!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, November 21, 2011

கூடங்குளம் யாருக்கான திட்டம்?


கூடங்குளம் இப்போதைக்கு என்னையும் விடாது போலிருக்கிறது. முந்தைய பதிவில் சில நண்பர்கள் பின்னூட்டத்தில் சில கருத்துக்களை முன் வைத்தார்கள். உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அதற்கான பதில்தான் இது.

அப்படியே நான் இதையும் சொல்லிவிடுகிறேன். நான் அதிகம் எழுதுவதும் இல்லை, பேசுவதும் இல்லை. எழுதாததற்கு காரணம் சிறு வயதிலிருந்தே பிராக்டீஸ் இல்லாததாக இருக்கலாம். எனவே எழுதுவது என்பது எனக்கு தண்டனையை போன்றது. பேங்கில் சலான் எழுத எத்தனை வார்த்தைகள் எழுத வேண்டி இருக்கும்? அதற்கே எனக்கு கை வலிக்கும். எனவே நான் படிப்பது அதிகம், எழுதுவது குறைவு.

அதே தலைவலிதான் பேசுவதிலும். நான் கொஞ்சம் வேகமாக பேசுவேன். ஆங்கிலம் கற்க ஒரு சென்டருக்கு போனபோது அங்கே இருந்த டீச்சர், `நீங்க ரஜினி மாதிரி வேகமா பேசறீங்க` என்றார். ஆனாலும் இதில் சந்தோஷப்பட ஒன்றுமில்லை. தலைவலிதான். மேஜர் சுந்தராஜன் இங்கிலீஷ்ல பேசிட்டு தமிழ்லையும் சொல்லுவார். நான் தமிழ்லயே ரெண்டு தடவே சொல்லணும். அவ்வளவுதான்.

இதனால் எனக்கு என்ன தலைவலி என்றால், நான் ஓட்டலுக்கு போய் இட்லி கேட்டால் பொங்கலும், சட்னி கேட்டால் சாம்பாரும் வரும். அதுவாவது பரவாயில்ல ஏதோ ஒன்றுன்னு சாப்டுடலாம். ஆனால் ஒரு மருந்து கடையில் நான் ஓன்று கேட்க, அவர் வேறு `ஏதோ` ஒன்றை மறைத்து கொடுக்க, அன்றுதான் நான் என்னுடைய இந்த குறையை பற்றி சீரியசாகவே கவலைப்பட்டேன்.

அரசியல் தலைவர்களின் கதைகளையும் நான் ஆர்வமாக படிப்பதுண்டு. அவர்களிடம் எழுத்துத் திறமை இருக்கும் அல்லது பேச்சுத் திறமை இருக்கும். அதன் மூலம்தான் அவர்கள் மக்களை வசப்படுத்தி இருகிறார்கள். எழுத்து திறமையைவிட பேச்சு திறமை மிக அவசியம். இது இல்லாமல் அரசியலில் என்ன வாழ்க்கையில் கூட உங்களால் முன்னேற முடியாது. எனவே என்னிடம் இருக்கும் மிகப் பெரிய குறை இது என்பதை உணர்ந்தாலும், ஏதாவது வழி பிறக்கும் என்று கனவு கண்டேன். கடைசியில் அது கனவாகவே போய்விட்டது.

சிறையில் எனக்கு ஒரு முகம் தெரியாத நண்பர் ஒருவர் கடிதம் போட்டிருந்தார். நன்றி தெரிவித்து கடிதம் போட்டேன். அதற்கு பதிலளிக்கையில், மாதம் ஒரு கடிதம் போடுவதாக சொன்னார். உண்மையில் அது ஒரு விலைமதிப்பில்லாத நட்பு. ஆனால் என்னால் தொடர முடியவில்லை. காரணம் மேலே சொன்னதுதான். இதனால் எனது நட்பு வட்டம் சுருங்கிப் போனது. வேறு சில காரணங்களுக்காக நானாகவும் சுருக்கிக் கொண்டேன். இப்போது பிளாக்கர் மற்றும் கம்ப்யுட்டர் புண்ணியத்தில் அது ஓடுகிறது.

