!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, February 14, 2012

2g கொள்ளை. இது வெளிச்சத்துக்கு வராத கொள்ளை!


ஆங்கிலத்தில் laughing all the way to the bank என்று ஒரு பன்ச் டயலாக் உண்டு. அதாவது ஒரு பிரச்சினையில், மற்றவர்களை முட்டாளாக்கிவிட்டு ஜெயித்தவர் பேங்குக்கு சிரித்துக் கொண்டே போனாராம். இந்த 2g வழக்கிலும் அப்படி சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். எனது ஷேர் மார்கெட் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன், யார் சிரிக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள.

இங்கே நான் உங்களுக்கு ஷேர் மார்கெட் பற்றி கிளாஸ் எடுக்கப் போவதில்லை. மேலோட்டமாக இந்த மோசடி மட்டும்.

இங்கே Insider Trading என்ற மோசடியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு கம்பனி பற்றிய தகவல்களை, அவர்களிடமிருந்து முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அந்த ஷேரை குறைந்த விலையில் வாங்கி, பின்னர் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பதுதான் அது. இப்படி கம்பனி பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு சொல்வது குற்றம்.

ஆனால் இந்தியாவில்தான் சட்டத்தின் மீது யாருக்கு பயமில்லையே! எனவே இந்த பயமின்மை மற்றும் சுயநலம் எல்லாம் சேர்ந்து அந்த மோசடி தற்போது மிகப்பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.

ஆபரேட்டர்

ஒரு முறை, ஒரு ஷேர் புரோக்கர், `இந்த ஷேர் வாங்குங்க. இதுல ஆபரேட்டர் இருக்கார்`என்றார். `போன மாசம் டல்லா இருந்தது. இப்ப நல்லா வால்யூம் காட்டுது` என்று அதற்கு உயிர் வந்திருப்பதையும் சொன்னார். அதாவது `ஆபரேட்டர்` என்ற ஒருவர் இருப்பதை பேச்சுவாக்கில் சொன்னார். நான், `யார் இந்த ஆபரேட்டர்?` என்ற கேள்வியோடு அதற்கு உருவம் தேட ஆரம்பித்தேன். அது, வெளியே அதிகம் தெரியாத ஆனால் fundamental ஆக இயங்கும், இன்னொரு உலகத்தை காட்டியது.

நான் இங்கே சொல்ல இருப்பது ஷேர் மார்கெட் இப்படித்தான் இயங்குகிறது என்ற என்னுடைய அனுமானத்தை. அதை நம்பும் அளவுக்கு சில தியரிகள் இருப்பதால், நானும் நம்புகிறேன்.

ஆரம்பத்தில் ஒரு ஸ்கிரிப்ட்டில் ஆபரேட்டர் இருந்தால் அது விலை ஏறும் என்பதையும், இதில் வால்யூம் அதிகமாக இருக்கும் என்பதை மட்டும் உணர்ந்தேன். யாரோ பணபலம் படைத்த சிலர் அந்த ஷேரை நிறைய வாங்கி, பின்னர் விலை ஏற்றி விற்கிறார்கள் என்ற அளவில் நான் நினைத்தேன்.

ஆனால் லாஜிக் இடித்தது. ஒரு கம்பனி பற்றிய ரகசியங்கள் தெரியாமல், ஒரு மூன்றாவது நபர் அதில் கோடிகளில் முதலீடு செய்வாரா? அல்லது யாரோ ஒருவர் சம்பாதிக்க அந்த கம்பனி ஒனர்தான் தகவல் கொடுத்து உதவுவாரா? எனவே கம்பனி + ஷேர் புரோக்கர் = இவர்கள்தான் ஆபரேட்டர்கள் என்பது புரிந்தது. கம்பனி பற்றிய உள் விஷயங்களை அவர்கள் தர இவர்கள் குறைந்த விலைக்கு வாங்கி பின்னர் விலை ஏற்றி விற்கிறார்கள் என்பது புரிந்தது.

