!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, February 13, 2011

ஈழத்தமிழர்களுக்கு ஒரு இந்தியத் தமிழனின் பகிரங்கக் கடிதம்.


ராஜ நடராஜன் said...  சிவா!உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.என்னை விட நேரடி வாழ்க்கை அனுபவங்கள் உங்களுக்கு இருந்தும் பிரபாகரன் என்ற சொல்லையும் தாண்டிய ஒரு போராட்டத்தின் மையப்புள்ளி பற்றி அலசாமலும் ஈழப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகராமலும் குற்றம் சொல்லல் என்ற எல்லையிலே நீங்கள் நிற்பதால் உங்கள் மொழி... வார்த்தை விளையாட்டை நிறுத்திக்கொள்கிறேன்.நன்றி

இது ஈழம் குறித்த ஒரு பதிவின் விவாதத்தில் ஒரு ஈழத்தமிழர் கடைசியாக போட்ட பின்னோட்டம். அவர் சில குற்றச்சாட்டுகளோடு இந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டார். ஆனால் என்னால் நிறுத்த முடியவில்லை. அவர் மட்டுமில்லை பல இந்திய, இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இதே உணர்வுதான் இருக்கும். எனவேதான் இந்த பதிவு.    

*****************************************************************


நண்பரே, ஈழத்தமிழனின் இன்றைய சோகமான நிலையில் நான் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சவில்லை. ஒரு தமிழன் தோற்று, அங்குள்ள தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதை இங்குள்ள எந்த தமிழனும் விரும்பவில்லை. ஆனால், இந்தியாவை குறை சொல்லும் முன், உணர்ச்சிகளை தாண்டி நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். தவறு (அதிகம்) யார் பக்கம் என்பது புரியும். சிங்களவன் எப்படி வெற்றி பெற்றான் என்பது நமக்கு தேவையில்லாத ஓன்று. ஆனால் ஒரு தமிழன் ஏன் தோற்றான்? அதற்கு காரணங்கள் என்ன என்பதை நாம் அலசி ஆராய்ந்தால்தான், மற்றொரு ஈழப்போராட்டம் வரும்போது கவனமாக இருக்க முடியும்.

Sunday, February 6, 2011

சிறைக்குள் செல்போன்: அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!


சிறைக்குள் கைதிகள் அதிக பயமில்லாமல் செல்போனை பயன்படுத்த காரணம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டவுடன், சிறைக்குள் போனின் அவசியத்தையும் மற்றும் சிறைக்குள் நடக்கும் குற்றங்களுக்குக்கான தண்டனையில் தேவைப்படும் சீர்திருத்தங்களையும் சுருக்கமாக எழுதி தினமலர் `இது உங்கள் இடம்` பகுதிக்கு அனுப்ப நினைத்தேன்.

எனது கடிதங்கள் தினமலருக்கு போகாது என்று தெரியும். இருந்தாலும், சிறையில் சும்மா இருக்க முடியாதல்லவா. எனவே இதை ஒரு பயிற்சியாக அவ்வப்போது எனது கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். அதேசமயம் என் கையெழுத்து ரொம்ப மோசம் என்பதால், எனது கடிதங்களை சிறை நண்பர் (போதை கடத்தல்) ஒருவர் எழுதித்தருவார். அவருடைய கையெழுத்து அழகாக இருக்கும்.

எனவே அந்த நண்பரை அழைத்து இந்த கடிதத்தையும் எழுதித்தரச் சொன்னேன். இதை படித்த அந்த நண்பர் அதிர்ச்சியாகி, ` அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!` என்றார்.

Tuesday, February 1, 2011

சிறைகளில் செல்போன், தேவையற்ற வழக்குகள்- part 3



அந்த அபத்தத்தை படிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்.

நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். வழியில் ஒரு போலீஸ்காரரை யாரோ ரவுடிகள் வெட்டி குற்றுயிராய் போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தந்து அது வரும்வரை காத்திருப்பீர்களா, அல்லது உங்கள் காரிலேயே அந்த போலீஸ்காரரை ஏற்றி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வீர்களா?