சிறைக்கு சென்றவன் என்பதால் பரபரப்பான பல விஷயங்களை பற்றி நான் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் இங்கு பட்டும் படாமலும் சில விஷயங்களை குறிப்பிடுவேன். காரணம், சிறையில் நானாக எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளவில்லை. அடிப்படையில் நான் ஒரு தனிமை விரும்பி. நானும் ஒரு கைதி என்பதால் பல கைதிகள் தயக்கமின்றி என்னுடன் பேசியதால் தெரிந்து கொண்டவை. சில சொந்த அனுபவங்களும் உண்டு. நான் எழுதிய கடிதங்கள் தினமலரில் வெளியான பிறகு `அண்ணே, இதைபற்றியும் நீங்க எழுதுங்கண்ணே` என்றும் சொன்னவை.
சிறைக்கு சென்ற பிறகு நான் தெரிந்து கொண்ட முதல் உண்மை, சில தவறுகளுக்கு பின்னால் அதை செய்யத் தூண்டும் சில நியாயமான காரணங்களும் இருப்பதுதான். இது அங்கிருக்கும் சிறைகைதிகளுக்கும் பொருந்தும், அதிகாரிகளுக்கும் பொருந்தும். வேலை வாங்க லஞ்சம், குறிப்பிட்ட இடத்தில் பதவியில் இருக்க லஞ்சம் என்ற சூழ்நிலை இருந்தால் எல்லா அதிகாரிகளும் தடம் மாறத்தான் செய்வார்கள்.
ஆரம்பத்தில் சூழ்நிலையை அனுசரித்து போக அனுமதிக்கும் மனம், பின்னர் ருசி கண்ட பூனையாகி இவர்களை வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஆக மாற்றி விடுகிறது. சிறைச்சாலைகள் நடத்தப்படும் விதம் அவர்களுக்கு நம்மை விட நன்கு தெரியும் என்பதால் பயமும் போய்விட்டது. அதிலும் நீங்கள் மைனாரிட்டி என்றால் உங்களிடம் கொஞ்சமாவது பயம் இறுக்கும். ஆனால் மெஜாரிட்டிகள் ஏன் பயப்பட வேண்டும். இந்தியாவில் ஊழல்வாதிகள் மெஜாரிடிகளாக மாறி கொண்டிருப்பதால் இவர்களுக்கு எதை பற்றியும் கவலை இல்லை . எனவே, ஊழலை அறவே வெறுக்கும் அரசியல் தலைமை தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் வரை ஊழலை கட்டுபடுத்த முடியாது.
அதே சமயம் நம்மால் எதுவும் முடியாது என்று சும்மா இறுக்கமுடியுமா? புழல் சிறையில் வசதியானவர்களிடம் பணம் பெற்று கொண்டு லாட்ஜ் கணக்கில் வசதிகள் செய்து தரப்பட்டது குறித்து தினமலரில் பரப்பான செய்தி வந்த பிறகு அது நின்று போனது. அதற்காக மற்ற விஷயங்கள் நிற்கவில்லை. இருந்தாலும் அந்த செய்தி ஊழலை குறைத்து என்னவோ நிஜம். எனவே, எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன். ஓரளவு மாற்றம் வந்தாலே லாபம்தான்.
சிறையில் ஒரு அதிகாரி கை சுத்தம் என்று பெயர் எடுத்திருக்கிறார். இருந்தாலும், அவருக்கு கீழே இருப்பவர்கள் புகுந்து விளையாடுகிறார்கள். காரணம், இவர்களுக்கு மேலே உள்ளவர்களின் ஆதரவு இருப்பதுதான். இது போன்ற சூழ்நிலையில் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
ஊழலுக்கு அடிப்படை காரணமே பல தெளிவற்ற சட்டங்கள் தான். அதை பயன்படுத்தி கொண்டுதான் இவர்கள் வசூலில் இறங்குகிறார்கள். எனவே அதை சரி செய்தாலே பல முறைகேடுகள் முடிவுக்கு வந்துவிடும். அதை பற்றித்தான் நான் இங்கு எழுதப் போகிறேன்.
`சரி. நீங்களே இரண்டரை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறீர்கள். தவறு செய்யாமலா இவ்வளவு காலம் சிறையில் வைப்பார்கள். எனவே, ஒரு குற்றவாளியான உங்களுக்கு சமூகத்தை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?` என்று நீங்கள் கேட்கலாம். ஒருவர் குற்றவாளியா என்று முடிவு செய்வது பெரும்பாலும் போலீசாரும், நீதிபதியும்தான். என்னைப்பற்றிய அவர்களின் அபிப்ராயம்..... இங்கே
3 comments:
பொய் சாட்ச்சிகள் , பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு இல்லாமல் பளுன்மைகள் வெளிவருமென்று நினைக்கிறேன். தொடருங்கள் ......
தொடர்ந்து எழுதுங்க நான் இன்னும் நெறைய எதிர்பார்கிறேன்
நல்லா இருக்கு ஆனா உங்ககிட்ட இருந்து நான் நெறய எதிர்பார்கிறேன்
Post a Comment