!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, February 2, 2025

சீமானை கைவிட்ட ஈழப் போராளிகள்

 

சீமானை பற்றி பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு, அதை வெளியிட்ட பிறகு, பல வீடியோக்களை, மன்னிக்கவும் காணொளிகளை காண நேரிடுகிறது. ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதில் எது உண்மை எது பொய்  என்று குழப்பும் வரும் அளவுக்கு புதுப்புது தகவல்கள் வருகிறது. இவற்றில் சில ஏற்கனவே வெளிவந்தவை. அவற்றை நான் தற்போதுதான் கவனித்தேன்.

கடந்த பதிவில் சீமான் - பிரபாகரன் போட்டோ எடிட் செய்யப்பட்ட ஓன்று என்று அதை எடிட் செய்தவரே சொல்லிவிட்டார், அப்படியிருக்கையில் அந்த உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அதை உண்மை என சீமான் நிரூபிக்க போராடுகிறார் என்றால் அவர் பிரபாகரனை சந்திருக்கமாட்டார் என்று எழுதியிருந்தேன்.

ஆனால் இப்போது சீமானுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசப்படும் பல காணொளிகளை பார்த்த பிறகு, இந்த விஷயத்தில் சீமான் சொல்வது அனைத்தும் உண்மை, அதாவது அவர் ஆமைக்கறி சாப்பிட்டதையும், பிரபாகரன் அவருக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தார் என்பதையும் நம்ப ஆரம்பித்திருக்கிறேன். இது இன்றைய நிலவரம். இவர் கதை ஒரு மர்ம நாவல் போல் இருக்கிறது.

நிலைமை இப்படியிருக்கையில் தற்போது ஈழப்போராளிகள் ஒரு அறிக்கையின் மூலம் சீமானை கழட்டிவிடவேண்டிய அவசியம் என்ன?

காரணம் ரொம்ப சிம்பிள். சீமான் விஷயம் அவர்களுக்கு பூமராங் போல் ஆகிவிட்டது. சீமான் பெரியார் பெயரை டேமேஜ் செய்ய, பெரியார் தொண்டர்கள் இவரை டேமேஜ் செய்யும் முயற்சியில் இவர் பிரபாகரனை சந்திக்கவேயில்லை, இவர் ஒரு டுபாக்கூர் என வறுத்தெடுக்க, இந்த நேரம் பார்த்து சங்ககிரி ராஜ்குமார் ஒரு அணுகுண்டை வீச, அது சீமானின் பெயரை மேலும் கடுமையாக நாறடித்தது.

அதே சமயம் சீமான் ஆதரவு புலி ஆதரவாளர்கள் சீமானுக்கு ஆதரவாக களம் இறங்கி அவர்களுக்கு தெரிந்த உண்மைகளை, அதாவது சீமான் பிரபாகரனை எப்போது சந்தித்தார், அவருக்கு ஆமைக்கறி போடப்பட்டது உண்மை (ஆமைக்கறி சமைத்துப்போட்டவர் ஆஸ்திரேலியாவில் உயிரோடுதான் இருக்கிறாராம்), பிரபாகரன் அங்கே சீமானுக்கு முதல் மரியாதையை கொடுத்தார் என தகவல்கள் பேச ஆரம்பிக்க, இது வேறு ஒரு சிக்கலில் அவர்களை மாட்டிவிட்டது.

