மும்மொழி கொள்கைக்கு பிறகு டிலிமிடேஷன் பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவாகியிருக்கிறது. இதன் முக்கியமான தலைவலி வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக பெருகியிருப்பதுதான். மேம்போக்காக பார்த்தால் வட மாநிலத்தவர்கள் முட்டாள்களாக தெரியும். ஆனால் நிஜம்?
இங்கே வெளிப்படையாக தெரியும் காரணம் வறுமை. இன்றைய சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் நாளையை பற்றி யோசிக்கமாட்டான். தென் மாநிலங்களில் கடற்கரை இருப்பதால் இந்த மாநிலங்களில் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி வந்தாலே அது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நம்மை தள்ளிவிட்டுவிடும். எனவே நாம் இங்கே அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம்; அவர்கள் துரதிருஷ்டசாலிகள். அவ்வளவுதான்.
இங்கே இன்னொரு விஷயமும் இருக்கக்கூடும். வட மாநிலங்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் நீண்டகாலம் இருந்தவை. இஸ்லாமிய வரலாறை பார்த்தால் அவர்கள் எதிரிகளை அழிப்பதில் ஈவு இரக்கமே காட்டுவதில்லை. மரணவிகிதம் அங்கே அதிகம். இப்போதும் இஸ்லாமிய அதிகாரம் எங்கே இருக்கிறதோ அங்கே அதே நிலைமைதான். மிடில் ஈஸ்ட் ஒரு உதாரணம். அதாவது அவர்களுக்குள்ளேயே இந்த நிலைமை.
இங்கே இயற்கையின் விதிமுறை என்ன. நமக்கு அடிபட்டு கொஞ்சம் ரத்தம் விரயமானல் நமது உடல் என்ன செய்யும்? உடனைடியாக கூடுதலாக ரத்தம் உற்பத்தி செய்து அதை சமன்படுத்தும். அந்த வகையில் இஸ்லாமியர்கள் வாழும் / ஆண்ட பகுதிகளில், மற்ற பகுதிகளைவிட, இந்த `உற்பத்தி திறன்` அதிகமாக இருக்கிறது. இந்த தியரிக்கு வட மாநில மக்கள் நீண்ட காலமாக பழகியிருக்கலாம். எனவே இன்னமும் அவர்களால் அதை கைவிடமுடியவில்லை.
இனி இந்த விஷயம் தேவையில்லை என்பதை புரிந்து கொள்வதற்கு வளர்ச்சியும், கல்வி அறிவும், பொது அறிவும் தேவை. நாம் அதிர்ஷ்டசாலிகள் நமக்கு கடற்கரை இருக்கிறது, கொஞ்சம் வளர்ந்தும்விட்டோம், அத்துடன் நமக்கு பெரியாரும், காமராஜரும் கிடைத்தார்கள்.
இங்கே தென்னிந்தியா உழைக்கிறது/அறிவாளிகள் என்ற சித்தாந்தத்தை நான் நம்புவதில்லை. தென்னிந்தியா ஒரு பேட்டிங் பிட்ச். இங்கே ரன் ரேட் அதாவது ஜிடிபி கூடுதலாகத்தான் இருக்கும். ஏதோ திராவிட தலைவர்கள் வந்துதான் தமிழ்நாட்டை தூக்கி நிறுத்தினார்கள் என்பதெல்லாம் ஒரு கற்பனை. இதற்கு பல காரணங்கள் சொல்லலாம்.
கடற்கரை ஒரு லாபம். தொழில் அதிபர்களுக்கு இது ஒரு முக்கியமான அம்சம். அதுமட்டும் இருந்தால் போதுமா? அப்படி பார்த்தால் இலங்கைக்கு நாலாபக்கமும் கடல்தான். அங்கே ஏன் தொழில் அதிபர்கள் போவதில்லை. கடற்கரை தேவைதான், கூடவே மக்கள் தொகை எனும் மிகப்பெரிய சந்தையம் தேவை. இது இந்தியாவில் இருக்கிறது. எந்த மக்கள் தொகை? வட இந்திய மக்கள் தொகை. அது இல்லாவிட்டால் இந்த வளர்ச்சி தென்னிந்திய மாநிலங்களுக்கு சாத்தியமில்லை.
