!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, August 22, 2026

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்; இது சரியா?


முதல்வர் விஜய் எடுத்த சில முடிவுகளில் எனக்கு அதிருப்தி இருந்தாலும், இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், இது குறித்த விமர்சனங்களை கவனித்தபோது, பாமர மக்களிலிருந்து அறிவுஜீவி அர்னால்ட்கள் வரை எல்லோரும் இதைக் குறை சொல்கிறார்கள். கொஞ்சம் எதார்த்தமாகப் பேசும் சவுக்கு சங்கரும் இதைக் குறை சொல்லியிருந்தார். நான் எல்லாவற்றையும் கவனிப்பேன். ஆனால், மற்றவர்கள் கருத்து எப்படி இருந்தாலும், என் வழி தனி வழி.

நான் இதை ஆதரிக்கிறேன். ஏன்?

Wednesday, August 19, 2026

திருமாவளவன் - இவரும் திருந்தமாட்டார்

அரசியல் களம் எவ்வளவோ மாறிவிட்டது. கூட்டம் காட்டுவதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி எல்லாம் நிறையவே பெரும் எண்ணிக்கையில் கூட்டங்களை வரவழைத்துக் காட்டியிருக்கின்றன.

அதேபோல் திராவிட கட்சிகளிலும் நிறையப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். சீமானைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்; அவர் ஒரு இரண்டாம் கோயபல்ஸ். ஆனால், இந்த பேச்சுத்திறமை மக்களிடம் எடுபட்டதா? அதிகம் பிரச்சாரம் செய்யாத, மேடைப்பேச்சே தெரியாத விஜய்தான் வெற்றி பெற்றார்.

இப்படி இன்றைய உலகமும் மக்களின் பார்வையும் மாறிவிட்ட சூழ்நிலையில், இன்னமும் அந்த உளுத்துப்போன (உளுந்தூர்பேட்டை) மாநாடு போன்றவை அரசியல் கட்சிகளுக்குத் தேவையா?

Sunday, August 16, 2026

உதயநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும்

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ என்று ஒரு திரைப்படம். அதில் அவர் காவலராக நடித்திருப்பார். வழக்கம்போல் பணக்கார அதிகார வர்க்க அப்பாக்களால் வளர்க்கப்பட்ட மூன்று தறுதலைகள் வில்லன்களாக இருப்பார்கள். பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை காணொளியாகவும் எடுத்து வைத்து, அதையும் காவலரான ஜெயம் ரவியிடம் பெருமையாகக் காட்டுவார்கள். அதைப் பார்த்துக் கொதித்தெழும் ஜெயம் ரவி அவர்களை அடித்து நொறுக்குவார்; பின்னர் லாக்கப்பில் அடைப்பார்.

இது திரைப்படம். இந்த கனவு உலகத்தில் மட்டும்தான் நேர்மையான, தைரியமான காவலர்கள் இருப்பார்கள். அவர்களால் அநியாயத்தைப் பொறுக்கவே முடியாது. தங்கள் அதிகாரியையே 'ஏய்' என சவால் விட்டு ஜெயிப்பார்கள். ஆனால் நிஜத்தில் குனியச் சொன்னால் படுக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். இங்கேயும் நேர்மையின் சிகரங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் வேறு வகை.

Saturday, August 15, 2026

இவர்கள் (விவசாயிகள்) திருந்தவே மாட்டார்கள்!

வாரத்தில் 7 நாட்கள் தான் இருக்கின்றன; ஆனால், 8 பரபரப்புச் செய்திகள் வருகின்றன. அதிலும் இந்த யூடியூப் ஊடகங்கள் வந்து எல்லாரும் ஆளுக்கொரு கடையை திறந்த பிறகு, "இன்று எதைப் பரபரப்பாக்கலாம்?" என்று விதவிதமாக யோசித்து எதையாவது ஒன்றைக் கிளப்பிவிடுகிறார்கள்.

