!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, March 7, 2011

கூட்டணி முறிவு.காங்கிரசுக்கு லாபமே அதிகம்!

காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைந்து விட்டது.உண்மையில் இது எனக்கும் சந்தோஷமான செய்திதான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். நடந்துவிட்டது.

ஆனால் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை வைத்து பலரும் தங்கள் விருப்பம் போல் அர்த்தம் கொடுத்துக் கொள்கின்றனர். ஒருவேளை நானும் அப்படி இருக்கலாம். இருந்தாலும் இது எனது அலசல்.

வெளிப்பார்வைக்கு திமுக ஏதோ  மிகத்திறமையாக செயல்பட்டு காங்கிரசின் மூன்றாவது அணி திட்டத்தை முறியடித்து விட்டதாவும், காங்கிரசை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் கருத்துக்கள் பரப்படுகிறது.  ஆனால் நிஜம்?

காங்கிரஸ் உண்மையிலேயே மூணாவது அணி அமைக்க முயற்சி செய்ததா?

வாய்ப்புகள் குறைவு. காரணம், காங்கிரசுக்கு தமிழகத்தில் தற்போதைக்கு எந்த ஆதரவு அலையும் இல்லை. ஈழ விவகாரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழலால் காங்கிரசுக்கு அவபெயர்தான். நேரம் சாதகமாக இருக்கும்போதுதான் துணிச்சலான முடிவை மனிதர்கள் எடுப்பார்களே தவிர, இது போன்ற சூழ்நிலையில் அல்ல. காங்கிரஸ் மூணாவது அணி அமைத்தால் விஜயகாந்த் மட்டுமே உறுதியாக சேருவார். மற்றவர்களெல்லாம் இழுபறிதான். எனவே இது ஓட்டு பிரிக்கத்தான் உதவும். ஓட்டுக்கள் மூன்றாக பிரியும்பட்சத்தில் அது திமுகவுக்கே சாதகமாகும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு பதில் கொஞ்சம் கூடுதலாக சீட்டுக்கள் வாங்கி அங்கேயே கூட்டணி வைத்துவிடலாமே? எனவே மூன்றாவது அணி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்திருந்தால் அது ஒரு முட்டாள்த்தனமான ஒன்றாகத்தான் இருந்திருக்கும். பல காரணங்களுக்காக இப்படி ஒரு புரளியை காங்கிரசோ அல்லது வேறு யாரவது கிளப்பி விட்டிருக்கலாம். இதனால் விஜயகாந்துக்கு அதிமுகவிடம் பேரம்பேச ஒரு வாய்ப்பு உருவானதாலும், அவர் காங்கிரசின் நட்பு வட்டத்தில் இருப்பதாலும், சரி, இந்த வதந்தியை அவர் பேரம் பேச பயன்படுத்தி கொள்ளட்டும் என்று காங்கிரஸ் விட்டுவிட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணம் இருந்திருக்க வேண்டும். 

அப்படியென்றால் காங்கிரசின் நோக்கம் என்னவாக இருக்கும்? காங்கிரசுக்கு பல வகைகளில் நெருக்கடியும் அவமானத்தையும் ஏற்படுத்திய திமுகவை தமிழகத்தில் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் ஒரே எண்ணமாக இருக்கவேண்டும். அதே சமயம் மத்தியில் மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தாலும், நாமாக அனுப்பாமல் அவர்களாகவே கழட்டிக் கொள்ளட்டும் என்று தேவைக்கதிகமான டிமாண்டை வைத்து காங்கிரஸ் அதை சாதித்து கொண்டது. காங்கிரஸ் ஓட்டு பிரிவதன் மூலம் தமிழகத்தில் திமுக தோற்கடிக்கப்பட்டு, மேலும் பல காரணங்களால் அது பலவீனமடைந்தால் அதுவும் காங்கிரசுக்கு எதிர்காலத்துக்கு நல்லது என்றும் நினைத்திருக்கலாம்.

