!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Friday, December 31, 2010

போதைப்பொருள் கடத்தல். சில விளக்கங்கள்.

கடந்த பதிவில் போதைப்பொருள் கடத்தல் பற்றி பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தேன்.     சமீபத்தில் இந்த கேரியர்கள் கோர்ட்டுக்கு வாய்தாவுக்காக வந்தபோது, நான் போட்ட பதிவுகளின் தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மறுபடியும் விசாரித்தேன். 

அவர்கள் சொன்ன பதில்:  சிலர் வேண்டுமானால் மேல் கோர்ட்டுகளில் தங்கள் பண பலத்தை காட்டி தப்பியிருக்கலாம். ஆனால் எல்லா கோர்ட்டுமே இந்த வழக்குகளில் கருணை காட்டுவதில்லை.
 (இது உண்மை என்றால் ஆதாரபூர்வமான இந்த வழக்குகளை NCB ஏன் விரைவாக நடத்த மறுக்கிறது? விடை தெரியாத கேள்வி.)

ஜெயிலில் இருக்கும் இந்த கடத்தல்காரர்கள் 80 சதவிகிதம் பேர் கேரியர்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் 90  சதவிகிதம் பேர் கேரியர்களாக இருக்கக்கூடும். ஆயிரங்கள் அல்லது சில லட்சங்களுக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டேன் என்று தெரிந்தால் கௌரவ குறைச்சல் என்று சிலர் `நானும் முதலாளிதான்` என்று (ஜெயிலுக்குள்) நாடகமாடிக்  கொண்டிருக்கின்றனர்.

சிலர் முதல்முறையாக அல்லது இது என்ன என்று தெரியாமல் வந்து மாட்டிகொண்டாலும், இவர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் இதில் ஊறியவர்களாக, நண்பர்களாக அல்லது உறவினர்களாக இருப்பார்கள். நீதிபதியிடம் இவர் உண்மையை ஒப்புக்கொண்டு தண்டனையில் கருணை காட்டும்படி கேட்கலாம். ஆனால், இவர் வழக்கை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தால், அது அவர்களுக்கு எதிராக பயன்படக்கூடும் என்பதால், பலர் வழக்கை ஒப்புகொள்ள தயங்குகிறார்கள்.       
******************************************************

                          அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

Monday, December 27, 2010

சிறை அனுபவம்: இலங்கை தமிழர்களும், போதைப்பொருள் கடத்தலும்...

சிறையில் பல விஷயங்களை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் இது கொஞ்சம் ஓவர் ரகம். அரசியலில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு  எப்படி உங்களை அதிர்ச்சி அடைய வைக்கிறதோ, அதே போல் இதுவும் உங்களை திகைக்க வைக்கும் ரகம் .

இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டது சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு சில நாட்கள் முன்தான். தாம்பரம் கோர்ட் வாசலில் மதிய

Saturday, December 18, 2010

சிறை அனுபவம் 4 : அட்மிஷன் எனும் அடிமைகள்.

இது ஒரு தொடர் முதல் பதிவு: சிறை அனுபவம்: முதல் இரவு  

ஜெயிலை பொறுத்த வரையில் புதிதாக வருபவர்களுக்கு ஒரே பெயர்தான்: அட்மிஷன். ஏழை, பணக்கரான், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடெல்லாம் இவர்களிடம் கிடையாது. யாராயிருந்தாலும் இவர்களை பொறுத்த வரையில் அட்மிஷன்தான். `எத்தனை அட்மிஷன் இன்னைக்கி வந்திருக்கு?` `ஏம்பா. நேத்துதான் நிறைய அட்மிஷன் வந்துதே. இங்க ரெண்டு பேர அனுப்புப்பா.`  `அண்ணே! ரெண்டு அட்மிஷன் குறையுதுன்னே!` என்று ஒரே அட்மிஷன் மயம்தான். அட்மிஷன்களை கிட்டத்தட்ட அடிமை ரேஞ்சுக்குதான் இவர்கள் நடத்துவார்கள்.

ஆக நாங்கள், அதாவது அட்மிஷன்கள்,

Sunday, December 12, 2010

விவசாயம் இந்தியாவை காப்பாற்றுமா?

இது ஒரு சர்ச்சை. மூன்று பதிவுகளாக இருக்கிறது.
இது கடைசி பதிவு: எனது பதில்...


பொதுவாக அரசியல்வாதிகள் ஏதாவது பேட்டி கொடுத்து, அது கடுமையான விமர்சனத்திற்க்கு உள்ளானால், `நான் சொன்ன கருத்தை பத்திரிக்கைகள் திரித்து வெளியிட்டுவிட்டன` என்று சொல்லி பழியை பத்திரிக்கையாளர்கள் மீது போட்டுவிடுவார்கள். நான் அப்படி சொல்லப்போவது இல்லை. எனது கருத்துக்கள் திரிக்கப்படவில்லை. எனது பெரிய கடிதம் சுருக்கப்பட்டதால் (பத்திரிக்கைகளில் இது தவிர்க்கமுடியாத ஓன்று) எனது முழுமையான கருத்து மக்களை போய் சேரவில்லை.

இந்த பிரச்சினை நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் ஓன்று என்பதாலும், ஒருவேளை என்னை விமர்சித்தவர்கள் வலைதளங்களில் உலாவலாம் என்ற நம்பிக்கையிலும் இந்த பதிவை போடுகிறேன்.