அப்போதெல்லாம் ஷேர் மார்கெட் ஆராய்ச்சிக்காக மூன்று மாத பிசினஸ்லைன் பேப்பரை தேதிவாரியாக அடுக்கி வைத்திருப்பேன். அவர் சொன்ன ஷேர் மட்டுமின்றி, அவ்வப்போது ஏறும் பல ஷேர்களின் (மூன்று மாத) ஜாதகங்களை நிறையவே அலசி ஆராய்ந்தேன். இதுதான் இங்கே நடக்கிறது என்பது ஊர்ஜிதமாகியது.

இதை நான் நம்ப காரணம், இங்கே வெளிப்படையாகவே தெரியும் தில்லுமுல்லுகள்தான். காலையில் சில மணி நேரம் அனாதையாய் இருக்கும் சில ஷேர்கள், தீடிரென்று ஆயிரக்கணக்கில்/லட்சகணக்கில் buying order வந்து freeze ஆகி இருக்கும்.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென்று வாங்குவது சாத்தியமே இல்லை. அதுவும் மதியம் 1 மணிக்கோ 1 . 30 மணிக்கோ திடீரென மக்கள் முடிவெடுத்து 10 லட்சம் ஷேர் ஆர்டர் வந்து அது Freeze ஆகிறது என்றால், இது நம்பும்படி இல்லை. ஆப்ரேடர்கள்தான் செய்யும் சித்து விளையாட்டுதான் இது.

நஷ்டத்தில் ஓடும் கம்பனிகள் தவிர்த்து மற்ற எல்லா கம்பனிகளிலும் இந்த மோசடி உண்டு. ஆனால் யாரும் வாயை திறப்பதில்லை. அரசியலில் மட்டும்தான் மற்றவர்களின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவார்கள். மற்ற துறைகளில் யாரும் மற்றவரை காட்டிக் கொடுப்பதில்லை. அதிலும் ஷேர் மார்கெட்டில் எல்லா (பெரிய) புரோக்கரும் இந்த மோசடியில் ஈடுபடுவதால் அவர்களால் வாயைத் திறக்க முடியாது.

இவர்களுடைய பேட்டர்ன் எப்படி என்றால், வருடத்துக்கு 4 ரிசல்ட் வரும். அத்துடன் பிசினஸ் ரீதியாக நல்ல செய்தி, கெட்ட செய்தி என்று ஏதாவது ஓன்று வந்து கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் வெளியே புழக்கத்தில் இருக்கும் ஷேர்களை பினாமியில் வாங்கி குவித்து, பின்னர் அந்த நல்ல செய்தியை வெளியே விட்டு, அந்த ஷேரின் விலையை ஏற்றி, அதை விற்று லாபம் பார்ப்பது. சில ஷேர்கள் ஒரே வருடத்தில் பல மடங்கு ஏறும் (ஏற்றுவார்கள்). எனவே இவர்களுக்கு ஜாக்பாட்தான் (கொள்ளைதான்).

அதேசமயம் எந்த திருடனாவது செவ்வாய்க் கிழமைதான் திருட வேண்டும், புதன்கிழமை திருடக் கூடாது என்று சும்மா இருப்பானா? எனவே மார்கெட் சாதகமாக இருந்தால், வாங்கி குவித்து விற்பது, மற்ற சமயங்களில் மார்கெட் மூடுக்கு தகுந்த மாதிரி intraday மூலம் கொள்ளை அடிப்பது. இதுதான் இவர்களின் ஆபரேட்டிங் சிஸ்டம்.