மத்தியில் பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் ஊழலால் திமுகவிற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரால் இந்த ஆட்சியை கவிழ்த்துவிட்டு பிஜேபிக்கு திமுகவால்  போகவும் முடியாது. அதே சமயம் காங்கிரஸ் மாற்று ஏற்பாடு செய்துவிட்டாலோ, அல்லது தேர்தலே வந்தாலும் திமுகவிற்கு ஆபத்துதான். எனவே திமுக மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு. ஆனால் காங்கிரசே திமுகவை வெளியே அனுப்பினாலோ அல்லது மூன்றாவது அணி அமைத்து திமுகவை எதிர்க்க ஆரம்பித்தால் திமுகவிற்கு இது ஒரு கௌரவ பிரச்சினையாகி ஆதரவை விளக்கிகொள்ளும் நிர்பந்தம் அதற்கு ஏற்படும். அப்படி நடந்தால் காங்கிரஸ் மெஜாரிட்டிக்காக மற்ற கட்சிகளின் தயவை கெஞ்ச வேண்டி இருக்கும். எப்படியாவது சமாளிப்பார்கள் என்றாலும், எதற்கு அந்த தலைவலி. திமுக இன்னும் எங்கள் பக்கம்தான் என்ற சூழ்நிலை மற்ற கட்சிகள் அதிகம் மிரட்டாமல் பார்த்துகொள்ளும்.  இப்போது இந்த விலகல் சீட்டுக்காக என்பதால் வெளிப்பார்வைக்கு அது ஒரு பிரன்ட்லி பைட்டாகப் சமாளித்துக் கொள்ளலாம். (ஆனால் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் அழிக்கப் போகிறார்கள் என்பது வேறு விஷயம்)

காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருந்தாலும் தோற்பதற்கான வாய்ப்புதான் அதிகம். ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் ராஜா கைது போன்றவற்றால் இரு கட்சியினரும், கூட்டணி இருந்தாலும், ஒருவரை ஒருவர் காலை வாரவே பார்ப்பார்கள்.   எனவே எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஆட்சியில் பங்கும் இல்லை. ஒரு தேர்தலில் தோற்பதினால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது. ஆனால், தேசிய அளவில் மெகா ஊழலில் ஈடுபட்ட ஒரு கட்சி அமைச்சரவையிலும், கூட்டணியிலும் இல்லை என்பது பல விமர்ச்னங்களிளிருந்து காங்கிரசை காப்பாற்றும். எனவேதான் திமுக தானாக வெளியேறும் வகையில் காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறன்.

ஒருவேளை காங்கிரஸ் இந்த கூட்டணியில் இருந்து திமுக தோற்றுவிட்டால், 2 ஜி ஊழலை மறைத்து, ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் எதிர்புனர்வுதான் தோல்விக்கு காரணம் என்று திமுக சப்பைக்கட்டு காட்டும். இனி அந்த காரணத்தையும் சொல்லமுடியாது     

அடுத்த புரளி காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா என்பது. இதற்கும் வாய்ப்புகள் குறைவுதான். அதிமுக இப்போது அமைத்திருக்கும் கூட்டணியே பலமான கூட்டணியாகத்தான் இருக்கிறது. மேலும் காங்கிரஸ் தனித்து நின்றால் இன்னும் வசதி. எனவே தேவையில்லாமல் பேரை கெடுத்துக்கொள்ள ஜெயலலிதாவும் விரும்பமாட்டார். அப்படி ஒரு முடிவை எடுத்து திமுக தனது ஆதரவை வாபஸ் வாங்குவதை காங்கிரசும் விரும்பாது.

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டணி நிர்பந்தம் காரணமாக பிரதமர்  நேரிடையாக நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்தினாலும், பல செய்திகளை லீக் செய்து ஒரு பரபரப்பை உருவாக்கி, கலைஞர் (தி.க.) வீரமணியை விட்டு அறிக்கை விடுவது போல், பிரதமர் நீதிமன்றத்தை உசுப்பிவிட்டு `நீங்கள் கடுமையாய் கேள்வி கேளுங்கள், அப்போதுதான் நான் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று செயல்பட்டு சட்டத்தின் பிடியை இருக்கியிருக்கிறார். (எல்லாம் ஒரு அனுமானம்தான்)

இந்த கூட்டணி முறிவு காங்கிரசை பொறுத்த வரையில் சில நஷ்டம், பல லாபம். ஆனால், திமுக இந்த தேர்தலில் ஜெயிக்காவிட்டால், அது அந்த கட்சிக்கு ஒரு முடிவுரையாகவும் இருக்கும். ஆனால் சூழ்நிலையை பார்த்தால் திமுகவிற்கு சனிதிசை ஆரம்பித்துவிட்ட மாதிரிதான் தெரிகிறது.


21 comments:

சக்தி கல்வி மையம் said...

அரசியல் தலைவா...

Kandumany Veluppillai Rudra said...

சனிதிசையில்,நல்லதும் நடக்கும்,கெட்டதும் நடக்கும், மங்குசனியா? பொங்குசனியா? பொறுத்திருந்து பார்ப்போம்.

கோவி.கண்ணன் said...

