!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, February 16, 2012

2g கொள்ளையின் மூன்றாவது மோசடி!


இதுவரை 2g யில் இரண்டு மோசடிகளைத்தான் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஓன்று: முறைகேடாக லைசன்ஸ் பெற்றது. இரண்டு: லைசன்ஸ் வாங்கிய பிறகு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்றதன் மூலம் அநியாய லாபம் பார்த்தது.

தற்போது அந்த லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த மோசடி முறியடிக்கப்பட்டது. இனி அவர்கள் புதிதாக லைசன்ஸ் எடுத்தாக வேண்டும். இவர்களின் பங்குகளை வாங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் பேசி அவர்களுடைய பணத்தை வாங்கிவிடுவார்கள் அல்லது தங்களின் தொழிலை தொடர்கிறார்கள். அது அவர்களின் தலைவலி. எனவே அதை விட்டுவிடுவோம். ஆனால் இங்கே ஒரு மூன்றாம் கோணம் இருக்கிறது. அதாவது சொல்ல மறந்த கதை ஓன்று இருக்கிறது. நாம் அதை மட்டும் பார்ப்போம்.

கடந்த பதிவில், கம்பனி முதலாளிகளும், ஷேர் புரோக்கர்களும் கூட்டணி சேர்ந்து, மார்கெட்டில் ஷேர்களின் விலையை செயற்கையாக ஏற்றி, இறக்கி கொள்ளை அடிக்கிறார்கள் என்று எழுதி இருந்தேன். முறையாக கம்பனி நடத்தி சம்பாதிப்பதை விட இப்படி கிம்பளமாக இவர்களுக்கு வரும் வருமானம் அதிகம்.

இந்த முறைகேடான ஆபரேட்டிங் மூலம், உங்கள் கம்பனியில் நீங்கள் போடும் முதலீட்டை, இரண்டே வருடத்தில் எடுத்து விடலாம். சில 10 ரூபாய் ஷேர்கள் 500 ரூபாய்க்கும் மேலே போயிருகிறது. அப்படி என்றால் இங்கே லாபத்திற்கான வாய்ப்பு எவ்வளவு என்று நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

அதற்காக இந்த ஆபரேட்டர்கள் குறைந்த விலைக்கு ஷேரை வாங்கி அதை நீண்ட காலம் வைத்திருக்க மாட்டார்கள். மார்கெட் எப்போது வேண்டுமானாலும் விழலாம். எனவே விலையை ஏற்றி இறக்கி, வாங்கி விற்று, விற்று வாங்கி அவ்வப்போது கையை துடைத்துக் கொள்வார்கள். இப்படி பணத்தை சுருட்டிய பிறகு, கம்பனியை இழுத்து மூட நேர்ந்தாலும் உங்களுக்கு நஷ்டம் இல்லை.

2g யின் உள் மோசடி

இப்போது 2g மோசடியில் ஈடுபட்ட கம்பனிகளின் கதையை பார்ப்போம். இவர்கள் ஏற்கனவே மோசடியாக லைசன்ஸ் வாங்கி இருக்கிறார்கள். அந்த ஆபத்தான மோசடி செய்தவர்கள், ஷேர் மார்கெட்டில் எல்லா புரோக்கர்களும் சர்வசாதாரணமாக ஈடுபடும் இந்த மோசடியை செய்யமாட்டார்களா என்ன?

மோசடியாக லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் நேரடியாக லிஸ்ட் ஆன கம்பனியாக இருக்கலாம், அல்லது பெரிய நிறுவனங்கள், சிக்கல் நேர்ந்தால்  வெட்டிவிட, தனி கிளைகளாக ஆரம்பித்திருக்கலாம். எப்படி இருந்தாலும் இவை ஏதோ ஒரு வகையில் parent கம்பனிகளுக்கு லாபம் கொடுக்கும்.

எனவே லைசன்ஸ் வாங்கும் முன்பே அந்த கம்பனி ஷேர்களை மார்கெட்டில் பினாமியாக வாங்கி குவித்து, அந்த செய்தி வந்த பின் அதை விலை ஏற்றி விற்று, இந்த இரண்டு வருடத்தில் என்னன்ன சித்து வேலைகளை செய்திருப்பார்கள்? நிச்சயம் பல ஆயிரம் கோடிகளை குவித்திருப்பார்கள்.

நான் சொன்னது ஷேர் மார்கெட்டில் கொஞ்சம் வெளிப்படையாகவே தெரியும் மோசடியை. இன்னும் எத்தனை விதமான மோசடி இருக்கோ? ஷேர் விலையை வைத்து மட்டும் கணக்கு போட முடியாது. 50 ரூபாய் ஷேர் 50 ரூபாயிலேயே இருக்கும். ஆனால் போனஸ், ரைட்ஸ் என கொடுத்திருப்பார்கள். அதேபோல் 10 ரூபாய் ஷேரை 1 ரூபாய் (Face value) என்று மாற்றி இருப்பார்கள். இப்படி 1 ரூபாய்க்கு FV மாத்த வேண்டிய அவசியம் என்ன? அது ஒரு தனிக் கதை.

10 ரூபாய் ஷேரை P E Ratio என்று ஒரு கணக்கை சொல்லி 500 ரூபாய்க்கு கொண்டு போவார்கள்.விலை ஏறிய பின் மக்கள் அதை வாங்க பயப்படுவார்கள். வால்யூம் குறையும். அவர்களுக்கு ஆபரேட் செய்வது சிரமமாக இருக்கும். எனவே FV குறைப்பதன் மூலம், 500 ரூபாய் ஷேர் 50 ரூபாய் ஆகிவிடும். சாதாரண மக்கள், `நல்ல பெரிய கம்பனி 50 ரூபாய்க்கு சீப்பா கிடைக்குது என்று வாங்க ஆரம்பிப்பார்கள். இதுதான் எலி அம்மணமாக ஓடும் காரணம்.

இணையத்தில் ஒருவர் எழுதி இருந்தார். Unitech நிறுவன ஷேர்களில் 2000 மாம் ஆண்டு ரூ. 77000 முதலீடு செய்திருந்தால், அது 2011 ல், ஒரு கோடி ஆகி இருக்குமாம். பல கணக்குகளை சொல்லி இருந்தார். ஆராய வேண்டியதில்லை.அது சாத்தியம்தான். சாதாரண முதலீட்டார்களில் 1000 த்தில் ஒருவருக்கும், ஷேர் புரோக்கர்களுக்கு 100 சதவிகிதமும் இது சாத்தியம்.

ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்யலாமா, அதில் லாபம் சாத்தியமா என்ற ஆராய்ச்சி அல்ல இந்த பதிவு. எனவே அந்த சிந்தனையோடு இந்த பதிவை படித்து குழப்பிக் கொள்ளாதீர். இங்கே நடக்கும் ஒரு மோசடி, அந்த மோசடியின் மூலம், இந்த 2g கொள்ளையர்கள் மக்களையும், நீதி மன்றத்தையும் எப்படி முட்டாளாக்கி  இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான் இந்த பதிவு.          