ஆன்லைன் டிரேடிங் வந்தது இவர்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது. மக்கள் நேரடியாகவே வாங்கலாம் என்பதால், காலையில் ஷேரை வாங்கி, மதியம் விலை ஏற்றி அன்றே விற்று, அல்லது மார்கெட் சரியில்லை என்றால், காலையில் விற்று, மதியம் விலை இறக்கி அதை மீண்டும் வாங்கி விடுவார்கள். இதற்கு முதலீடும் தேவை இல்லை. ஒரு ஷேருக்கு ஓன்று அல்லது இரண்டு ரூபாய் கிடைத்தாலே அவர்களுக்கு போதும்.

அந்த ஷேரின் விலை அவர்கள் கட்டுபாட்டில்தான் என்பதால், long , short எதுவும் பிரச்சினை இல்லை. எப்படியும் அவர்களிடம் ஓரளவுக்கு ஹோல்டிங் இருக்கும். எனவே பயம் இல்லாமல் வாங்கி விற்று, விற்று வாங்கி போக்கு காட்டிவிட்டு, குவாண்டிட்டி சேர்ந்தவுடன், திடீரென்று அந்த ஷேரை விலை ஏற்றி விடுகிறார்கள். இந்த ஜிக்ஜாக்கை கவனித்ததில் எனக்கு மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

இதில் இன்னொரு காமெடி இருக்கிறது. வழக்கமாக கல்யாண வீடு, துக்க வீடு என்று இரண்டு வகை உண்டு. அங்கே சிரிக்க வேண்டும், இங்கே அழ வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் ஷேர் மார்கெட்டில் அப்படி கிடையாது. இங்கே என்ன நடந்தாலும் புரோக்கர்கள் சிரிப்பார்கள். (கவனிக்கவும். நான் சொல்வது உள்ளூர் புரோக்கர்களை அல்ல. NSE , BSE ல் மெம்பர் ஆக இருக்கும் பெரிய தலைகளை.)

மார்கெட் ஏறினால் சந்தோசம். இறங்கினால் எப்படி....?

இரண்டு வகைகளில் லாபம். ஓன்று: ஒரு ஷேரை தொடர்ந்து விலை ஏற்றிக் கொண்டே போகமுடியாது. (விலை ஏற்றிய பின் பெரும்பாலும் விற்று விடுவார்கள். ஸ்டாக் வைத்திருக்க மாட்டார்கள்.) மார்கெட் இறங்கும் போது மார்கெட் போக்குக்கு அதை அடித்து, சில வாரங்களில்/ மாதங்களில் அந்த ஷேரை 40 , 50 அல்லது 70 என அதை கீழே இறக்குவார்கள். இப்போது சிறுக சிறுக வாங்கி, பின்னர் மீண்டும் விலை ஏற்றி உயரத்தில் விற்பது.

இரண்டு: மார்கெட்டுக்கு ரொம்ப ஆபத்தில்லை என்றால், அதே நாளில் 100 ரூபாய் ஷேரை, 90 வரை இறக்கி (சராசரி விலை 92 வையுங்கள்) லட்சக்கணக்கில் ஷேர்களை விற்றுவிட்டு, பின்னர் 80 முதல் 90 வரை ஜிக்ஜாக் காட்டி அன்றே கவர் செய்வது. ஏறும் போதும் இறங்கும் போதும் இதே தியரிதான்.இந்த Intra Day ல் 1 லிருந்து 5 ரூபாய் வரை லாபம் கிடைத்தாலே போதுமே. முதலீடே இல்லை. பல லட்சங்களில் டிரேடிங். கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த பதிவுக்காக சமீபத்தில் GATI (கூரியர்) என்ற கம்பனியை NSE ல் ஆராய்ந்தேன்.

