!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label கேரளா. Show all posts
Showing posts with label கேரளா. Show all posts

Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறும், நாட்டை நாசமாக்கும் எழவு (தியரி)அரசியலும்.


எப்படியும் வாரம் ஒரு பதிவு போட்டு கொஞ்சம் ப்ரொபெஷனலாக மாறுவோம் என்று முயற்சித்தால் அது முடியவில்லை. இந்த வாரம் பிராட்பேண்ட் தலைவலி கொடுத்துவிட்டது. எனவே தகவலுக்காக தமிழக செய்திகளையே நம்ப வேண்டி இருந்தது. தேசிய சேனல்களுக்கோ இது பல முக்கிய செய்திகளில் ஓன்று.   

இங்கே முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதங்களையும், செய்திகளையும் கவனித்ததில் எனக்கு ஜெப்ரி ஆரச்சரின் ஒரு சிறுகதைதான்  ஞாபகத்துக்கு வந்தது. ஒரு வழக்கில் ஒரு வக்கீல் தனது சார்பாக ஒரு சாட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தி அவருடைய அருமை பெருமைகளை சொல்லி, `இப்படிப்பட்ட ஒரு நபரின் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்` என்பார். ஆனால் அதே சாட்சி வேறு ஒரு வழக்கில் எதிர் தரப்புக்காக ஆஜராகும்போது, பல வாதங்களின் மூலம் `இப்படிப்பட்டவரின் கருத்தையா நீதிமன்றம் மதிக்கவேண்டும்` என்று எதிர் கேள்வி கேட்பார். இன்றைய அரசியல் அப்படித்தான் இருக்கிறது.

Monday, December 5, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சினை, என்ன செய்யலாம்?


முல்லைப் பெரியாறு அணைதான் தற்போதைய தலைவலி. இந்த பிரச்சினையை அலசும் முன் ஒரு அனுபவம்.

ஒரு ரயில் பயணம். (பம்பாயிலிருந்து அகமதாபாத்தோ அல்லது இங்கேயிருந்து அங்கேயோ) அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் அநியாயத்துக்கு கூட்டம். டாய்லெட்டில் கூட சில வியாபாரிகள் மூட்டைகளை அடுக்கி இருந்ததை கவனித்தேன். கூட்டம் நடை பாதையிலேயே உட்கார்ந்திருந்தது. அதிலும் ஒருவர் ஏற முயற்சிக்கிறார். ஆனால் வழியில் உட்கார்ந்திருப்பவர்கள் அனுமதிக்கவில்லை. உள்ளே இடமில்லை என்கிறார்கள். அவர் காட்டு கத்தல் கத்துகிறார். நானும் டிக்கட் வாங்கி இருக்கிறேன் என்று உரிமை கீதம் பாடுகிறார். கடைசியில் அவருடைய கத்தலை சமாளிக்க முடியாமல் அவருக்கு வழி விடுகிறார்கள். அவரும் அந்த நெருக்கடியில் பயணிக்கிறார்.