!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, November 24, 2026

விக்டோரியா கவுரி – இவர் பெண் உரிமைப் போராளியாம்!

நான் கடந்த பதிவிலேயே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை சில வாரங்களுக்காவது உள்ளே வைக்கும் தைரியம் விஜய்க்கு இருக்கிறதா என்று எழுதியிருந்தேன். அந்த வகையில், அருள் விக்னேஷ் போன்றவர்களுக்கு அதிகார வர்க்கம் எந்த வகையிலும் ஆதரவாக இருக்கக் கூடாது என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

ஆனால், இந்த உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, அந்தச் சம்பவம் குறித்து ஒரு மேடையில் பேசியிருப்பதுதான் ஆச்சரியம். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இப்படியா? இதுதான் பெண் சுதந்திரமா? என்றெல்லாம் பேசியிருந்தார்.

இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டபோதே அது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அப்போதும் நான் இதுகுறித்து எழுதியிருந்தேன். இப்போது இவர் மறுபடியும் நான் 'வேற மாதிரி' என்று நிரூபித்திருக்கிறார்.

அவர் இப்படி மேடையில் பேசியது தவறில்லை. நியாயமாகப் பார்த்தால், எல்லோரும் இப்படித்தான் பேசி அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, அருள் விக்னேஷைத் தூக்கி உள்ளே வைக்க வேண்டும். ஆனால், இந்த நீதிபதிக்கு அப்படி ஒரு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா?

நான் நீதித்துறை குறித்த செய்திகளைப் பல வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அப்படி நான் கவனித்த ஒரு செய்திதான் இது.

2019-ல் அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். அவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக, அவரிடம் பணியாற்றிய ஒரு பெண் உதவியாளர் புகார் அளித்திருந்தார்.

சாதாரண எம்.எல்.ஏ. மீது புகார் கொடுக்கவே பலர் தயங்குவார்கள். ஆனால், இந்தப் பெண் ஒரு தலைமை நீதிபதி மீது புகார் அளிக்கிறார். அதுவும் அதன் பிரதியை அப்போது பதவியில் இருந்த அனைத்து நீதிபதிகளுக்கும் பிரமாணப் பத்திரமாக அனுப்புகிறார் என்றால், அதன் நம்பகத்தன்மை உங்களுக்கே புரியும்.

அப்புறமென்ன, இது வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்று உச்ச நீதிமன்றம் நினைத்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் நினைத்தது. கடைசியில், இங்கே தவெகவினர் முழுப் பூசணிக்காயை மறைக்க முயல்வதைப் போல், டெல்லியில் அவர்கள் ஒன்றுமே நடக்கவில்லை என்று எல்லாவற்றையும் மூடி மறைத்தார்கள்.

அந்த வழக்கின் விவரங்களை கூகுளிடம் கேட்டேன். அது கொடுத்த தகவல் இங்கே.

The Allegations

• Sexual harassment: In a sworn affidavit sent to 22 sitting Supreme Court judges on April 19, 2019, the woman alleged that Gogoi made unwanted physical and sexual advances toward her at his residence office on October 10 and 11, 2018.

• Retaliation and custody claims: She alleged that after she resisted, she was transferred multiple times and fired in December 2018, her husband and brother faced suspensions, and she and her family later faced police action, arrest, and torture in custody.

Response and Outcome

• Gogoi's denial: Gogoi strongly denied the allegations, calling them "unbelievable" and claiming they were part of a larger effort to destabilize the judiciary and stop him from hearing major cases.

• In-house inquiry: A three-judge Supreme Court committee led by Justice S.A. Bobde looked into the matter and, in May 2019, cleared Gogoi of the allegations after the complainant withdrew from the proceedings.

• Reinstatement: In January 2020, the former employee was reinstated to her job at the Supreme Court with full back wages.

இங்கே கடைசி வரிகளைக் கவனிக்கவும். டெல்லியில் புகார் அளித்த பெண்ணுக்கு மீண்டும் வேலை வழங்கி, நிலுவைச் சம்பளத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அவர் பொய்ப் புகார் கொடுத்திருந்தால், அவருக்கு எதிராக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? அதே நேரத்தில், புகார் உண்மையா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டிய விசாரணையின் அறிக்கையும் பொதுவெளியில் வைக்கப்படவில்லை. இங்கேதான் பல கேள்விகள் எழுகின்றன. So, read between the lines.

இந்த இரண்டு விஷயத்திலும் உண்மை வெளிவராது. செய்திகளின் அடிப்படையில் நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும். டெல்லியில் புகார் அளித்தவரின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர் தண்டிக்கப்படாததால், அங்கே அவர் புகார் உண்மைதான் என்றுதான் அர்த்தம்.

இங்கே தமிழ்நாட்டில் கலெக்டர் அமைதியாக இருக்கிறார். இவ்வளவு சர்ச்சைக்கு பிறகும் அமைதியாக இருக்கிறார். அரசியல்வாதிகள் அரசியல் செய்வார்கள், அதிகாரிகள் செய்யமாட்டார்கள். தன்னால் ஒரு எம் எல் ஏ க்கு அவமானம் ஏற்படுகிறது என்பது தெரிந்த பிறகு தேவையில்லாமல் ஒருவரை குற்றவாளியாக சித்தரிக்க யாரும் விரும்பமாட்டார்கள். நிச்சயம் படித்த அதிகாரிகள் அதை செய்யமாட்டார்கள். எனவே இது நடந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.

எனவே இரண்டு இடத்திலும் பெண்களுக்கு அநீதி நடந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நடந்ததை அவர்கள் மூடி மறைத்தார்கள். இங்கே த வே க..

ஆக, உச்ச நீதிமன்றத்திலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில், அதையும் செய்தவரே ஒரு தலைமை நீதிபதி எனும் நிலையில், இந்த விக்டோரியா கவுரி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள், தாங்கள் சார்ந்த துறையிலேயே தவறு நடந்தாலும் அப்போதும் அதே தைரியத்துடன் சொல்ல வேண்டும். அதை இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் நம்பிக்கை வைப்போம்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

0 comments:

Post a Comment