இனி அரசியல். அதாவது கூடங்குளம்.

ஜப்பானுக்கு இயற்கை வளம் இல்லை, ஆனால் இந்தியாவுக்கு இருக்கிறது என்று ஒரு வாதம். நம்மிடம் இருக்கும் இயற்கைவளம் விவசாயத்துக்கு மட்டுமே ஏற்றது.ஆனால் எரிபொருளை பொறுத்த வரையில் நம்மிடமும் இயற்கை வளம் இல்லை எனபதுதான் உண்மை. இன்றைய நமது எரிபொருளுக்கு நிலக்கரி, எண்ணெய் மற்றும் கேஸ் தான் முக்கியமான (70 சதவிகிதம்) ஆதாரம். இவற்றில் நாம் பெரும்பாலும் இறக்குமதிதான் செய்கிறோம். இந்த உண்மை அரசியலை கவனிக்கும் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் எந்த நம்பிக்கையில் இதை சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை?

ஒருவேளை மரபு சாரா எரிசக்தியைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றால் அதுவும் அர்த்தமில்லாதது. இன்று அது மானியத்தில் வாழ்ந்துக் கொண்டிருகிறது. இதன் சதவிகிதம் ஏற ஏற அரசுக்கு அது ஒரு சுமையாகிவிடும். அதாவது, சிக்கனமாக இருக்க கணவன் மனைவியை செலவு செய்ய சொன்னால் எப்படி இருக்கும்? அதே அபத்தம்தான் இந்த மானியங்களும். எனவே மானியங்கள் இல்லாமல் அது சாத்தியமாக வேண்டும் அல்லது அதுவரை அதற்கு உயிர் கொடுக்க மானியங்கள் கொடுக்க வேண்டும். அதைதான் பல அரசுகள் செய்து கொண்டிருகின்றன. எனவே இது குறிப்பிட்ட சதவிகீததிற்கு மேல் போக வாய்ப்பே இல்லை. இதுதான் நிஜம்.

அனுபவங்களே வழிகாட்டி

ஒரு சமயம் நான் ஒரு கிராமத்துக்கு போயிருந்தேன். திரும்பும் நேரம். பஸ்சுக்காக காத்திருந்தேன். பஸ் ஸ்டாண்டிலும் கூட்டம். வந்த பஸ்ஸோ நிறைமாத கர்ப்பிணி. நான் சென்னையில் இருக்கும் நினைப்பில் அடுத்த பஸ்ஸை பிடிக்கலாம் என ஒதுங்கி நின்றேன். சில நிமிடங்களில் திரும்பி பார்த்தால் பஸ் ஸ்டான்ட் வெறிச்சோடி இருந்தது. எனக்கு புரிந்து போனது. இது கடைசி பஸ்ஸாக இருக்கும். அதனால்தான் அந்த ஊர் மக்கள் தொற்றிக் கொண்டார்கள். எனவே நானும் தொற்றிக்கொண்டேன். இது லாஜிக்.

விஷயம் தெரிந்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து அதையே நாமும் பின் தொடர்வதுதான் புத்திசாலித்தனம்தான். உலக நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையால் வரப்போகும் ஆபத்தை உணர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. நாமும் அந்த பாதையில் போவதுதான் நல்லது. மேலை நாடுகளில் மரபு சாரா எரிசக்திக்கு அதிக வாய்ப்பில்லை ஆனால் இந்தியாவில் இருக்கிறது என்பது அபத்தமான வாதம்.

வளரும் நாடுகள் தங்கள் வளர்ச்சிக்காக பூமியை வெப்பமாக்கிவிட்டு எரிபொருளையும் காலி பண்ணிவிடப்போகின்றன என்பதுதான் உலக நாடுகளின் முக்கியமான கவலை. ஆனால் இந்தியாவின் பிரச்சினையை மரபு சாரா துறைகள் தீர்க்கும் என்றால் உலக நாடுகள் இந்தியாவுக்கு யுரேனியம் விற்காது.  இத்துறையை கவனிக்கும்படி இந்தியாவை நிர்பந்தப்படுத்துவார்கள்.  தொழில்நுட்பங்களை இலவசமாக கொடுத்திருப்பார்கள் அல்லது அதை வியாபார ரீதியாக சந்தைபடுத்தி இருப்பார்கள்.

