!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, May 10, 2026

எது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?

"ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்."

விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சை எழுந்தபோது, இதற்கான சம்பிரதாய நடைமுறை எப்படி இருக்க வேண்டும் என்று நானே யோசித்தேன். இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில் இதில் ஒரு குழப்பம் இருப்பது இயல்புதான். ஆனால், இதற்கான சரியான வழிமுறை என்ன?

முதலாவதாக, தேசிய கீதம் என்பது கட்டாயமாக இருக்க வேண்டும்; 'வந்தே மாதரம்' கட்டாயம் என்ற நிலை தேவையில்லை என்பதுதான் என் கருத்து.

இரண்டாவதாக, எதை முதலில் பாடுவது என்ற குழப்பம். ஒரு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினர் மத்திய அரசின் சார்பாக (பிரதமர், மத்திய அமைச்சர்கள் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றோர்) இருந்தால், அங்கே முதலில் தேசிய கீதமும், பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படலாம். ஆனால், தமிழக முதல்வர் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால், அங்கே தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும். இதுவே சரியான நடைமுறை.

இந்த விவகாரத்தில் பதவியேற்பு என்பது ஒரு சிக்கலான இடம். விஜய் பதவியேற்கும் வரை, தமிழ்நாட்டில் மத்திய அரசின் பிரதிநிதியாக ஆளுநரே முதன்மையாக இருக்கிறார். எனவே, அங்கே முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது ஏற்புடையதே. ஆனால், அவர் முதல்வராகிவிட்ட நிலையில், இனி அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம்பெறும் என்று நினைக்கிறேன்.

விஜய் இப்போதுதான் அதிகாரத்திற்கு வந்திருக்கிறார். எனவே, ஆரம்பத்தில் இது போன்ற பல சறுக்கல்களும் குழப்பங்களும் வரும். அவற்றை விஜய் விரைவில் சரி செய்ய வேண்டும்.

ஏனென்றால், இந்தத் தேர்தலில் திமுக, அதிமுகவை விடவும் அதிகமாக அவமானப்பட்டவர்கள் ஊடகவியலாளர்கள்தான். அதாவது, ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றுபவர்கள். இதில் இணையத்தில் உலா வரும் 'தேர்தல் காலத் திடீர் காளான்களும்' அடக்கம்.

இந்தத் தேர்தல் முடிவுகள் அந்த ஊடகவியலாளர்களின் முகத்தில் அடையாளம் தெரியாத அளவுக்குக் கரியைப் பூசிவிட்டன. வீட்டில் அவர்களின் மனைவிகளே இப்போது அவர்களை மதிப்பதில்லையாம்; அவர்களுக்குக் காபி கூட அரை மணி நேரம் தாமதமாகத்தான் வருகிறதாம். ஒரு முக்கிய நபர் இந்தத் தகவலைச் சொன்னார் (அவர் இப்போது சிறையில் இருக்கிறார்).

வெளியிலும் மானம் போச்சு, வீட்டிலும் போச்சு என்ற நிலையில் இந்த ஊடகவியலாளர்கள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள். விஜய் ஆட்சியில் ஒரு சின்ன தவறு நடந்தாலும், அதை ஊதிப் பெரிதாக்குவதற்கு அவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய், மண்ணெண்ணெய் என எதையாவது ஊற்றிக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே விஜய் கவனமாக இருப்பது நல்லது.

குறைகள் நிச்சயம் இருக்கும்; அதை உடனடியாகக் கவனித்துச் சரி செய்வதில்தான் அவருடைய எதிர்காலம் இருக்கிறது.

மற்றபடி, இப்போதே கோடீஸ்வரன் 'ஆதன்' சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், "விஜய்யின் முதல் கையெழுத்து பெண்களுக்கு 2,500 ரூபாயா? அல்லது வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்களா?" என்று ஆரம்பித்துவிட்டார். விஜய்க்கு வாக்களித்தவர்கள்தானே அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? ஒட்டு போடாத இந்த நாய் ஏன் குலைக்குது? (சாரி ஃபார் த லாங்குவேஜ்)

இப்போதே மாரிதாஸ், பாண்டே போன்ற பல 'அறிவாளிகளின்' பேட்டிகளைக் கவனியுங்கள். அவர்களின் வார்த்தைகளில் விஷம் இருக்கிறது; அவர்களின் உடல் மொழியைக் கவனித்தால் அது இன்னும் மோசமாக இருக்கிறது. நிச்சயமாக இவர்களில் யாரோ ஒருவருக்கு இன்னும் ஆறு மாதத்தில் 'ஹார்ட் அட்டாக்' வரப்போகிறது. அப்படி எதுவும் நடக்காமல் இருக்க, அகமதாபாத் முருகனை வேண்டிக்கொள்கிறேன்.

0 comments:

Post a Comment