!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label savukkushankar. Show all posts
Showing posts with label savukkushankar. Show all posts

Sunday, October 25, 2026

ஷேர் புரோக்கர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் — இவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள்!

முதலில் சவுக்கு சங்கரின் கதையைப் பார்ப்போம். அநேகமாக, அவருடைய டி.என்.ஏ.வை ஆராய்ந்தால், சிவனையே எதிர்த்த அந்த நக்கீரனின் வழித்தோன்றலாக அவர் இருக்கக்கூடும். மனிதர் எதற்கும் பயப்படுவதில்லை. தமிழக ஊடகத் துறையில் இவர் ஒரு வரப்பிரசாதம். நிச்சயமாக, இவர் வந்த பிறகு தமிழக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு பயம் வந்திருப்பது உண்மை. அதே நேரத்தில், அரசியலும் கொஞ்சம் ஆரோக்கியமான பாதைக்குத் திரும்பியிருப்பதும் உண்மை. பல விஷயங்களைப் புரியும்படி இவர் சொல்லும் விதம், அதில் நையாண்டியைக் கலந்து சுவாரஸ்யமாக்குவது என எல்லாமே அதிரடிதான்.

(இவரிடமும் சில கோளாறுகள் இருக்கின்றன. அதைப் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.)

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர் பள்ளிப் படிப்பைக்கூடச் சரியாக முடிக்கவில்லை. இரண்டாவது, இவர் எந்த ஊடகத்திலும் பணியாற்றவில்லை. அதுமட்டுமின்றி, திருமண வாழ்க்கையிலும் இவர் வெற்றி பெறவில்லை. மன அமைதிக்கும் உறவுக்கும் மாலதி இருக்கிறார். ஆனால், ஓர் ஊடகவியலாளராக இவர் வெற்றி பெற்றுவிட்டார். வசூலின் அடிப்படையில் ரஜினியைச் சூப்பர் ஸ்டார் என்று சொல்வது உண்மையானால், வாசகர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சங்கரும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டார்.

Wednesday, September 30, 2026

சவுக்கு சங்கருக்கு தண்டனை; நீதிபதிகளும் எல்லை மீறுகிறார்கள்

சவுக்கு சங்கருக்கு ஒரு அவதூறு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் நீதி நிலைநாட்டப்பட்டது போல் தெரியும். ஆனால் ஆழ்ந்து கவனித்தால், நீதித்துறையின் பல தீர்ப்புகள் அபத்தமாக இருப்பதும் புரியும்.

உண்மையில், இது போன்ற தீர்ப்புகளை நான் குறை சொல்லமாட்டேன். இது நல்லதுதான். ஆனால் அவை விரைவாக வர வேண்டும்; அதேசமயம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அந்த நடைமுறை நீதித்துறையில் கிடையாது.

ஒரு கதை படித்தேன். உண்மை சம்பவமாகவும் இருக்கலாம். ஒருவன் மிகக் கொடிய குற்றம் செய்து, அதற்காக கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை பெறுகிறான். சட்ட நடவடிக்கை பல மட்டங்களில் நீண்ட காலமாக நடந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிறையில் நிறையப் படித்து, பல மனிதர்களோடு பழகி, அவன் தன் தவறை உணர்ந்து மனிதனாக மாறுகிறான்.

Saturday, September 26, 2026

சவுக்கு சங்கர், முதல்வர் விஜய், நீதிபதி பத்மா; உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

இது ஒரு பேட்டர்ன். நன்றாகக் கவனியுங்கள்; உங்களுக்குப் புரியும்.

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பேர் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தார்கள். ஆனால் சவுக்கு சங்கர் வந்தார்; அத்தனையையும் புரட்டிப் போட்டார். பல துணிச்சலான தகவல்களைப் புரியும்படியும், எளிமையாகவும் சொன்னார். ‘நாங்கள்தான் அறிவாளி’ என்று அவர்கள் கட்டிவைத்த பிம்பத்தை இவர் உடைத்தார். இது வெகுஜனப் பத்திரிகையாளர்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

அவர்கள் இவரைப் பத்திரிகையாளராகவே அங்கீகரிக்கவில்லை. இவரின் வளர்ச்சி அவர்களைப் பொறாமையின் உச்சத்துக்கே தள்ளியது. சங்கர் ஒரு சாதாரண யூடியூபர் என்று முடக்கப் பார்த்தார்கள். ஆனால் சவுக்கு சங்கர் இவர்களை லெஃப்ட் ஹேண்டில் தூக்கிக் கடாசிவிட்டு, அவருக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிவிட்டார்.