இப்போதெல்லாம் திடீர் திடீரென்று கச்சத் தீவு செய்திகளில் வந்துவிடுகிறது. இந்த விஷயத்தில் கலைஞரும் காங்கிரசும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என அரசியலாக்கப்படுகிறது. எனக்கும் கலைஞரை பிடிக்காதுதான். திமுக தோற்றதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டவன்தான் நான். இருந்தாலும் நியாயம் என்று வந்துவிட்டால் நான் கண்ணை மூடிக்கொண்டுதான் தீர்ப்பு எழுதுவேன்.
அந்த வகையில் இங்கே நான் கலைஞரையோ காங்கிரஸையோ குற்றவாளியாக பார்க்கவில்லை. அவர்கள் அன்று இருந்த சூழ்நிலையின் அடிப்படையில் எது சரியானதோ, அந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறார்கள். காலம் அதன் பின்னர் பல தலைவலிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.
கச்சத் தீவு குறித்த முதல் புரிதல் சில ஆண்டுகளுக்கு முன் கிடைத்தது. மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளருக்கும், தமிழக அரசுக்கும் அந்தக் காலகட்டத்தில் நடந்த ஒரு தகவல் பரிமாற்றத்தை அண்ணாமலை வெளியிட்டார். அந்தச் சமயத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு கட்டுரையைப் படித்தேன். கிட்டத்தட்ட புரிந்துவிட்டது.
அந்தக் கருத்துப் பரிமாற்றத்தின் சாராம்சம் இதுதான். இலங்கை கச்சத் தீவின் உரிமை கோரி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருப்பதாகவும், அப்படி வழக்குத் தொடுத்தால் இலங்கை சின்ன நாடு என்ற அடிப்படையில் ஒருவேளை தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாகக்கூடும், எனவே நாமே உரிமையை விட்டு கொடுத்துவிடுவது நல்லது என்றும், அதற்குப் பதில் வேறு சில இடங்களை இலங்கையிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அப்போது கலைஞரிடம் சொல்லப்பட்டதாம். இது அந்த செய்தி.
கலைஞர் அப்போது முதலமைச்சர். மாநில உளவுத்துறை மூலம் அவரும் ஆதாரங்களைத் தேடியிருப்பார். அது பலவீனமாக இருந்திருக்கும். எனவே அந்த சுழ்நிலைக்கு உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டார். அது தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால், இதைச் சில ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட முடியுமா என்று அவர் மத்திய அரசைக் கேட்டிருக்கிறார். அது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே ஒரு அரசியல்வாதியாக சட்டமன்றத்தில் சம்பிரதாய எதிர்ப்பைப் பதிவு பண்ணிவிட்டார். இதுதான் நடந்தது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்தத் தீவு ஆரம்பத்தில் இலங்கை, பின்னர் ராமநாதபுரம் ஜமீன், மறுபடியும் (பிரிட்டிஷ்) இலங்கை வசம் எனப் போயிருக்கிறது.
கிரிக்கெட்டில் சில ரன் அவுட்களைக் கண்டுபிடிப்பது சிரமம். மூன்றாவது நடுவரிடம் போகும். அவர் டிவியில் பயங்கரமான ஸ்லோமோஷனில் பார்த்துத் தீர்ப்பைச் சொல்லுவார். இது அந்த மாதிரி வழக்கு போலிருக்கிறது. நானும் அப்படி ஒரு நடுவராக மாறி, கூகுள் மேப் மூலம் கச்சத் தீவைக் கண்டுபிடித்து, ஜூம் இன், ஜூம் அவுட் செய்து பார்த்தேன். அது இந்தியா, இலங்கை இரண்டுக்கும் மிகச்சரியாக நடுவில் இருக்கிறது. என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சரி, எதற்கு தலைவலி என்று AI-யிடம் சரணடைந்தேன்.
இரண்டு நாடுகளில் எது கச்சதீவுக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறது என்று AI-யிடம் கேட்டேன். இலங்கையின் Delft Island (15 கிலோமீட்டர்) தான் வருகிறதாம். ராமேஸ்வரம் 30 கிலோமீட்டராம். எனவே நெருக்கம் என்ற அடிப்படையில் இலங்கை உரிமை கோருகிறார்கள் போலிருக்கிறது. பிரிட்டிஷ் காலத்திலேயே பிரச்சினையாகி, தீர்க்காமல் அப்படியே இருந்தது.
சரி, எப்படி இது ராமநாதபுரம் ஜமீனுக்கு வந்தது? தெரியவில்லை. சும்மா ஏதாவது கணிக்கலாம். அந்தக் காலத்தில் இலங்கையை ஆண்டவர்கள் அவசரத்துக்கு தாலியை அடமானம் வைப்பதுபோல் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் கொடுத்திருக்கலாம். இந்தப் பக்கம் ஆந்திர மன்னர்களோடு சோழ மன்னர்கள் பெண் எடுத்து, பெண் கொடுத்து நெருக்கமான உறவாக மாறினார்களோ, அதேபோல் இந்த ராம்நாத் ஜமீனுக்கும் அன்றைய இலங்கை மன்னர்களுக்கும் உறவுகள் இருந்திருக்கலாம். 'அட, வைச்சிக்குங்க மாப்ள' என்று ஜமீனுக்கு இந்தத் தீவைக் கொடுத்திருக்கலாம். தெளிவான தகவல்கள் இல்லை.