வாசகர் கடிதம் முலம் பெரிதாக கருத்து சொல்ல முடியாது. தினமலர் மட்டும் கொஞ்சம் பெரிய கடிதங்களை பிரசுரிக்கிறது. நான் எழுதிய இந்த கடிதம் சுமார் 500 வார்த்தைகளை உள்ளடக்கியது. இது அதிகம் என தெரிந்தாலும், நான் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என நினைத்ததால், அதை அப்படியே அனுப்பி வைத்தேன். தினமலர் நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு, முக்கியமானவற்றை மட்டும் வெளியிட்டது (300 வார்த்தைகளில்). இதைதான் வாசகர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா விவசாயத்தை புறக்கணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. விவசாயம் இல்லை என்றால் உலகமே இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், தற்போதைய யதார்த்தம் என்னவென்றால், விஞ்சானம் பல துறைகளை உருவாக்கி, அவை பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருப்பதோடு மட்டுமில்லாமல், அவசியமான துறைகளாகவும் மாறிவிட்டன. பிற துறைகளின் வளர்ச்சி, விவசாயத்தை தற்போதைய உலக பொருளாதாரத்தில் 6 சதவிகித அளவுக்கு மாற்றிவிட்டது (கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தை கவனிக்கவும்).

அதாவது ஒரு காலத்தில் கடலாக இருந்த விவசாயத்துறை, ஏரியாக மாறி தற்போது குட்டை என்ற அளவில் சுருங்கி விட்டது. அத்துடன் விவசாயம் மிக பழமையான தொழில் என்பதையும் உலகில் பெரும்பாலான நாடுகள் இதில் ஈடுபட்டிருக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் தொழில்நுட்பங்களையும் திறமையாக பயன்படுத்தி, விலையிலும், தரத்திலும் கடுமையான போட்டியை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தொழிலில் போட்டி அதிகமாக இருந்தால் அதில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது என்பது எல்லோருக்குக்கும் தெரிந்த விஷயம். எனவே, இந்தியா விவசாய பொருட்களை லாபகரமாக ஏற்றுமதி செய்வது என்பது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஓன்று.

ஆனால் பெட்ரோலிய பொருட்கள் முதற்கொண்டு நாம் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஈடாக எதையாவது ஏற்றுமதி செய்ய வேண்டுமே?

இங்கேதான் நாம் யதார்த்தமாக சிந்திக்கவேண்டும்.  உலகம் தற்போது சிந்திக்கும் விதத்தை கவனியுங்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை எப்படி விற்பது என்றெல்லாம் யோசிக்காமல், இந்த உலகத்துக்கு என்ன தேவை? எதில் போட்டி குறைவாக இருக்கிறது, எதில் நமக்கு லாபம் வரும், என்றெல்லாம் கணக்கிட்டுதான் பல நாடுகள் வெற்றி கண்டிருக்கின்றன.

கல்வியை ஒரு தொழிலாக கருதி அதன் மூலம் அந்நிய செலாவணி ஈட்டமுடியும் என்று யாராவது நினைத்தார்களா? ஆனால், ஆஸ்திரேலியா அதை சாத்தியமாக்கியிருக்கிறது.

எனவே இவற்றையெல்லாம் இந்தியா உணர்ந்து, புதிய உலக மாற்றங்களின்படி இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் இருக்க வேண்டும் என்று தான் சொல்லியிருந்தேன். அதாவது, விவசாயத்துறையில் ஓரளவு சுயசார்பு கொள்கையை (நமது தேவைக்காக) கடைபிடித்து, பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்தும் சமாளித்து கொள்ளலாம் என்று தான் சொல்லியிருந்தேன்.

அதே சமயம் ஏற்றுமதிக்காக தொழில்துறையையும், சேவைத்துறையையும் நாம் வளர்த்துத்தான் ஆகவேண்டும். அதற்காக அவர்களுக்கு தேவைப்படும் வசதியை (அது விவசாய நிலமாகவே இருந்தாலும்) அரசாங்கம் செய்து தரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

மூன்று தேவைகள் 

ஒரு அரசு மூன்று விஷயங்களை பற்றித்தான் (பாதுகாப்பை தவிர்த்து) அதிகம் கவலைப்படும். 1) வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். 2) நிர்வாகம் செய்ய வரி வருவாய் வேண்டும். 3) அந்நிய செலவாணி ஈட்ட எதையாவது ஏற்றுமதி செய்ய வேண்டும்.

விவசாயத்துறையால் இந்த மூன்று விஷயங்களிலும் அரசுக்கு உதவ முடியுமா? வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால், அவர்கள் இந்த மூன்று விஷயங்களுக்காகவும் விவசாயத்துறையை நம்பவில்லை என்றுதான் தெரிகிறது. அவர்களின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பும், விவசாயத்துறை உருவாக்கியிருக்கும் வேலைவாய்ப்பும் 1 முதல் 3 சதவிகீதம் தான்.

ஒரு வாசகர், ஜப்பான் மீது அணு குண்டு போடப்பட்டு அதன் விளைநிலம் பாழாகிபோனதால் தான் அது விவசாயம் செய்யமுடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு வாதத்துக்கு அதை உண்மை என எடுத்துக் கொண்டாலும், பிற முன்னணி நாடுகளில் விவசாயத்தின் பங்களிப்பு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?