இது யாருக்கான திட்டம்? 

இன்னொருவர் கூடங்குளம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஏன் இந்த திட்டம் என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் சொல்வதுதான் கஷ்டம். வார்த்தைகளில் கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் ஏதாவது ஒரு பட்டத்தை எனக்கு கொடுத்துவிடுவார்கள்.

டைம்ஸ் நவ் டிவியில் சில மாதங்களுக்கு முன் இது தொடர்பான ஒரு விவாதத்தை கவனித்தேன். அதில் ஒரு விஞ்சானி சலிப்பாக சொன்னார்: தொழில்நுட்பத்தை பற்றியோ, ரேடியேஷன் பற்றியோ பற்றியோ கருத்து கேட்டால் பதில் சொல்லலாம். அங்கே மக்கள் அதிகமாக இருகிறார்கள் என்றே பேசிக் கொண்டிருந்தால் என்ன பதில் சொல்வது? இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது அங்கே இருந்த மக்கள் தொகை எவ்வளவு? இப்போது அங்கே மக்கள் தொகை பெருகிவிட்டால் அது யாருடைய தவறு? (இதற்கு அங்கே குடியேற்றத்தை கட்டுபடுத்தாத அரசையும் குறை சொல்லலாம்.)

http://www.timesnow.tv/Debate-Another-nuke-showdown---1/videoshow/4383924.cms

இதேதான் என் கருத்தும். மக்களிடம் கருத்து கேட்பது என்பது ஆரோக்கியமான ஜனநாயகமாக இருக்கலாம். ஆனால் மக்களிடம் கருத்து கேட்டுத்தான் அரசு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டுமென்றால் அது ஒரு அபத்தமான ஜனநாயகமாக இருக்கும். இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன என்றே தெரியாத மக்களிடம் இந்தியாவின் எதிர்காலத்தை குறித்தா விவாதிக்க முடியும்?

கூடங்குளம் மக்களுக்கு இதை புரியும்படி சொல்லவேண்டுமென்றால், உங்களுக்காக உங்களின் சார்பாக (உங்களின் திருமணம்) யாராவது முடிவெடுத்தால் அதை நீங்கள் நிராகரிக்கலாம். ஆனால் குடும்ப நலன் கருதி எடுக்கும் முடிவுகளை (கஷ்டத்தினால் வீட்டை விற்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்),  நீங்கள் மட்டுமே நிராகரிக்க முடியாது. உங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை மட்டுமே கோர முடியும்.   

அதே தியரிதான் கூடங்குளம் மக்களுக்கும். இது கூடங்குளம் மக்களுக்கு மட்டுமான திட்டமோ அல்லது அவர்கள் மீது குரோதம் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டமோ இல்லை. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம். எனவே அணுமின் நிலையங்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை தமிழக மக்கள்தான் (கருத்துக் கணிப்பே அபத்தம் என்றாலும்) முடிவு செய்யவேண்டும்.

இந்த பிரச்சினை இவ்வளவு சிக்கலானதுக்கு முக்கிய காரணம் இதுதான். நீங்கள் ஒருவர் மீது நம்பிக்கை இழந்தால் அவர்கள் உங்களுக்கு நல்லதை செய்தாலும் அதை சந்தேகக்கண் கொண்டு பார்ப்பீர்கள். அதேபோல் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், அவர்கள் விஷத்தையே கொடுத்தாலும் கேள்வி கேட்காமல் குடிப்பீர்கள்.
    
இதுதான் கூடங்குளம் பிரச்சினை. மக்களிடம் அரசியல்வாதிகள் மீதான மதிப்பு குறைந்துவிட்டது. இன்று அரசியல்வாதிகள் எந்த ஒரு திட்டம் போட்டாலும் மக்கள் அதை சந்தேகக்கண் கொண்டு பார்கிறார்கள். குறைந்த பட்சம் ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் ஒருமித்த குரலில் சொன்னாலாவது மக்களுக்கு நம்பிக்கை வரும். ஆனால் எதிர்கட்சிகளை ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக பார்க்காத ஆளுங்கட்சிகளை (எல்லா கட்சிகளும்தான்) கொண்ட நாட்டில் வளர்ச்சிப் பணிகள் இப்படித்தான் போய் முடியும்.

