!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Saturday, December 20, 2025

விஜய் ரசிகர்களாகும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்


நவோதயா பள்ளிகள் தேவையா?

பள்ளிகள் தேவைதான், ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற சேவைகள்/ கல்வி எப்போதும் தேவையில்லை. அங்கே இறுதி பலன் என்பது கொடுப்பவனின் நோக்கமாகத்தான் இருக்கும். இதுதான் நிதர்சனம்.

சமீபத்தில் மாரிதாஸ் காணொளி ஒன்றை கவனித்தேன். அதில் உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது, எனவே வேறு வழியில்லை, தமிழக அரசு நவோதயா பள்ளிகளை அனுமதித்தாக வேண்டும் என சந்தோஷமாக மேளம் அடித்திருந்தார். அதோடு விட்டால் பரவாயில்லை. இந்த திட்டத்தை தடுப்பதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை இந்த திமுக அரசு, அதாவது கலைஞரும், ஸ்டாலினும் தடுத்தார்கள், இனி அது நடக்காது என சொல்லியிருந்தார்.

திமுகவை திட்டுங்கள் அதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. `நீ விளக்கு பிடிச்சாதான் திட்டுவேன்` என்றால் நான் அதற்கும் தயார். அந்த அளவுக்கு அது ஒரு மோசமான கட்சி என்பதுதான் என் கருத்து.

Wednesday, March 19, 2025

அமைச்சர்கள் மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகள் ஏன் இந்தி படிக்கிறார்கள்?


கொஞ்ச நாட்களாக வட இந்திய ஆங்கில சேனல்களில் வரும் அபத்தமான கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது இங்கே.

இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பார்த்து, வட இந்தியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ளே அறிவு ஜீவிகளும் கேட்கும் ஒரு கேள்வி, `இவர்களின் பிள்ளைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளியில் அதுவும் இந்தி படிக்கிறார்கள்?` என்பதுதான்.

இதை பற்றி நான் பேசுவது கொஞ்சம் அபத்தம்தான். ஏனென்றால் எத்தனை வயதில் பள்ளிக்கு போவதை நிறுத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு படித்தவன் நான். அகமதாபாத்தில் இருப்பதால் இந்தி வந்துவிட்டது. ஆர்வக்கோளாராகவும் இருந்ததால் எப்படியோ ஆங்கிலமும் வந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் படிக்கும்போது, ஒரு கட்டுரையை என்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஆங்கிலம் புரியாமல் இல்லை. அந்த கட்டுரையாளர் அந்த ஊர் சீமான் போலிருக்கிறது. அவர் இஷ்டத்துக்கு அடித்துக்கொண்டிருந்தார்.