தினமலர் - இது உங்கள் இடம்
(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது)
(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது)
இந்த சட்டம் சிறு விவசாயிகளை பாதுகாப்பதற்க்காக கொண்டு வரப்பட்டது என்றாலும், இந்த சட்டத்தால் ஏற்பட்டிருக்கும் சில பக்க விளைவுகளை பற்றியும் நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது , என்ன தான் மத்திய , மாநில அரசுகள் , சிறு விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவிகள் செய்தாலும், அவர்களால் , தொழில்நுட்ப அறிவை முழுமையாக பயன்படுத்தி, தங்களுடைய நிலங்களில் உற்பத்தி சதவிகிதத்தை அதிகரிக்கவோ , சேதாரத்தை தவிர்க்கவோ முடியாது மற்றும் நல்ல விலை கிடைக்கும் வரை அவற்றை கெடாமல் பாதுகாக்கவும் முடியாது .
மிக முக்கியமாக எந்த பொருட்களுக்கு உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் தேவைகள் அதிகரிக்கிறது என கணித்து அதன்படி செயல்பட முடியாது . பெரிய அளவில் முதலீடு செய்பவர்களால் தான் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கென தனித் துறை அமைத்து திறமையாக செயல்பட முடியும் .
தற்போது விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை அரசாங்கமே வாங்கி சேமித்து வைக்கிறது . ஆனால், அவர்களுடைய திறமையற்ற நிர்வாகத்தால் உணவு தானியங்கள் வழக்கம் போல் வீணாகி போவதை பத்திரிக்கையில் படிக்கிறோம் .
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் லைசன்ஸ் கட்டுப்பாடுகள், நம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவாமல் அது எதிர்மறை விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது . இதை மத்திய அரசு உணர்ந்து அவற்றில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தது .அதே போல் இந்த நில உச்சவரம்பு சட்டம் உண்மையில் நம் நாட்டுக்கு பயன் அளிக்கிறதா என ஆராய்ந்து, தேவைபட்டால் அவற்றிலும் தேவையான மாற்றங்களை கொண்டு வந்து விவசாயத்துறையிலும் பெரிய அளவிலான முதலீடுகளை ஊக்குவிக்கவேண்டும்.
0 comments:
Post a Comment