இந்த கொடுமையையும் படிங்க.

தற்போதைக்கு விவசாயிகளால் அரசுக்கு வரி வருமானம் இல்லை. மானியங்கள் கொடுக்கும் வகையில் அரசுக்கு செலவுதான். சரி. மானியங்கள் நாட்டுக்கு அவசியமானவை என்றே வைத்துகொள்வோம். இவர்களுக்கு மானியம் கொடுக்க நிதி எங்கிருந்து வருகிறது? பிற துறையினர் அரசுக்கு அளிக்கும் வரி வருவாய் மூலம் தானே! அதற்காகவாவது பிறதுறையினர் ஆரோக்கியமாக வளரவேண்டாமா ?

தரிசுநிலங்களில் தொழிற்சாலை அமைப்போருக்கு அரசு வரிச்சலுகைகள் மூலம் ஊக்குவிக்கலாம். ஆனால் தரிசுநிலம் என்ற பெயரில் போக்குவரத்து வசதியில்லாத இடத்தை அவர்கள் ஏற்பார்களா? எந்த துறைக்கும் ஒரு அடிப்படை கட்டமைப்பு தேவையாயிற்றே. இப்படி அவர்களுக்கு தேவையான கட்டமைப்பை அரசு தராவிட்டால் நஷ்டம் அவர்களுக்கில்லை, நமக்குத்தான். வேறு ஒரு மாநிலம் அல்லது நாடு அவர்களை வரவேற்க தயாராக இருக்கும்.

விவசாய நிலங்களை பாழாக்காமல் அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று நானும் கவலைபட்டதுண்டு. இது குறித்து நான் நடத்த முயற்சித்த `கடலூர் பார்வை` விளம்பர இதழில் `எங்கே போகும் இந்த பாதை...` (ஏப்ரல்-08) என்ற தலைப்பில் நான் எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன். தினமலரில் `தேவையா நில உச்சவரம்பு சட்டம்` என்ற தலைப்பில் விவசாயத்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஒரு கடிதத்தையும் எழுதியிருக்கிறேன்.


நம்நாட்டு மக்களுக்கு கதை அல்லது உதாரணங்கள் மூலமாகத்தான் சில விஷயங்களை புரிய வைக்க முடியும். எனவே சில உதாரணங்கள்.


வெற்றி பெற்ற மனிதர்கள் 

இது ஒரு கொஞ்சம் கற்பனையும் மீதி உண்மையும் கலந்த கதை. கிராமத்தில் ஒருவர் இருந்தார். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. ஆனால் இவரிடம் பேச்சு திறமை உண்டு. வெட்டி கொண்டு வா என்றால், கட்டி கொண்டு வரும் ரகம். இவருடைய பேச்சு திறமையினால், பலர் பல விஷயங்களில் இவரை துணைக்கு அழைப்பார்கள்.

நம் நாட்டு மக்களிடம் ஊறிப்போன ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் தெரியும். சேமிப்பு என்றால் அவர்களை பொறுத்த வரையில் தங்கம் வாங்குவதுதான். ஆனால் நகைக் கடைக்காரர்கள் ஆளைப் பொருத்து செய்கூலி, சேதாரம் என்று ஏமாற்றுவார்கள் என்பதால், பேரம் பேசி வாங்க, பக்கத்திலிருந்த நகருக்கு இவரை அழைத்து போக ஆரம்பித்தார்கள்.

இப்படி போய் வர ஆரம்பித்த இவர், விரைவில் நகை தொழிலுக்கான வியாபார சூட்சுமத்தையும் தெரிந்து கொண்டார், கூடவே நகை வாங்குபவர்களை விட நகை விற்பவர்கள் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதையும் கவனித்தார்.

எனவே தனது பரம்பரை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, உள்ளுரிலேயே நகைக்கடை ஆரம்பிக்க, இப்போது அவர் நல்ல பொருளாதார நிலைமையில் இருக்கிறார். இவருடைய மகனின் திருமனத்திற்கு நான் செல்ல நேர்ந்தது. அப்போது பலர், `எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்(வளந்துட்டார்)` என்று பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது.

இது போன்ற வெற்றி பெற்ற மனிதர்களின் கதை உங்களிடமும் நிறைய இருக்கும். இங்கே நாம் கவனிக்கவேண்டியது, வெற்றி பெரும் மனிதர்கள் எப்படி முடிவெடுகிறார்கள் என்பதைத்தான். அதே சமயம் அவர் தனது விவசாயத்தொழிலை விட்டுவிட்டார் என்பதால் அவர் பட்டினி கிடக்கிறார் என்று ஆகிவிடாது.


முஸ்லீம்களெல்லாம் தீவிரவாதிகளா? 


சரி. உங்களுக்கு இன்னொரு உண்மை தெரியுமா? உலகத்தில் உள்ள முஸ்லீம்களெல்லாம் தீவிரவாதிகள் இல்லை என்று முஸ்லிம்கள் உரக்க கத்துகிறார்கள். உண்மைதான். ஆனால் உலகம் இதை ஏற்றுகொள்கிறதா? இல்லையே! `பெரும்பாலான தீவிரவாதிகள் முஸ்லீம்கள்` என்ற புள்ளிவிவரத்தைதான் உலகம் கவலையோடு கவனத்தில் எடுத்துகொண்டு முஸ்லீம்களை சந்தேக கண்ணோடு பார்க்க வைக்கிறது.

