அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை செய்திதான் தற்போது பரபரப்பு. நானும் கவனிக்கிறேன். தொடர்ந்து நாட்டு நடப்பு செய்திகளை கவனிப்பவர்களுக்கு இது ஒரு பழகிப்போன செய்தி. இது இந்த வருடம். அடுத்த வருடம் இதே போல் ஒரு பரபரப்பு பாலியல் வன்கொடுமை வரப்போகிறது. காரணம், இங்கே பல விஷயங்களை பேசுவதற்கு/விவாதிப்பதற்கு/குரல் கொடுப்பதற்குதான் மனிதர்கள் இருக்கிறார்களே தவிர, இதை முடிவுக்கு கொண்டுவரும் தலைவர்கள்தான் இல்லை.
அதே சமயம் இந்த பதிவுக்கு திராவிட கற்பழிப்பு கழகம் என தலைப்பு வைக்கலாமா என்றுகூட யோசித்தேன். அது மற்றவர்களை உத்தமனாக காட்டும் என்பதாலும், அதைவிட முக்கியமான விஷயத்தை விவாதிக்க வேண்டும் என்பதாலும் மாற்றிவிட்டேன்.
இங்கே செய்திகளை கவனித்தால், அதிலும் சென்னை கமிஷனரின் அருணின் பேட்டியை கவனித்தால் அது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி. அது முடிந்து தற்போது எடப்பாடி இன்னொரு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதாவது `யார் அந்த சார்?` என கேள்வி எழுப்பி, அதை அரசியலாக்கி `பல பத்திரிகைகளில் செய்தி வருகிறது பதில் சொல்லுங்கள்` என அப்பாவியாக கேட்கிறார்.
கமிஷனர் அருண் ஏதோ இது பக்கத்து வீட்டு எழவு என்ற தொனியில் பேட்டி கொடுக்க, எடப்பாடியும் தான் ஒரு முன்னாள் முதல்வர் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். எப்படிப்பார்த்தாலும் 10-20 சதவிகித காவல்துறை அதிகாரிகள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பார்கள். அவர்கள் மூலம் யார் அந்த சார் என்பது இந்நேரம் அவருக்கு தெரிந்திருக்கும். அதை சூசகமாக சொல்லி அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றால் நிலைமை மோசமாக இருக்கும் என எச்சரிக்கை செய்ய வேண்டிய ஒரு தலைவர், பத்திரிகைகளின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்.
பாவம் அப்படி ஏதாவது அவர் செய்தால் அவர் மீதான வழக்குகள் வேகம் எடுக்கும் என ஒரு பயம். ஆக மொத்தத்தில் இரண்டு கழகங்களும் உன் மேல் நான் நடவடிக்கை எடுக்கமாட்டேன், என் மீது நீ எடுக்காதே என்ற ஒப்பந்தத்தில் அரசியல் செய்கிறார்கள்.
அடுத்த அதிர்ச்சி, இந்த அநியாயத்துக்கு எதிராக குரல்கொடுக்க வீறு கொண்டு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் , நீதிபதிகள் என பெரிய பட்டாளமே கிளம்பியிருப்பதை பார்க்கும்போது வருகிறது.
இந்த உத்தமபுத்திரர்களின் வண்டவாளத்தைதான் நாம் இப்போது விவாதிக்க வேண்டும்.
முதலில் பத்திரிகையாளர்கள். இதே ஐபிஸ் அருண்குமார் விஷயத்தில் சவுக்கு சங்கர் கொஞ்சம் ஓவராக வார்த்தைகளை விட்டுவிட, அவரும் உள்ளே போனார், கைகளும் உடைந்தது. அந்த சமயத்தில் திமுக திருச்சி சூர்யா மூலமாக பல விஷயங்களை லீக் செய்தது. அவர் கஞ்சா அடிப்பது, அவருடைய கேர்ள் பிரண்ட், அந்த பெண்ணுக்கு 3 கோடியில் வீடு வாங்கி கொடுத்தது என பல தகவல்கள் வந்தது. இந்த விஷயங்கள் எல்லாம் அவருடைய சக பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
இதில் ஒரு செய்தி உண்மையாக இருந்தாலும் அது அயோக்யத்தனம்தான். எந்த பத்திரிக்கையாளனாவது செய்தி வெளியிட்டானா? அவரை விடுங்கள் இன்னும் பல புல்லருவிகள் பத்திரிகையாளர் என்ற போர்வையில் நடமாடிக்கொண்டிருப்பார்கள். அவர்களை பற்றி இந்த பத்திரிகையாளர்கள் வாயைத்திறந்து ஒரு வார்த்தை பேசியிருப்பார்களா? பேசமாட்டார்கள். அதாவது சக பத்திரிகையாளன் தப்பு செய்தால் அதை நாம் காட்டி கொடுக்கக்கூடாது என்பது இவர்கள் கொள்கை. அந்த அருணிடம் சங்கர் வம்புக்கு போனதால் இந்த தகவல் நமக்கு தெரிந்தது. இல்லையென்றால் நாமும் அவரை உத்தமபுத்திரன் என்றே நம்பிக்கொண்டிருப்போம்.
அடுத்து இந்த நீதிக்காக குரல்கொடுக்க வந்திருக்கும் வழக்கறிஞ்சர்களை பார்ப்போம்.
ஒரு வழக்கறிஞர் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதுவும் சுமோட்டாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிபதிகளும் சாட்டையை எடுத்து தங்களையே அடித்துக்கொள்ளும் அபத்ததில் இறங்காமல் வார்த்தைகளால் அதிகாரவர்கத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்ப்பதற்கு உங்களுக்கு சந்தோசம் வரலாம். ஆனால் எனக்கு வராது.
அதுமட்டுமின்றி தற்போது பல வழக்கறிஞ்சர்கள், பெண்கள் உட்பட, யூடியூபில் சட்டம் என்ன சொல்லுது என்ன செக்சன் போடப்பட்டுள்ளது என விரிவாக தமிழ்நாட்டு மக்களுக்கு சட்டம் செயல்படும் விதத்தை பவர்பாயிண்ட் போடாமல் விளக்கிக்கொண்டிருக்கிறாரகள்.
இதே வழக்கறிஞ்சர்களின் சட்டையை கொத்தாக பிடித்து , இது வரை நீங்கள் நடத்திய கேஸ் எத்தனை, அதில் பெயில் எத்தனை, அவர்களில் 5க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டுப்பாருங்கள். இவர்கள் தலை தெறிக்க ஓடுவார்கள்.
அதாவது இவர்கள் குற்றவாளிகளுக்கு அவர்கள் தரம் தெரியாமல் பெயில் வாங்கி கொடுப்பார்களாம், ஆனால் அவர்கள் மீண்டும் தவறு செய்தால் மட்டும் பொங்கி எழுவார்களாம்? என்ன ஒரு நியாயம் இந்த நாய்களுக்கு.
இனி 5க்கும் மேற்பட்ட வழக்கு உள்ள நபர்களுக்கு நாங்கள் பெயில் `வாங்கி` தரமாட்டோம் என போர்ட் எழுதி அவர்கள் அலுவலகத்தில் மாட்ட சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு வழக்கறிஞ்சரும் இதை செய்யமாட்டான். ஆனால் யூடியூபில் மட்டும் நன்றாக வியாக்கியானம் பேசுவார்கள்.
கடைசியாக இந்த மரியாதைக்குரிய நீதிபதிகள்.
இங்கே ஒரு எலி ஓடுகிறது, அதாவது எப்ஐஆர் லீக்காகிவிட்டது, அது இவர்களின் கண்ணுக்கு தெரிகிறது. இங்கே ஒரு பூனை ஓடுகிறது, அதாவது ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை, அதுவும் இவர்களின் கண்ணுக்கு தெரிகிறது, தார்மீக கோபமும் பொங்கி எழுகிறது.
ஆனால், ஒரு யானையே இங்கே நடந்து போகிறது, அதை கவனிக்காத மாதிரி இந்த நீதிபதிகள் நடிக்கிறார்கள். இங்கே குற்றவாளி மீது 20கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த நபருக்கு பெயில் வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பேர்ப்பட்ட அநியாயம்? அது இவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை. அதைப்பற்றிய ஒரு வார்த்தை கூட இவர்களின் விளாசலில் இல்லை.
இவனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் யார் என கேள்வி எழுப்பி, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, முடிந்தால் அந்த நீதிபதிகளின் புகைப்படத்தை லீக் செய்து அவர்களுக்கு ஒரு அச்சத்தை/அவமானத்தை ஏற்படுத்தி, அத்துடன் நீங்கள் பெயில் கொடுத்ததால் மீண்டும் ஒரு குற்றம் நடந்து இருக்கிறது, எனவே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்டஈடாக வழங்கப்படும் 25லட்சம் இந்த நீதிபதிகள்தான் வழங்கவேண்டும் என்று சும்மாவாவது மிரட்டியிருந்தால், இந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் போற்றுதலுக்கு உரியவர்களாக இருப்பார்கள்.
அதை இவர்கள் செய்யமாட்டார்கள். இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணின் மானத்தை விட சக நீதிபதிகளின் மானம் முக்கியமல்லவா? இந்த லட்சணத்தில்தான் நீதித்துறையே இருக்கிறது. இதில் அரசியல்வியாதிகளை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளே கோழைகளாக, அரைவேக்காடுகளாக, சுயநலவாதிகளாக இருக்கும்போது இந்த நாட்டில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கவே முடியாது.
0 comments:
Post a Comment