மீட்டர் வட்டி

நான் சொல்ல வருவது இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்றால் இந்த உதாரணத்தை பாருங்கள். ஒருவர் ஒரு வங்கியில் மேனஜரை கையில் போட்டுக் கொண்டு மோசடியாக 100 கோடி கடன் வாங்கினார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவரின் மோசடி கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கடனை ரத்து செய்து திரும்ப வாங்கி விடுகிறார்கள்.

தற்போது பேங்குக்கு நஷ்டம் தவிர்க்கப்பட்டது. ஆனால் அவர் பேங்கில் வாங்கிய 100 கோடியை வைத்துக் கொண்டு, வெளியே மீட்டர் வட்டிக்கு விட்டு, இந்த இரண்டு வருடத்தில் அதை 200 கோடியாக்கிவிட்டார். கடன் ரத்து செய்யப்பட்டதால், அவர் பேங்கில் வாங்கிய பணத்தை மட்டும்தான் திருப்பிக் கொடுத்தார். அதாவது 100 கோடி. இப்போது மீதி 100 கோடி பணம் அவரிடம் இருக்கிறது. இது எப்படி இருக்கு? இங்கே புத்திசாலி யார்?

அதேதான் இந்த 2g விஷயத்திலும் நடந்திருக்கும். அவர் மீட்டர் வட்டிக்கு விட்டு லாபம் பார்த்தார். ஆனால் இந்த லைசன்சை வாங்கியவர்கள், அதை வைத்துக் கொண்டு, அதில் உள்ள நல்ல, கெட்ட செய்திகளையும், P / E Ratio என்ற தியரியை பயன்படுத்திக் கொண்டு, இவர்களுடைய கம்பனியின் ஷேர்களை மார்கெட்டில் அநியாயத்துக்கு உருட்டல் பிரட்டல் பண்ணி பல ஆயிரம் கோடிகளை சுருட்டி இருப்பார்கள். இந்த பணம் அவர்களுக்குத்தான். எனவே 2g லைசன்ஸ் கேன்சல் ஆனாலும், அதை வைத்து கொண்டு அவர்கள் ஷேர் மார்க்கெட்டில் கொள்ளை அடைத்த பணம் அவர்களுக்குத்தான்.

மோசடி வழக்கு வரலாம். அந்த ஒரு ஆபத்துதான். இதில் நீங்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பிக்கலாம். அல்லது மாட்டினாலும் தண்டனை 5 வருடத்திற்கு மேல் போக வாய்ப்பில்லை. நெகடிவ் சைட் என பார்த்தாலும் இதில் அவர்கள் சுருட்டிய லாபத்துக்கு இது ஒரு தண்டனையே அல்ல.

இதுதான் இந்தியா. நாட்டின் இமாலய ஊழல் என்று ஒன்றை நாம் கண்டோம். மக்களின் கோவம் ஊழலுக்கு எதிராக திரும்பியது. சமூக ஆர்வலர்கள் கொதித்தெழுந்தார்கள். நீதிமன்றம் சிலிர்த்தெழுந்தது. தவறை சரி செய்யும் தீர்ப்பை எழுதியது. நாமும் அதை கொண்டாடினோம். ஆனால் எப்போதுமே நாம் காணும் காட்சி ஒன்றாக இருக்கும் ஆனால் நடந்தது வேறு ஒன்றாக இருக்கும். இப்போது சொல்லுங்கள் இந்த 2g வழக்கில் பேங்குக்கு சிரித்துக் கொண்டே போவது யார் என்று?

இது நல்ல செய்திதான். ஆனால்...

ஒரு சம்பவத்தை பாசிடிவ் நெகடிவ் என இருவிதமாக பாப்போம். இந்த 2g வழக்கின் முடிவு பாசிடிவான ஒன்றுதான். உச்ச நீதிமன்றம் நம் நாட்டில் இருக்கும் பல ஓட்டைகளில் சிலவற்றை அடைத்திருக்கிறது. அதற்காக வேண்டுமானால் சந்தோஷப்படலாம்.

ஆனால் ஊழலின் அடிப்படை நோக்கமே முறைகேடாக பணம் சேர்ப்பதுதான். அந்த வகையில், நீதிமன்றத்திடம் இந்த ஊழல்வாதிகள் தோற்றதாக நம்மிடம் ஒரு பிம்பம் காட்டப்பட்டாலும், நிஜத்தில் இந்த ஊழல்வாதிகள் (பொருளாதார ரீதியாக) ஜெயித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அதேசமயம் இதில் அரசோ, நீதிமன்றமோ ஊழல்வாதிகளுக்கு துணை போய் மக்களை முட்டாளாக்கவில்லை. இதில் இப்படி ஒரு மூன்றாவது கோணம் இருப்பது தெரியாமல் அவர்களே முட்டாளாகி இருக்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய கொடுமை. 


19 comments:

ஸ்ரீகாந்த் said...

you are eligible to be called as chinna subramaniya swamy'

Sankar Gurusamy said...

சிறப்பான அலசல்.எங்கும் ஊழல் எதிலும் ஊழல்.. அதனால இதுலயும் இப்படியும் ஒரு ஊழல்.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..

http://anubhudhi.blogspot.in

Vetirmagal said...

IT is not only robbing the Govt, but they make money robbing the other share holders/subscribers. Double robbing?

Shameless !

நெல்லை கபே said...

உண்மைதான்.மாலன் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது.'உயரே உயரே பறக்க வேண்டுமென்றால் மாமிசம் தின்ன வேண்டுமென்று'. பெரிய கைகள் எல்லோருக்குமே இப்படி ஒரு பின்னணி உண்டு.சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் நிதி நிறுவனங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு மொத்தமாக சுருட்டிக் கொண்டு ஓடின.இன்னும் வழக்குகள் நடக்கிறது.கடைசியில் பணம் வரும் என்பது கேள்விக்குறிதான். அப்படி வந்தாலும் அது இன்றைய மதிப்பில் ஒன்றுமில்லாத ஒன்றாகவே இருக்கும்.
இப்படி தேக்கு மரம் விற்பதாக அடி முட்டாள்தனமான திட்டத்தின் கீழ் மக்கள் எப்படி பணத்தை போட்டார்கள் என்கிறீர்கள். SEBI க்கு நன்றாகவே இது அப்போது தெரியும் தப்பென்று.ஆனால் விட்டுவிட்டார்கள். பிறகு ஓடிப்போன பின்பு சட்ட திட்டங்களை கொண்டு வந்து தணிக்கை செய்ய ஆட்களை நியமித்தார்கள்.
இதில் ஒரு கூத்து. ஒரு நாள் நான் நேரில் பார்த்தது.தணிக்கைக்கு உத்தரவிட்ட SEBI அதிகாரியும், தணிக்கை செய்யப் போகிற ஆடிட்டரும், நிதிநிறுவன முதலாளியும் பல வருடங்களாகவே டென்னிஸ் ஒன்றாக ஆடி வருபவர்கள்.நண்பர்கள் வேறு.
நீ ஆடிட்டிங் உத்தரவு கொடு, நான் பண்றேன், என்று கடைசியில் அதில் தப்பு கண்டுபிடித்து நிறுவனம் மூடப்பட்டது.ஆஹா நேர்மையாக செயல்பட்டிருக்கிறார்களே என்று மகிழாதீர்கள்...அவ்வளவு நாள் ஏன் செயல்படவில்லை என்பதுதான் கேட்கப்படவேண்டிய கேள்வியே!

