!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, April 8, 2013

இதைப் பற்றி நாம் பேசக்கூடாது


நாட்டை உலுக்கிய டெல்லி கற்பழிப்புக்கு பின்னர் செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தால், அது பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்ததாக தெரியவில்லை.

தினம் ஒரு தகவல் என ஏதாவது ஒரு ஒரு கற்பழிப்பு செய்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. அதிலும் பெண்கள் இந்தியா என்றாலே அலறுகிறார்கலாம். சமீபத்திய புள்ளிவிவரம் அப்படி சொல்கிறது. இதனால் நமக்கு அன்னிய செலாவணியும் போச்சு, மானம் மரியாதையும் போச்சு. 

சட்டம் இந்த குற்றங்களுக்கு கடுமையை காட்டுவதில்லை என்பது ஒரு முக்கிய குறையாக சொல்லப்பட்டது. அரசு தற்போது சட்டங்களை கடுமையாகி இருப்பதால், அந்த ஓட்டையை அடைத்தாகிவிட்டது என்றே நினைப்போம்.

இனி வேறு சில காரணங்கள்

ஏமாற்றுவது குற்றம் என்றாலும் அறியாமையினால், முட்டாள்தனத்தினால் ஏமாறுபவர்களை என்ன சொல்வது?   கற்பழிப்பு என பதிவாகும் வழக்குகளில் பாதி கூட இப்படிபட்டவையாக இருக்கலாம். இங்கே பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருந்தாலும், நமக்கு கோவம் அவர் மீதுதான் வரும். 

ஒரு ஸ்விஸ் நாட்டுப் பெண் தனது ஆண் நண்பருடன் காட்டில் டென்ட் அடித்து தங்கி ரவுடிகளுக்கு பலியாகி இருக்கிறார். இரவில் தோட்டத்துக்கு போக வேண்டும் என்றாலே கணவனை துணைக்கு கூப்பிடும் காலத்தில், இப்படி வம்பை விலைக்கு வாங்கிய இவரை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் சில பள்ளி மாணவிகள் ஆண் மாணவர்களுடம் மும்பைக்கு சென்று அங்கே ரவுடிகளால் சீரழிந்தார்களே. இங்கே கோபம் அந்த பெண்களின் மீதும், காதல் புனிதமானது என்று அதை புனிதப்படுத்தும் மீடியாக்களின் மீதுதான் வருகிறது.

இது கற்பழிப்பு மாதிரி 

சென்னையில் நான் இருந்த போது அங்கே உறவினர் கடைக்கு ஒரு மாணவி தினம் வருவார். எதிரே அரசு பள்ளி. ஒரு நண்பருடன் (மாணவனாக இருக்கக் கூடும்) தினம் பேசுவார். இதை நான் மாதக்கணக்கில் கவனித்திருக்கிறேன்.

ஒருநாள் போலீஸ் வந்தது. அந்த பெண் கடத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டதாக புகார். அந்த மாணவி தினம் போன் செய்த எண்ணை பற்றி விசாரித்தார்கள். அந்த பெண் சொன்ன கதையும் நம்புவது போல் இல்லை என்று அந்த போலீஸ்காரர் சொன்னார்.

இந்த பெண் பேசியவிதம், `இது ஓகே` என்ற நம்பிக்கையை அந்த பையனுக்கு கொடுத்திருகிறது. அவன் எல்லை மீறிவிட்டானா அல்லது உரிமை எடுத்துக் கொண்டானா என்பது தெரியாது. ஆனால் அந்த பெண் அடித்த பல்டியில் அது கற்பழிப்பாக ஆகிவிட்டது.

போலீஸ் விசாரணை நடந்ததால், இது செய்திக்காக வரும், முழு விஷயமும் தெரிந்து கொள்வோம் என நினைத்தேன். ஆனால் வரவில்லை.

இங்கே அந்த பையன் செய்ததும் குற்றம். மாணவியும் விவரம் புரியாத வயதில். இதுபோன்ற குற்றங்களை வகைபடுத்துவதும், தண்டிப்பதும் சிரமம்.

`அது` தேவை 

இதைத் தவிர கவனிக்க வேண்டிய இன்னொரு காரணமும் இருக்கிறது. அது `தேவை`. இந்த மூன்றாவது காரணத்தை விவாதிப்பது ரொம்பவே சிக்கலானது. 

சாதாரணமாகவே மக்களுக்கு அது தேவை. தற்போது இந்தியாவின் நிலை இன்னும் மோசமான நிலையில். வேலை இல்லா திண்டாட்டத்தில் பலர் தனிமரம். கல்வி அறிவு வளர வளர, கூடவே ஈகோவும் வளருவதால் மன முறிவுகள் ஒரு பக்கம். எனவே இங்கேயும் பலர் தனிமரம். 

சில இடங்களில் பெண்களின் சதவிகிதம் குறைவதால் அதனால் உருவாகும் பற்றாக்குறை வேறு. இப்படி பல காரணங்களால் மக்களுக்கு `தேவைகள்` உருவாகி  இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு வழி இல்லை.

பணம் படைத்தவர்கள் `வாங்கிக்` கொள்ளலாம். மற்றவர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுகிறார்கள். அது ஏமாற்றுதல், கற்பழிப்பு என முடிகிறது.

