!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, December 12, 2010

விவசாயம் இந்தியாவை காப்பாற்றுமா?

இது ஒரு சர்ச்சை. மூன்று பதிவுகளாக இருக்கிறது.
இது கடைசி பதிவு: எனது பதில்...


பொதுவாக அரசியல்வாதிகள் ஏதாவது பேட்டி கொடுத்து, அது கடுமையான விமர்சனத்திற்க்கு உள்ளானால், `நான் சொன்ன கருத்தை பத்திரிக்கைகள் திரித்து வெளியிட்டுவிட்டன` என்று சொல்லி பழியை பத்திரிக்கையாளர்கள் மீது போட்டுவிடுவார்கள். நான் அப்படி சொல்லப்போவது இல்லை. எனது கருத்துக்கள் திரிக்கப்படவில்லை. எனது பெரிய கடிதம் சுருக்கப்பட்டதால் (பத்திரிக்கைகளில் இது தவிர்க்கமுடியாத ஓன்று) எனது முழுமையான கருத்து மக்களை போய் சேரவில்லை.

இந்த பிரச்சினை நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் ஓன்று என்பதாலும், ஒருவேளை என்னை விமர்சித்தவர்கள் வலைதளங்களில் உலாவலாம் என்ற நம்பிக்கையிலும் இந்த பதிவை போடுகிறேன்.

வாசகர் கடிதம் முலம் பெரிதாக கருத்து சொல்ல முடியாது. தினமலர் மட்டும் கொஞ்சம் பெரிய கடிதங்களை பிரசுரிக்கிறது. நான் எழுதிய இந்த கடிதம் சுமார் 500 வார்த்தைகளை உள்ளடக்கியது. இது அதிகம் என தெரிந்தாலும், நான் சொல்ல நினைப்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என நினைத்ததால், அதை அப்படியே அனுப்பி வைத்தேன். தினமலர் நான் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு, முக்கியமானவற்றை மட்டும் வெளியிட்டது (300 வார்த்தைகளில்). இதைதான் வாசகர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா விவசாயத்தை புறக்கணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. விவசாயம் இல்லை என்றால் உலகமே இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால், தற்போதைய யதார்த்தம் என்னவென்றால், விஞ்சானம் பல துறைகளை உருவாக்கி, அவை பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருப்பதோடு மட்டுமில்லாமல், அவசியமான துறைகளாகவும் மாறிவிட்டன. பிற துறைகளின் வளர்ச்சி, விவசாயத்தை தற்போதைய உலக பொருளாதாரத்தில் 6 சதவிகித அளவுக்கு மாற்றிவிட்டது (கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தை கவனிக்கவும்).

அதாவது ஒரு காலத்தில் கடலாக இருந்த விவசாயத்துறை, ஏரியாக மாறி தற்போது குட்டை என்ற அளவில் சுருங்கி விட்டது. அத்துடன் விவசாயம் மிக பழமையான தொழில் என்பதையும் உலகில் பெரும்பாலான நாடுகள் இதில் ஈடுபட்டிருக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் தொழில்நுட்பங்களையும் திறமையாக பயன்படுத்தி, விலையிலும், தரத்திலும் கடுமையான போட்டியை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தொழிலில் போட்டி அதிகமாக இருந்தால் அதில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது என்பது எல்லோருக்குக்கும் தெரிந்த விஷயம். எனவே, இந்தியா விவசாய பொருட்களை லாபகரமாக ஏற்றுமதி செய்வது என்பது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஓன்று.

ஆனால் பெட்ரோலிய பொருட்கள் முதற்கொண்டு நாம் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஈடாக எதையாவது ஏற்றுமதி செய்ய வேண்டுமே?

இங்கேதான் நாம் யதார்த்தமாக சிந்திக்கவேண்டும்.  உலகம் தற்போது சிந்திக்கும் விதத்தை கவனியுங்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை எப்படி விற்பது என்றெல்லாம் யோசிக்காமல், இந்த உலகத்துக்கு என்ன தேவை? எதில் போட்டி குறைவாக இருக்கிறது, எதில் நமக்கு லாபம் வரும், என்றெல்லாம் கணக்கிட்டுதான் பல நாடுகள் வெற்றி கண்டிருக்கின்றன.

