இரண்டே காரணங்கள்தான். திராவிடக் கட்சிகளின், முக்கியமாக திமுகவின் தியரியின்படி, நீங்கள் அவர்கள் பக்கம் இருந்தால் சமூகப் போராளி, அறிவாளி, நல்லவர், நாலும் தெரிந்தவர். ஆனால், எதிர்ப்பக்கம் போய்விட்டால் கதை முடிந்தது; இது அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
இந்த மார்ட்டின்தான் கலைஞர் கதை, வசனம் எழுதியும் ஓடாத ஒரு படத்தைத் தயாரித்தவர். ஜெயலலிதா லாட்டரியைத் தடை செய்த பிறகு, திமுகவே கதி என்று கிடந்தவர். அப்போதெல்லாம் நல்லவராக இருந்தவர், இப்போது கெட்டவராகிவிட்டார்.
அது உண்மைதான், நான் லாட்டரி வியாபாரம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தால் லாட்டரி மீண்டும் வந்துவிடும்; கலைஞரும் மார்ட்டினும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள் என்று நிறைய செய்திகள் வந்தன. எனவே, மார்ட்டின் ஒரு அக்மார்க் பிராட் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
ஆனால், இப்போது கதை வேறு மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, இந்த மார்ட்டின் 'ஆன்லைன் கேமிங்' என வேறு வடிவில் தொழிலைத் தொடங்கினார். அதையும் திமுக தலைமையிலான அரசு தடை செய்துவிட்டது. அது நல்ல விஷயம்தான். ஆனால், அரசியல்வாதிகள் செய்யும் ஒரு தந்திரத்தை ஸ்டாலினும் செய்திருக்கக்கூடும். அவரிடம் கலைஞரும் ஸ்டாலினும் "ஏதாவது செய்கிறோம்" என்று சொல்லி நிறைய நிதி வாங்கியிருக்கலாம்; பின்னர் கழட்டிவிட்டிருப்பார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் லலிதா ஜூவல்லரி கதையை முடித்ததைப்போல, திமுகவினர் இவரிடம் தங்களுடைய திருவிளையாடலைக் காட்டியிருக்கக்கூடும். இதனால் மார்ட்டின் இங்கே அடிபட்ட புலியாகிவிட்டார். நாட்டுக்குத் தேவையான முடிவை நீங்கள் எடுங்கள், அது தவறில்லை. ஆனால், பணம் வாங்கிக்கொண்டு இவர்களின் காலை வாருவது எப்படி நியாயமாகும்? எனவே, திமுகவைப் பழிவாங்க இவர் வேறு பாதையில் பயணிக்கிறார்.
அந்த நேரம் பார்த்து விஜய் என்னும் ஒரு சூறாவளி வர, இதுதான் சந்தர்ப்பம் என்று மார்ட்டின் விஜயிடம், "தம்பி, நீ இவங்க கதையை முடிங்க... நானும் உங்களுக்கு முடிந்த அளவு உதவுகிறேன்" என்று கூறி, விஜய்க்குத் தேவையான `உதவிகளைச்` செய்திருக்கிறார். மொத்தத்தில் விஜய்க்கு குரு உச்சத்திலும், ஸ்டாலினுக்குச் சனி உக்கிரமாகவும் இருந்திருக்கிறார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? நீங்கள் அடுத்தவனுக்கு அல்வா கொடுத்தால், அவனும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை அப்படியே திருப்பித் தருவான் என்பதுதான்.
சரி, இனி என்ன நடக்கும்? ஒரு காலத்தில் லாட்டரி விற்ற மார்ட்டின், இப்போது சோபா வியாபாரம் ஆரம்பித்திருக்கிறார். இந்த வியாபாரம் ஓடுமா என்றும் தெரியவில்லை. மார்ட்டின் இங்கே போட்ட முதலீட்டை எடுப்பாரா? ஆனால், இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையைப் பார்த்தால் எதுவும் சொல்வதற்கில்லை.
திமுக, அதிமுக என யாராலும் போட்ட முதலீட்டை எடுக்க முடியவில்லை. அப்படி இருக்க, இவரால் மட்டும் முடியுமா? விஜய் இவரிடம் நேரடியாகவே சொல்லலாம்: "மார்ட்டின் அங்கிள், திமுகவை அழவைக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது. மேற்கொண்டு எதையும் எதிர்பார்க்காதீர்கள், அது ராங் புரோ" என்று சொல்லிவிட்டால்...
சரி, விஜய் உண்மையை முகத்துக்கு நேரே சொல்லிவிட்டார் என்று இவர் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். விஜய் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பார் என்பது இப்போதைக்கு ஒரு புதிர்தான்.
ஆனால் திமுகவின் தாலியை அறுத்ததில் மார்டினுக்கு முக்கிய பங்கு இருப்பதால், திமுகவினரின் மற்றும் அவர்களின் அல்லக்கைகளின் கோபம் இப்போது மார்ட்டின் பக்கம் திரும்பிவிட்டது.
இன்னொருபக்கம் விஜய் இப்போது ஹனிமூன் பீரியடில் இருக்கிறார். அவரை திட்டுவது பலனளிக்காது என்பதால், தமிழ்நாட்டில் தலைகுனிந்த ஊடகவியாளர்கள் இப்படி ஆதவ் மற்றும் மார்ட்டின் போன்றவர்களை தாக்கி அவர்களுடைய மனவலியை போக்கிக்கொள்கிறார்கள்.
இப்போதைக்கு அவர்களுக்கு இதுதான் மருந்து. சாப்பிடட்டும்..

0 comments:
Post a Comment