"சட்டப்பேரவையில் ஆங்கிலத்தில் மூச்சுவிடாமல் பேசிய பாமக கணேஷ்குமார்" என்ற தலைப்பில் ஒரு காணொளி (மாலைமுரசு) கவனித்தேன். "இப்பதானே மரிய வில்சன் சிக்கினார், அதற்குள் இவர் யார் புதிதாக வந்து சிக்கியிருக்கிறார்?" என்று பார்த்தால், “Small is beautiful” என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே அவர் சட்டசபையில் பேசியிருக்கிறார்! அதற்கு இப்படி ஒரு தலைப்பு. பார்வையாளர்களை கவர எந்த எல்லைக்கும போவார்கள் போலிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், கடுமையான போட்டி என எல்லா துறையும் இப்படி திண்டாடுகிறது.

Tuesday, August 11, 2026

மரிய வில்சன் - இது ரொம்பவே ஆபத்து

மரிய வில்சன் தற்போது பிரபலமாகிவிட்டார். நல்ல விஷயத்துக்காக என்றால் பாராட்டலாம். ஆனால், இவர் அடாவடி பேர்வழியாக, ரவுடியாகப் பிரபலமாகியிருக்கிறார்.

அதேசமயம், இதை ஒரு வகையில் குறை சொல்ல முடியாது. முன்கோபக்காரர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று அர்த்தமல்ல. இவர்கள் இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் கோபம் வர வேண்டும், அதுதான் மனித இயல்பு.

இவருடைய தனிப்பட்ட குடும்ப உறவில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்காக இவர் அடிதடியில் இறங்கியதை நாம் பார்த்தோம். அங்கே நியாயம் யார் பக்கம் என்பது நமக்குத் தெரியாது; அதுமட்டுமின்றி, அது அவர் அரசியலுக்கு வரும் முன் நடந்த சம்பவம். எனவே, அதை ஏதோ ஒரு வகையில் மன்னித்துக் கடந்துவிடலாம்.

Saturday, August 8, 2026

கேரளம் ஒரு புது அபார்ட்மெண்ட்

சமீபத்தில் ஒரு விவாதத்தைக் கவனித்தேன். ஜீவசகாப்தன் என்ற உடன்பிறப்பு போலிருக்கிறது, அவர்தான் சொன்னார். இந்த மூன்று மாதங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன, தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறதாம்.

தொடர்ந்து அரசியலைக் கவனிப்பவர்களுக்கு, அதன் முக்கியமான துறையான பொருளாதாரம் குறித்த புரிதலும் இருக்க வேண்டும். ஆனால் திமுகவினரும், அதன் ஆதரவாளர்களும் அறிவை வளர்ப்பதை விட வாயை வளர்ப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படி ஒரு அபத்தமான கருத்து.

Friday, August 7, 2026

வார்த்தைகளில் இருக்கும் கொழுப்பு ...

நான் ஏற்கனவே 'ஒருவேளை இப்படியும் இருக்குமோ?' என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அது உண்மைதான் போலிருக்கிறது; ஆதவ் அர்ஜுனின் சட்டமன்ற பேச்சு அதை உறுதிப்படுத்துகிறது. இது வெளிப்படையாகக் கொடுத்த பணமாக இருக்கலாம். கருப்பாக எவ்வளவு கொடுத்தாரோ?

உதயநிதி "எங்கப்பா யார் தெரியுமா?" என்று அதிகாரத் திமிரில் ஏதோ ஓர் இடத்தில் விஜய்யிடம் தெனாவட்டாகக் கேட்டிருக்கிறார்.

இந்த பக்கம், அப்பா—அதாவது ஸ்டாலின்—மார்ட்டினிடம் "உங்களுக்கு நான் ஏதாவது செய்கிறேன்" என்று சொல்லி 900 கோடி வாங்கி நாமம் சாத்திவிட்டார். இந்தச் செய்தி சட்டமன்றத்திலேயே பதிவாகிவிட்டது.

