தினமலர் 13-03-2009 இதழில் வெளியான கடிதம்.
எந்த ஒரு பிரச்சினையிலும் , இரு தரப்பிலும் நியாயம் இருக்க முடியாது. எனவே ,தலைமை தேர்தல் கமிஷனரின் பரிந்துரையை , ஒரு பார்லிமென்ட் குழுவிற்கோ அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கொண்ட குழுவிற்கோ அனுப்பி , `நவீன் சாவ்லாவின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றனவா ` என்று ஆய்வு செய்து முடிவெடுத்திருக்க வேண்டும் .
ஆனால் , அப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் , `தலைமை தேர்தல் கமிஷனருக்கு இந்த பரிந்துரையை செய்யும் அதிகாரம் இல்லை ` என்று தெளிவற்ற சட்டங்களை காரணம் காட்டி , அவருடைய பரிந்துரையை ஏற்க மறுத்து , தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
.இப்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் தவிர்க்க , சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறிந்து அதன்படி நடந்திருக்கலாம் .
நான் `வெளியில் ` இருந்த போது என்னுடைய ஒரே பொழுதுபோக்கு இணையதளம் முலம் சர்வேதேச பத்திரிக்கைகளை படிப்பதுதான். குறிப்பாக உலக நாடுகள் இந்தியாவை பற்றி என்ன நினைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வதுதான் .
இந்திய பொருளாதார ரீதியாகவும் , ராணுவ ரீதியாகவும், கல்வி அறிவிலும் இன்னும் பின் தங்கி இருக்கலாம் . ஆனால் , உலக நாடுகள் ஏதாவது ஒரு விஷயத்தில் இந்தியாவை பார்த்து பிரமித்து , ஆச்சரியப்பட்டு பாரட்டுகிறதென்றால் , அது நாம் நமது ஜனநாயகத்தை இதுவரை கட்டி காப்பாற்றி வருவதுதான் .
இந்தியா சுதந்திரம் அடைந்து , குடியரசாக மலர்ந்தபோது , இந்தியா பல்வேறு மதங்களையும் , ஜாதிகளையும் , மொழிகளையும் மற்றும் பெருமளவு கல்வி அறிவு இல்லாத மக்களையும் உள்ளடக்கியதாக இருந்தததால், `இந்த நாடு விரைவில் உடைந்து சிறுசிறு நாடுகளாக மாறிவிடும் ` என்று பல நாடுகள் கணித்தன .
ஆனால் , அவர்களுடைய கணிப்புகளை பொய்யாக்கி , இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது . அதற்க்கு முதன்மையான கரரணம் , சில குறைகளை தவிர்த்து , இந்தியாவில் தேர்தல்கள் முறையாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு , நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்தான் (அவர்களில் பலர் உழல்வாதிகளாக இருந்தாலும் ) நம்மை ஆள்கின்றனர் என்ற நம்பிக்கையை தேர்தல் கமிஷன் , மக்களிடையே வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பது தான் .
மக்களின் நம்பிக்கைகள் பொய்த்து போனால், அவர்களுடைய கோவம், தங்களின் பிரிதிநிதிகளின் மீதுதான் திரும்புகிறதே தவிர தேசத்தின் மீது அல்ல .
எனவே , அப்படிப்பட்ட பெருமையை நமக்களித்த தேர்தல் கமிஷனும் , தேர்தல் கமிஷனர்களும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டியதை உறுதி செய்யவேண்டியது மத்திய அரசின் கடமை .
0 comments:
Post a Comment