!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, September 6, 2025

(இரண்டு கால்) நாய்கள் ஜாக்கிரதை



இதுதான் தற்போதைய பரபரப்பு. நானும் இரண்டு தரப்பு வாதங்களையும் கவனித்தேன். நான் நேரடியாக கவனித்த சில அனுபவங்களும் ஞாபகத்துக்கு வந்தது. அவற்றையெல்லாம் இங்கே பார்ப்போம்.

இரக்கம் தேவைதான். ஆனால் அது யாரிடம் கட்டவேண்டும், எப்படி காட்டவேண்டும் என்பதில்தான் இங்கே சிக்கல் வருகிறது. இந்த நாய் ஆதரவாளர்கள் தங்கள் வருமானத்தை முதலில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் செலவு செய்துவிட்டு அது போக மீதம் இருக்கும் தொகையைத்தான் இது போன்ற நாய் வளர்ப்பு அல்லது தெரு நாய்களுக்கு உணவளித்தல் என்ற புண்ணியத்தை செய்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய தேவைக்கே பணமில்லாத மத்திய வர்க்கம் மற்றும் ஏழைகளின் கதி? அதை புரிந்து கொள்ள ஆறறிவு வேண்டும். நாய் ஆதரவாளர்களுக்கு அது கிடையாது. இங்கே இவர்களுக்கு ஒரு கதை சொன்னாலே போதும். ஆனால் ஐந்தறிவு படைத்த இந்த நாய் ஆதரவாளர்களுக்கு ஒரு கதை பத்தாது என்பதால், இங்கே பல உதாரணங்களை சொல்ல போகிறேன்.

ஒரு சுற்றுலா பயணம். லாப நோக்கில் நடத்தப்பட்டது அல்ல அந்த சுற்றுலா பயணம். ஆகும் செலவை அப்படியே பங்கிட்டு கொள்வது என்ற வகை. இதற்கும் ஒரு நிர்வாகி என ஒருவர் இருந்தார்.

பயணத்தில் பலர் அசைவப்பிரியர்கள். அவர்களில் பலர் சிக்கன், மீன் என ஒரு கை பார்த்தனர். சைவத்தினர் சிம்பிள் சாப்பாடு என முடித்துக்கொண்டனர்.

ஆனால் சாப்பாடு பில் என எல்லோருக்கும் சமமான தொகை வந்தது. எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் புலம்பல் இருந்தது. `அவங்க நான் வெஜ் சாப்பிடுறதுக்கு நான் பில் கொடுக்கவேண்டுமா` என கேள்வி. அந்த நிர்வாகி அடுத்த முறை இதேபோல் சுற்றுலா சென்றபோது `சாப்பாடு உங்கள் தலைவலி நீங்களே உங்களுக்கு தேவையானதை பார்த்துக்கொள்ளுங்கள்` என ஒதுங்கிவிட்டார்.

இங்கே கேள்வி என்னவென்றால், இந்த நாய் லவ்வர்கள் புண்ணியம் தேடுவதற்கு ஏழைங்க நாய்க்கடி படணுமா, இல்ல ஏழைகள் ரோட்டுல பயந்து பயந்து நடக்கணுமா? அதைவிட மக்கள் நலத்திட்டங்களுக்கே பணம் இல்லாமல் திணறும்போது, நாய்களை பராமரிப்பதற்கு அரசாங்கம் ஏன் செலவு செய்யணும்? என்ன லாஜிக் இது?

வீடுகளிலும் சில விஷயங்களை கவனிக்கலாம். குழந்தை கக்கா போயிருக்கும். இப்போது கணவன் மனைவியை அழைத்து கழுவ சொல்வார். மனைவி குழந்தை சுத்தமாக்கி அழகாக்கி கொடுக்க, கணவன் அந்த குழந்தையை கொஞ்சுவான். இங்கே நியாயம் என்னவென்றால் அசிங்கத்தை மனைவி துடைக்க வேண்டும், சுத்தமான குழந்தையை கணவன் கொஞ்சவேண்டும். எப்படி இருக்கிறது இந்த நியாயம்?

இங்கேயும் அதே கேள்விதான். இவர்கள் நாயை வளர்ப்பார்கள், கொஞ்சுவார்கள், வீட்டுக்கு வாட்ச்மேனாக வைத்திருப்பார்கள். ஆனால் காலையில் வாக்கிங் போகிறேன் என்ற சாக்கில் ரோட்டில், அதுவும் அவர்கள் வசிக்காத தூரமான ரோட்டுக்கு போய், அதை கக்கா போக விடுவார்கள். இப்போது அந்த நாற்றத்தை நாய் வளர்க்காதவன் சகிக்க வேண்டும், துப்புரவு தொழிலாளி துடைக்க வேண்டும். நாயை வளர்கிற நாய் அதுக்கும் ஒரு டாய்லெட் கட்டி வீட்டுக்குள்ளேயே அந்த கருமத்தை செய்யவேண்டியதுதானே?