அதேசமயம் இலங்கை சின்ன நாடு, அவர்களால் நமக்கு ஆபத்தில்லை. சீனாவும் பாகிஸ்தானும் பிரச்சினையாக இருந்த அந்தக் காலகட்டத்தில், இந்தப் பக்கமும் ஒரு எதிரி தேவையில்லை என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம். அதுமட்டுமின்றி, ‘யோவ்.. அது என் கைக்கு எட்டுற தூரத்துல இருக்குய்யா’ என்று அவர்கள் சொன்னதிலும் ஒரு லாஜிக் இருந்ததால், கச்சத் தீவு மீதான உரிமையை இந்தியா வலியுறுத்தவில்லை போலிருக்கிறது.
இதை கொடுத்த காலகட்டத்தில் பெரிய தலைவலிகள் இல்லை. அங்கே இந்திய மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளைக் காய வைக்கவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இலங்கைக்குள் ஈழம் என்ற கோரிக்கை வந்து அது போராக மாறிய பின்தான் தலைவலி ஆரம்பித்தது. இப்போது அங்கே போகும் மீனவர்களை மீனவர்களாகப் பார்க்கவில்லை; ஈழப் போருக்கு உதவும் நபர்களாகப் பார்க்க ஆரம்பித்த பின்னர்தான் இது இடியாப்பச் சிக்கலாக மாறியது.
அதைவிட மிகப்பெரிய தலைவலி மக்கள் தொகைப் பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எல்லோருக்கும் தேவைகள் அதிகரிக்க, அவர்களுக்கே மீன் பற்றாக்குறை என்ற சூழ்நிலையில், தமிழக மீனவர்களும் வழிதவறி (இந்தச் செயற்கைக்கோள் உலகத்திலும்) அவர்கள் எல்லைக்குள் நுழைவதால் வரும் தலைவலி இது.
AI-யிடம் சில தகவல்களைக் கேட்டபோது, 'நீங்கள் ஸ்டுடென்ட்டா, மேலும் சில சர்வதேச நாடுகளுக்கிடையேயான தீவு குறித்த வழக்குகள் இருக்கிறது பார்க்கிறீர்களா?' என கேட்க, பள்ளிக்கு சென்று படிக்காத குறையை, இப்படி வரலாறு படித்து தீர்ப்போம் என்று அந்த வழக்குகளையும் கவனித்தேன்.
சீனா-பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா-தைவான்-ஜப்பான் போன்ற நாடுகளுக்கிடையே இது போன்ற தலைவலிகள் இன்னமும் இருக்கிறதாம். இந்தச் செய்திகளில் மேய்ந்ததில் என்னுடைய புரிதல் இதுதான்.
அதாவது, தீவுகளை மக்கள் வசிக்கும் தீவுகள், வசிக்க முடியாத தீவுகள் என இரண்டாகப் பிரித்துவிட்டார்கள். மக்கள் வசிக்கும் தீவு என்றால், அந்தத் தீவு யார் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்தது, மக்கள் யாருக்கு வரி செலுத்தினார்கள் என்ற அடிப்படையில் உரிமை கோருவது.
மக்கள் வசிக்க முடியாத தீவு என்றால், இங்கே நெருக்கம் (proximity) எந்த நாட்டுடன் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்குச் சொந்தம் எனத் தோராயமாக தெரிகிறது. இது இலங்கைக்கு சாதகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, சில காலம் ஜமீன் வசம் இருந்தாலும், அதன் முன்னரும் பின்னர் கடைசியிலும் (பிரிட்டிஷ்) இலங்கை கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கிறது. நெருக்கம்+அதிகாரம் என இரண்டு விஷயங்களில் அவர்கள் பலமாக இருக்கிறார்கள். இந்தியாவுக்கு அது சில காலம் நம் கட்டுபாட்டில் இருந்தது என்பது மட்டும்தான்.
இந்த தியரி அந்தமான் நிகோபார் தீவுகளில் வேலை செய்யாது. அது இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. மிக அருகில் இருக்கும் நாடு மியான்மர். ஆனால் அவர்கள் இந்த proximity தியரியை பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அங்கு அவர்களின் அதிகாரம் எப்போதும் இருந்ததில்லை. மக்கள் வசிக்கும் தீவு, நீண்ட கால (பிரிட்டிஷ்) இந்திய கட்டுப்பாட்டில் இருந்ததால் அது இந்தியாவுக்கு வந்துவிட்டது. அந்த நிலைமை கச்சதீவில் இல்லை.
இது இந்தியா எடுத்த தவிர்க்க முடியாத ஒரு முடிவுதான். எனவே எதார்த்தத்தை புரிந்து கொண்டு இந்த அநாகரிக அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதுதான் சரி.

0 comments:
Post a Comment