வவ்வால் said...

சிவானந்தம்,

2ஜி இல் ஊழல் நடந்திருக்கிறது, ஆனால் நீங்கள் சொன்ன வழியில் அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் வழி சில நிறுவனங்களுக்கே சாத்தியம் ஆக வாய்ப்புள்ளது.

//எனவே லைசன்ஸ் வாங்கும் முன்பே அந்த கம்பனி ஷேர்களை மார்கெட்டில் பினாமியாக வாங்கி குவித்து, அந்த செய்தி வந்த பின் அதை விலை ஏற்றி விற்று, இந்த இரண்டு வருடத்தில் என்னன்ன சித்து வேலைகளை செய்திருப்பார்கள்? நிச்சயம் பல ஆயிரம் கோடிகளை குவித்திருப்பார்கள்.//

ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனம் இல்லாதவர்கல் லைசென்ஸ் வாங்கியவுடன் பங்கு சந்தையில் நுழைய முடியாது. ஒரு நிறுவனம் துவங்கி மூன்று நிதியாண்டு கடந்த பின்னரே பங்கு வர்த்தகத்தில் நுழைய முடியும்.

உதாரணமாக யுனிநார் பெயரில் இன்றுவரையில் பங்குகள் இல்லை. ஆனால் ஏற்கனவே கட்டுமானத்துறையில் உள்ள அதன் தாய் நிறுவனம் யுனிடெக் பங்கு சந்தையில் உள்ளது.புதிதாக தொலைத்தொடர்பில் நுழைந்ததால் யுனிடெக் பங்கு ஒன்றும் பெரிதாக உயர்ந்து விடவில்லை.

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத முதலீடுகள் , யுனிநார் லாபம் காட்டினாலும் யுனிடெக் லாபத்தில் வராது ,எனவே டிவிடெண்ர், போனஸ் என எதுவும் யுனிடெக் பங்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்காது, எனவே முதலீட்டாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை.

ஆனால் யுனிடெக் அந்நிய நேரடி மூல தனம் என்ற முறையிலேயே நார்வேயின் டெலெநாருக்கு 67 %பங்குகளை விற்று லாபம் பார்த்துவிட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சகம்ம் ஒப்புதல் அளித்துள்ளது இதற்கென அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் என ஒன்று இருக்கு. இது எல்லாம் ப.சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் எனவே தான் சுப்பிரமணியம் சுவாமி சிதம்பரத்தை குடைகிறார்.

அதே சமயத்தில் முன்னரே தொலைதொடர்பு நிறுவனமாக பங்கு சந்தையில் பட்டியலிட்டு , புதிய லைசென்ஸ் கிடைக்கப்பெற்றவர்களின் பங்கு சந்தை மதிப்பு உயர வாய்ப்பு இருந்தது, டாடா, ரிலையன்ஸ்,ஏர் டெல், ஐடியா, ஏர்செல் ஆகியோருக்கு லாபம் கிடைத்திருக்கும். மேலும் அவர்கள் அந்நிய நேரடி முதலீடாகவும் அள்ளிவிட்டார்கள். உ.ம்:டாடா டெலி சர்வீசஸ் ,ஜப்பானின் டோகோவுக்கு பங்குகளை உயர்ந்த மதிப்பில் விற்றது.

வவ்வால் said...

தொடர்ச்சி....

//அதேபோல் 10 ரூபாய் ஷேரை 1 ரூபாய் (Face value) என்று மாற்றி இருப்பார்கள். இப்படி 1 ரூபாய்க்கு FV மாத்த வேண்டிய அவசியம் என்ன? அது ஒரு தனிக் கதை.

10 ரூபாய் ஷேரை P E Ratio என்று ஒரு கணக்கை சொல்லி 500 ரூபாய்க்கு கொண்டு போவார்கள்.விலை ஏறிய பின் மக்கள் அதை வாங்க பயப்படுவார்கள். வால்யூம் குறையும். அவர்களுக்கு ஆபரேட் செய்வது சிரமமாக இருக்கும். எனவே FV குறைப்பதன் மூலம், 500 ரூபாய் ஷேர் 50 ரூபாய் ஆகிவிடும். சாதாரண மக்கள், `நல்ல பெரிய கம்பனி 50 ரூபாய்க்கு சீப்பா கிடைக்குது என்று வாங்க ஆரம்பிப்பார்கள். இதுதான் எலி அம்மணமாக ஓடும் காரணம்.//

இதையும் கொஞ்சம் குழப்பிக்கிட்டிங்க என நினைக்கிறேன்.

10 ரூபாய் பங்கை ஒரு ரூபாய் என மாற்றுவது என்பது நம்மிடம் இருக்கும் 10 ரூ பங்கை ஒரு ரூ என மதிப்பு குறைப்பதாக சொல்வதாகிறது.

10 ரூ முகமதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு பதிலாக 10 ஒரு ரூ பங்கு கொடுப்பார்கள். இதற்கு ஸ்பிளிட்டிங்க் என்று பெயர். அதாவது சில்லறையாக மாற்றிக்கொடுப்பது.

எந்த சதவீதத்தில் ஸ்பிளிட் செய்கிறார்களோ அத விகிதத்தில் சந்தையில் மதிப்பு குறைப்பார்கள்.

அதாவது , 10 ரூ முகமதிப்புள்ள ஒரு பங்கு 100 ரூ ,
10 பங்கு எனில் 1000 மதிப்பு மொத்த சந்தை மதிப்பு.

இப்போது 1:10 என ஸ்பிளிட் செய்தால் ஒரு 10 ரூ பங்குக்கு பத்து ஒரு ரூபாய் பங்கு கொடுப்பார்கள் , அதே போல ஒரு பங்கின் சந்தை மதிப்பு 10 ரூ என திருத்திவிடுவார்கள்.

இப்போது நம்மிடம் 10 பங்க்குகளுக்கு பதிலாக 100 பங்கு தலா 10 ரூ சந்தை மதிப்பில் இருக்கும். 10 *100=1000 என மொத்த மதிப்பு அப்படியே மாறாது இருக்கும்.

ஏன் இப்படி செய்ய வேண்டும்?

பங்கு வணிகத்தில் ஒரு பங்கு என்றெல்லாம் வணிகம் செய்ய முடியாது குறைந்தது 10 யூனிட் என்ற அளவில் தான் நடக்கும். இப்போது ஒருவரிடம் இருப்பதே 10 பங்க்கு எனில் அவர் எல்லாவற்றையும் விற்று , ஈடுபட வேண்டும், அதுவே 10 பங்கை மதிப்பு மாறாமல் 100 பங்காக மாற்றிக்கொடுத்தால் எளிதாக சிறிய அளவில் விற்று ,வாங்கி என வணிகத்தில் ஈடுபடுவார்.