Wednesday, August 5, 2026

உதயநிதியின் ‘அந்த’ பேச்சு

இது ஒரு சிக்கல். ஓட்டப்பந்தயத்தில் 5 கிலோமீட்டர் ஓட வேண்டும் என்றால், சரியாக அந்த இடத்தை அடைந்தவுடன் உடனே நிற்க முடியுமா? முடியாது. ஓடிய வேகத்திற்கு இன்னும் 10 மீட்டர் தூரம் சென்றுதான் நிற்க முடியும். அதுபோன்றதுதான் மேடைப் பேச்சும். பேச்சின் வேகத்தில் நம்மை அறியாமல் சற்று எல்லை மீறிப்போய் விடுவோம். தவறை உணர்ந்த பிறகு வருத்தம் தெரிவிக்க வேண்டும்; அடுத்த முறை அந்தக் குறையைத் தவிர்க்க வேண்டும். அந்த நாகரிகம் உதயநிதியிடம் இல்லை.

இன்னொரு பக்கம் சினிமாவுக்குக் குத்துப்பாட்டு தேவைப்படுவதைப் போல், மேடைப் பேச்சிலும் சில சுவாரசியங்கள் தேவைப்படுகின்றன. இது காலங்காலமாக இருந்து வருகிறது. வால்மீகி இராமாயணம் போர் அடிக்கிறது என்று யாரோ சொன்ன பிறகு, கம்பர் அவர் எழுதிய இராமாயணத்தில் கொஞ்சம் காமத்தைக் கலந்திருக்கக்கூடும்.

கட்ட துரைக்கு (உதயநிதி) நேரம் சரியில்லை

உதயநிதியின் தஞ்சாவூர் (திரிஷா) ஆபாச பேச்சை பல விதமாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இவர் பல இடங்களில் ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே எந்தப் பேச்சு என்று எதிர்காலத்தில் குழப்பம் வராமல் இருக்க, இப்படி இடத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

என்னைக் கேட்டால் இங்கே முதல் குற்றவாளிகளே நீதிபதிகள்தான். இவர்களால்தான் இவ்வளவு அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆபாசமாக அருவருக்கத்தக்க முறையில் பலரும் துணிச்சலாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு நீதித்துறையின் மீது பயம் போய்விட்டதுதான் காரணம்.

ஒரு மூத்த வழக்கறிஞரை நீதிபதிக்கு முன்னே நிறுத்தினால், பணம் அல்லது அதிகாரத்தைக் காட்டினால், ஜாமீன், வாய்தா எல்லாம் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். "எங்கம்மா வயசுக்கு வந்துட்டாங்க, அதனால வாய்தா கொடுங்க" என்று ஒரு வழக்கறிஞர் சொன்னாலும், "லாஜிக் இடிக்குதே" என யோசிக்காமல் அதற்கும் வாய்தா கொடுப்பார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள்.

Saturday, August 1, 2026

விஜய் கர்நாடகா போகிறாராம்!

விஜய் கர்நாடகா போகிறாராம்! போகட்டும். அவருக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஒருவேளை அதுவும் பலிக்கலாம்.

தண்ணீர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினை. நாடுகளுக்கிடையே பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு உலகளாவிய நடைமுறை இருக்கிறது.இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதே சமயம் சீனாவில் இருந்து இந்தியாவுக்குத் தண்ணீர் வரும் பிரச்சினையும் இருக்கிறது.

இந்தியாவிலும் மாநிலங்களுக்கிடையில் நதிநீர் பகிர்வில் ஏதாவது கோளாறு வந்தால், அதே கொள்கையைத்தான் இந்தியா உள்நாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, நியாயம் என்பது தமிழ்நாட்டுக்கு மறுக்க முடியாத ஒன்று.

ஆனால், நீதி யார் பக்கம் இருக்கிறது என்பதுதான் தலைவலியே.