கல்வியை ஒரு தொழிலாக கருதி அதன் மூலம் அந்நிய செலாவணி ஈட்டமுடியும் என்று யாராவது நினைத்தார்களா? ஆனால், ஆஸ்திரேலியா அதை சாத்தியமாக்கியிருக்கிறது.

எனவே இவற்றையெல்லாம் இந்தியா உணர்ந்து, புதிய உலக மாற்றங்களின்படி இந்தியாவின் பொருளாதார கொள்கைகள் இருக்க வேண்டும் என்று தான் சொல்லியிருந்தேன். அதாவது, விவசாயத்துறையில் ஓரளவு சுயசார்பு கொள்கையை (நமது தேவைக்காக) கடைபிடித்து, பற்றாக்குறையை மட்டும் இறக்குமதி செய்தும் சமாளித்து கொள்ளலாம் என்று தான் சொல்லியிருந்தேன்.

அதே சமயம் ஏற்றுமதிக்காக தொழில்துறையையும், சேவைத்துறையையும் நாம் வளர்த்துத்தான் ஆகவேண்டும். அதற்காக அவர்களுக்கு தேவைப்படும் வசதியை (அது விவசாய நிலமாகவே இருந்தாலும்) அரசாங்கம் செய்து தரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

மூன்று தேவைகள் 

ஒரு அரசு மூன்று விஷயங்களை பற்றித்தான் (பாதுகாப்பை தவிர்த்து) அதிகம் கவலைப்படும். 1) வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். 2) நிர்வாகம் செய்ய வரி வருவாய் வேண்டும். 3) அந்நிய செலவாணி ஈட்ட எதையாவது ஏற்றுமதி செய்ய வேண்டும்.

விவசாயத்துறையால் இந்த மூன்று விஷயங்களிலும் அரசுக்கு உதவ முடியுமா? வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால், அவர்கள் இந்த மூன்று விஷயங்களுக்காகவும் விவசாயத்துறையை நம்பவில்லை என்றுதான் தெரிகிறது. அவர்களின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பும், விவசாயத்துறை உருவாக்கியிருக்கும் வேலைவாய்ப்பும் 1 முதல் 3 சதவிகீதம் தான்.

ஒரு வாசகர், ஜப்பான் மீது அணு குண்டு போடப்பட்டு அதன் விளைநிலம் பாழாகிபோனதால் தான் அது விவசாயம் செய்யமுடியாமல் போனது என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு வாதத்துக்கு அதை உண்மை என எடுத்துக் கொண்டாலும், பிற முன்னணி நாடுகளில் விவசாயத்தின் பங்களிப்பு குறைவாக இருப்பதன் காரணம் என்ன?


இந்த கொடுமையையும் படிங்க.

தற்போதைக்கு விவசாயிகளால் அரசுக்கு வரி வருமானம் இல்லை. மானியங்கள் கொடுக்கும் வகையில் அரசுக்கு செலவுதான். சரி. மானியங்கள் நாட்டுக்கு அவசியமானவை என்றே வைத்துகொள்வோம். இவர்களுக்கு மானியம் கொடுக்க நிதி எங்கிருந்து வருகிறது? பிற துறையினர் அரசுக்கு அளிக்கும் வரி வருவாய் மூலம் தானே! அதற்காகவாவது பிறதுறையினர் ஆரோக்கியமாக வளரவேண்டாமா ?

தரிசுநிலங்களில் தொழிற்சாலை அமைப்போருக்கு அரசு வரிச்சலுகைகள் மூலம் ஊக்குவிக்கலாம். ஆனால் தரிசுநிலம் என்ற பெயரில் போக்குவரத்து வசதியில்லாத இடத்தை அவர்கள் ஏற்பார்களா? எந்த துறைக்கும் ஒரு அடிப்படை கட்டமைப்பு தேவையாயிற்றே. இப்படி அவர்களுக்கு தேவையான கட்டமைப்பை அரசு தராவிட்டால் நஷ்டம் அவர்களுக்கில்லை, நமக்குத்தான். வேறு ஒரு மாநிலம் அல்லது நாடு அவர்களை வரவேற்க தயாராக இருக்கும்.