இது 1000 ரூபாயை நூறு 10 ரூபாய்களாக சில்லறையாக மாற்றி வைத்துக்கொள்வது போலத்தான்.

இதன் மூலம் பங்கு சந்தையில் புழங்க்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளின் எண்ணிக்கை உயரும். மேலும் அதிக விலையுள்ள பங்கு எனில் ரிஸ்க் அதிகம் என நினைப்போரும் உண்டு, அதோடு அல்லாமல் சிறிய விலையில் இருக்கும் பங்குகளை குறைவான முதலீட்டுடன் வணிகம் செய்ய வருபவர்களுக்கு வாங்கவும் முடியும் .

மேலும் ஒரு நிறுவனம் நன்றாக செயல்ப்படும் என எதிர்ப்பார்க்கிறது, ஆனால் அது சார்ந்த துறையில் அதன் பங்கின் விலை ஒரு உச்சத்தை தொட்டு நிலைத்து நின்றுவிடும் பட்சத்தில் நன்றாக செயல்பட்டாலும் வர்த்தகம் இருக்காது. அப்போது ஸ்பிளிட் செய்வதால் மதிப்பு பிரிக்கப்படுகிறது, எனவே விலைக்குறையும் புதிதாக வாங்குவார்கள், பின்னர் நிறுவனம் நன்றாக செயல்ப்பட்டால் மீண்டும் வளர்ச்சியடைந்த்து உயரும்.

இதன் மூலம் பிரிக்கப்பட்டு மதிப்பு குறைந்த பங்குகளை அதிகம் வைத்திருக்கும் நிறுவன அதிருபருக்கும் நல்ல லாபம் கிடைக்கும், சிறு முதலீட்டாளர்களுக்கும் லாபம் கிடைக்கும்.

இதெல்லாம் அந்நிறுவனம் நன்கு செயல்ப்பட்டு வளர்ச்சியடைந்தால் மட்டுமே, சரியாக செயல்ப்படாத நிறுவனங்கள் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டக்கதை தான் :-))

இப்படி ஸ்பிளிட் செய்து சிறப்பாக செயல்ப்பட்டு மதிப்பு உயர்ந்த பங்கு இன்போசிஸ்.

இதற்கு எதிர்மாறாக கன்சாலிட்டேட் செய்யும் நிறுவனங்களும் உண்டு.

இதெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும், ஆனால் முகமதிப்பு குறைப்பதில் ஊழல் என்பதாக நினைத்து விட்டீர்கள்., இதிலும் ஊழல் செய்யலாம் அதெல்லாம் ஹர்ஷட்மேத்தா போல திட்டமிட்டு செய்தால் மட்டுமே,ஆனாலும் எல்லா சமயத்திலும் அது ஒர்க் அவுட் ஆகாது. எனவே ஸ்பிளிட் செய்து தலையை சுற்றாமல் நேராகவே ஊழல் செய்துவிடுவார்கள்.

//அதேசமயம் இதில் அரசோ, நீதிமன்றமோ ஊழல்வாதிகளுக்கு துணை போய் மக்களை முட்டாளாக்கவில்லை.//

அது எப்படி சொல்றிங்க,

அரசாங்கத்துணையுடன் தான் எல்லாமே நடந்து இருக்கு.

மேலும் மிக அதிக பலன் அடைந்த ரிலையன்ஸ்,டாடா , ஆதித்ய பிர்லாவின் ஐடியா உரிமையாளர்களின் மீது கை வைக்க நீதி மன்றம் கூட அஞ்சுவது ஏன்?

சிவானந்தம் said...

ஸ்ரீகாந்த் said...

//you are eligible to be called as chinna subramaniya swamy'///

வாங்க ஸ்ரீகாந்த். உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த பதிவால் இந்த ஷேர் மார்கெட் ஊழலும் வெளிச்சத்துக்கு வந்து அதுவும் ஒழுங்குபடுத்தப்பட்டால் சந்தோஷம்தான்.

சிவானந்தம் said...

@Sankar Gurusamy

@Vetrimagal

வாங்க சங்கர்.

வாங்க வெற்றிமகள்.

ஊழல்கள் வருத்தத்தை தந்தாலும், அவை தற்போது வெளிப்பட்டு முறியடிக்கபடுகின்றன. எனவே இதுவும் நல்ல செய்திதான்.

@மாயன்

//அவ்வளவு நாள் ஏன் செயல்படவில்லை என்பதுதான் கேட்கப்படவேண்டிய கேள்வியே!///

வாங்க மாயன்.

நீங்கள் சொன்னதுதான் இந்தியாவில் பாதுகாப்பான ஊழல். நேரடியாக செய்வதில் ஏதாவது ஒரு வகையில் ஆதாரம் இருக்கும் என்பதால், செயல்படாமல் இருப்பதன் மூலம் குற்றவாளிகளுக்கு உதவி லாபம் பார்ப்பதுதான் பாதுகாப்பு.

இருந்தாலும் இந்தியா மெதுவாகவாவது தனது குறைகளை களைந்து முன்னேறும் என்று நம்புவோம்.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்.

//நாம் ஒரு பஸ்ஸில் போகும் போது ஒரு பக்க காட்சிகளைத்தான் பார்க்க நேரிடும். அதே போல் அந்த பக்கம் உட்கார்ந்தவர்கள், அதாவது ஷேர் மார்கெட்டை வேறு கோணத்தில் பார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை சொல்லுங்கள், தெரிந்து கொள்வோம்.//

மேலே உள்ளது நான் இந்த இரண்டு பதிவையும் எழுதிய பிறகு கடைசியாக ஏழுதியது. பின்னர் கொஞ்சம் பெரிதாகிவிட்ட பதிவை சுருக்கும்போது எடுத்துவிட்டேன். எனவே ஷேர் மார்கெட் பற்றி மாறுபட்ட பார்வை இருக்கலாம். நம்பத்தகுந்த வகையில் கருத்துகள் இருந்தால் நிச்சயம் நான் என் கருத்தை மாற்றிக் கொள்வேன்.

ஆனால் நீங்கள் சொல்லிய பல விஷயங்கள் நடைமுறையில் நான் ஏற்கனவே தெரிந்து கொண்டவைதான். இருவருக்கும் புரிதலில் வேண்டுமானால் குழப்பம் இருக்கலாம்.

அதேசமயம் நான் இந்த பதிவை எழுதும் முன்பே, மோசடியாக லைசன்ஸ் வாங்கிய நிறுவனங்களின் பங்கு வர்த்தக ஜாதகத்தை ஆராய்வோம் என இணையத்தில் கொஞ்சம் மேய்ந்துவிட்டுதான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் முழுமையான தகவல்களை சேகரித்துக் கொண்டுதான் ஏழுதுவது என்பது சாத்தியமில்லை. அதுக்கு நான் சி பி ஐ டைரக்டரா ஆவணும். எனவே இணையத்தில் கிடைத்த தகவல்கள், அதில் சாத்தியக்கூறுகள் மற்றும் அனுமானம், இதுதான் எனது பதிவுகள்.

