தவெக வந்தவுடன் எல்லோரும் தைரியமாக ஊழலை வெளிப்படுத்துகிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஊழல் செய்தவர்களே ஊழலைக் கண்டுபிடியுங்கள் என்று புகார் அளிக்கிறார்களா? இது காமெடி!
ஆனால், புதிதாக ஓர் ஆட்சி வந்தவுடன் இப்படித் துணிச்சலாக கொலை செய்யும் தைரியமும் வந்துவிடுமா?
இது நீண்ட கால வியாதி. இங்கே நீங்கள் விரும்பாவிட்டாலும் கடந்தகால புள்ளிவிவரங்களை கவனித்தாக வேண்டும். இது போன்ற விஷயங்களில் எந்த அரசை விமர்சித்தாலும், அவர்கள் பழைய வரலாறு, பக்கத்து வீட்டின் வரலாறு என எதையாவது எடுத்துப் பேசுவார்கள். இதை எல்லாக் கட்சிகளும் செய்யும். திமுக செய்தது; பிஜேபியும் செய்கிறது. எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ் மோகன் கடந்த வருடக் கொலைகளை உதாரணமாகச் சொல்வது தவறு என்றாலும், நிர்வாகத்தில் இவை தவிர்க்க முடியாத தவறுகள்.
ஆனால், கவனமாகப் பார்த்தால், இங்கே பெரும்பாலான குற்றங்களுக்கு மதுபோதை ஒரு காரணமாக இருக்கிறது. அந்த மதுவுக்கு, அதுவும் தரமற்ற மதுவுக்கு, அச்சாரம் போட்டது திராவிடக் கட்சிகள்தான். எனவே, இரண்டு திராவிடக் கட்சிகளும் இதற்கு ஏதோ ஒருவகையில் பொறுப்புதானே?
அதே சமயம், தவெகவும் பொறுப்புதான். அவர்கள் எப்படிப் பொறுப்பு என்றால், இப்படித் திடீர் விருந்தாளி போல் சொல்லாமல் கொள்ளாமல் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். அதைக்கூட ஜீரணிக்கலாம், ஆனால் திருந்துவதற்கு அவகாசம் கொடுக்காமல், திடீரென எல்லோரும் திருந்திவிடுங்கள், யாரும் லஞ்சம் வாங்காதீர்கள் என்றால், இவ்வளவு நாள் லஞ்சம் வாங்கிக் கொழுத்த போலீசாரின் நிலை எப்படி இருக்கும்? எனவே, அவர்கள் மறைமுகமாக ஸ்ட்ரைக் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதாவது, நாங்கள் கையையும் நீட்ட மாட்டோம், எதையும் கவனிக்கவும் மாட்டோம் என்ற முடிவில் இருக்கிறார்கள்.
அதிலும், இங்கே இந்த ரவுடித்தனத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்தப் புள்ளிவிவரம் தெரியாமல் எதுவும் சொல்வதற்கில்லை. கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியில் இருந்த சிறுத்தைகள் இப்போதும் ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரம்தான் உறுத்துகிறது. இவர்களோடு மல்லுக்கட்டி போலீசாரும் மரத்துப்போயிருப்பார்கள். இங்கே யாரைக் குறை சொல்வது?
அடுத்த தீபாவளிக்குள்ளாவது விஜய் பெரும்பான்மையைப் பெறட்டும். முடியாவிட்டால், மறுதேர்தலுக்காவது போகட்டும். ஆனால், மறுதேர்தல் வந்தால் சிறு கட்சிகளின் நிலை இனி அதோகதிதான்!
0 comments:
Post a Comment