!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, October 31, 2011

கூடங்குளம்: இங்கேயும் சில அன்னா ஹசாரேக்கள்


இதை தினமலருக்காக (இது உங்கள் இடம்) கொஞ்சம் சுருக்கி எழுதினேன். இங்கே இன்னும் கொஞ்சம் விளக்கமாக...


சில வாரங்களுக்கு முன் அணுசக்தி குறித்த தகவல்களில் முழ்கி இருந்தேன். ஆனால் முதலில் என் கதையை போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்ததால் அதை பற்றி பதிவு எழுதவில்லை. கூடங்குளம் பிரச்சினை இன்னமும் கொதிக்கும் நிலையில் அது குறித்தும் ஒரு பதிவு.

அணுசக்தி விஷயமாக பல செய்திகளை படித்ததில் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதை விட அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில்தான் உங்கள் திறமை அடங்கியிருக்கிறது. ராமாயணத்தில் `கண்டேன் சீதையை` என்ற சொன்னதிலிருந்து, மகாபாரத்தில் `(யானை) அசுவத்தாமா மரணம்` என்று சொன்னது வரை அந்த வார்த்தைகளுக்கு பின் பல நோக்கங்கள் அடங்கி இருக்கிறது. சொல்வது உண்மை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் நாம் நமது விருப்பத்தை திணிக்கலாம். இந்த தியரி இந்த பதிவுக்கும் பொருந்தும். இருந்தாலும் பலதரப்பட்ட வாதங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களால் உண்மையை கண்டுபிடித்துவிட முடியும். 

Tuesday, October 18, 2011

இந்த அரசியல்வாதியை (?) நீதிபதிகள் மன்னித்துவிட்டார்கள்.போலீசார் என் பிடிவாதத்தை பார்த்துவிட்டு, என் மாமாவிடம் எப்படியோ ஒரு புகாரையும் வாங்கிக் கொண்டு, எனக்கு ஜெயிலை பற்றிய பயமுறுத்தல் மற்றும் அட்வைஸ் என அவர்கள் கடமையையும் செய்துவிட்டு என்னை புழலுக்கு அனுப்பினார்கள்.

சிறைக்கு சென்ற பிறகு பத்திரிக்கைகள் படிக்கும் வாய்ப்பே சில வாரம் கிடைக்காததால், இந்த செய்தி பத்திரிக்கையில் வந்ததா இல்லையா என்றே எனக்கு தெரியவில்லை. என்னை பார்க்க வந்த உறவினர்களிடம் ஆர்வமாக விசாரித்தால், `இப்படி ஒரு ஆசை வேற உனக்கு இருக்கா?` என்று எதிர் கேள்வி. அப்படியே மாமா நன்றாகத்தான் இருக்கிறார் என்றும் தகவல். நான் உள்ளே வரவேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறிவிட்டது. எனவே இனி அது எனக்கு நல்ல செய்திதான். ஆனால் என்னைப்பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வராததுதான் எனக்கு ஏமாற்றம்.

Monday, October 10, 2011

நான் ஜெயிலுக்கு போன கதை.


முதல் பகுதி:  நான் நடத்திய பத்திரிகையும், `நான் தமிழன்` ஜோக்கும்.

சிறு வயதில், அம்மா இறந்த பிறகு, ஆதரவில்லாமல் இருந்த எங்களை மாமா ஆதரித்தார் என்று சொன்னேனல்லவா. அப்போதிலிருந்தே ஒரு விஷயம் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது.

மாமா வீட்டில் இருந்த போது, சாப்பாடு பிடிக்கவில்லை என்ற கோவத்தில் ஒரு நாள் நான் மருந்து சாப்பிட்டுவிட்டேன். ஆனால் அதனால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

இருந்தாலும் அப்போதுதான் என் ஆயா சொன்னார். `உங்களை அழைத்து வந்து ஆதரிப்பதே எங்களுக்கு சிரமம். இதுல உனக்கு கோவம் வேற வருதா? அப்படி கோவப்படறவனா இருந்தா நீ உங்கப்பன் கிட்டயே போய் சேர்` என்றார். அந்த வார்த்தை நாங்கள் அங்கே விருந்தாளி என்பதை எனக்கு புரிய புரியவைத்தது. விருந்தாளியாய் இருக்கும் போது அங்கே சாப்பாட்டை குறை சொல்லக் கூடாது என்பதையும் புரிய வைத்தது. இதையெல்லாம் அப்போது நான் உணரவில்லை. ஆனால் போகப் போக புரிந்துகொண்டேன். அதேசமயம் ஆயாவுக்கு எங்கள் மீது இருந்த அக்கறையில், நான் அனுசரித்து போகவில்லை என்ற கோவத்தில் சொன்ன வார்த்தை அது.

Tuesday, October 4, 2011

நான் நடத்திய பத்திரிகையும், `நான் தமிழன்` ஜோக்கும்.கூடங்குளம் பிரச்சினை சம்பந்தமாக இணையத்தில் ஒரு செய்தியை படித்தேன். அது குறித்து பதிவு போடும் எண்ணம் இல்லை. இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட புள்ளிவிவரம் என்னை குழப்பியதால்,மீண்டும் படிக்க நினைத்தேன். ஆனால் எங்கே படித்தேன் என்பது மறந்துவிட்டது. கூகுளில் `அணுசக்தி` என்று கொடுத்து தேடினாலும் கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் `Indian nuclear energy` என்று கொடுத்து தேடினால், அது கடலை காட்டியது. பின்னர் அதில் பல வடிகட்டிகளை பயன்படுத்தி ஓரளவுக்கு எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.

சில நாட்கள் இப்படி தகவல்களில் மூழ்கி கிடந்ததில், ஆங்கிலம் என்ற மொழியின் அருமையும், இணையம் ஒரு கடலாக இருந்தாலும் அதில் ஆங்கிலம் என்ற மொழியின் அவசியத்தையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அப்படியே இதை கற்றுக் கொள்ள நான் எடுத்த விடா முயற்சியும் நினைவுக்கு வந்தது.