விவசாய நிலங்களை பாழாக்காமல் அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று நானும் கவலைபட்டதுண்டு. இது குறித்து நான் நடத்த முயற்சித்த `கடலூர் பார்வை` விளம்பர இதழில் `எங்கே போகும் இந்த பாதை...` (ஏப்ரல்-08) என்ற தலைப்பில் நான் எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன். தினமலரில் `தேவையா நில உச்சவரம்பு சட்டம்` என்ற தலைப்பில் விவசாயத்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஒரு கடிதத்தையும் எழுதியிருக்கிறேன்.


நம்நாட்டு மக்களுக்கு கதை அல்லது உதாரணங்கள் மூலமாகத்தான் சில விஷயங்களை புரிய வைக்க முடியும். எனவே சில உதாரணங்கள்.


வெற்றி பெற்ற மனிதர்கள் 

இது ஒரு கொஞ்சம் கற்பனையும் மீதி உண்மையும் கலந்த கதை. கிராமத்தில் ஒருவர் இருந்தார். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. ஆனால் இவரிடம் பேச்சு திறமை உண்டு. வெட்டி கொண்டு வா என்றால், கட்டி கொண்டு வரும் ரகம். இவருடைய பேச்சு திறமையினால், பலர் பல விஷயங்களில் இவரை துணைக்கு அழைப்பார்கள்.

நம் நாட்டு மக்களிடம் ஊறிப்போன ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் தெரியும். சேமிப்பு என்றால் அவர்களை பொறுத்த வரையில் தங்கம் வாங்குவதுதான். ஆனால் நகைக் கடைக்காரர்கள் ஆளைப் பொருத்து செய்கூலி, சேதாரம் என்று ஏமாற்றுவார்கள் என்பதால், பேரம் பேசி வாங்க, பக்கத்திலிருந்த நகருக்கு இவரை அழைத்து போக ஆரம்பித்தார்கள்.

இப்படி போய் வர ஆரம்பித்த இவர், விரைவில் நகை தொழிலுக்கான வியாபார சூட்சுமத்தையும் தெரிந்து கொண்டார், கூடவே நகை வாங்குபவர்களை விட நகை விற்பவர்கள் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதையும் கவனித்தார்.

எனவே தனது பரம்பரை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, உள்ளுரிலேயே நகைக்கடை ஆரம்பிக்க, இப்போது அவர் நல்ல பொருளாதார நிலைமையில் இருக்கிறார். இவருடைய மகனின் திருமனத்திற்கு நான் செல்ல நேர்ந்தது. அப்போது பலர், `எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்(வளந்துட்டார்)` என்று பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது.

இது போன்ற வெற்றி பெற்ற மனிதர்களின் கதை உங்களிடமும் நிறைய இருக்கும். இங்கே நாம் கவனிக்கவேண்டியது, வெற்றி பெரும் மனிதர்கள் எப்படி முடிவெடுகிறார்கள் என்பதைத்தான். அதே சமயம் அவர் தனது விவசாயத்தொழிலை விட்டுவிட்டார் என்பதால் அவர் பட்டினி கிடக்கிறார் என்று ஆகிவிடாது.


முஸ்லீம்களெல்லாம் தீவிரவாதிகளா? 


சரி. உங்களுக்கு இன்னொரு உண்மை தெரியுமா? உலகத்தில் உள்ள முஸ்லீம்களெல்லாம் தீவிரவாதிகள் இல்லை என்று முஸ்லிம்கள் உரக்க கத்துகிறார்கள். உண்மைதான். ஆனால் உலகம் இதை ஏற்றுகொள்கிறதா? இல்லையே! `பெரும்பாலான தீவிரவாதிகள் முஸ்லீம்கள்` என்ற புள்ளிவிவரத்தைதான் உலகம் கவலையோடு கவனத்தில் எடுத்துகொண்டு முஸ்லீம்களை சந்தேக கண்ணோடு பார்க்க வைக்கிறது.

அதேபோல் விவசாயம் ஒரு நாட்டின் உயிர்நாடி என நீங்கள் காது கிழிய கத்தலாம். இதுவும் உண்மைதான். ஆனால் உலகின் பணக்கார நாடுகள், விவசாயத்துறையை சார்ந்தவர்கள் இல்லை என்ற புள்ளிவிவரத்தையும் நீங்கள் கவனித்தால், இந்தியா, விவசாயத்தை மட்டும் நம்பி இருந்தால் பொருளாதார வல்லரசாக முடியாது என்பதை உணரமுடியும்.