அதேபோல் விவசாயம் ஒரு நாட்டின் உயிர்நாடி என நீங்கள் காது கிழிய கத்தலாம். இதுவும் உண்மைதான். ஆனால் உலகின் பணக்கார நாடுகள், விவசாயத்துறையை சார்ந்தவர்கள் இல்லை என்ற புள்ளிவிவரத்தையும் நீங்கள் கவனித்தால், இந்தியா, விவசாயத்தை மட்டும் நம்பி இருந்தால் பொருளாதார வல்லரசாக முடியாது என்பதை உணரமுடியும்.

இந்தியாவில் விவசாயிகளும் வளர்ச்சி பெறாமல், விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்து, இந்தியாவில் இன்னமும் மக்கள் பட்டினியால் சாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் விவசாய நிலங்களை தொழில்துறையினருக்கு கொடுப்பதால் இல்லை. உண்மையில் அடுத்த தலைமுறைக்கு வீடு கட்டுவதற்காக இப்போதே விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விவசாயத்துறையை நசுக்குகிறார்களே நம் நாட்டுபிரஜைகள் (விற்பவர்கள்/வாங்குபவர்கள்), இவர்கள் செய்யும் அட்டூழியத்தில் 10 சதவிகிதம் கூட தொழில்துறையினர் செய்யவில்லை.

வளர்ந்த நாடுகள் இயற்கையை பாதிக்க கூடிய தொழிற்ச்சாலைகளை ஏழைநாடுகள் மீது தள்ளபார்க்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால் அது எவை என பார்த்து அவற்றை மட்டும் எதிர்க்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக தொழில்துறையினரை நாம் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகம் சில ஊழல் அரசியல்வாதிகளை உருவாக்கி இருக்கிறது என்பதற்காக ஜனநாயகமே வேண்டாம் என்று சொல்லமுடியுமா?

இந்தியாவின் விவசாய தொழிலுக்கான கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் தேவை. இதை பற்றி வேறு ஒரு பதிவில் அலசுவோம்.


சில சந்தேகங்கள்.

வளர்ந்த நாடுகளில் விவசாயத்துறையில் இருப்பவர்கள் 5 சதவிகீததிற்கும் கீழ் தான். இந்த 5 நபர்கள் மீதி 95 பேருக்கான தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விவசாய உற்பத்தி செய்கிறார்களா, அல்லது இந்த நாடுகள் நான் சொன்னதை போல் இறக்குமதி செய்து சமாளித்து கொள்கிறார்களா?

மேலை நாடுகளின் பொருளாதாரத்தை விரிவாக ஆராய்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.


இனி இந்திய விவசாய ஆதரவாளர்கள் கவனிக்க சில புள்ளிவிவரங்கள்


COUNTRIES GDP COMPOSITION ---- LABOUR FORCE BY SECTOR 

அமெரிக்காவின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு (1.2%)ஒரு சதவிகிதம் தான். விவசாயத்துறையில் வேலை பார்ப்போர் ஒரு சத்விகீதற்கும் (0.7%) கீழ். பெரும்பாலான பணக்கார நாடுகளின் நிலைமை இதுதான்.


USA 

agriculture: 1.2% -----------------------------------0.7% 

industry:   21.9%-----------------------------------20

services:   76.9%-----------------------------------79 

Japan

agriculture: 1.6%------------------------------------4

industry:   21.9%-----------------------------------21.9

services:   76.5% -----------------------------------68

Australia

agriculture: 4.1%-----------------------------------3.6

industry:    26%--------------------------------------21.1

services:    70% ------------------------------------75
Canada
agriculture: 2.3%----------------------------------2
industry:   26.4%----------------------------------19

services:   71.3% --------------------------------76

China
agriculture: 10.6%-----------------------------39.5
industry:     46.8%---------------------------------27.2
services:     42.6%---------- ---------------------42.6

France
agriculture: 1.8%--------------------------------3.8
industry:    19.3%--------------------------------24.3
services:    78.9% ------------------------------71.8

Germany
agriculture: 0.9%-------------------------------2.4%
industry:   26.8%-------------------------------29.7
services:   72.3---------------------------------67.8

India
agriculture: 17%-----------------------------52%
industry:     28.2%------------------------------14
services:     54.9% ----------------------------34 
South korea

agriculture: 3%-------------------------------7.2
industry:    39.4%-----------------------------25.1
services:    57.6%----------------------------67.7

Malasiya
agriculture: 9.4%--------------------------13
industry:   40.9%----------------------------36
services:   49.7% --------------------------51

Italy
agriculture: 1.8%---------------------------4.2
industry:   25%------------------------------30.7
services:   73.1% --------------------------65

World economy

GDP - composition by sector:
agriculture: 6%---------------------------37.5
industry:   30.6%--------------------------22.1
services:   63.4% ------------------------40.4


source: THE WORLD FACT BOOK

சிறை அனுபவம்: என்னை சபித்த தினமலர் வாசகர்கள்


இது ஒரு சர்ச்சை. இது மூன்று பதிவுகளாக இருக்கிறது.

