் பார்ப்பார். இப்போது அரசியலில் ஊடகவியலாளர்கள் அந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இது விஜய்யின் வெற்றியா?
Tuesday, May 5, 2026
தேர்தல் பாடம் 1, 2026
இந்தத் தேர்தல் எவ்வளவோ பாடங்களைச் சொல்லியிருக்கிறது. அதில் ஒன்று, இனி அரசியலில் ஜெயிக்க நினைக்கும் தலைவர்கள் பத்திரிகையாளர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கக் கூடாது என்பதுதான்.
அரசியலில் வாயால் மட்டுமே அரசியல் செய்து வீணாய்ப் போன அரசியல்வாதிகளைப் போல், இவர்களும் வாயை மட்டுமே வளர்த்திருக்கிறார்கள். அந்த அரசியல் வியாதிகளைப் போலவே, இந்தத் தற்பெருமை பேசும் பத்திரிகையாளர்களின் கணிப்பும் முட்டாள்தனமாக இருந்திருக்கிறது.
தற்போது தோற்ற அரசியல்வாதிகளுக்குக் குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எதிர்காலம் போய்விட்டது. ஆனால், இந்தப் பத்திரிகையாளர்கள் அதே வாயை வைத்துக்கொண்டு மீண்டும் பல உருட்டல்களை உருட்டி, விஜய்க்கு ஜால்ரா அடித்துப் பிழைத்துக்கொள்வார்கள். இதுதான் அவர்களின் பலம்.
த.வெ.க ஜெயிக்கும் எனக் கணிப்பது வேறு; ஆனால், ஒரு முதல்வரே தோற்கும் அளவுக்கு மக்களிடையே வெறுப்பு இருக்கிறது என்பதைக் கணிக்க முடியாத பத்திரிகையாளர்களை என்ன சொல்வது?
இதற்கு இரண்டே பதில்கள்தான்: ஒன்று, அவர்கள் விலை போய்விட்டார்கள். இரண்டு, அவர்களும் நம்மைப் போலவே சராசரி மனிதர்கள்தான்; நன்றாகப் பேசத் தெரிந்தவன் திருமணப் புரோக்கராக இருப்பதைப் போல, இவர்கள் தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். இந்த உண்மை நமக்குத் தெரிகிறது, அவர்களுக்குத் தெரியவில்லை.
இனி அவர்களின் பேட்டிகளைக் கேளுங்கள்; சுவாரசியமாக இருக்கும். எங்களுடைய கணக்கு எங்கே தப்பாகிவிட்டது என்று (சப்பைக் கட்டு) சொல்லுவார்கள். அதுவும் நம்புகிற மாதிரியே இருக்கும். ஆனாலும், உலகம் இவர்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறிக்கொண்டிருக்கும்.
மொத்தத்தில் இவர்கள் இருவரும் திருந்தப்போவதில்லை.
Monday, May 4, 2026
யோவ்.. நாங்களெல்லம் எம் ஜி ஆர், ஜெயலிதாவையே பார்த்தவங்க...
Saturday, April 25, 2026
ரிவால்வர் (விஜய்) ரீட்டா
Wednesday, April 22, 2026
பி.டி.ஆர் vs சுந்தர் சி
Monday, April 20, 2026
மகளிர் மசோதா தேவையா?
அமெரிக்கா ஒரு பேப்பர் டைகரா?
Friday, April 17, 2026
டிலிமிடேஷன்
Tuesday, April 14, 2026
சாத்தான்குளம் கொலை வழக்கு - இது நீதியா?
இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கருத்து வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துப் போகவில்லை. என்றாவது ஒரு நாள் வானத்தைப் பார்த்தால் அங்கே சூரியனும் சந்திரனும்தான் தெரியும். தினமும் இடைவிடாமல் கவனித்தால் மட்டுமே, ஒருவேளை பூமியும் அப்படி இருக்குமோ என்ற சிந்தனை வரும். தொடர்ந்து நாட்டு நடப்புகளைக் கவனிப்பதால், பல விஷயங்களில் என் பார்வை மாறுகிறது. சாத்தான்குளம் வழக்கிலும் அப்படித்தான்.
Saturday, April 11, 2026
திமுகவின் புள்ளிவிவர பித்தலாட்டம்
இந்த வேலையை எல்லா கட்சிகளும் செய்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதாலும், அவர்களுடைய சமூக ஊடகப் பிரிவினரின் அட்ராசிட்டி கொஞ்சம் அதிகமாக இருப்பதாலும், அவர்களுடைய வண்டவாளத்தை முதலில் பார்ப்போம்.
Thursday, April 9, 2026
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல். மீண்டும் போரா?
மீண்டும் போர் செய்திதான். இஸ்ரேல் லெபனானில் குண்டு மழை பொழிந்து இருக்கிறது. கணிசமான மக்கள் இறந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் இங்கே பொருந்ததாம். இது என்ன குழப்பம்?
வழக்கமாக தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலாகப்போகிறது என்பது தெரிந்தவுடன் நம் ஊர் அமைச்சர்கள் கடுமையாக `உழைத்து` பல திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவார்கள்.காரணம் உங்களுக்கு தெரியும். அதே கதைதான் இங்கேயும். எல்லா போர் நிறுத்தங்களும் இப்படித்தான். கடைசி நிமிட இலக்கை அந்த ஒப்பந்தத்தை மீறி முடித்துக்கொள்வார்கள்.
Wednesday, April 8, 2026
ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது
Saturday, April 4, 2026
அமெரிக்கா -2 ஈரான் 0
Tuesday, March 31, 2026
செங்கோட்டையன் முதல்வரா?

சமீபத்திய தேர்தல் தொடர்பான செய்திகளை கவனித்தால் ஒரு வேளை இப்படியும் நடக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. சில மாதங்களுக்கு முன், `விஜய்யின் தவெக எனும் இ -காமர்ஸ் நிறுவனம்` என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதாவது தனிக்கட்சி ஆரம்பிப்பது என்பது தற்போது அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டது. எனவே இப்படி போக முடியாதவர்கள் விஜய்யின் தவெக வை ஒரு பிளாட்பாரமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என எழுதியிருந்தேன். அது தற்போது நடக்கிறது.













