//ஆனால் சூழ்நிலையை பார்த்தால் திமுகவிற்கு சனிதிசை ஆரம்பித்துவிட்ட மாதிரிதான் தெரிகிறது.
//

மிகச் சரிதான்

Unknown said...

நண்பா அதே அதே !

bandhu said...

சரியான பார்வை. நானும் கிட்டதட்ட இதையே நினைக்கிறேன். முடிந்தால் பாருங்கள். http://eliyavai.blogspot.com/2011/03/blog-post_05.html

Arun Ambie said...

மங்குசனியாகவே இருக்கட்டும்!! நாடு உருப்படும்!!!

YOGA.S said...

கலைஞர் கட்சி இப்போது தொங்கு நிலையில் தான் இருக்கிறது!காலையில் ராஜினாமா செய்வதாக சொன்னவர்கள் மாலை வரை இழுத்த்டிப்பது ஏனோ?மீண்டும் கூட்டணி காங்கிரசுடன் அமைத்தாலும் ஆப்பு தான்,வேறு வடிவில், அதாவது மக்கள்!பகிரங்கமாக அறிவிப்புகளை விட்ட பின் மீண்டும் கூட்டணியென்றால்"ஏதோ"இருக்கிறதென்றே மக்கள் நினைப்பார்கள்!எதிரணிக்கு சாதகமான நிலையே உருவாகப் போகிறது!உருவாகும்!!!!!!!!!!

சிவானந்தம் said...

@ கருண், உங்களுக்கு நல்லா ஓட்டு வாங்க தெரியுது. அரசியல்ல சேருவதற்கான `எல்லா` தகுதியும் உங்களுக்கு இருக்கு. சேர்ந்துடுங்க.

சிவானந்தம் said...

@ உருத்திரா. வருகைக்கு நன்றி.

///சனிதிசையில்,நல்லதும் நடக்கும்,கெட்டதும் நடக்கும், மங்குசனியா? பொங்குசனியா? பொறுத்திருந்து பார்ப்போம்.///

பார்க்கலாம். அரசியல் ஒரு மர்ம நாவலை விட நிறைய திருப்பங்கள் கொண்டது.

சிவானந்தம் said...

@கோவி கண்ணன், விக்கி உலகம்

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

@ பந்து

///சரியான பார்வை. நானும் கிட்டதட்ட இதையே நினைக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.///

வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் பதிவை படித்தேன். கிட்டத்தட்ட ஒத்த கருத்துதான். இருந்தாலும் இது மாநில தேர்தல் என்பதால் இப்போது காங்கிரஸ் வாங்கும் ஓட்டை வைத்து அதன் பலத்தை கணிக்க முடியாது. திமுகவை தோற்கடிக்க பல காங்கிரஸ் அனுதாபிகள் கூட அதிமுகவையே ஆதரிப்பார்கள்

மாயாவி said...

அஞ்சா நெஞ்சர் அடிக்கடி சொல்லுவரே இந்த தேர்தலுடன் அதிமுக என்று ஒரு கட்சியே இருக்காது என்று.. அதில் ஒரு சின்ன திருத்தம்... அது அதிமுக இல்லை திமுக.. அய்யோ பாவம் இளையவர் கடைசி வரைக்கு முதல்வர் பதவி இல்லையே......ச்சு ச்சுசு

இனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...

சூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ

http://mugamuddi.blogspot.com

சிவானந்தம் said...

@ அருண் அம்பி

/// மங்குசனியாகவே இருக்கட்டும்!! நாடு உருப்படும்!!!///

எனது விருப்பமும் அதுதான்.
****************
@ யோகா

//// கலைஞர் கட்சி இப்போது தொங்கு நிலையில் தான் இருக்கிறது!காலையில் ராஜினாமா செய்வதாக சொன்னவர்கள் மாலை வரை இழுத்த்டிப்பது ஏனோ?///

மாநிலத்தில் ஆட்சி போவப்போவது தெரிந்துவிட்டது. எனவே மத்தியிலும் எதற்கு விடுவானேன் என்ற தயக்கம்தான்.

ராவணன் said...

இத்தாலி சோனியா காங்கிரசுக்கு லாபமே. திமுக அமைச்சர்கள் அடித்ததை இனிமேல் சோனியா குடும்பமே அள்ளலாமே?

Anonymous said...

Friends D.M.K. is a strong Dravidian party. No obe can destroy this powerful cadres party.All selfrespect TAMILS should support true Tamilan;s party.Dont support Kannadiga and Telugu leaders.This is TAMILNADU for tamilpeople.

Anonymous said...

