!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, October 23, 2010

அபராதத்தை அதிகரியுங்கள்

தினமலர் 15-07-2009 இதழில் (சிறையில் இருந்தபோது )வெளியான கடிதம்.



`நீதிமன்றங்களில், லட்சகணக்கில் வழக்குகள் தேங்கி நிற்பதாலும், வழக்கை நடத்த செலவினங்கள் அதிகமாக இருப்பதாலும், ஏழை மக்களை பொறுத்தவரையில் நீதி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க, நாம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'  என ஜனாதிபதி பிரதீபா பாட்டில் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதற்கு பல் வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: குற்றம் சாட்டப்பற்றவர் கைது செய்யபட்ட பின் 15 நாட்களுக்கு ஒரு
முறை, சம்பந்தப்பட்ட கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு அவருடைய காவல், மீண்டும் நீட்டிக்கப்படவேண்டும் . சில சட்ட பிரிவுகளில் ஜாமீன் கிடையாது; சில பிரிவுகளில் மூன்று மாதம் கழித்துதான் ஜாமீன் கேட்கமுடியும்  ஜாமீன் எடுக்க வசதி இல்லாதவர்களும் ஜாமீன் மறுக்கபடுபவர்களும் சிறையிலேயே இருப்பதும் உண்டு.   

இருந்தாலும் அனைத்து விசாரணை கைதிகளும் 15 நாட்களுக்கு ஒரு முறை கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படும் தேவையற்ற நடைமுறை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நடைமுறையால் சிறைகாவலர்களுக்கு மட்டுமின்றி எங்களை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் பாதுகாப்பு போலீசாருக்கும் தேவையற்ற பணிச்சுமை ஏற்படுகிறது .

அதோடு மட்டுமில்லாமல் நீதிபதிகளும் தங்கள் வேலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தை காவல் நீட்டிப்பு வழங்குவதற்காகவே ஒதுக்க வேண்டி இருக்கிறது.

இதை மாற்ற, விசாரணைக்கு தேவைப்படும் போது மட்டும்,  விசாரணை கைதிகள் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படுவர் என்றோ அல்லது காவல் நீட்டிப்பிற்காண காலத்தை ஒரு மாதமாகவோ அல்லது இதற்கென தனி நீதிபதி ஒருவரை  நியமனம் செய்து சிறை வளாகத்தில் இருக்கும் உள் நீதிமன்றத்திலேய காவலை நீட்டிக்குமாறு செய்யலாம் .

சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல் இந்த மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் பொருளாதார விரயங்களையும் தவிர்க்கலாம் .

வழக்குகள் குவிவதற்கு மற்றுமொரு காரணம் நியாயமான காரணங்கள் இன்றி நீதிமன்றங்களை நாடும் மனப்பான்மை மக்களிடம் அதிகரிக்கறது. தன் தரப்பில் நியாயமில்லை என தெரிந்தும் தனக்கு வேண்டாதவர்களை கோர்ட் நடைமுறைகள் மூலம் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு தரப்பில் போடப்படும் வழக்குகளும் உண்டு .

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் தேவையற்ற வழக்கை தொடுத்ததாக கூறி அவருடைய கோரிக்கையை நிராகரித்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு ஒரு லட்சம்  ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது .
 .
இதேபோல், ஒரு வழக்கு அல்லது அப்பீல் தள்ளுபடி செய்யப்படும் போது, அந்த வழக்கு, நியாயமற்றது என்றும் நீதிபதி கருதினால், அந்த வழக்கை தொடுத்தவருக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுமாறு, சட்டங்களை கொண்டு வர வேண்டும் .

நீதி இலவசமாக கிடைக்கவேண்டியது எப்படி முக்கியமோ, அதேபோல் தேவையற்ற வழக்குகள் மூலம் நீதிமன்றங்களை தொந்தரவு செய்பவர்கள் அதற்க்கான் விலை கொடுக்க வேண்டும் என்ற வகையிலும் சட்டம் இருக்க வேண்டும்.

தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனையில்தான் கடுமை காட்டப்படுகிறது; அபராத தொகை மிகவும் சொற்பமாக இருக்கிறது. பல குற்றங்களுக்கு பணம் தான் மூல காரணமாக இருப்பதால் அபராத தொகையை கடுமையாக உயர்த்த வேண்டும் . இதன் மூலம் நீதிமன்றங்களும் ஓரளவு நிதி ஆதாரத்தை திரட்டலாம். அதே சமயம் தவறு செய்தால் தண்டனை கிடைப்பதோடு மட்டுமில்லாமல் தங்களின் வாழ்நாள் சேமிப்பையும் இழக்க வேண்டி இருக்கும் என்ற அச்ச உணர்வும் மக்களுக்கு ஏற்ப்படும் .

0 comments:

Post a Comment