!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, November 28, 2011

முறையற்ற மதப் பிரச்சாரம்.


இந்த வாரம் எனக்கு கோபத்தை வரவழைத்தது சில கிறிஸ்துவ பிரச்சாரகர்களின் செயல்கள். ஒரு பள்ளிக் கூடத்தின் முன் சிறுவர்களிடம் மத புத்தகங்களை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மதப் புத்தகங்களை விநியோகிப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறுவர்களிடம் இதை விநியோகிப்பதை நான் நேரடியாக பார்த்தது இப்போதுதான்.

ஆன்மீகத்தை பொறுத்த வரையில் நான் மதில் மேல் பூனை. நிச்சயம் தீவிர மத ஆர்வம் கிடையாது. ஆரம்பத்தில் கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் ஈடுபாடு காட்டி தீக்கதிரை சந்தா கட்டி வாங்கியும் படித்திருக்கிறேன், அப்படியே அந்த கட்சியின் ஒரு மாநில மாநாட்டில் தொண்டனாகவும் போயிருக்கிறேன். எனவே நாத்திகனாகத்தான் இருந்தேன். இருந்தாலும் கடலில் மூழ்குபவன் அந்த கடைசி நேர பயத்தில் `இறைவா` என்று கத்துவதில்லையா, அதுபோல் வந்ததுதான் பக்தி. அதன் பிறகு இப்படியும் அப்படியும் தடுமாறி நான் இப்போது எந்த பக்கம் என்றே தெரியாத நிலை.

அதே சமயம் இது மத ஆர்வத்தினாலோ அல்லது எது உயர்ந்த மதம் என்ற ஆராய்ச்சிக்கான பதிவோ இல்லை. நான் கண்ட ஒரு காட்சி லாஜிக்கோடு ஒட்டாமல் அயோக்கியத்தனம் என்ற எல்லையையும் தொடுவதால்தான் இந்த பதிவு.

Monday, November 21, 2011

கூடங்குளம் யாருக்கான திட்டம்?


கூடங்குளம் இப்போதைக்கு என்னையும் விடாது போலிருக்கிறது. முந்தைய பதிவில் சில நண்பர்கள் பின்னூட்டத்தில் சில கருத்துக்களை முன் வைத்தார்கள். உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அதற்கான பதில்தான் இது.

அப்படியே நான் இதையும் சொல்லிவிடுகிறேன். நான் அதிகம் எழுதுவதும் இல்லை, பேசுவதும் இல்லை. எழுதாததற்கு காரணம் சிறு வயதிலிருந்தே பிராக்டீஸ் இல்லாததாக இருக்கலாம். எனவே எழுதுவது என்பது எனக்கு தண்டனையை போன்றது. பேங்கில் சலான் எழுத எத்தனை வார்த்தைகள் எழுத வேண்டி இருக்கும்? அதற்கே எனக்கு கை வலிக்கும். எனவே நான் படிப்பது அதிகம், எழுதுவது குறைவு.

Monday, November 14, 2011

கூடங்குளம்: கேள்விகள் அங்கே, பதில் இங்கே.


சிறை தொடர்பான இரண்டு செய்திகள் பற்றி பதிவு எழுத நினைத்தால் வழக்கம் போல் ஏதோ ஓன்று நம் சிந்தனையை ஆக்கிரமித்து அது குறித்த பதிவில் போய் முடிகிறது. இந்த முறை மீண்டும் கூடங்குளமே என் சிந்தனை ஆக்கிரமித்திருக்கிறது.

முக்கியமாக நான் அதற்கு ஆதரவாளனாக இருப்பதால் (கவனிக்கவும், வேறு வழி இல்லாத நிலையில்) அதிகம் படிப்பது அதை எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைதான். அவர்கள் ஏதாவது ஆதாரமான கருத்தை முன் வைக்கிறார்களா என்று கவனிப்பேன்.

Thursday, November 10, 2011

ஏழாம் அறிவிடம் தப்பினேன், வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன்.


ஒரு காலத்தில் சினிமா என் டென்ஷனை குறைக்கும் மருந்தாக இருந்தது. என்னை டெண்ஷனாக்குவதில் சாப்பாட்டுக்கும் முக்கிய பங்கிருப்பதால், இது உச்சக்கட்டத்தை அடையும் போது அதை தணிக்க நான் செய்வது இரண்டுதான். ஓன்று, அன்று ஓட்டலுக்கு போய் வயிறு வெடிக்கும் அளவுக்கு திருப்தியாய் சாப்பிடுவது. இரண்டு, நல்ல சினிமா பார்ப்பது.

கடலூரில் நான் மினி லைப்ரரி வைத்திருந்ததால், முக்கியமான வார இதழ்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன். எனவே விமர்ச்சனம் படித்துவிட்டுதான் பெரும்பாலும் போவேன். இருந்தாலும் சில சமயம் திடீர் முடிவோடும் போவதுண்டு. கடலூரில் அனைத்து தியேட்டரும் பஸ் ஸ்டான்ட் சுற்றியே இருப்பதால், வண்டியில் அப்படியே எல்லா தியேட்டரையும் சுற்றி வருவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் அது நல்ல படம் என்ற தியரியை நம்பிப் போவேன். அதிலும் ஏமாறுவது உண்டு. சில சமயம் என் சிந்தனையும், ரசனையும் மக்களோடு ஒத்துப் போகாது.

Monday, November 7, 2011

இந்த ரியல் எஸ்டேட்டுக்கு ஆப்பு வைங்கப்பா!

அணு உலை விபத்தை பற்றி கவலைப்படுகிறார்கள், ஊழலை பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் இதை விட மிகப்பெரிய ஆபத்தான மக்கள் தொகை பெருக்கத்தை பற்றியோ, அது நமக்கு கொடுக்க இருக்கும் பலவிதமான தலைவலிகளை பற்றியோ யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. சில வியாதிகள் கண்ணுக்கு தெரியும்,விகாரமாகவும் இருக்கும். வெளிப்படையாக தெரிவதால் நாம் அதை பற்றித்தான் அதிகம் கவலைப்படுவோம். இருந்தாலும் அவற்றை குணப்படுத்த மருந்து இருக்கும். ஆனால் பெரும்பாலான உயிர்க் கொல்லி நோய்கள் கண்ணுக்கு தெரிவதும் இல்லை அவற்றுக்கு மருந்தும் இல்லை. அவை மெல்லக் கொல்லும் விஷங்கள்.

மக்கள் தொகை பெருக்கமும் அது போன்ற வியாதிதான். இதனால் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப் போகும் தலைவலிகளை பட்டியலிட்டால் அது நீளும். இன்று நாம் அணுமின் நிலையங்களை நாடுவதிலிருந்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது வரை, அதோடு கொஞ்ச நாளாக எனக்கு தலை வலிப்பது வரை அனைத்துக்கும் மூலகாரணம் இதுதான். அதில் இப்போது புதிதாக ஒரு திருகுவலி வந்திருகிறது. விவசாய நிலங்களை எதற்கும் பயன்தராத மனைகளாக்கி பாழாக்குவதுதான் அது.