!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, June 24, 2011

காங்கிரசுக்கு ஓய்வு கொடுப்போம்


அரசியலில் தற்போது மிகவும் முட்டாள்தனமான செயல் எதுவென்றால் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடுவதுதான். அதுவும் தமிழகத்தில்... கேட்கவே வேண்டாம். எனவே மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசின்  மேல்மட்ட தலைவர்களுக்கு ஆதரவாக ஒரு பதிவைப் (காங்கிரசின் ஊழல் ஆதரவும்... )  போட ஆரம்பத்தில் எனக்கு தயக்கம் இருந்தது. இந்த பதிவில் சொன்ன கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லி எதற்கு வாங்கி கட்டிகொள்வானேன் என்று நினைத்தேன். இருந்தாலும் பி ஜே பி யை பிடிக்காதவர்கள் கூட வாஜ்பாய் மீது மரியாதை வைத்திருந்ததை போல், மன்மோகன் சிங் மீது எனக்கிருந்த மரியாதை அப்படி ஒரு பதிவைப் போட தூண்டியது.

Thursday, June 16, 2011

காங்கிரசின் ஊழல் ஆதரவும், தமிழக மக்களின் அம்மா ஆதரவும்... !

மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடம். இது மனிதர்கள் எந்த ஒரு பிரச்சினையையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரியவைக்க சொல்லப்படும் வார்த்தை. மாமியார்கள் மட்டுமில்லை, பெரும்பாலான மனிதர்கள் பிரச்சினைகளை அணுகும் விதம் இப்படித்தான்.

கடந்த பதிவில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஊழலை ஆதரிப்பவர்கள் இல்லை என்று சொல்லி இருந்தேன். ஆனால் இந்தியா இதுவரை கண்ட ஊழல்களில் பெரும்பாலானவை காங்கிரசுடன் தொடர்புடையவை. இப்போது வெளிவந்திருக்கும் பிரபலமான ஊழல்களிலும் காங்கிரஸ்காரர்களின் தொடர்பு இருக்கிறது அல்லது அவர்களின் ஆட்சியில் நடந்திருக்கிறது. எனவே மேம்போக்கான பார்வையிலேயே சொல்லிவிடலாம் காங்கிரஸ் என்றாலே ஊழல்தான் என்று!

Monday, June 6, 2011

இந்தியாவில் ஊழலை குறைக்க ஒரு வழி.


கடந்த பதிவில் அரசியல் (தனி) நீதிமன்றங்கள் அமைத்து அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கினால், அது அரசியலில் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று கூறியிருந்தேன். ஆனால் அது வருகிறதோ இல்லையோ, லோக்பால் மத்திய அளவில் வருவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எனவே இது வந்தாலும் பரவாயில்லை என்று திருப்திபட வேண்டியதுதான். இருந்தாலும் ஆபத்தான அரசியல்வாதிகளை கீழ்மட்டத்திலேயே கண்டுபிடித்து (தனி நீதிமன்றங்கள் மூலம்) களை எடுப்பதை விட்டு விட்டு அவர்களை மேல்மட்ட தலைவர்களாக வளர விட்டு அதன் பிறகு அவர்கள் மீதான புகார்களை லோக்பால் மூலம் விசாரிப்பது என்பது தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பதை போன்றதுதான்.

இன்னொருபக்கம்,தற்போதைய பரபரப்பான ஊழல்கள் ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. `கறை நல்லது` என்ற வசனத்தை போல் நம் நாட்டை பொறுத்தவரையில் குறையும் நல்லதுதான். ஏனென்றால் ஏதேனும் குறையை கண்ட பிறகுதான் நாம் விழித்துக் கொண்டு போராடுகிறோம்.