இதைத்தான் சீமான் சொன்னார். ஆனால் அவர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் என்பதால் யாரும் அதை பெரிதாக நம்பவில்லை. பிரபாகரனின் ஒரு மெய்க்காப்பாளர் மற்றும் நம்பத்தகுந்த புலி ஆதரவாளர்களாலே இவை சொல்லப்படும்போது இவை உண்மை என நம்பிக்கை வருகிறது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், யுத்தகளத்தில் பிரபாகரன் யுத்தம் சார்ந்த நிபுணர்களுடன் மீட்டிங் நடத்தாமல், eat with comalis என்ற நிகழ்ச்சியை சீமானுடன் நடத்தியிருக்கிறார். இந்த செய்தி முன்னாள் புலிகளாலேயே ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஒரு விருந்தில் யார் அதிகம் சாப்பிடுவது என்ற போட்டியும் நடந்திருக்கிறது. அதிலும் சீமான் தோற்றுவிட்டார். யாரிடம் என்பதை நான் சொல்லப்போவதில்லை. இதை ஒரு காணொளியில் சொன்னவரும் சீமான்தான். இந்த செய்திகளை நம்பும் அளவுக்கு பிரபாகரன் அவர்களின் உடம்பும் இருக்கிறது. இந்த தகவல்கள் பிரபாகரன் அவர்களின் இமேஜை கடுமையாக பாதிக்கும். அதுதான் இங்கே அவர்களுக்கு ஒரு புதிய தலைவலியை உருவாக்கியிருக்கிறது.

சரி, பிரபாகரன் ஏன் சீமானுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும். இங்கே என்னுடைய புரிதல் என்னவென்றால், பிஜேபி தமிழ்நாட்டில் வளர்வதற்கு பல்வேறு தலைவர்களை மாநில தலைவர்களாக இறக்கியது. பொன்னார், இல கணேசன், தமிழிசை, முருகன் என லிஸ்ட் போடலாம். அவர்களால் பெரிதாக பலன் இல்லாத நிலையில் இளம் ரத்தமாக அண்ணாமலையை களத்தில் இறக்கி கொஞ்சம் வளர்ந்திருக்கிறாரகள்.

அதே கதைதான் பிரபாகரனுக்கும். அவரும் நெடுமாறன், வைகோ, திருமாவளவன் என தமிழ்நாட்டில் நமக்கு ஆதரவான தலைவர்கள் தேவை என அவர்களுடன் போட்டோ ஷுட் எடுத்திருக்கிறார். இவர்கள் பிரகாசிக்காத நிலையில் அவருடைய அடுத்த தேர்வுதான் சீமான். இவரும் இளம் ரத்தம். போதாதற்கு சினிமா பின்புலம் ஓரளவுக்காவது இருக்கிறது. அந்த நம்பிக்கையில் இவருக்கு முதல் மரியாதையை கொடுத்து போட்டோ ஷுட்டும் எடுத்திருக்கிறார்.

சீமான் வாயால் வடை சூடுபவர். மது, மாதுக்கு அடிமையானவர் என்ற விஷயம் பிரபாகரனுக்கு தெரியாது போலிருக்கிறது. எனவே அவரும் ஏமாந்துவிட்டார். நானும் ஆரம்பத்தில் சீமானுடைய சில பேட்டிகளை கவனித்து இவர் ரொம்ப நல்லவர் என நம்பி இவருக்கு ஆதரவாக ஒரு பதிவையும் வெளியிட்டேன். இந்த வாய்ச்சவடால் பேர்வழிகளின் திறமையே அதுதான்.

இங்கே இரண்டு விஷயங்களை கவனிக்கலாம். பிரபாகரனோடு போட்டோ ஷுட் நடத்திய தலைவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அல்லது திறமையான எதிர்கால அரசியல் தலைவர்களை கண்டுபிடிக்கும் திறமை பிரபாகரன் அவர்களுக்கு இல்லை.

ஒரு நபர்/தலைவர் சாதித்திருந்தால் `எனக்கு அவரை முன்னமேயே தெரியும், நான் அப்போதே கணித்தேன்` என மார்தட்டிக்கொள்ளலாம். தோல்விக்கு எப்போதுமே அப்பா கிடையாது. இங்கே சீமானுக்கான வெயிட்டிங் பீரியட் முடிந்துவிட்டது. இனி அவர் கதை அவ்வளவுதான். இந்த நிலையில் இவரை காப்பாற்ற போய் பிரபாகரனின் பெயர்  கெடுவதை புலிகள் அமைப்பு விரும்பவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த அறிக்கை.

0 comments:

Post a Comment