இனி முரண்பாடுகள்

சிவானந்தம் said...

@வவ்வால்

///2ஜி இல் ஊழல் நடந்திருக்கிறது, ஆனால் நீங்கள் சொன்ன வழியில் அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. நீங்கள் சொல்லும் வழி சில நிறுவனங்களுக்கே சாத்தியம் ஆக வாய்ப்புள்ளது.///

இங்கேதான் புரிதலில் இரண்டு பெரும் முரண்படுகிறோம். ஒருவகையில் பார்த்தால் 2g யின் முதல் இரண்டு ஊழலும் ஓரளவு நியாயப்படுத்தக் கூடியவை. மூன்றாவது கோணம்தான் 100 சதவிகித ஊழல். அந்த முதல் இரண்டை பற்றி அலச தனி பதிவுதான் போடவேண்டும்.

//ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனம் இல்லாதவர்கல் லைசென்ஸ் வாங்கியவுடன் பங்கு சந்தையில் நுழைய முடியாது. ஒரு நிறுவனம் துவங்கி மூன்று நிதியாண்டு கடந்த பின்னரே பங்கு வர்த்தகத்தில் நுழைய முடியும்.//

இந்தியாவின் மிகப் பெரிய ஊழலை சாதாரண உப்புமா கம்பனிகள் செய்ய முடியாது. அதேபோல் இந்த துறையில் கத்துக் குட்டிகள் சத்தம் போட முடியாது. இங்கே நிலஅபகரிப்பு வழக்கில் முதலில் அட்ரஸ் இல்லாத ஆள் அதை வாங்க, பின்னர் வி ஐ பிக்கள் அதை தங்கள் பேரில் பதிவு பண்ணுவது போல், மிகப் பெரிய கம்பனிகளின் பினாமி விளையாட்டுத்தான் இது. ஆனால் இங்கே உங்களின் வாதம் யதார்த்தமாக இருந்தாலும், இதிலும் சில கண்கட்டு வித்தைகள் இருக்கிறது.

//உதாரணமாக யுனிநார் பெயரில் இன்றுவரையில் பங்குகள் இல்லை. ஆனால் ஏற்கனவே கட்டுமானத்துறையில் உள்ள அதன் தாய் நிறுவனம் யுனிடெக் பங்கு சந்தையில் உள்ளது.புதிதாக தொலைத்தொடர்பில் நுழைந்ததால் யுனிடெக் பங்கு ஒன்றும் பெரிதாக உயர்ந்து விடவில்லை.

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத முதலீடுகள் , யுனிநார் லாபம் காட்டினாலும் யுனிடெக் லாபத்தில் வராது ,எனவே டிவிடெண்ர், போனஸ் என எதுவும் யுனிடெக் பங்கு வைத்திருப்பவர்களுக்கு கிடைக்காது, எனவே முதலீட்டாளர்கள் கண்டுக்கொள்ளவில்லை.///

இங்கேயும் முரண்பாடுதான். ஷேர் மார்கெட்டில் ஒரு கம்பனி லாபம் காட்டியபிறகுதான் அது உயரும் என்பதல்ல. அடுத்த வருடம் லாபம் காட்டும் என்றால் இப்போதே அதை ஏற்றிவிடுவார்கள். உற்பத்திய துவக்காத கம்பனிகள் எல்லாம் பிரீமியத்தில் டிரேடாவதை நீங்கள் பார்த்ததில்லையா? எனவே இந்த துணை நிறுவனங்களின் எதிர்கால லாபம் அதன் தாய் நிறுவனங்களுக்கும் லாபம்தான்.

அடுத்து யுனிநார் என்பது ஒரு பிராண்ட். அதே பெயரில் ஷேரை தேடாதீர். அதன் லாபம் நஷ்டம் எல்லாம் அதன் தாய் நிறுவனத்தைத்தான் சேரும். நிர்வாக வசதிக்காக அல்லது மற்றவர்களை முட்டாளாக்க சில கிளை நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள். சட்டப்படி ஒரு பொருளுக்கு யாராவது உரிமையாளர் இருப்பார். அந்த வகையில் யுனிநார் யுனிடெக்கின் சொத்து. எனது இந்த புரிதல் தவறு என்றால் யுனிநாரின் முதலாளி யார் என்று சொல்லுங்கள்.

ஒரு வாதத்துக்கு யுனிநாருக்கு யுனிடெகுக்கும் சம்பந்தம் இல்லை என்றால், நார்வேயின் டெலிநார், யுனிடெக்கிடம் ஏன் நஷ்ட ஈடு கோரவேண்டும்?
http://www.telecomtiger.com/Corporate_fullstory.aspx?passfrom=topstory&storyid=13467&section=S162

மார்கெட்டில் யுனி டெக்கின் ஷேர் அப்படியே இருப்பதை பார்த்து ஏமாந்துவிட்டீர்கள். இணையத்தில் ஒரு பதிவை படித்தேன் என்று சொன்னேனல்லவா, அந்த சுட்டியையும் படியுங்கள்.

http://www.seasonalmagazine.com/2011/01/unitech-realty-stock-to-bet-on-in-2011.html

2g ஊழலின் பரிமாணம் பல கிளைகளாக இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம்தான் புரியவில்லை. ராஜா முதல் தலைமுறை அமைச்சர். நிச்சயம் இவ்வளவு பெரிய ஊழல் செய்யும் துணிச்சல் வராது. ப. சிதம்பரம் அனுபவமுள்ள அமைச்சர். அவர் ஊழல்வாதியாக இருந்தால் நாலு பார்த்து சிரிக்கும் அளவுக்கோ அல்லது மாட்டிக் கொள்ளும் அளவுக்கோ ஊழல் செய்ய மாட்டார். இவர்கள் பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் போய் முடிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அதாவது ராஜா பெட்டியை தூக்கி இருப்பார், சிதம்பரமும் அரசியலில் இது சகஜம் அல்லது அவசியம் என கண்டும் காணாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த அதனுள் 1 லட்சம் கோடி இருக்கும் என்று இருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வவ்வால் said...

சிவானந்தம்,

//. ப. சிதம்பரம் அனுபவமுள்ள அமைச்சர். அவர் ஊழல்வாதியாக இருந்தால் நாலு பார்த்து சிரிக்கும் அளவுக்கோ அல்லது மாட்டிக் கொள்ளும் அளவுக்கோ ஊழல் செய்ய மாட்டார். இவர்கள் பிள்ளையார் பிடிக்க அது குரங்காய் போய் முடிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். அதாவது ராஜா பெட்டியை தூக்கி இருப்பார், சிதம்பரமும் அரசியலில் இது சகஜம் அல்லது அவசியம் என கண்டும் காணாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த அதனுள் 1 லட்சம் கோடி இருக்கும் என்று இருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.//

முடியலை ...அவ்வ்வ். உங்களுக்கு பங்கு சந்தை,அரசியல்,ஊழல் எல்லாம் புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் ,ஆனால் இப்போது படிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள், விரைவில் புரிந்துவிடும்.ப.சி,ஹர்ஷத் மேத்தா கதை ,கேத்தன் பரேக் எல்லாம் கேள்விப்பட்டு இருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்.