பத்திரிக்கையாளர்கள் அரசை குறை சொல்கிறார்கள் என்றால் அதில் லாஜிக் இருக்கிறது.ஏனென்றால் அவர்களுடைய வேலையே அரசியலை கவனிப்பதுதான். எனவே அவர்களுக்கு அதைபற்றிய புரிதல் வந்துவிடுகிறது. ஆனால் பைபிளுக்கும் அணு விஞ்சானதிற்கும் என்ன சம்பந்தம்? ஆனால் மக்கள் இந்த மத போதகர்களை நம்புவதால், அவர்களின் தவறான வழிகாட்டுதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக இந்த லாஜிக்கை மட்டும் சொல்லிவிடுகிறேன். ஒரு பெண்ணை பற்றி அந்த பெண்ணை பெற்றவ்னுக்கும், கட்டியவனுக்கும் தெரியாத விஷயங்களா மற்றவர்களுக்கு தெரிந்து விடப்போகிறது? அதேபோல்   அணுவினால் ஏற்படக்கூடிய ஆபத்தை, அணுகுண்டை போட்ட அமெரிக்காவுக்கோ அல்லது அதை வாங்கிக் கொண்ட ஜப்பானுக்கா தெரியாது? அவர்களே இந்த சனியனை கட்டி அழும்போது, `அவர்களுக்கு அறிவில்லை, எங்களுக்குத்தான் இருக்கிறது` என்று சிலர் சொன்னால்,   இதற்கு எப்படி பதிலளிப்பது? 

6 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சரியா சொன்னீங்க.

ஊரான் said...

கூடங்குளம்: 'மம்மி' நாயகன் வருவானா?http://hooraan.blogspot.com/2011/11/blog-post_21.html

சிவானந்தம் said...