போதாதற்கு தென் மாநிலங்களுக்கு எல்லையில் எதிரி நாடு என்ற தலைவலியே இல்லை. வட மாநிலங்களுக்கு இந்த தலைவலியும் இருக்கிறது. எங்கேயெல்லாம் confilict zone அல்லது border இருக்கிறதோ, அங்கே தொழில் அதிபர்கள் தலைவைத்து படுக்கமாட்டார்கள். இப்படி இந்திய கூட்டமைப்பில் இருப்பதால் அதிகபட்ச லாபத்தை தென்னிந்திய மாநிலங்கள் அறுவடை செய்கின்றன. தூய தமிழில் சொல்லவேண்டுமென்றால், நோகாமல் நுங்கு சாப்பிட்டு விட்டு, என்னுடைய வரிப்பணத்தில் வட மாநிலங்களுக்கு ஏன் செலவு செய்கிறாய் என நாம் கேட்பது அபத்தம்.
உண்மை என்னெவென்றால் நம்முடைய வெற்றிக்கு ஒரு சுமைதாங்கியாக/பக்கபலமாக (Buffer State) வட மாநிலங்கள் இருக்கின்றன. எனவே நாம் அவர்களுக்கு அதற்கான ராயல்டி, பிரிமியம் என ஏதாவது கொடுத்தாக வேண்டும். அதுவும் நிரந்தரமாக.
வேலை வாய்ப்பு என்பது சந்தை அடிப்படையில் இயங்குவதால் அவர்கள் இங்கே வந்து வேலை செய்வது ஒரு விஷயமே இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் அதிகாரத்தை விட்டு கொடுப்பது என்பது அபத்தமான ஓன்று. இங்கே மக்கள் தொகையும் ஒரு காரணமாக இருக்கக்கூடாது, ஜிடிபி யும் ஒரு காரணமாக இருக்கக்கூடாது. வேறு எதாவது ஒரு நடைமுறையை கண்டுபிடிக்க வேண்டும்.
சரி, அதற்காக அவர்கள் இப்படி முட்டாள்தனமாக இருப்பதை எவ்வளவு நாள் தாங்கிக்கொள்வது?
குற்றங்களுக்குத்தான் தண்டனை; அறியாமைக்கு அல்ல. அதுவும் உறவுகளாக இருந்துவிட்டால் விட்டுப்பிடிப்பது, புரியவைப்பதுதான் ஒரே தீர்வு.
இங்கேதான் மத்திய அரசு இந்த பரபரப்பான சூழ்நிலையை காரணமாக கொண்டு இந்த மாநிலங்களிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் கொண்டு வரலாம். ஏற்கனவே முயற்சித்தோம் என்ன பலன் என்ற வாதம் தேவையில்லை.
இரண்டுக்கு மேல் குழந்தை இருந்தால் ரேஷனில் பொருட்கள் இல்லை என்று சொல்லலாம். முதியோர் உதவி, மகளிர் உரிமை தொகை என அரசு வழங்கும் பல உதவிகள் இந்த அடிப்படையில்தான் வழங்கப்படும் என சொன்னால் தானாக வழிக்கு வருவார்கள். முக்கியமாக இனி வங்கியில் எந்தவிதமான கடனும் இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் கிடையாது என சொல்லிப்பாருங்கள். கதை முடிந்தது.
ஆனால் மத்திய அரசு செய்யுமா? சந்தேகம்தான். ஜனநாயகப் பேர்வழிகள் குரல் கொடுப்பார்கள், கொதித்தெழுவார்கள். முக்கியமாக வடமாநில இஸ்லாமியர்கள் இதை கடுமையாக எதிர்ப்பார்கள். எனவே மத்திய அரசு பயப்படும்.
இதை தாண்டி இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த மக்கள் பெரும்பாலும் வேலைக்காக வருவது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய, வளர்ச்சி அடைந்த மாநிலங்களை நோக்கித்தான். இந்த மாநிலங்களில், இனி இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் வேலை கிடையாது என தொழில் முனைவோரும், வீடு வாடகைக்கு கிடையாது வீட்டு உரிமையாளர்களும் கண்டிஷன் போட்டு இவர்களுக்கு பயத்தை காட்டலாம். குறிப்பாக மாநில அரசுகள் அல்லது அரசு சாரா அமைப்புகள் இப்படி ஒரு பிரச்சாரம் செய்து பயத்தை உருவாக்கினால், அதுவும் பலனைத்தரும்.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் மற்றும் வீட்டு உரிமையார்கள் இதற்கு உடனடியாக பிள்ளையார் சுழி போட்டால் நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment