!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, February 27, 2012

வங்கிக் கொள்ளைகளும், போலீசுக்கு சில ஆலோசனைகளும்!

சிறை பதிவை தொட்ட நேரம் சரியில்லை போலிருக்கிறது. மற்ற விஷயங்கள் சிந்தனையை இழுக்கிறது. வங்கிக் கொள்ளைகள் மீதுதான் இப்போதைய கவனம்.

மக்களை பொறுத்த வரையில், அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு சில வங்கிக் கொள்ளைகள் நடந்தன, போலீசார் விரைவாக செயல்பட்டு அவர்களை என்கௌன்டரில் கொன்று விட்டார்கள். ஆக செய்தி முடிந்துவிட்டது.

ஒரு பரபரப்பான கேஸில் போலீசார் வடிகட்டிய பொய்யை சொல்ல வாய்ப்பில்லை. இறந்தவனில் ஒருவன் அப்பாவியாய் இருந்தாலும் அந்த உண்மை வெளிவந்து போலீசாரின் தலை உருளும். எனவே போலீசாரின் வாதத்தை நம்புவோம். ஆனால் இவர்கள் கொல்லப்பட்ட விதம் எப்படி என்பது வேண்டுமானால் விவாதமாகலாம்.

நான்கு சுவர்களுக்குள் மாட்டிக் கொண்ட அவர்களை உயிரோடு பிடிக்கும் வாய்ப்பு இருந்திருக்கலாம். இருந்தாலும் ஏன் உயிரோடு பிடிக்கவில்லை என்ற கேள்வி இப்போதைக்கு தேவை இல்லை. இறந்தவன் அயோக்கியனாக இருக்கும் பட்சத்தில் முடிவு எந்த விதத்தில் வந்தாலும் வரவேற்கப்பட வேண்டியதே.

இந்த கொள்ளை சம்பவம் தமிழக போலீசுக்கு பெருத்த அவமானத்தை உருவாக்கி இருக்கிறது. சில வீடுகளில் ரொம்பவே அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட கண்டிக்க மாட்டார்கள். ஆனால் நாலு பேர் முன் அசிங்கப்படும் அளவுக்கு குழந்தைகள் ஏதாவது செய்துவிட்டால் அன்று அவர்களுக்கு கிடைக்கும் பனிஷ்மென்ட் கொஞ்சம் கடுமையாகவே இருக்கும். எனவே இங்கேயும் போலீசார் தங்கள் கோபத்தை காட்டி இருக்கலாம்.

அதேசமயம் இவர்களை உயிரோடு பிடித்து ஜெயிலில் பிடித்து போட்டு சட்டத்தை நிலை நாட்ட வேண்டும் என நினைத்தால், அது இன்றைய சூழ்நிலைக்கு பைத்தியக்காரத்தனம்தான். அதற்கு பதில் போலீசாரே கன்னத்தில் நாலு அறை கொடுத்து, ரூ. 3000 அபராதம் வசூலித்து அனுப்பிவிடலாம். சிறைகள் அந்த அளவுக்கு இருக்கிறது.

கெஸ்ட் ஹவுஸ்  

நான் சிறையில் இருந்த போது கிரெடிட் கார்ட் மோசடியில், பேப்பரில் பரபரப்பாக அடிபட்டு, ஒருவர் உள்ளே வந்தார். பின்னர் பெயிலில் போனவர், நான் `உள்ளே` இருக்கும் போதே இரண்டாவது முறை வந்தார். அதிலும் பெயிலில் போனவர், சமீபத்தில் மூன்றாவது முறையாக உள்ளே இருப்பதாக கேள்வி. இப்படி பழைய குற்றங்களை கணக்கில் கொள்ளாமல் நீதிமன்றங்கள் பெயில் கொடுக்க தயாராக இருக்கும் நிலையில், எப்படி குற்றங்கள் குறையும்?