                                                   இது முதல் பதிவு. 
eskalin - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-09-18 22:19:37 IST
சிவானந்தம் அவர்களே, நாடு முன்னேற நீங்கள் கூறும் கருத்து அபத்தமானது. நாடு முன்னேற விவசாய நிலங்களை தாரை வார்ப்பது, பெற்றோர்களை சாகடித்து பணத்தை எடுத்து கொண்டு பணக்காரன் ஆவதற்கு சமம்....

எ.கே. ravichandran - Chennai,இந்தியா
I have read the comments of Mr. Sivanandam, since many friends objected to

Monday, December 6, 2010

குண்டர் சட்டம்: சில விளக்கங்கள்`, தினமலரில்

என்னதான் வலைதளங்களில் எழுதினாலும், மக்களிடம் இதன் தாக்கம் குறைவுதான். பிரபலமான பத்திரிக்கைகளில், இதழ்களில் வரும் செய்திகள்தான் மக்களின் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும் .

எனது `குண்டர் சட்டம்: சில விளக்கங்கள்`, தினமலரில் `இது உங்கள் இடம்` பகுதியில் வெளியாகி இருக்கிறது. அரசியல்வாதிகள் இதை கவனித்து தேவையான சீர்திருத்தங்களை விரைவில் கொண்டுவருவார்கள் என நம்புவோம்

தினமலர் 

நான் எழுதிய விளக்கமான பதிவு சிறை அனுபவங்கள்: குண்டர் சட்டம் - சில விளக்கங்கள்

Sunday, December 5, 2010

சிறை அனுபவம் 3: பலி ஆடுகள்

இது ஒரு தொடர், வரிசையாக படிக்கஅந்த புதிய பிளாக்குக்கு நுழைந்த உடனேயே புரிந்து விட்டது இது ஜெயில்தான் என்று. அந்த பிளாக்கில் இருந்த அத்தனை பெரும் அக்மார்க் கிரிமினல்கள். மொத்தமாக (சுமார் 60 பேர்) அனுப்பபட்டவர்களில் நாங்கள் 15 பேர் ஒரு பிளாக்குக்குள் நுழைந்தோம். எனக்கு ஓரளவு உதவி புரிந்த அந்த பழைய கைதி, அட்மிஷன்களை பிரித்து விடும் அந்த பரப்பான நேரத்தில் காணாமல் போய்விட்டார். அவர் தன் பழைய நண்பர்களுடன் சேர்ந்துவிட்டதை  பின்னர் நான் தெரிந்துகொண்டேன்.


நாங்கள் போன பிளாக்குக்கு வார்டன்கள் தான் எங்களை அனுப்பி வைத்தார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் நாங்கள் அனுப்பி வைக்கப்பட்ட `விதம்`

Monday, November 29, 2010

சிறை அனுபவம்: குண்டர் (டுபாக்கூர்) சட்டம், சில விளக்கங்கள்

சமீபத்தில் ஆள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அவ்வப்போது சில பரபரப்பான குற்றங்கள் நிகழ்வதும், அந்த நேரம் மக்களின் கோபத்தை தணிக்க, அல்லது உண்மையிலேயே குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது குண்டர் சட்டத்தை போலீசார் ஏவுவார்கள். ஆனால் எனது இரண்டரை ஆண்டுகால சிறை அனுபவத்தில் சொல்கிறேன், இந்த குண்டர் சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை, இதனால் குற்றங்கள் குறையப்போவதும் இல்லை.

குண்டர் சட்டம் (சிறையில் இது மிசா ) ஒரு வருட தடுப்பு காவல் என்று சட்டம் சொல்கிறது. மக்களும் இதை நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது செயல்படும் விதமே வேறு. குண்டர் சட்டம் ஒருவர் மீது பாய்ந்த மூன்று மாதத்தில் போர்ட் (Board) வந்துவிடும். இந்த நபர் மீது குண்டர் சட்டம் போட்டது சரிதானா என்று மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து அதை உறுதி செய்யும் அல்லது தள்ளுபடி செய்யும். இதுதான் போர்ட். பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உடைந்து விடும் அல்லது `உடைக்கப்பட்டு`விடும்.

Sunday, November 21, 2010

சிறை அனுபவம் 2: இரண்டாவது இரவா அல்லது கடைசி இரவா?

இது `சிறை அனுபவம்: முதல் இரவுபதிவின் தொடர்ச்சி...

ஜெயிலில் என் முதல் நாள் இரவில் என்னை போல் புதிதாக வந்த பலர் மனக்கவலையாலும், சாப்பாடு பிடிக்காமலும் பட்டினியாக படுத்திருப்பார்கள். அவர்களுக்கு எப்படியோ, ஆனால் பட்டினி எனக்கு புதுசல்ல. போன ஜென்மத்தில் அநேகமாக நான் யாரையாவது பட்டினி போட்டு கொடுமைபடுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனவே பணம் இருந்தும் பல காரணங்களால் நான் இரவில் சாப்பிடாமல் படுத்திருக்கிறேன்.

அதனால் அன்றைய பட்டினியை நான் ஒரு பிரச்சினையாகவே கருதாமல் அரைகுறை தூக்கம் தூங்கி கொண்டிருக்க, இரவு ஒரு நேரத்தில், நிசப்தமான அந்த சூழ்நிலையில், ஏதோ ஒரு புரியாத சத்தம் கேட்க, நான் எழுந்து உட்கார்ந்து கொண்டு சுற்றி நோட்டம் விட்டேன். என்னை சுற்றி இருந்த அனைவரும் தூங்குகிறார்களோ இல்லையோ, ஆனால் படுத்து கொண்டிருந்தார்கள். சத்தம் தொடர்ந்து வரவே, அந்த ஹாலை இரண்டாக பிரித்திருந்த தடுப்புச் சுவரை தாண்டி பார்த்தேன். அந்த பக்கமும் எல்லாரும் படுத்திருக்க, ஒரு வேளை ஜன்னலுக்கு வெளியே ஏதாவது நடக்குதோ என்று பார்பதற்காக எழுந்து போனபோது தான் அந்த வித்தியாசமான காட்சியை பார்த்தேன்.

அந்த செல்லுகுள்ளே இருந்த கழிவறை உட்கார்ந்தால் மட்டும் மறைக்கும் அளவுக்கு கட்டை சுவர் கொண்டது. சிறைக்கு வரும் கைதிகள் மன உளைச்சலில் ஏதாவது செய்துகொள்வார்கள் என்பதால் பெரும்பாலும் எல்லாமே வார்டன்களின் கண்ணில் படும்படிதான் இருக்கும். அந்த கழிவறையில் ஒருவர் நம்பர் 2 போகும் பொசிஷனில் அமர்ந்து கொண்டு பிரெட் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர் சாப்பிடும் சத்தம் தான் அந்த இரவில் தெளிவாக கேட்டது.

கழிவறையில் புத்தகம் படிப்பதை கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அங்கே உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதா? அந்த வித்தியாசமான பொசிஷனை நான் அதிர்ச்சியும், அருவெறுப்புமாக பார்க்க, அவரோ என்னை பார்த்ததும் தலையை நட்டுக்கொண்டு காரியத்திலேயே குறியாக இருந்தார். நான் குழப்பத்தோடு வந்து படுத்தேன். புத்தியுள்ள எந்த மனிதனும் அங்கே உட்கார்ந்து கொண்டு சாப்பிடமாட்டான். ஒரு வேளை அந்த நபர் புத்திசுவாதினம் இல்லாதவரோ என்ற கேள்வியோடு தூங்கிபோனேன்.

மறுநாள் காலை அந்த கேள்விக்கு விடை கிடைத்தது. எங்களுடன் புதிதாக ஜெயிலுக்கு வந்த ஒருவர் `என் பையிலிருந்து பிரட்டை யாரோ சுட்டுடானுங்க` என்று புலம்பும்போது தான், இரவு நான் கண்ட காட்சிக்கு விடை கிடைத்தது. பசியை தாங்க முடியாமல் பிரட்டை திருடிய அவர் அதை மறைவாக சாப்பிடுவதற்காக (வேறு இடம் இல்லாததால்) கழிவறையை தேர்ந்தெடுத்திருக்கிறார். மேற்கொண்டு விசாரித்ததில் அவர் ஒரு IMC (சிறை பாஷையில் மெண்டல் ) என்று சொன்னார்கள். ஒரு பொருளை திருடி அதை யாரும் பார்த்துவிடகூடாது என்பதற்காக மறைத்து சாப்பிடும் ஒருவர் எப்படி மெண்டலாக இருக்கமுடியும். ஒன்னும் புரியவில்லை. ஆனால் அதன் பிறகு அவரை போலவே விநோதமாக நடந்து கொள்ளும் பலரை பார்த்திருக்கிறேன். இவர்கள் பொது பிளாக்கிலும் இருப்பார்கள், அதேசமயம் வியாதி முற்றும் போது அவர்களை தனியே அடைத்து விடுவார்கள்.

காலை 6.30 மணிக்கு லாக்கப் திறக்கப்பட்டு உருப்படி (கைதிகள்) எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு எங்களை வெளியே விட்டார்கள் (அதாவது அந்த பிளாக் உள்ளேயே சுற்றி வரலாம் ). 

காலையில் சக்கரை இல்லாத ஜெயில் டீயும், படியும் வந்தது. இந்த படியாவது சாப்பிட்டு பார்ப்போம் என்று டேஸ்ட் பண்ண, அதற்கும் மனம் ஒப்பவில்லை. அதன் பிறகு கடைசி வரை நான் காலை படியை சாப்பிடவில்லை. எனக்கு பிடிக்கவில்லையே தவிர ஜெயிலில் பலர் அந்த படிக்கும் அடித்து கொள்வார்கள். எனவே அதை மோசம் என்று சொல்லமுடியாது.

காலை கடன்களை முடித்த பிறகு, புதிதாக உருவாகியிருந்த நண்பரிடம் (இவர் ஏற்கனேவே ஜெயிலுக்கு வந்தவர்) `சரி இனி நாம் என்ன செய்யவேண்டும்?` என்று அன்றைய நிகழ்ச்சிநிரலை கேட்டேன்.

`இனி மறுபடியும் சாயங்காலம்  6 மணிக்குத்தான் நம்மை லாக்கப்பில் அடைப்பார்கள். அப்புறம் நம்மை வெரிபிகேஷனுக்கு அழைத்து போவார்கள். அது முடிந்த பிறகு தான் அடுத்து என்ன என்பது தெரியவரும் . அப்புறம்... நாம புதுசு இல்லியா, அதனால ஏதாவது வேலை கொடுப்பார்கள்.` என்று அவர் நிகழச்சிநிரலை பட்டியலிட்டார்.