இணையத்தில் லிமிட்டட் லையபில் கம்பெனி என்பதென்றால் என்ன எனப்பாருங்கள், யுனிநார் காசு யுனிடெக் முதலாளிக்கு போகும் ,ஆனால் யுனிநார் லாபம் யுனிடெக் பங்கு தாரர்களுக்கு போகாது.

இன்னும் சொல்லலாம் ஆனால் அது உங்களுக்கு குழப்பத்தை தரும் என நினைக்கிறேன்.ஏன் எனில் யுனிநார் (யுனிடெக் வயர்லெஸ் என தனி நிறுவனம்) பெயரில் ஷேர் இல்லை என்று சொன்னால் அது பிராண்ட் நேம் ,எப்படி ஷேர் இருக்கும் என்று சொல்கிறீர்கள், எனவே 100 சதவீத ஊழல் என்ன என்றாவது சொல்லுங்கள் தெரிந்துக்கொள்வோம்.

சிவானந்தம் said...

@ வவ்வால்

///10 ரூபாய் பங்கை ஒரு ரூபாய் என மாற்றுவது என்பது நம்மிடம் இருக்கும் 10 ரூ பங்கை ஒரு ரூ என மதிப்பு குறைப்பதாக சொல்வதாகிறது.

10 ரூ முகமதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு பதிலாக 10 ஒரு ரூ பங்கு கொடுப்பார்கள். இதற்கு ஸ்பிளிட்டிங்க் என்று பெயர். அதாவது சில்லறையாக மாற்றிக்கொடுப்பது.//

என்ன வவ்வால், கடைசியில இப்படி கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடீங்க? எனது ஷேர் மார்கெட் அனுபவத்தில் இந்த ஸ்பிளிடிங் தியரி தெரியாமலா ஒரு பதிவு போட்டிருக்கேன். ஒரு கம்பனி தனது ஷேரை split செய்வதால் அந்த ஷேரை வைத்திருப்பவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அப்படி செய்வதன் உண்மையான நோக்கம், அது விலை ஏறிவிடுவதால் மக்கள் ஒதுங்க, வால்யூம் குறைய, அவர்களுக்கு ஆபரேட் செய்ய சிரமமாக இருப்பதால்தான். இதைதான் நான் பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்.

///பங்கு வணிகத்தில் ஒரு பங்கு என்றெல்லாம் வணிகம் செய்ய முடியாது குறைந்தது 10 யூனிட் என்ற அளவில் தான் நடக்கும். இப்போது ஒருவரிடம் இருப்பதே 10 பங்க்கு எனில் அவர் எல்லாவற்றையும் விற்று , ஈடுபட வேண்டும், அதுவே 10 பங்கை மதிப்பு மாறாமல் 100 பங்காக மாற்றிக்கொடுத்தால் எளிதாக சிறிய அளவில் விற்று ,வாங்கி என வணிகத்தில் ஈடுபடுவார்.//

எந்த காலத்துல இருக்கீங்க? ஹர்ஷத் மேத்தா, கேதான் பரேக் பேர சொல்லி வேற மிரட்டறீங்க. இது டீமேட் யுகம். நீங்கள் ஒரு ஷேரை வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். இதற்கும் ஸ்பிலிட்டுக்கும் சம்பந்தமே இல்லை. (நான் மார்கெட் பக்கம் தலை வச்சி படுத்து 5 வருஷம் ஆவுது. நான் மறந்துட்டனா அல்லது ஏதாவது சிஸ்டம் மாறிடுச்சா?)

இதெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருக்கும், ஆனால் முகமதிப்பு குறைப்பதில் ஊழல் என்பதாக நினைத்து விட்டீர்கள்//

முகமதிப்பை குறைப்பது ஊழல் அல்ல. ஆனால் அதன் உண்மையான நோக்கம், விலை அதிகமாகிவிட்ட பிறகு மக்கள் ஒதுங்குவதால், ட்ரேடிங் வால்யூம் குறையும் என்பதால் அவர்களால் ஆபரேட் செய்து பணம் சம்பாதிக்க முடியாது. அந்த ஒரே நோக்கத்துக்காகத்தான் அவர்கள் முக மதிப்பை குறைக்கிறார்கள். அதைதான் நானும் சொன்னேன். நீங்களும் வேறு மாதியாக சொல்லி இருக்கிறீர்கள்.

//அரசாங்கத்துணையுடன் தான் எல்லாமே நடந்து இருக்கு.

முதல் இரண்டில் அரசுக்கு தெரிந்து நடந்திருக்கலாம். நீதிமன்றத்துக்கு தெரியாது என்று நான் சொன்னது மூன்றாவது கோணத்தை.

சிவானந்தம் said...

@ வவ்வால்

///முடியலை ...அவ்வ்வ். உங்களுக்கு பங்கு சந்தை,அரசியல்,ஊழல் எல்லாம் புரிய இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் ,ஆனால் இப்போது படிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள், விரைவில் புரிந்துவிடும்.ப.சி,ஹர்ஷத் மேத்தா கதை ,கேத்தன் பரேக் எல்லாம் கேள்விப்பட்டு இருக்க மாட்டிங்கனு நினைக்கிறேன்.///

இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேனா! கஷ்டம்தான்.

///இணையத்தில் லிமிட்டட் லையபில் கம்பெனி என்பதென்றால் என்ன எனப்பாருங்கள், யுனிநார் காசு யுனிடெக் முதலாளிக்கு போகும் ,ஆனால் யுனிநார் லாபம் யுனிடெக் பங்கு தாரர்களுக்கு போகாது.

இன்னும் சொல்லலாம் ஆனால் அது உங்களுக்கு குழப்பத்தை தரும் என நினைக்கிறேன்.///

தயக்கமே வேண்டாம். ஒரு பதிவாக விளக்குங்கள்.

///ஏன் எனில் யுனிநார் (யுனிடெக் வயர்லெஸ் என தனி நிறுவனம்) பெயரில் ஷேர் இல்லை என்று சொன்னால் அது பிராண்ட் நேம் ,எப்படி ஷேர் இருக்கும் என்று சொல்கிறீர்கள், எனவே 100 சதவீத ஊழல் என்ன என்றாவது சொல்லுங்கள் தெரிந்துக்கொள்வோம்.///

யுனிடெக் குழந்தை யுனிநார். இந்த லைசன்ஸ் கேன்சல் ஆனதால டெலிநார் நஷ்ட ஈடு கேட்டு யுனிடெக்கிடம் போராட்டம். லைசன்ஸ் கேன்சல் ஆனதற்கு நாங்கள் காரணமல்ல, அரசுதான் காரணம். இது யுனிடெக் பதில். அதாவது நஷ்டம் வந்தால் யுனிடெக் பதில் சொல்ல வேண்டும் ஆனால் லாபம் யுனிடெக்குக்கு வராது. ஒருவேளை வந்தாலும் முதலாளிக்கு போகும், ஷேர் ஹோல்டர்க்கு வராது. அப்ப எதுக்கு இதை யுனிடெக் + டெலி நார் joint venture அப்படின்னு சொல்லணும். தலை சுத்துது. ஒருவேளை ஏதாவது வினோதமான தியரி இருக்கலாம். யாராவது விளக்குங்கள்.

