
சத்தியமாக, இது திமுக ஆட்சியின் ஊழல்தான். ஊழல் இன்றுதான் வெளியாகியிருக்கிறது. முழு உண்மை வெளிவர இன்னும் சில நாட்கள் ஆகும்.
இப்படித்தான் ஃபிளை துபாய் விமானம் கடத்தப்பட்டபோது, விமானி கத்தியால் தாக்கப்பட்டார், விமானம் குட்டிக்கரணம் அடித்தது என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆரம்பகட்டச் செய்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்கும். இன்றைய ஊடகங்கள் பரபரப்புப் பரதேசிகள். செய்திகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் அல்லது கொள்கை உடையவர்கள். அது அபத்தமாக இருப்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
இந்த நூலக ஊழலும் அப்படித்தான். மேலும் பல தகவல்கள் இனி பொறுமையாக வெளிவரும்.
திமுகவினர் ஊழலுக்காகக் கை வைக்காத துறையே கிடையாது. எனவே, இந்தப் புத்தகத்தில் கிடைக்கும் சில்லறைக் காசுக்காக அவர்கள் ஆசைப்பட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால், வேறு சில முகநூல் பதிவுகளைக் கவனித்தால், இவர்கள் இதிலும் கை வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. படித்த சில செய்திகளிலிருந்து, இவை பல வருடங்களாகவே நடந்து வருகின்றன என்பது தெரிகிறது. முழுமையான தகவல் தெரிந்ததும் மறுபடியும் எழுதுவோம்.