@ நண்டு @நொரண்டு

வாங்க நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

@ஊரான்

வாங்க ஊரான்.

```மின்சாரம் நமக்குத் தேவைதான்.மறுப்பதற்கில்லை.அதற்கு மாற்று வழிகளைத்தான் தேட வேண்டும்.``` இது உங்களின் கருத்து.

இந்த பதிலை சொல்வதற்கு ஆறறிவு தேவை இல்லை ஊரான் ? யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அரசாங்கங்கள் மாற்று வழிகளை வைத்துக் கொண்டு மக்களுக்கு துரோகம் செய்யவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

அணு குண்டின் கோரவிளைவுகளை ஜப்பானில் குண்டு போட்டதன் மூலமும், மற்ற சில விபத்துக்களின் மூலமும் தெரிந்துவிட்டதால், அது மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஆனால் எரி பொருள் பற்றாக்குறையால் நம் நாடு சந்திக்கவிருக்கும் பிரச்சினைகளையும், பூமி வெப்பமாவதால் ஏற்படும் அழிவுகளையும் கண்ணால் பார்த்த பிறகுதான் அதையும் உணருவேன் என்றால் அது ஒரு வடிகட்டிய முட்டாள்தனம். இதற்காக எதிர்கால சந்ததியர் நம்மை சபிக்கும் போது நீங்களும் நானும் இருக்க மாட்டோம்.


கேரி பேக் மற்றும் பிரிட்ஜ் போன்றவற்றால் ஏற்படும் எதிர்கால ஆபத்தை குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான். இப்படி நாம் எதேச்சயாக செய்யும் செயல்கள் எதிர்காலத்துக்கு ஆபத்தை உண்டாக்கும் என்பதை நாடுகள் உணர்ந்ததால்தான் பூமி வெப்பமாவதை பற்றியும், எரிபொருள் பற்றாக்குறையை பற்றியும் உலக நாடுகள் கவலைபடுகின்றன. ஆனால் எதில் அதிக ஆபத்து என்பதை கணிப்பதில்தான் அரசுகளும் சில சமூக ஆர்வலர்களும் முரண்படுகிறார்கள்.

மாற்று வழியை தேடவேண்டும்` என்று சொல்வது வடிவேலுவின் `என்ன கைய புடிச்சி இழுத்தியா`வகை. நீங்க தெரிஞ்சிதான் காமெடி பண்றீங்களா அல்லது தெரியாம பண்றீங்கலானே தெரியல்.

Anonymous said...

கல்பாக்கம் மற்றும் 20 இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாகத் திறமையாக இந்திய அணுசக்திக் கழகம் எந்த ஆபத்துமின்றி அணுசக்தி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது - இது தான் பல படித்த முட்டாள்களின் வாதமாக இருக்கிறது. தங்களைத் தவிர இந்த நாட்டில் எல்லாரும் மடையர்கள் எனக் கருதும் ஒரு கூட்டமும் இதையே தான் கிளிப்பேச்சு போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறது. வள்ளுவர் கூறுவது போல் அவர்கள் கூற்றைக் கொஞ்சம் கூர ஆராய்ந்தால் உண்மை புலப்படும். இந்த 20 இடங்களில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரம் எவ்வளவு? ...சுமார் 4300 மெகாவாட்...அதாவது சராசரியாக ஒவ்வொரு இடத்திலும் 200 மெகாவாட். ஒவ்வொரு இடத்திலும் கிட்டத்தட்ட 4, 5 யூனிட்டுகளை வைத்து 200 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள். எனக்குத் தெரிந்த கணக்கு ஞானப்படி....ஒரு யூனிட்டின் திறன் 40-50 மெகாவாட் தான். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளவை ஒவ்வொரு யூனிட்டும் 1000 மெகாவாட் திறன் கொண்டவை. மொத்தம் 8000 மெகாவாட் வரை நிறுவுவது தான் திட்டம். The fact is that it is a different ballgame altogether. This is kind of first for Indian atomic industry. Moreover, all existing plants in India are more or less experimental in nature...all using Heavy Water. Koodankulam reactors are based on the disastrous Chernobyl model. The most important point is not about whether atomic reactors are safely operable or not - whether they can be done so in India. The answer is a clear "No". People site examples of thousands of nuclear plants all over the world. You will find them only in countries like former USSR, Germany, France and Japan. Other than Japan the other countries mainly built nuclear reactors for stockpiling nuclear warheads. Even after decommissioning 10s of thousands of warheads Russia still has 4500 nuclear warheads enough to destroy the world many times over. US has similar number of warheads. Japanese were very arrogant on their technological superiority and quality (they gave industrial quality to the world), that they thought they can avoid any nuclear mishap. But look at countries like US, UK - the anglo-saxon world which gives maximum value to the lives of their citizens. Not a single nuclear plant has been built in US since 1976. The older plants are in the process of getting decommissioned slowly. Commercial nuclear plants could never take off in UK due to the strict safety guidelines damage liabilities the UK govt is proposing. If plant safety is an absolute given (if