NSE Security-wise Delivery Position (9FEB2012)
Quantity Traded 54,90,216
Deliverable Quantity (gross across client level) 18,35,964
% of Deliverable Quantity to Traded Quantity 33.44 %

54 லட்சம் ஷேரில் 33 சதவிகிதம்தான் டெலிவரி கொடுக்க வேண்டும். அதாவது 40 லட்சம் ஷேர் டெலிவிரி இல்லை. intraday தான். இதில் அப்படி இப்படி என 10 லட்சத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் மீதி 30 லட்சம் ஆபரேட்டர் கணக்கு. இந்த ஷேர் அன்று குறைந்தபட்சம் ரூ 39 க்கும் அதிகமாக 46 க்கும் டிரேட் ஆகி இருக்கிறது. வித்தியாசம் 7 ரூபாய். இதில் ஆபரேட்டர் ரூ 2 லாபம் பார்த்தால், ஒரே நாளில் முதலீடு இல்லாமல் 60 லட்சம் அவர்களுக்கு. இந்த ஷேர் டிசம்பர் மாதம் ரூ 23 வரை குறைந்திருக்கிறது.அவர்கள் ரூ 30 க்கே இந்த ஷேரை வாங்கி குவித்து, இப்போது தள்ளி விட்டாலும் 50 சதவிகித லாபம். இந்த லாபம் தனிகணக்கு.

இது எலக்ட்ரானிக் யுகம் என்பதால், இந்த மோசடியை கண்டுபிடிப்பது ஈசி. இந்த 30 லட்சம் intraday யார் அகௌன்ட் என்று நோண்டினால் உண்மை வெளியே வந்துவிடும். என்னதான் அவர்கள் SEBI யை ஏமாற்ற நினைத்தாலும் ஒரு அளவுக்கு மேல் பினாமியை உருவாக்க முடியாது.

மேலே சொன்னவை ஒரு சாம்பிள். மேலும் எழுத ஆரம்பித்தால் எனக்கு கை வலிக்கும், உங்களுக்கு தலை வலிக்கும். நான் சொல்ல வருவது என்னவென்றால், இந்தியாவில் எல்லா கம்பனியும் ஷேர் புரோக்கர்களுடன் கூட்டணி சேர்ந்து, ஆபரேட்டர் என்ற பெயரில் தங்கள் நிறுவன ஷேர்களை மார்கெட்டில் செயற்கையாக விலை ஏற்றி இறக்கி, டிரேடிங் செய்து கொள்ளை அடிக்கிறார்கள். இந்திய ஷேர் மார்கெட்டின் மொத்த மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், இங்கே சுருட்டப்படும் ஊழலின் மதிப்பு எங்கேயோ போகும். அந்த வகையில் 2g ஊழல் ஒரு கொசு மாதிரிதான்.

இது அரசு மற்றும் முன்னணி பத்திரிகைகளுக்கு தெரியாதா, அல்லது என்னுடைய கணிப்பு தவறா?

அரசியலை விட அதிகமாக நான் ஷேர் மார்கெட்டை ஆராய்ந்திருக்கிறேன். Fundamental ஆக அல்ல. இந்த ஷேர்கள் ஏறி இறங்கும் முறைகளை ஆராய்ந்திருக்கிறேன். எனவே இந்த மோசடி உண்மை என்றுதான் நான் நினைக்கிறேன். ஒருவேளை அரசுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இதன் விஸ்தீரணம் தெரியாமல் இருக்கலாம். என்றாவது ஒரு நாள் வெடிக்கும். அப்போது பாப்போம்.

சரி. இதற்கும் 2g ஊழலுக்கும் என்ன சம்பந்தம்? அது

2g கொள்ளையின் மூன்றாவது மோசடி!


..


16 comments:

Vetirmagal said...

கொஞ்சம் தெரிந்த சங்கதி தான் என்றாலும் , இப்படி எல்லாம் கொள்ளையா என்று மண்டை குழம்புகிறது.
நோகாமல் அலுங்காமல் கொள்ளை!

வவ்வால் said...

சிவானந்தம்,

நல்லா அலசி இருக்கிங்க, பங்குவணிகம் சட்டப்பூர்வமான ,விதிகளுடன் கூடிய ஒரு சூதாட்டம் என்பதை புரிந்துக்கொண்டால் அதிகம் ஏமாற்றம் இருக்காது.

