இந்தியாவில் பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை. நானும் அதில் சிலவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு எழுத முயற்சிப்பதுண்டு. ஆனால் அது குறித்து மேலும் படிக்க ஆரம்பிப்பதிலும், பின்னர் எண்ணங்களை பதிவாக மாற்றி செம்மைபடுத்துவதிலும் நேரம் போய்விடுகிறது. அதனால், தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பிரச்சினை பற்றி எரியும் போது நான் வேறு ஏதோ ஒன்றை பற்றி எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க கூடாது.
இது கடந்த வாரம் நான் கவனித்த செய்திகள்
ஷேர் மார்கெட் நிறைய நம்பிக்கையையும் கனவுகளையும் காட்டியபோது நான் எதிர்காலம் குறித்து திட்டமிட ஆரம்பித்தேன்.
இப்படி திட்டமிடும் நேரத்தில் கல்யாண ஆசை மறைந்து, அரசியல் ஆசை தலைதூக்க ஆரம்பித்தது.பணம் என்னை அங்கே கொண்டு செல்லுமானால், மக்களிடம், `இதபாருங்க, எனக்கு ஷேர் மார்கெட்ல பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அதனால தைரியமா எனக்கு ஓட்டு போடுங்க. நான் ஊழல் பண்ணமாட்டேன்` என்றும், கட்சிக்காரர்களிடம், `எனக்கு (நேரடி) உறவுகள் எதுவும் கிடையாது. திருமணமும் செய்யமாட்டேன். அதனால் வாரிசு பிரச்சினைகள் வராது` என்றும் உத்தரவாதம் கொடுப்பது என்று முடிவு செய்தேன்.