சிவானந்தம் said...

சின்ன விளக்கம்.

ராசா எடுத்துக் கொண்டு போன பெட்டியில் 1 லட்சம் கோடி இருந்தது அவருக்கு தெரிந்திருக்காது என்று ஏழுதி இருந்தேன். இந்த மோசடி இந்த அளவுக்கு இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்க மாட்டார் என்ற அர்த்தத்தில் சொன்னேன். அதற்காக அந்த பெட்டியில் அவ்வளவு இருந்தது என்று அர்த்தமல்ல.

வவ்வால் said...

சிவானந்தம்,

வணக்கம்,உங்கள்ப்பதிலை இப்போது தான் பார்த்தேன். அதான் தாமதமாக பதில்.

வகுப்பெடுக்கும் அளவுக்கு எல்லாம் தெரியாது , உங்களுக்கு தெரிந்து இருக்கும் ஆனால் சொல்லும் போது அப்படி ஒரு தொனியில் இருக்குனு தான் சொல்லி இருக்கேன், ஒரு வேளை அப்படி நினைத்துக்கொண்டும் இருக்கலாமோ எனகேட்டேன்.

புதிதாக கம்பெனி ஆரம்பித்ததும் பங்குவர்த்தகம் செய்ய முடியாது ஆனால் மீண்டும் உற்பத்தியே துவங்காமல் பங்கு விற்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள், எப்படி?

எனக்கு தெரிந்து 3 ஆண்டுகள் பின்னரே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியும், நீங்கள் சொல்வது போல 90 களில் உண்டு எனக்கேள்வி. இப்போது அப்படி இல்லை.செபி விதிகள் கடுமையாகிவிட்டது.

ஆனால் புதிய நிறுவனங்கள் எப்படி விற்பார்கள் எனில் ஒரு மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் அதன் பங்குதாரர்களிடையே பிரித்துக்கொள்வார்கள், அதை ,கைமாற்றியும் கொள்ள முடியும் ஆனால் பங்கு சந்தைக்கும் அதற்கும் தொடர்பில்லை.அது நாம் வழக்கமாக சொத்து வாங்கி,விற்பது போல. ரிஜிஸ்ட்ரார் ஆப் கம்பெனி அனுமதியுடன் நடக்கும்.

இரண்டாவது பங்கு சந்தையில் ஓவர் தி கவுண்டர் என விற்கும் புதிய பட்டியல் இடாத பங்குகளாக. இதெல்லாம் நேரடியாக பங்கு தரகர்கள் மூலம் நடப்பது. அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. செபிக்கு பெரிதாக தொடர்பு இல்லை.

//யுனிடெக் குழந்தை யுனிநார். இந்த லைசன்ஸ் கேன்சல் ஆனதால டெலிநார் நஷ்ட ஈடு கேட்டு யுனிடெக்கிடம் போராட்டம். லைசன்ஸ் கேன்சல் ஆனதற்கு நாங்கள் காரணமல்ல, அரசுதான் காரணம். இது யுனிடெக் பதில். அதாவது நஷ்டம் வந்தால் யுனிடெக் பதில் சொல்ல வேண்டும் ஆனால் லாபம் யுனிடெக்குக்கு வராது. ஒருவேளை வந்தாலும் முதலாளிக்கு போகும், ஷேர் ஹோல்டர்க்கு வராது. அப்ப எதுக்கு இதை யுனிடெக் + டெலி நார் joint venture அப்படின்னு சொல்லணும். தலை சுத்துது. ஒருவேளை ஏதாவது வினோதமான தியரி இருக்கலாம். யாராவது விளக்குங்கள்.//

நஷ்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை யுனிடெக், :-))

புது தியரி எல்லாம் இல்லை, லிமிட்டட் லையபிலிடி கம்பெனி விதிகள் அப்படி.கம்பெனி பெயர்களுடன் பிரைவேட் லிமிட்டர், பப்ளிக் லிமிட்டட் என்று போடுகிறார்களே அதான் இது.

ஒரு வியாபாரம் செய்துக்கொண்டு இருப்பவருடன் கூட்டு சேர்ந்த்து இன்னொரு புதிய வியாபாரம்ம் தொடங்கப்படுகிறது அவ்வளவே.

ஒப்பந்தம் கை எழுத்தானது யுனிடெக் வயர்லெஸ் பெயரில்,லாப ,நஷ்ட கணக்கெல்லாம் புதிய நிறுவனத்தோடு மட்டுமே. ஏற்கனவே இருக்கும் வியாபாரம் ஒரு நம்பகத்தன்மையை தரும் அவ்வளவே. புதிய கூட்டில் நஷ்டம் வந்தால் ,பழைய வியாபாரத்தில் இருந்து காசு கொடு என்று கேட்கமுடியாது. எனவே யுனிடெக்கில் இருந்து ஒரு செங்கல்லை கூட டெலிநார் உருவ முடியாது.

வேண்டுமானால் (கட்ட)பஞ்சாயத்து செய்து வாங்கலாம் :-))

இது ஊழல் வழக்கு என்பதால் வேறு மாதிரி விளைவு யுனிடெக்கிற்கு வரும் , டெலிநாரை பொய் சொல்லி நம்பிக்கை மோசடி செய்தது போல எனவே கோர்ட்டில் ஒரு 420 வழக்கு போட்டு காச வாங்கிக்கொடுக்க சொல்லலாம், மற்றபடி கம்பெனி லா அடிப்படையில் யுனிடெக் பாதுகாப்பாகவே இருக்கும்.

அப்படி யுனிடெக் பணத்தை எடுத்து யுனிடெக் வயர்லெஸுக்கு செலவு செய்தால் , என்ன எனக்கேட்கலாம்.சத்யம் இராமலிங்க ராஜி , சத்யம்-மைடாஸ் வழக்கினைப்பார்க்கவும்.

இதில் பங்கு சந்தை மூலம் பலன் அடைந்தவர்கள் என முன்னரே தொலைதொடர்பு துறையில் இருந்தவர்களைப்பட்டியலிட்டு அவர்களை பெரிதாக கோர்ட்,சிபிஐ எல்லாம் ஏன் கண்டுக்கொள்ளவில்லை எனவும் கேட்டேன், எதுவும் சொல்லவில்லையே?

புதிதாக 2ஜி உரிமம் வாங்கியவர்கள் FDI வழியில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்தார்கள், அதுவே இப்போது வழக்கு நடைப்பெறக்காரணம் இது ப.சி யின் நிதியமைச்சகம் அனுமதியுடன் நடந்த ஒன்று. அ.ராசா அளவுக்கு ப.சிக்கு தெரிந்து இருக்கும்/தொடர்பு இருக்கும் என சு.சாமி சொல்வதில் விஷயம் இருக்கு.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால். விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.