probability is one in a billion), then why hesitate. Even in India, why the companies are protesting against nuclear liabilities bill. Russians are happily supplying Koodankulam reactors pocketing 3 billion dollars because they are not liable for even a rupee in case of a disaster (sure there will be if the plant goes operational). After the Fukushima disaster both Germany and France have decided to decommission all the plants gradually by 2022. These are countries which have expertise in nuclear technology since 1940s. The claim of cheap power using atomic plant is simply a smokescreen. 16000 cores for establishing and after 30 years 30,000 crores for safe disposal of radioactive waste....what non-sense....The only convincing explanation for this plant could be for military-industrial purpose. But after losing the faith of Tamils, expecting Tamil people to accept such a risk for the larger good of North Indian+Tam Brahmin ruling class is just not acceptable. Anyway, they are hoping to break the opposition by making use of gullible sections of Tamil society by advancing arguments like 'to put an end to power crisis of Tamil Nadu', 'for the development of TN' etc. The fact is, TN's power deficit is only 22 crore units a day. But the power given to Karnataka, AP and Kerala in a day from Neyveli plant is 26 crore units.

சிவானந்தம் said...

வாங்க அனானிமஸ்.

இதற்கு முன் அணுசக்தி குறித்து நான் எழுதிய சில படியுங்கள். உங்கள் கேள்விகளுக்கு அங்கே பதில் இருக்கிறது.

கல்பாக்கத்தை பற்றி நான் குறிப்பிடவே இல்லை. உலகில் பல கல்வி அறிவு பெற்ற, வசதியான நாடுகளே இந்த பாதையில் போவதால், இது ஒரு விரட்டமுடியாத மூதேவி என்ற அடிப்படையில் எழுதி இருக்கிறேன். ஆனால் அனுகுண்டுதான் காரணம் என்று கதை விடுகிறீர்கள். இதில் ஈடுபட்டிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 5 நாடுகள் அணுகுண்டு வைத்திருகின்றன. அப்ப மற்ற நாடுகள் ஏன் இதை தொடர வேண்டும்? இதற்கும் ஏதாவது ஒரு கதை இருக்கும். சொல்லுங்கள் கேட்போம்.

ஆனால் இந்தியாவுக்கு இந்த வாதம் ஓரளவு பொருந்தும். அதனால்தான் உலகநாடுகள் யுரேனியம் தர மறுத்தன. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு கவலையையும், இந்தியாவின் நம்பகத்தன்மையையும் உலகநாடுகள் தற்போது புரிந்து கொண்டன. அத்துடன் பூமி வெப்பமாவது தற்போது உலக நாடுகளின் மிக முக்கியமான கவலையாகிவிட்டதால், இந்தியாவுக்கு உதவுவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.

அமெரிக்காவும், ஐரோப்பாவும் புது உலைகளை ஆரம்பிக்கவில்லைதான். காரணத்தை இதற்கு முந்தைய பதிவில் படியுங்கள்.

///nuclear liabilities bill.///

யாராவது ஒரு வியாபாரி அநியாயமா வித்தா கண்டிக்கலாம். ஆனா எல்லா வியாபாரியும் அதே காரியத்தை செஞ்சா அங்கே ஏதோ நிர்பந்தம் இருக்குன்னு தானே அர்த்தம். அநேகமா இது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. இந்தியாவுக்கு மட்டும்தான் ஓரவஞ்சனை பண்றாங்கன்னு சொல்லுங்க. அப்ப அத எதிர்போம்.

//But the power given to Karnataka, AP and Kerala in a day from Neyveli plant is 26 crore units.///

மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் போவது தெரிகிறது. ஆனால் அங்கே இருந்து வருவது தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஆராய்ச்சி செய்தால் நான் என்ன பதில் சொல்வது.

//22 crore units a day//

22 கோடி யுனிட்டுக்கோ அல்லது 3 சதவிகிதம் மின்சாரத்துக்கா இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோம்? வருங்கால தேவை என்ன, அன்றைய பெட்ரோல் மற்றும் நிலக்கரி விலை என்ன, அது கிடைக்குமா, அப்படியே அது எந்த அளவுக்கு சுற்றுச்சுழலை கெடுக்கும், மரபு சாரா எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்ற பல விதமான கவலைகளின் விளைவுதான் இந்த முடிவு. அந்த 3 சதவிகிதம்தான் பிரச்சினை என்றால், அது 24 மணி நேரத்தில் எத்தனை சதவிகிதம்? 1 மணி நேரம் இருக்குமா? கூடங்குளம் மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியர்களுக்காகவும் அந்த ஒரு மணி நேர பவர்கட்டை தாங்கிக் கொள்ள மாட்டோமா?

முதல்ல ஒரு நல்ல கால்குலேட்டர் வாங்கி கணக்கு போட கத்துக்குங்க.

கற்றது கையளவுதான். எனவே எனது தளத்துக்கு வரும் அறிவு ஜீவிகள் ஆதார பூர்வமாக கருத்து சொன்னால் அதை நான் வரவேற்பேன்.

http://articles.timesofindia.indiatimes.com/2011-01-24/chennai/28361649_1_nuclear-power-capacity-tneb-power-demand

Post a Comment