இது அகமதாபாத் கதை. நான் வசித்த ஒரு தெருவில் நடந்த சம்பவம். இங்கே நாயைவிட மாடுகள் தொல்லை அதிகம். மாடு அவர்களை பொறுத்தவரையில் மரியாதைக்குரியவை. இதில் தவறேதும் இல்லை. ஆனால் தலைவலி அதேதான்.

இங்கே ஒரு பாட்டி இருந்தார். அவ்வப்போது மாடு வரும். ரொட்டி கொடுப்பார்கள். தொட்டு கும்பிடுவார்கள். அதன்பின் காட்சி மாறும்.

பேரன் வருவான். முதலில் அந்த மாட்டை வாயால் விரட்டுவான். பின்னர் கம்பால் அடிப்பதுபோல் நடிப்பான், சில சமயம் அடியும் விழும். அந்த மாட்டுக்கு ரொட்டியும் கிடைக்கும் அவ்வப்போது அடியும் கிடைக்கும். இது என்ன வகையான புண்ணியமோ?

அந்த மாட்டை அடிப்பதன் காரணம் அந்த மாட்டுக்கு பசி அடங்கியிருக்காது. இன்னும் எதாவது தருவார்களோ என எதிர்பார்த்து காத்திருக்கும். அந்த காத்திருக்கும் நேரத்தில் கக்கா வந்தால் போய்விடும். அந்த தலைவலி நம் வீட்டு வாசலில் நடக்கக்கூடாது என அடித்து துரத்திவிடுவார்கள்.

அந்த மாடும் இரண்டு வீடு தள்ளி அசிங்கப்படுத்திவிட்டு போய்விடும். அந்த வீட்டு பெண்மணி வேலைக்கு போயிருப்பார், அல்லது வீட்டில் எதாவது வேலையாக இருப்பார். வெளியே வந்து இதை கவனித்தவுடன் தலையில் கை வைப்பார்.

(தற்போது குஜராத்தில் மாடுகள் தெருக்களில் நடமாடுவதை தடை செய்துவிட்டனர். தமிழ்நாட்டிலும் நாய்கள் தெருக்களில் தடை செய்யப்படும் என நம்புவோம்.) 

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். படித்து பட்டம் வாங்குவதற்கும் பொது அறிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. இந்த நாய் ஆதரவாளர்களின் அறிவுபூர்வமான வாதங்களை யாரவது கேட்டிருந்தால், அது எந்த அளவுக்கு உண்மை என்பது புரியவரும். அதாவது பிஸ்கட் கொடுக்க வேண்டுமாம், அதனிடம் 10 நிமிடம் உங்க வீட்டுல எல்லாரும் சவுக்கியமா என நலம் விசாரிக்க வேண்டுமாம்.

இந்த பணக்கார நாய்களுக்கு இந்த உலகத்துல இருக்கிற எல்லாருமே நம்பள மாதிரியே வசதியா இருக்காங்கனு நினைப்பு. இந்த நாய் லவ்வர்ஸ் எல்லோரும் சொந்த வீட்டுக்காரங்க என்ற புள்ளிவிவரத்தை கவனித்தாலே போதும் அவர்கள் பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள் அதில் மட்டும் ஜெயித்திருக்கிறார்கள் என்று. ஆனால் அறிவு? அது அவர்களுக்கு தேவையில்லை.

இந்த நாய் எதிர்ப்பாளர்களும் அப்படித்தான். அவர்களும் அவர்களுடைய வறுமையை ஒழிக்கத்தான் ஓடுகிறார்கள். எனவே இப்போதைக்கு நாய்கள் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் இவர்களும் அந்த இடத்தை தொட்டவுடன், `ஆக்சுவலா நாங்களும் நாய்க்கு வாரத்துக்கு எட்டு நாள் கறி போடுறோம்` என பந்தா காட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஏனென்றால் ஒரு காலத்தில் பெண்களுக்கு காஸ்டிலியான பட்டுப்புடவை அணிந்துகொண்டு விசேஷங்களுக்கு போவதும் அங்கே மறக்காமல் அதன் விலையை எல்லா பெண்களிடமும் சொல்வது என்பது ஒரு பந்தாவாக இருந்தது. பின்னர் அது பல கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்து  தற்போது அது 'என் (நாலுகால்) பிள்ளைக்கு காலையிலேயே பசி எடுத்துக்கும். அது பசியில குலைக்கிற பாஷை எனக்கு மட்டும்தான் புரியும். வீட்டுல யாராவது கடைக்கு போறாங்களோ இல்லையோ.. நான் கடைக்கு போய்... நாங்களும் வாரத்துக்கு எட்டு நாள்.... ' என்று பந்தா பண்ணும் அளவுக்கு வந்து நிற்கிறது.

ஆனால் இங்கே ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். இப்போது பல இரண்டு கால் நாய்கள் புண்ணியம் தேடுகிறேன் என்று நாய்களுக்கு சாப்பாட்டை அவர்கள் வசிக்காத பல இடங்களுக்கு சென்று போட ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி வருபவர்களிடம் `எதுக்குப்பா உங்களுக்கு இந்த சிரமம்? உங்களுக்கு பெட்ரோல் வேஸ்ட் வேற, நான் என் மனசை கல்லாக்கிக்கொண்டு எங்க தெரு நாயை உங்களுக்கு தானம் செய்கிறேன். இவற்றை உங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிப்பாருங்கள். ஒரு இரண்டு கால் நாயும் திரும்பி வராது.

இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், இப்படி அந்த நாய்களுக்கு வயிறார, நான் வெஜ் உட்பட, போடுவதால் அவற்றுக்கும் வயிற்று பசி அடங்கி உடல்பசி எடுத்துவிடுகிறது. மனிதனுக்கு முங்கைக்காய், நாய்களுக்கு என்னவென்று தெரியவில்லை.  

எனவே இப்படி `அந்த பசி` எடுத்து அந்த தெருநாய் அலையும்போது வேறு ஒரு பெண் நாய் `மூணு நாள் ஓய்வில்` சரியாக சாப்பிடாமல் சோர்ந்து போய் படுத்திருக்க, இந்த நாய், அண்ணா பல்கலைக்கழக கற்பழிப்பு திலகம் ஞானசேகரனை போல், `அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை` என அந்த பெண் நாயை மேய்ந்துவிட்டால் என்ன பண்ணுவது?

வாயில்லா ஜீவனான அந்த பெண் நாய் போலீசில் புகார் கொடுக்கவா முடியும்? இப்போது ரேப் கேஸில் யாரை கைது செய்வது? அந்த தெரு நாய்களையா அல்லது சோறு போட்டு அதன் உணர்ச்சிகளை தூண்டி விட்ட மனிதர்களையா?

அதுவும் ஏகப்பட்ட நாய்கள் ஒன்றாக இருந்தால், ஓன்று அவை உறவுக்கு பெண் நாய்களை தேடும், அல்லது அவைகளுக்கும் ரவுடியிசம் பிடித்துப்போய் 'வா நாம்ப 10 பேர் இருக்கோம்...ஒருத்தன் சிங்கிளா வந்து மாட்டியிருக்கான்..' என அந்த வழியாக போகும் யாரையாவது கடித்து தனது வீரத்தை நிரூபிக்கும். எவ்வளவு தலைவலிகள். 

இங்கே நாய் எதிர்ப்பாளர்கள் கூட அபத்தமாகத்தான் பேசுகிறார்கள். இவற்றை கொல்ல கூடாது, அவற்றை தனியாக பராமரிக்க வேண்டும் அல்லது கருத்தடை செய்ய வேண்டும் என பேசுகிறார்கள்.

நாய்களை கருணை கொலை செய்துவிட வேண்டும் என்று சொன்னால் நம்மை கருணை இல்லாத மனிதன் என முத்திரை குத்திவிடுவார்களோ என ஒரு பயம். அதற்குத்தான் இப்படி ஒரு நிலை.

ஒருவகையில் பார்த்தால் கணிசமான நாய்களை கருணை கொலை செய்வதுதான் சரியான தீர்வு. ஆனால் இங்கேயும் மனிதநேயம் இடிக்கிறது என்றால் அதற்கு ஒரு தீர்வை சொல்லலாம்.

தெரு நாய்களை தற்காலிகமாக எங்கேயாவது பராமரிக்கலாம். குறிப்பிட்ட காலத்துக்குள் நாய் ஆதரவாளர்கள் யாராவது வந்து `நாங்கள் வீட்டிலேயே பராமரிக்கிறோம்` என்று அழைத்து சென்றால் சந்தோசம்.

அல்லது அரசாங்கம் செலவு செய்யாமல் நாய் ஆதரவாளர்களிடம் மட்டும் சந்தா வசூலித்து இவைகளை எங்கேயாவது பராமரிக்கலாம். ஒருவேளை அப்படி யாரும் வராதபட்சத்தில் 'இதுதான் உலகம். உங்களுக்காக வாய்கிழிய கத்திய அந்த ரெண்டுகால் மிருகங்கள் இப்போது எங்கே போனார்கள் பார்த்தியா' என்று அந்த நாலுகால் நாய்களுக்கு உலகத்தை புரிய வைத்து அனுப்பவேண்டிய இடத்துக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.

அதற்கும் மனம் ஒப்பவில்லை என்றால், ஆண் பெண் நாய்களை சேரவிடாமல் தடுத்து அவைகள் இயற்கையாக போகும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

இது தெருநாய்களுக்கு. வீட்டு வளர்ப்பு நாய்களை பொறுத்த வரையில் வெளிநாடுகளில் இருக்கும் அதே நடைமுறையை கொண்டுவர வேண்டியதுதான்.

மொத்தத்தில் இங்கே நீதி என்னவென்றால், சந்தோஷத்தை நான் அனுபவிப்பேன். ஆனால் அதில் ஏதாவது தலைவலி என்றால் அதை அடுத்தவன் தலையில் கட்டிவிடுவேன் என்ற அயோக்கியத்னம்தான் இங்கே தெரிகிறது. 


0 comments:

Post a Comment