நீங்க சொன்ன ஆபரேட்டர்களுக்கு வெளிநாடு, உள்நாடு கருப்பு பணம் தான் முதலீடு,பிநோட் எல்லாம் அதுக்கு தான் நம்ம ஊரு பணமே மொரிஷியஸ் போய் வெளிநாட்டுப்பணமா பி.நோட் மூலம் பங்கு சந்தைக்கு வரும். நம்ம அரசியல்வாதிகளின் பங்கும் இருக்கு.
2008 இல் பங்கு சந்தைப்பற்றி எனக்கு தெரிந்ததை எழுதி வச்சேன் , நேரம் இருக்கும் போது பாருங்கள்.

பங்கு சந்தை பரமப்பதம்

Anonymous said...

அருமையான அலசல்!!!வாழ்த்துக்கள்

Anonymous said...

we live in INDIA&this is a regular affair....
EVEN THIS WILL PASS....

Sankar Gurusamy said...

சிறப்பான தெளிவான அலசல்.. இதில்தான் நமது பணம் விளையாடுகிறது.. வங்கியில் செலுத்தியது, பிஎஃப், இன்சூரன்ஸ் எல்லாம்..

தலை எழுத்து..

பகிவுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

சிவானந்தம் said...

Vetrimagal said...

//கொஞ்சம் தெரிந்த சங்கதி தான் என்றாலும் , இப்படி எல்லாம் கொள்ளையா என்று மண்டை குழம்புகிறது.
நோகாமல் அலுங்காமல் கொள்ளை!///

வாங்க வெற்றிமகள். தெரிந்த சங்கதி என்றால் மக்களுக்கு வால்தான் தெரியும். ஆனால் வாலை பிடித்துக் கொண்டே போனால் எலி வராது, யானைதான் வரும்.

@வவ்வால்

நண்பரே, நீங்கள் இன்னும் இதை சூதாட்டம் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் இது மேட்ச் பிக்சிங் வகை. திறமைக்கோ, கணிப்புக்கோ இடம் கிடையாது. அதே சமயம் இங்கே fundamental அடிப்படையில் நீண்ட கால நோக்கில் போனால் லாபம் பார்க்கலாம். ஆனால் அப்படி சம்பாதிப்பவர்கள் மிகவும் குறைந்த சதவிகிதமாக இருப்பார்கள்.

இங்கே ஆபரேட்டர்கள் பணம் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் மக்கள் பணத்தை இழக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அதேசமயம் வேறு ஒரு தியரியும் இருக்கிறது. அதை பின்னர் அலசுவோம்.

(எங்க ஏரியாவுல கரண்ட் கட். அதான் பதில் லேட்டாக...)

சிவானந்தம் said...

@அனானிமஸ்

///அருமையான அலசல்!!!வாழ்த்துக்கள்///.

//we live in INDIA&this is a regular affair....
EVEN THIS WILL PASS...//

வாங்க அனானிமஸ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

///சிறப்பான தெளிவான அலசல்.. இதில்தான் நமது பணம் விளையாடுகிறது.. வங்கியில் செலுத்தியது, பிஎஃப், இன்சூரன்ஸ் எல்லாம்..

தலை எழுத்து..

பகிவுக்கு மிக்க நன்றி..///

வாங்க சங்கர்.

நான் ஷேர் மார்கெட்டை கவனித்தேன், எழுதினேன். அதே போல் ஒவ்வொரு துறையிலும் பல மோசடிகள் இருக்கும். ஆனால் அதை வெளிச்சம் போட்டு காட்டுபவர்கள் இல்லாததால்தான் இந்த மோசடிகள் தொடர்கின்றன.

வவ்வால் said...

சிவானந்தம்,

சூதாட்டத்தில் தான் மேட்ச் பிக்சிங் நடக்கும்.

