!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Wednesday, November 28, 2012

யாராவது ஹெல்ப் பண்ணலாமே?

இணைய தொழில்நுட்ப நண்பர்களுக்கு,

பதிவுகள் எழுதி வாழ்கையை ஓட்டமுடியாது எனத்தெரியும். இருந்தாலும் அது ஓரளவாவது வருமானத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

எனக்கு ஆட்சென்ஸ் அப்ரூவலும் எப்போதோ கிடைத்துவிட்டது. இருந்தாலும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி என்ற கதையாய், அது எந்த சுகத்தையும் கொடுக்கவில்லை.

ஒருவேளை சில தொழில்நுட்ப விஷயங்கள் எனக்கு தெரியாமல், அதன் காரணமாக ஆட்சென்ஸ் இந்த தளத்தில் எனக்கு பலன் தரவில்லையா என்றும் சந்தேகம்.

எனவே தொழில்நுட்பவாதிகள் இந்த விஷயத்தில் எனக்கு உதவினால் உபயோகமாக இருக்கும். கட்டணம் குறித்து பிரச்சினை இல்லை.

தொடர்புக்கு

shivananthamr@sify.com5 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் ஆட்சென்ஸ் ஐ இழுக்க கவர்ச்சியாக இல்லை எழுதனும் நீங்க சமூக அக்கரையுடன் எழுதினால் ஆட்சென்ஸ் இல்லை ஆட்டுக்குட்டி கூட வராது என்பதே நிதர்சனம்.

உங்கள் தளத்தில் வருகையாளர்கள் எண்ணிக்கை இப்போ தான் 71,000 போகுது, பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 83 இல் நிக்குது, இதுவே நீங்க தினம் ஒரு சினிமா விமர்சனம் , அப்புறம் கவர்ச்சியான படங்கள் எல்லாம் போட்டு குப்பையாக எழுதி இருந்தீர்கள் ஒரு 50 லட்சம் ஹிட்ஸ் ,5,000 ஃபாலோயர்ஸ்னு எங்கேயோ போயிருக்கலாம்!!!

உங்க தளத்தில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளவும்னு நிரந்தரமா ஒரு அறிவுப்பு போட்டு வையுங்க, நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கிறேன், எதாவது நடக்குதான்னு பார்ப்போம்.

வாழ்த்துக்கள்!

Nanban said...

Ok. Here are my observations.

1) You have implemented adsense in this blog. (I can see it by viewing source of this page)
2) Adsense ad could not be seen in this blog.
Reason : Your adsense account has been banned or this blog is banned to use adsense.
3) You are not supposed to use adsense in Tamil blog.
4) You have not read the terms of service that you agreed while signing up with adsense.
5) Check your mail (including spam folder) if you have received the love letter from google stating that "Your account has posed significant risk to advertiser...blah blah blah..."
6) Check if your domain has been banned or the entire account.

You can ask for reinstatement of your account, but I see almost nil chance of it getting reinstated.

Other option : Get another advertising network. Eg Chitika, bidvertiser, kontera, etc.

Nanban said...

Ah, ok. Now I can see google ad in your site. Sorry for wrong conclusion in the previous reply.

However, you are not supposed to use google adsense in Tamil blog. It is against their TOS. You are risking banning of your account.

Previously, I know the following bloggers have their adsense account banned for using it in tamil blog:
sumazla
thangampalani
madhumathi
adrasakka
vivasayi

Anybody can report your violation to google.
Before anybody reports it, you can safely remove ads from this site.

You can use it in a site which follows all the terms and conditions of google.

Loosing an adsense account means you loose it once for all.

Anyway, nobody has successfully received payment from google for tamil blogs. I challenge you to show one blogger.

Why take this risk? It is not worth it.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

அவரவருக்கு பிடித்த தளங்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். நாம் நமக்கு பிடித்த பாதையில் போவோம். நாம் இப்படித்தான் என்பது நம்மை தொடர்பவர்களுக்கு புரிந்திருக்கும். நமக்கு அந்த வட்டம் போதும்.

ஆட்டுக்குட்டி வேண்டாம் ஒரு முயல்குட்டியாவது வருமான்னு ஒரு எதிர்பார்ப்பு. அதுவும் தற்போது கை சுருங்கிய பிறகுதான் இந்த சிந்தனை.


வாங்க நண்பன்,

உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

நண்பர் மதுமதி போனில் இதைத்தான் சொன்னார். தமிழுக்கு ஆட்சென்ஸ் கிடையாது என எப்போதோ படித்தேன். பின்னர் அது தளர்த்தபட்டிருக்கும் என நினைத்தேன்.

அது இல்லாத சூழ்நிலையில் ஆட்சென்ஸ் விளம்பரத்தை எடுத்துவிடுவதுதான் முறையானது. எடுத்துவிட்டேன்.

நீங்கள் குறிப்பிட்ட பிற விளம்பர நிறுவனங்களை பயன்படுத்தப் போகிறேன்.

மற்றபடி இந்த தளத்தில் வேறு ஏதாவது குறை தென்பட்டால் சொல்லவும்.

இதை கூகிள் கணக்கிலேயே .காம் ஆக மாற்றும் எண்ணம் இருக்கிறது. இதனால் தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் இணைப்பதில் ஏதாவது சிக்கல் வந்தால் அதற்கு என்ன தீர்வு?

இன்ட்லியில் நமது தளம் பரிந்துரை பகுதியில் வரும். இனி மீண்டும் அவர்களிடம் பதிய வேண்டுமா?

உங்களுக்கு தெரிந்ததை சொல்லவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://bathil.com/

Post a Comment