இந்தியாவில் விவசாயிகளும் வளர்ச்சி பெறாமல், விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்து, இந்தியாவில் இன்னமும் மக்கள் பட்டினியால் சாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் விவசாய நிலங்களை தொழில்துறையினருக்கு கொடுப்பதால் இல்லை. உண்மையில் அடுத்த தலைமுறைக்கு வீடு கட்டுவதற்காக இப்போதே விவசாய நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விவசாயத்துறையை நசுக்குகிறார்களே நம் நாட்டுபிரஜைகள் (விற்பவர்கள்/வாங்குபவர்கள்), இவர்கள் செய்யும் அட்டூழியத்தில் 10 சதவிகிதம் கூட தொழில்துறையினர் செய்யவில்லை.

வளர்ந்த நாடுகள் இயற்கையை பாதிக்க கூடிய தொழிற்ச்சாலைகளை ஏழைநாடுகள் மீது தள்ளபார்க்கின்றன என்பதும் உண்மைதான். ஆனால் அது எவை என பார்த்து அவற்றை மட்டும் எதிர்க்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக தொழில்துறையினரை நாம் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகம் சில ஊழல் அரசியல்வாதிகளை உருவாக்கி இருக்கிறது என்பதற்காக ஜனநாயகமே வேண்டாம் என்று சொல்லமுடியுமா?

இந்தியாவின் விவசாய தொழிலுக்கான கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் தேவை. இதை பற்றி வேறு ஒரு பதிவில் அலசுவோம்.


சில சந்தேகங்கள்.

வளர்ந்த நாடுகளில் விவசாயத்துறையில் இருப்பவர்கள் 5 சதவிகீததிற்கும் கீழ் தான். இந்த 5 நபர்கள் மீதி 95 பேருக்கான தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விவசாய உற்பத்தி செய்கிறார்களா, அல்லது இந்த நாடுகள் நான் சொன்னதை போல் இறக்குமதி செய்து சமாளித்து கொள்கிறார்களா?

மேலை நாடுகளின் பொருளாதாரத்தை விரிவாக ஆராய்பவர்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.


இனி இந்திய விவசாய ஆதரவாளர்கள் கவனிக்க சில புள்ளிவிவரங்கள்


COUNTRIES GDP COMPOSITION ---- LABOUR FORCE BY SECTOR 

அமெரிக்காவின் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு (1.2%)ஒரு சதவிகிதம் தான். விவசாயத்துறையில் வேலை பார்ப்போர் ஒரு சத்விகீதற்கும் (0.7%) கீழ். பெரும்பாலான பணக்கார நாடுகளின் நிலைமை இதுதான்.


USA 

agriculture: 1.2% -----------------------------------0.7% 

industry:   21.9%-----------------------------------20

services:   76.9%-----------------------------------79 

Japan

agriculture: 1.6%------------------------------------4

industry:   21.9%-----------------------------------21.9

services:   76.5% -----------------------------------68

Australia

agriculture: 4.1%-----------------------------------3.6

industry:    26%--------------------------------------21.1

services:    70% ------------------------------------75
Canada
agriculture: 2.3%----------------------------------2
industry:   26.4%----------------------------------19

services:   71.3% --------------------------------76

China
agriculture: 10.6%-----------------------------39.5
industry:     46.8%---------------------------------27.2
services:     42.6%---------- ---------------------42.6

France
agriculture: 1.8%--------------------------------3.8
industry:    19.3%--------------------------------24.3
services:    78.9% ------------------------------71.8

Germany
agriculture: 0.9%-------------------------------2.4%
industry:   26.8%-------------------------------29.7
services:   72.3---------------------------------67.8

India
agriculture: 17%-----------------------------52%
industry:     28.2%------------------------------14
services:     54.9% ----------------------------34 
South korea

agriculture: 3%-------------------------------7.2
industry:    39.4%-----------------------------25.1
services:    57.6%----------------------------67.7

Malasiya
agriculture: 9.4%--------------------------13
industry:   40.9%----------------------------36
services:   49.7% --------------------------51

Italy
agriculture: 1.8%---------------------------4.2
industry:   25%------------------------------30.7
services:   73.1% --------------------------65

World economy

GDP - composition by sector:
agriculture: 6%---------------------------37.5
industry:   30.6%--------------------------22.1
services:   63.4% ------------------------40.4


source: THE WORLD FACT BOOK

1 comments:

Post a Comment