முதல் முறை வந்த போது நான் இருந்த செல்லில்தான் இருந்தார். ஒருமுறை நண்பர்களிடம் பேசி இருக்கிறார். ஒரு வக்கீல் இவரிடம் , `நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனா போலீஸ் கிட்ட மாட்ன உடனே எனக்கு போன் பண்ணுங்க` என்று பன்ஜ் டயலாக் பேசினாராம். `இப்படிப்பட்ட வக்கீலுங்க இருக்கும் போது நாம எதுக்கு பயப்படனும்` என்று சொல்லி சிரித்திருக்கிறார். நிலைமை இப்படி இருக்கிறது.

அதுமட்டுமின்றி பலர் சர்வசாதாரணமாக ஜெயிலுக்கு வருவதையும் போவதையும் கவனித்திருக்கிறேன். இதில் ஒருவர், `எண்ணன்னே? நீங்க பெயில்ல போவவே மாட்டேங்களா? நானே மூணு தடவை வந்துட்டு போயிட்டேன்` (இவர் இதற்கு முன்பும் சென்ட்ரலில் வந்திருக்கிறார்) என்று கேட்டவர், `கோபத்த விடுங்கண்ணே. பெயில்ல போங்க` என்று நமக்கே உபதேசம் செய்தார்.

இன்னொருவர் (திருட்டு கேசில் வந்தவர்) `அடுத்த முறை வரும்போது மட்டை (கொலை) கேஸில்தான் வருவேன்` என்று சவால் விட்டவர், அதேபோல் கொலை கேஸில் வந்தார். அவருடைய நண்பர்கள் சந்தேகப்பட்டு (கைதிகளின்) I D கார்டை வாங்கி பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள்.
      
முதல் முறை ஜெயிலுக்கு வந்த உடன், சிறைகளும், நீதிமன்றங்களும் குற்றவாளிகளை தண்டிக்கும் விதத்தை பார்ப்பவர்கள், மேலும் துணிந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதற்கு சிறை மற்றும் நீதித் துறைகளில் கடுமையான சீர்திருத்தங்கள் தேவை. அதேசமயம் குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்த இது போன்ற (போலியாக இருந்தாலும்) என்கவுண்டர்களும் தேவை.

What Next?

இந்த கதை முடிந்துவிட்டது. இனி இது பற்றிய அலசல்தான். தற்போது வெளியே தெரிய வந்த குற்றத்தில் ஒன்றில் மட்டும்தான் குற்றாளிகள் விரைவாக தண்டிக்கப்பட்டிருகிறார்கள். பல குற்றங்கள் பேப்பரில் பெட்டி செய்தியாகக் கூட வந்திருக்காது. வந்தவற்றிலும் பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கும். எனவே ஒட்டுமொத்த குற்றங்கள் என்ற அடிப்படையில் பார்த்தால், 50 ஓவரில் தமிழக போலீசார் ஒரு சிக்சர் அடித்திருக்கிறார்கள் என்ற வகைதான்.

அதிலும் இந்த கீழ்கட்டளை சம்பவம் சென்னை போலீசாரை ரொம்பவே டென்ஷனாக்கி இருக்கும். அனேகமாக அந்த சம்பவத்திற்கு பிறகு சென்னை போலீசார் தூங்கியே இருக்க மாட்டார்கள். நூற்றுக்கணக்கான போலீசார் பல மட்டங்களில் புலனாய்வை தொடர்ந்திருப்பார்கள். எனவே வேகமாக குற்றவாளியை நெருங்கிவிட்டார்கள். ஒரு வகையில் பார்த்தால் 100 பேர் சேர்ந்து ஒரு கோழியை பிடித்த கதைதான்.

ஆனால் எல்லா குற்றங்களிலும் இதே போல் செயல்பட முடியுமா? குற்றவாளிகளை விரைவாக பிடிக்க போலீசாருக்கு உபயோகமான க்ளு விரைவாக தேவையாயிற்றே? எல்லா இடத்திலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காது. இந்த குற்றத்தில் அங்கே கண்காணிப்பு கேமரா இல்லை. போலீசார் பரிசுத் தொகையை குற்றம் நடந்து முடிந்த பிறகு அறிவித்திருகிறார்கள். இது பலனளிக்குமா?