ஆனால், வேலை ஒரு சம்பிரதாய வேலை. அந்த பிளாக்கில் வளர்ந்திருந்த புல்லை புடுங்குவது. அல்லது செடிகளுக்கு தண்ணி ஊத்துவது. புதியவர்களுக்கு இந்த வேலையைத்தான் கொடுப்பார்கள். என்னுடன் புதிதாக வந்த அந்த பழைய கைதி அதற்குள் என்னைபத்தி ஓரளவு தெரிந்து கொண்டதால் (நான் ஓரளவு சொன்னேன்) `அண்ணே , நீங்க சும்மா நில்லுங்க. நாங்க பார்த்துக்கிறோம்.` என்றார். ஜெயிலில் உங்களுக்கு மனு வரும் என்றால் நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் மனு வராதாவர்கள், மனு வரும் நபர்களுக்கு உதவிகள் செய்து, அவர்கள் கொடுப்பதை வாங்கிகொள்வார்கள். அந்த வகையில் என்னை பார்க்க இன்று உறவினர்கள் வருவார்கள் என்று நான் அவரிடம் சொல்லியிருந்ததால், அவர் என்னை அக்கறையாக கவனிக்க ஆரம்பித்தார். அதனால் அவர் உதவியில் எனக்கு அதிகம் பிரச்சினை உருவாகவில்லை.

பின்னர் வெரிபிகேஷனும் (எங்களின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு, எங்களுக்கு அடையாள எண் வழங்கும் நடைமுறை) அன்றே முடிந்து விட்டது. இதற்கிடையில் உறவினர்களும் என்னை மனு போட்டு பார்க்க வந்துவிட்டதால், பிஸ்கட், பிரட் என என் பட்டினி முடிவுக்கு வந்தது. நானும் என்னை கவனித்து கொண்ட அந்த நபருக்கு முடிந்த உதவிகளை செய்தேன்.

சாயங்காலம் 5 மணியளவில் மீண்டும் எங்களை வெளியே பைலில் உட்காரவைத்து, கூடவே `உங்கள் உடமைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்` என்றும்  சொன்னதால், `நம்மை எங்கே அழைத்து போவார்கள்` என்று நண்பரை கேட்டேன்.

`நாம் இப்போது இருப்பது குவாரண்டைன் பிளாக், இங்கே புது கைதிகள் வெரிபிகேஷன் முடியும் வரை வைத்திருப்பார்கள். அதன் பின் வேறு பிளாக்கிற்கு மாற்றி விடுவார்கள். எனவே நாம் இப்போது புது பிளாக்கிற்கு போகப்போகிறோம்' என்றார்.

அவர், நாம் புது பிளாக்குக்கு போகப்போகிறோம் என்று அலட்சியமாக சொன்னார். ஆனால் புதிய இடம் ஜெயில் என்றால் என்ன என்று எனக்கு உணர்த்தியது. அந்த இடம், இது எனக்கு இரண்டாவது இரவா அல்லது கடைசி இரவா இரவா என்று கவலைப்பட வைத்தது. ஜெயிலுக்கு போயே தீருவேன் என்று வீர வசனம் பேசிய நான் முதல் முறையாக `தப்பான முடிவு எடுத்துவிட்டோமோ` என்று கவலைப்பட ஆரம்பித்தேன். 
                                                                                        
                                                                                       தொடரும்

Friday, November 5, 2010

சிறை அனுபவம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.


சிறைக்கு சென்றவன் என்பதால் பரபரப்பான பல விஷயங்களை பற்றி நான் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் இங்கு பட்டும் படாமலும் சில விஷயங்களை குறிப்பிடுவேன். காரணம், சிறையில் நானாக எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளவில்லை. அடிப்படையில் நான் ஒரு தனிமை விரும்பி. நானும் ஒரு கைதி என்பதால் பல கைதிகள் தயக்கமின்றி என்னுடன் பேசியதால் தெரிந்து கொண்டவை.  சில சொந்த அனுபவங்களும் உண்டு. நான் எழுதிய கடிதங்கள் தினமலரில் வெளியான பிறகு `அண்ணே, இதைபற்றியும் நீங்க எழுதுங்கண்ணே` என்றும் சொன்னவை.

Tuesday, October 26, 2010

என் மனமார்ந்த நன்றி .

இங்கே என் பதிவுகளை போடுவதற்கு முன் சில பேருக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.

எனது கடிதங்களை அங்கீகரித்து என்னை உற்சாகப்படுத்திய தினமலருக்கு என் முதல் நன்றி.

எனது கடிதங்களை படித்து, ஆரோகியமான விமர்சனங்களை நாங்கள் அனுமதிப்போம் என்று கூறி எனது கடிதங்களை தினமலருக்கு அனுப்பிய புழல், மத்திய சிறை,2,  கண்காணிப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்களுக்கும் என் நன்றி.

மிக முக்கியமாக, சிறையில் இருப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் / சமுக விரோதிகள் என்று கருதாமல், `நியாமற்ற செயல்` என்ற என் கடிதத்தை தினமலரில் படித்துவிட்டு,  என் எழுத்தின் மூலம் என்னை அடையாளம் கண்டு, முகம் தெரியாத எனக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக  கடிதம் எழுதிய மதுரை, யாகப்பா நகரை சேர்ந்த திரு. G அமிர்தசேகரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Saturday, October 23, 2010

குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதா?