///புதிதாக கம்பெனி ஆரம்பித்ததும் பங்குவர்த்தகம் செய்ய முடியாது ஆனால் மீண்டும் உற்பத்தியே துவங்காமல் பங்கு விற்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள், எப்படி?///

ஷேர் மார்கெட்டை நான் கரைத்து குடித்துவிட்டேன் என்று சொல்லப் போவதில்லை. எல்லாமே கற்றலின் ஒரு பகுதிதான். நான் கவனித்த வரையில் ஒரு நிறுவனம் பல ஆணடுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சிறிய அளவில் உற்பத்தி செய்யலாம். ஆனால் பங்கு வெளியிட்டு, அது மார்கெட்டில் ட்ரேட் ஆனாலும், உற்பத்தியை (அதாவது இந்த பங்கு வெளியீட்டின் மூலம் அது செய்ய இருக்கும் உற்பத்தியை) துவக்கி இருக்காது.

ஒரு ஷேரை அப்ளை (90 களில்) பண்ணிய பிறகு அந்த கம்பனி பற்றிய செய்தியை அதிகம் படிப்பேன். அப்போது பல புதிய, சிறிய நிறுவனங்கள் மார்கெட்டுக்கு வந்ததால் இது அப்போது சர்வசாதாரணம்.

இப்போது IPO அதிகம் வருவதில்லை. வருவது எல்லாம் மிகப் பெரிய நிறுவனங்களின் விரிவாக்கம் என்பதால் அது தெரிவதில்லை.

//இது ஊழல் வழக்கு என்பதால் வேறு மாதிரி விளைவு யுனிடெக்கிற்கு வரும் , டெலிநாரை பொய் சொல்லி நம்பிக்கை மோசடி செய்தது போல எனவே கோர்ட்டில் ஒரு 420 வழக்கு போட்டு காச வாங்கிக்கொடுக்க சொல்லலாம், மற்றபடி கம்பெனி லா அடிப்படையில் யுனிடெக் பாதுகாப்பாகவே இருக்கும்.//

டெக்னிக்கலா உங்கள் பதில் ஓகே. ஆனால் இன்னும் சில சந்தேகங்கள் இருந்தாலும், நான் இதை தொடர விரும்பவில்லை. காரணம் அடுத்த பதிவில்.

//இதில் பங்கு சந்தை மூலம் பலன் அடைந்தவர்கள் என முன்னரே தொலைதொடர்பு துறையில் இருந்தவர்களைப்பட்டியலிட்டு அவர்களை பெரிதாக கோர்ட்,சிபிஐ எல்லாம் ஏன் கண்டுக்கொள்ளவில்லை எனவும் கேட்டேன், எதுவும் சொல்லவில்லையே?//

2g யில் வீரத்தை காட்டிய கோர்ட், அரசியல்வாதிகளின் மீதான மற்ற வழக்குகளில் ஏன் அப்படி துணிச்சலை காட்டுவதில்லை? அதேதான் என் பதில். இது அரசியல். இங்கே பலவீனமானவர்களைத்தான் உதைக்க முடியும். எனவே ரொம்ப குழப்பிக்க வேணாம். விட்ருங்க.

//அ.ராசா அளவுக்கு ப.சிக்கு தெரிந்து இருக்கும்/தொடர்பு இருக்கும் என சு.சாமி சொல்வதில் விஷயம் இருக்கு.///

இந்த 2g விஷயம் இழுத்து மூடப்பட்டாலும் இதில் பல அபத்தமான லாஜிக்குகள் இருக்கிறது. சாதாரண நீதிபதிகள் ஊழல் செய்யலாம். ஆனால் அவர்களே ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என உயர்ந்த பதவிக்கு போகும் போது தங்களுடைய இமேஜை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அந்த தியரியின் படி பார்த்தால் சிதம்பரத்தின் இந்த செயல் புரியாத புதிர்தான்.

RAJAN said...

பங்குச்சந்தை வணிகத்தில் அபாயம் உள்ளது என அரசு சொல்கிறது , பங்குச்சந்தை வணிகத்தில் 2% குறைவான மக்கள் தான் ஈடுபடுகிறாக்கள் என்கிறது புள்ளிவிவரம் , மற்றும் ஒரு செய்தி FII என்கிற அயல்நாட்டு முதலிடு தான் சென்செக்ஸ் இன்று 17,000,௦௦௦௦ - 18,000௦௦௦௦ புள்ளிக்கு காரணம், அவர்கள் இல்லாவிட்டால் சென்செக்ஸ் 6000-10,000 தான் இருக்கும் என்ட்கிறாக்கள் வல்லுனர்கள் , சில்லறை முதில்டர்கள் ( நம்மை போல ) இழப்பது பேராசை தான் காரணம் . உதாரணம் ஒரு பங்கு 100௦ ரூபாயில் இறுதி 150 ரூபாய் வரை போனால் மக்கள் மனநிலை 100 வாங்கிஇருதால் 150 விற்றிருக்கலாம் என்பது யாரும் 130 வாங்கி 140 விட்றிர்ருகலம் என எண்ணுவது கிடையாது , மற்றும் சந்தையில் வணிகம் செய்வது எல்லோருக்கும் எற்றுது அல்ல ,இந்த வணிகம் செய்ய நல்ல அனுபவம் வேண்டும் , பங்குச்சந்தை உடன் சில காலம் வாழ வேண்டும் , எனது கருத்து : "பேராசை பெரும் நஷ்டம் : பங்குசந்தைக்கு நன்கு பொருத்தும் "

rajan said...

TO வவ்வால்,


//புதிதாக கம்பெனி ஆரம்பித்ததும் பங்குவர்த்தகம் செய்ய முடியாது ஆனால் மீண்டும் உற்பத்தியே துவங்காமல் பங்கு விற்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள், எப்படி?

எனக்கு தெரிந்து 3 ஆண்டுகள் பின்னரே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியும், நீங்கள் சொல்வது போல 90 களில் உண்டு எனக்கேள்வி. இப்போது அப்படி இல்லை.செபி விதிகள் கடுமையாகிவிட்டது//
TO, MR, வவ்வால் FOR U R KIND INFROMATION
RPL - RELIANCE PETROLEUM LIMITED, STARTED TRADING IN NSE/BSE BEFORE THE PRODUCTION STARTS. YEAR 2007.

வவ்வால் said...

ராஜன்,

இந்த கேள்வியை என்னிடம் கேட்பதற்கு முன் கூகிளில் தேடி இருக்கலாமே,

# தற்போதைய செபி விதிகள் என்ன எனப்பார்க்கவும்,

# ரிலையன்ஸ் 2007 முன்னரே பதிவு செய்யப்பட்டு ,செயல்ப்பட்டு வந்த எண்ணை நிறுவனமே,இணையத்தில் அனைத்தும் இருக்கு.பி.ஜே.பி ஆட்சியில் இருந்தபோதே அனுமதி வாங்கியவர்கள்.

Post a Comment