இன்சைடர் டைப் டிரேடிங்க் அல்ல இந்த மெட்ச் பிக்சிங்க், ஐபிஓ வின் போதே ஒப்பந்தம் போட்டு லீகல்லாக நடக்கும். லீட் ரன் புக் மேனெஜர், ப்ரோமோட்டர், ஹெட்ஜ் பண்ட் மேனேஜர் எல்லாம் என்ன செய்கிறார்கள் எனகேட்டுப்பாருங்கள்.

இதுக்கெல்லாம் அப்புறமா தான் , இன்னும் சில மேட்ச் பிக்சிங் வேலைகள் இருக்கு.அதை எல்லாம் யூகம் செய்து ஆடுவதால் சூதாட்டம் என்கிறேன்.

நீங்க சொன்ன ஃபண்டமென்டல் தியரி எல்லாம் புளுசிப் ஷேர் போல நல்ல ஷேர்களில் நீண்ட கால நோக்கில் போட்டால் செய்வது. எல்லாருக்கும் புளுசிப் ஷேர் கிடைப்பதில்லை. மேலும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் அதில் பேங்க்க் இன்ட்ரெஸ்ட் ரேட் அளவுக்கு கூட வருமானம் இருப்பதில்லை.

ஆமாம் ஒரு இடத்தில் பணம் இழந்தால் இன்னொரு இடத்திற்கு போகவே செய்யும். நான் போட்ட சுட்டியில் இதெல்லாம் பேசப்பட்டு இருக்கும்.

உங்க பகுதிக்கு மட்டுமில்லை எல்லா இடத்திலும் மின் தடை தான், இதில் மட்டும் ஓரளவு சமத்துவம் நிலவுது :-))

மின்வெட்டுக்கென்றே ஒரு பதிவுப்போட்டு இருக்கேன் பாருங்க .

Ashok D said...

ப்ரோக்கர் வாங்கும்போது நாமளும் வாங்கி ... அவங்க விற்கும் போது நாமளும் வித்துட்டு வந்துடலாமே? :)

சிவானந்தம் said...

கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. நானும் அந்த அடிப்படையில்தான் ஆராய்ச்சி செய்தேன். MSE ஆக்டிவாக இருந்தபோது, ஒரு ஆபரேடர் வாங்குகிறார்/ விற்கிறார் என்பது மறுநாள் பேப்பரில் ஆராயும் போதுதான் தெரியும். எனவே முடிவு எடுக்க முடியவில்லை.

ஆனால் ஆன்லைன் வந்த பிறகு ஆபரேட்டர்கள் intraday விலேயே கதையை முடித்ததால், என்னால் இதை கணிக்க முடியவில்லை.

வால்பையன் said...

விலை ஏறினால் சிறு முதலீட்டாளர்களுக்கு நல்லது தானே!

மற்றபடி இன்சைடர் ட்ரேடிங்கில் எனக்கு உடன்பாடில்லை, துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அது சர்வ சாதாரணமாக நிகழ்வது சாத்தியம் தான்.

ஆனாலும் இந்திய பங்கு சந்தை முதலீட்டிற்கு உகந்தது என்பது தான் என் கருத்து!

நல்ல செக்டார் பார்த்து வாங்குங்கள்.

வங்கி, கட்டுமானம், மோட்டார், பவர் எப்போதும் இந்தியாவின் தூண்கள்

rajan said...

Sir, may be what u said above is true!,but i watched and observed mkt forming a setup before upmove or downmove, in intraday, iam on research of 100% profit method. more over it is sucess.

சிவானந்தம் said...

@rajan

வாங்க ராஜன். அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லக்கூடாதா? நீங்கள் விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனது மெயில்: shivananthamr@sify.com

rajan said...

Pls send u r loss details only. if u had any, rajanprofitz@gmail.com

banti said...

-Good piece of information.

Post a Comment