இது சம்பந்தமாக இணையத்தில் ஆராய்ந்தால் உலகில் பாதி நாடுகளில் அது சட்டபூர்வமாக உண்டாம். இதில் ஆச்சர்யம், முஸ்லிம் நாடான இந்தோனேசியா இதை அனுமதிதிருப்பதுதான். மற்றபடி பல நாடுகள் பல விதமாக இருகின்றன.

இந்தியா அப்படியும் இப்படியும் இல்லாமல் நடுவில் இருக்கிறது. அப்படி சொன்னாலும் இந்தியாவில் அது இல்லை என்பதுதான் நிலை. சட்டம் அதை அனுமதிக்காத வரை இதை பயன்படுத்தி புரோக்கர்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் மும்மூர்த்திகள்தான் சம்பாதிப்பார்கள். அதாவது இதை அனுமதிப்பதின் நோக்கம் நிறைவேறுவதில்லை.

அதேசமயம் இது ஒரு catch 22. குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு தேவை இருக்கிறது எனவே அதை அனுமதிக்கலாம் என்பது நியாயமான வாதம் என்றாலும், அது தேவைப்படாத பெரும்பானமையையும் இது சீரழித்துவிடும் அபாயமும் இருக்கிறது.

இருந்தாலும் இந்தியா இதையும் விவாதிக்கும் நாள் விரைவில் வரலாம்.

திருப்பதிக்கே லட்டு, திருநெல்வேலிக்கே அல்வா

மேலே சொல்லி இருக்கிற வார்த்தை பதம் உங்களுக்கு தெரியும். அதேபோல் எனக்கும் ஒரு பிரச்சினை வந்தது.

இலங்கை பிரச்சினை தொடர்பாக தேசிய ஊடங்களில் செய்திகளையும் வாசகர் கருத்துகளையும் கவனித்து வருகிறேன். இதில் இந்தியாவுக்கு இருக்கும் வெளியுறவுத்துறை நிர்பந்தம்பற்றி நான் உணர்ந்திருக்கிறேன். அதைப்பற்றி நானே எனது பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? 

ஒரு பக்கம் இந்த வட இந்தியர்கள் இலங்கையில் என்ன பிரச்சினை என்பது புரியாமல் கமென்ட் அடிக்க, இன்னொரு பக்கம் சிலர், `சீனா, சீனா சீனாதானா டோய்` என்று ஒரேவடியாக குரல் கொடுக்க...எனக்கும் கோவம் வந்தது. 

`இலங்கையின் நட்பை பெறும் முயற்சியில் இந்தியா தமிழகத்தை இழந்தால், `எதிரியின் எதிரி நமது நண்பன்` என்ற சித்தாந்தம் இந்தியாவை அப்போதும் மிரட்டிக் கொண்டிருக்கும். அப்போது தமிழகம் சீனா என்ற கார்டை காட்டி இந்தியாவை மிரட்டும். தற்போதாவது கடல் எல்லையை தாண்டி இருக்கும் சீனா,அப்போது இந்திய துணைக் கண்டத்திலேயே இருக்கும். எனவே ஒற்றுமையாய் இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கும் நல்லது, இந்தியாவுக்கும் நல்லது` என்று பதிலடியாக பின்னோட்டம் இட்டேன்.

இந்த பின்னூட்டத்தை படித்த ஒரு ஆந்திர நண்பர் டெண்ஷனாகிவிட்டார். `என்ன இப்படி சொல்றீங்க? தமிழ்நாடு தனிநாடா போறதா? நாமெல்லாம் இந்தியர். அரசாங்கத்துக்கு நாம் நமது கருத்தை சொல்லுவோம்.அதன்பிறகு அரசாங்கம் நாட்டுநலன் கருதி என்ன முடிவெடுக்கிறதோ அதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்` என்றார்.

நல்ல கருத்துதான். ஆனால் ஆந்திராவுல இவர் எந்த ஏரியாவோ? அங்கே மத்திய அரசு தெலுங்கான விஷயமா ஒரு முடிவெடுத்தா அப்ப இவரு எப்படி யோசிப்பார்?

இங்கே எனக்கு ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வந்தது. ஆப்கானிஸ்தானுக்கு இந்திய விமானம் கடத்தப்பட்டபோது அந்த பிளைட்டில் இருந்தவர்களோட உறவினர்கள் இங்க இந்தியாவுல சண்டை போட்டாங்களாம்.

அந்த பிளைட்ல இருக்கிற மக்களை எப்படியாவது காப்பத்தனும்னு ஒருவர் துடித்தார். இன்னொருவர், `என் உறவினரும் அந்த பிளைட்ல இருக்கார். இருந்தாலும் அரசு தீவிரவாதிகளோட மிரட்டலுக்கு பணியக் கூடாது`ன்னு தன் தேசபக்தியை காட்டின்னாராம்.

அந்த பிளைட்ல ஒருத்தரோட அம்மாவும், இன்னொருத்தரோட மாமியாரும் இருந்திருக்காங்க போலிருக்கிறது. இதில்  யார் எந்த வசனத்தை பேசினார்கள் என்பதை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். இதுதான் உலகம்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னன்னா, நான் இந்தியனா சிந்திக்கனும்ன்னு அவர் எனக்கு அட்வைஸ் செய்கிறார். பாவம், அவருக்கு என் பதிவோட முகவரி தெரியாது. 

இதைத்தான் திருப்பதிக்கே லட்டுன்னு சொல்றதா

0 comments:

Post a Comment