இது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதைதான். இதற்கு தீர்வாக நான் ஏற்கனவே `ஒரு கோடி பரிசு` என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன். மீண்டும் அதையேதான் வலியுறுத்தப் போகிறேன். முதலில் இன்றைய விலைவாசியில் ஒரு நபரை தூண்டி விடும் அளவுக்கு பரிசு இருக்க வேண்டும். அதிலும் எந்த ஒரு குற்றச் செயலிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சரியான க்ளு கொடுப்பவர்களுக்கு (அல்லது அப்படி உதவுபவர்களில் ஒருவருக்கு) பரிசு கிடைக்கும் என்பதை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.

இந்த வங்கிக் கொள்ளைகளில, எல்லோரும் உயிர் பயத்தில் இருந்திருப்பார்கள். சிலர் மட்டுமே நோட்டம் விட்டிருக்கலாம். இப்படி ஒரு பரிசுத் திட்டம் அவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால், பணத்தாசையில் அத்தனை பேரும் கண்காணிப்பு கேமராவாக மாறி காட்சிகளை மைனுட்டாக மூளையில் பதிவு செய்திருப்பார்கள். இந்த முறையில் எல்லா வழக்குகளிலும் போலீசாருக்கு விரைவாகவும், கூடுதலாகவும் தகவல் கிடைத்து, குற்றவாளிகளை விரைவாக பிடிக்க முடியும்.

அதேசமயம் இவர்கள் இந்த அளவுக்கு துணிச்சலாக செய்திருகிறார்கள் என்றால் அது அனுபவம் கொடுத்த துணிச்சல்தான். இவர்கள் பல மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக செய்திகள் வருகிறது. அங்கே க்ளு கிடைக்காததால் இவர்களை பிடிக்க முடியவில்லை. ஆக அரசுக்கு பல லட்சங்கள் நஷ்டம். இப்படி நஷ்டப்படும் பணத்தை மக்களுக்கு பரிசாக வழங்கி விடலாமே. `நாங்களேதான் புடுங்கனும்`ன்னு போலீசார் நினைத்தால் பாதிக்கும் மேற்பட்ட குற்றங்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. எனவே மக்களையும் உளவாளிகளாக மாற்ற வேண்டும். ஆனால் அவர்களை அப்படி தூண்டிவிட் பணம் எனும் கேரட்டை கொஞ்சம் அதிகமாகவே காட்டவேண்டும்.

செலவு + செலவு +செலவு =??????

இந்த குற்றங்களை நாம் ஒரு செய்தியாக மட்டுமே படிக்கிறோம். ஒரு குற்றத்தினால் உருவாகும் நேரடி நஷ்டம் மட்டுமின்றி, அவர்களை பிடிக்க, பிடித்த பிறகு அந்த வழக்கை நடத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க, அதன் பிறகு அவர்களுக்கு ஜெயிலில் உபசரிக்க அரசுக்கு ஆகும் செலவுகளை கணக்கு போட்டால் அது உங்களை மிரள வைக்கும்.

அந்த வகையில் பார்த்தால் ஆண்டு தோறும் துப்பு கொடுப்பவர்களுக்காக சில கோடிகளை செலவழித்தாலும், பல குற்றங்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு அரசுக்கு பல கோடிகள் மிச்சமாகும்.


7 comments:

nigalkalathil siva said...

சிறை மற்றும் போலீசு வழக்கு என நாங்கள் அதிகம் அறியாத பக்கங்களை நீங்கள் தொட்டு எழுதுவது பாராட்டுக்குரியது.,’

தொடர்ந்து எழுதுங்க்ள்....

சேகர் said...

நல்ல விவாதம்//

Sankar Gurusamy said...

//முதல் முறை ஜெயிலுக்கு வந்த உடன், சிறைகளும், நீதிமன்றங்களும் குற்றவாளிகளை தண்டிக்கும் விதத்தை பார்ப்பவர்கள், மேலும் துணிந்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதற்கு சிறை மற்றும் நீதித் துறைகளில் கடுமையான சீர்திருத்தங்கள் தேவை.//

சரியா சொல்லி இருக்கீங்க..நமது நீதி வழங்கும் முறைகளில் மாற்றம் வந்தால்தான் குற்றங்கள் குறையும்.. ஆனால் என்கவுண்டர்கள் அதற்கு மாற்று வழி அல்ல.

மேலும் பொது மக்களில் பெரும்பாலானோருக்கு போலீசார் மீது மரியாதை இல்லை. இதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு என்பது பல விசாரணைகளின் போது மிகக் குறைவாகவே இருக்கிறது..

என்னதான் பரிசு அறிவித்தாலும் அப்படி வருபவர்களை போலீசார் நடத்தும் முறைகளும், நமது நீதிமன்ற நடைமுறைகளின் சிக்கலும் மீண்டும் இந்த சமாசாரமே நமக்கு வேண்டாம் என்றே முடிவெடுக்கத்தூண்டும்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

சிவானந்தம் said...

@ nigalkalathil siva said...

//தொடர்ந்து எழுதுங்க்ள்////

வாங்க சிவா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இன்னும் சில கதைகள் இருக்கிறது. அதுவும் வரும்.

.@சேகர் said...

//நல்ல விவாதம்////

நன்றி நண்பரே

சிவானந்தம் said...

@Sankar Gurusamy said...

///சரியா சொல்லி இருக்கீங்க..நமது நீதி வழங்கும் முறைகளில் மாற்றம் வந்தால்தான் குற்றங்கள் குறையும்.. ஆனால் என்கவுண்டர்கள் அதற்கு மாற்று வழி அல்ல.///

சங்கர், எந்த சூழ்நிலையிலும் தவறான பாதையில் போவதோ அல்லது அதை நியாப்படுத்துவதோ தவறுதான். ஆனால் உயர்ந்த சிந்தனைகளிலும் நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்தாற் போல் அனுசரிக்க வேண்டும்.

இந்தியா ஏழை நாடு. இங்கே மக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான அடிப்படை வசதியையே அரசால் தரமுடியவில்லை. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு சிறையில் உபசரித்துக் கொண்டு இருக்க முடியாது. அவர்களுக்கு சிறையில் சோறு போடுவதை விட, இவர்கள் மீதான வழக்கை நடத்த அரசுக்கு செலவுகள் இருக்கே அது அபத்தத்தின் உச்ச கட்டம். அதாவது 100 ரூபாய் குற்றத்துக்கு 150 செலவு செய்து தண்டிப்பார்கள். பாதிக்கு மேல் வழக்கு தள்ளுபடி ஆகிவிடும்.

சரி, செலவானாலும் குற்றவாளிகளுக்கு பயம் வருகிறதா? அதுவும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த காமெடி?

முதல் முறை தவறு செய்பவர்களை திருந்த சந்தர்ப்பம் கொடுக்கலாம். இரண்டாவது முறை என்றால் கொஞ்சம் கடுமையாகவே தண்டித்து பயமுறுத்தலாம். ஆனால் அப்படியும் திருந்தவில்லை என்றால் போட்டு தள்ள வேண்டியதுதான்.

நல்ல காரியங்களை செய்யவோ, அயோக்கியர்களை அழிக்கவோ நேரம்காலம் பார்க்கக் கூடாது. அதை உடனே செய்ய வேண்டும்.


//என்னதான் பரிசு அறிவித்தாலும் அப்படி வருபவர்களை போலீசார் நடத்தும் முறைகளும், நமது நீதிமன்ற நடைமுறைகளின் சிக்கலும் மீண்டும் இந்த சமாசாரமே நமக்கு வேண்டாம் என்றே முடிவெடுக்கத்தூண்டும்..///

இன்றைய போலீசாரும், நமது நீதி அமைப்பும் அப்படியே இருக்கப் போவதில்லை.மெல்ல மெல்ல மாற்றங்கள் வரும். அதேசமயம் இப்படி ஒரு திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் உருவாகும் பிரச்சினைகளை காலப் போக்கில் சரி செய்யலாம். இது பலனளிக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

Vinoth Kumar said...

http://www.kazhuku.com/2012/02/blog-post_27.html pls see comments on that page

சிவானந்தம் said...

@Vinoth Kumar

கவனித்தேன் நண்பரே. இது குறித்த விவாதங்களையும் கருத்துக்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அடுத்த பதிவும் இதை பற்றிதான்.

Post a Comment