//Friends D.M.K. is a strong Dravidian party. No obe can destroy this powerful cadres party.All selfrespect TAMILS should support true Tamilan;s party.Dont support Kannadiga and Telugu leaders.This is TAMILNADU for tamilpeople. //

Dear Anony, You statements are contradictory. Dravidam includes Kannadiga and Telugu people. If you want TAMILNADU is for tamil people, do not support a STRONG Dravidian party!;-)

ராஜ நடராஜன் said...

//Friends D.M.K. is a strong Dravidian party. No obe can destroy this powerful cadres party.All selfrespect TAMILS should support true Tamilan;s party.Dont support Kannadiga and Telugu leaders.This is TAMILNADU for tamilpeople. //

The word 'Dravidian' is no more valid and void.

அருள் said...

"திமுக இந்த தேர்தலில் ஜெயிக்காவிட்டால், அது அந்த கட்சிக்கு ஒரு முடிவுரையாகவும் இருக்கும்"

நெருக்கடி காலத்தில் நடந்த அடக்குமுறையால் முடிவுரை எழுதப்படாமல் இருந்த ஓர் இயக்கம்,

எம்.ஜி.ஆர் என்ற அரசியல் கோமாளியால் 13 ஆண்டு காலம் வனவாசம் போன போது முடிவுரை எழுதப்படாமல் இருந்த ஓர் இயக்கம்,

ராசீவ்காந்தி என்னும் ராசா வீட்டு கண்றுக்குட்டியின் மரணத்தினால் ஒரு இடத்தில் மட்டுமே வென்றபின்பும் முடிவுரை எழுதப்படாமல் இருந்த ஓர் இயக்கம்,

வைகோ என்ற அட்டைக்கத்தி வீரனுடன் 19 மாவட்டச்செயலாளர்கள் கட்சியை விட்டு விலகிய பின்பும் முடிவுரை எழுதப்படாமல் இருந்த ஓர் இயக்கம்,

ஒரு தேர்தலில் தோற்பதாலும், ஒரு சில கைதுகளினாலும் முடிவுரை எழுதப்பட்டு விடும் என்ற உங்களின் அரசியல் அறிவை எண்ணி புளகாங்கிதம் அடைகிறேன்.

சிவானந்தம் said...

@ ராஜ நடராஜன்
//The word 'Dravidian' is no more valid and void.///

true

@ anonymous

we should elect the people on the basic of honest and good administrator(not as tamil or other). but unfortunately we dont have that choice now. then, let us settle for less corrupted party. once it seemed admk and dmk are at par in corruption. but after 2g scam, dmk dwarfed the admk. hence now the scale is tilting in favour of ADMK

@அருள்

கலைஞர் இன்னும் 10 வருடம் இருப்பார் அதுவும் ஆக்டிவாக இருப்பார் என்றால் உங்கள் வாதம் எடுபடும். ஆனால் கலைஞருக்கு பிறகு, அவருடைய வாரிசுகளுக்கு அந்த திறமை இருக்குமா? நீங்களும் நானும் இருக்கத்தான் போகிறோம். பார்ப்போம்

`மேலும் பல காரணங்களால் அது பலவீனமடைந்தால்` என்று நான் இதைதான் குறிப்பிட்டேன். முழுதாக படித்துவிட்டு விமர்சிக்கவும்.

ராஜேஷ், திருச்சி said...

இந்த சூழ்நிலையில் இந்த பதிவை மிண்டும் படித்தால் சிரிப்பு சிரிப்பா வருது.. நீங்களே படிங்க , நமட்டு சிரிப்பு நிச்சயம்

சிவானந்தம் said...

///இந்த சூழ்நிலையில் இந்த பதிவை மிண்டும் படித்தால் சிரிப்பு சிரிப்பா வருது.. நீங்களே படிங்க , நமட்டு சிரிப்பு நிச்சயம்///

காங்கிரஸ் 63 சீட்டில் உறுதியாக நின்றதற்கான காரணத்தையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களுக்கு அதிகமான எம் எல் ஏக்கள் வேண்டும் என்று ஆசையாம் ஆனால் சோனியாவும், ராகுலும் பிரச்சாரத்துக்கும் வரமாட்டார்களாம், வந்தாலும் ஒன்னும் கிழியப் போவதில்லை. அப்புறம் எதுக்கு இந்த கூட்டணி நாடகம்? இந்த கூட்டணில வேறு ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கு. இந்த தேர்தல் ஒரு பரமபத விளையாட்டு மாதிரி இருக்குது. இன்னும் எவ்வளவு திருப்பங்கள் இருக்கோ. பார்ப்போம்.

Post a Comment