தினமலர் 18-09-2010  நாளிதழில் வெளியான கடிதம்.

சிறையிலிருந்த போது எழுதியது 


மத்திய, மாநில அரசுகள், புதிய தொழிற்சாலைகளின் தேவைக்காகவும், அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதற்கும் நிலங்களை கையகப்படுத்தும் போது, "விவசாய நிலத்தை கையகப்படுத்த கூடாது' என, சில அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துவது துரதிர்ஷ்டம்.

தேவையா நில உச்சவரம்பு சட்டம் ?

தினமலர் - இது உங்கள் இடம் 
(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது) 


நம் நாட்டில் நில உச்சவரம்பு சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். அனேகமாக தற்போது உணவுதானிய பொருட்களின் விலையேற்றத்திற்கு,  இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் .

அபராதத்தை அதிகரியுங்கள்

தினமலர் 15-07-2009 இதழில் (சிறையில் இருந்தபோது )வெளியான கடிதம்.`நீதிமன்றங்களில், லட்சகணக்கில் வழக்குகள் தேங்கி நிற்பதாலும், வழக்கை நடத்த செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும், ஏழை மக்களை பொறுத்தவரையில் நீதி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க, நாம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு பல் வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: குற்றம் சாட்டப்பற்றவர் கைது செய்யபட்ட பின் 15 நாட்களுக்கு ஒரு

ஆஸ்திரேலியாவில் அடி வாங்குவதை தடுக்கலாம்...

தினமலர் 21-06-09 இதழில் வெளியான கடிதம்

(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது) 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் , இங்கே இந்தியாவில் கல்லூரிகளில் சட்டவிரோதமாக லட்சகணக்கில் நன்கொடைகள் வாங்குவதும் மத்திய அரசின் மோசமான கல்வி கொள்கையை காட்டுகிறது .

கல்வியின் அவசியத்தை மக்கள் உணர்ந்து வரும் வேளையில் , அதற்க்கு தகுந்தாற்போல் கல்விநிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு தவறிவிட்டது .

மிக அதிகப்படியான நன்கொடைகளை தவிர்க்கவும் மற்றும் தரமான கல்வியை தேடியும், இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை நாடுவதை மத்திய அரசு தடுக்கவில்லை . ஆகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையே இந்தியாவில் நேரடியாக அல்லது இந்திய நிறுவனங்களின் துணையோடு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் .

இதன் மூலம் நமக்கும் அந்நிய செலவாணி மிச்சமாகும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்களை நான் இணையதளம் மூலம் ஆராய்ந்திருக்கிறேன் .இன்றைய வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களின் வளர்ச்சிக்காக பாராம்பரிய தொழிலையோ அல்லது இயற்கை ஆதாரங்களையோ நம்பி இருக்கவில்லை .

மாறாக, இன்றைய சூழ்நிலைக்கு எந்த துறையில் முதலீடு செய்தால் லாபம் என கணித்து அதன்படி செயல்பட்டு வெற்றி கண்டிருக்கின்றன.

கல்வியை ஒரு லாபமளிக்கும் துறையாக கணித்து, அதன்முலம் ஆஸ்திரேலியர்கள் பெருமளவு அன்னிய செலாவணியை ஈட்டுவது, அவர்களுடைய புத்திசாலி தனத்தைக்  காட்டுகிறது .

இந்தியாவும், இயற்கை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா மற்றும் கல்வி சுற்றுலா போன்ற துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அன்னிய செலாவணியை ஈட்டவும், வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, இத்துறைகளில் கூடுதல் கவனத்தையும் முதலீடுகளையும் செய்யவேண்டும் .

நியாயமற்ற செயல் !

தினமலர் 13-03-2009 இதழில் வெளியான கடிதம்.

(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது) 

`தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான நவீன் சாவ்லாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்` என்ற தலைமை தேர்தல் கமிஷனரின் பரிந்துரையை, மத்திய அரசின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி நிராகரித்ததோடு மட்டுமில்லாமல், அடுத்த தேர்தல் கமிஷனராக அவரை அறிவித்தும் இருக்கிறார் .

Monday, October 18, 2010

MY PUBLISHED LETTERS - ASIA TIME ONLINE - 2006

Re India fears US nuclear trap [Dec 20]:

I strongly believe that this deal will pass all the hurdles and also address major concerns of India, because despite the fact that India and the US are saying that this is simply a business deal, it was their security concerns which ensured the success of this deal. In fact, although India direly needs the nuclear deal, the US too needs this deal for its own reasons.

For India, this deal will relieve it from dangerously depending on oil. Second, a prospering India will also need more FDI [foreign direct investment] with technology transfer. Since the US-led countries are

MY PUBLISHED LETTERS - ASIA TIME ONLINE - 2005

Re US turns the screws on deal with India [Dec 10]:

I strongly believe that the India-US nuclear deal will pass through the [US] Congress. After the public announcement of the deal and India taking a virtual U-turn to support the US against Iran, it is difficult for the Americans to backtrack. If the American Congress fails to ratify the deal, it is not going bring