சில விஷயங்களில் தவறை தவறு என்று கண்டிக்க முடியாது. அதேபோல் சில விஷயங்களில் சரி எனப்படுவதை சரி என்றும் சொல்லமுடியாது.
மேலே சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு குழப்பமாக இருக்கும். ஆனால் 2g வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தடாலடி தீர்ப்பு இந்த வகைதான். இந்த தீர்ப்பு சட்டத்தை நிலைநாட்டி ஒரு தவறான செயலை ரத்து செய்திருக்கலாம். ஆனால் இதை இப்படி அணுகியது தவறாகவும் போகலாம்.
இந்த உதாரணத்தை பாருங்கள். ஒரு மைனர் பெண்ணுக்கு மேஜர் ஆகாமலேயே கட்டாயத் திருமணம் ஆகிவிட்டது. எனவே இந்த திருமணம் செல்லாது என்று ஒருவர் கோரிக்கை வைக்கிறார். அவர் மைனர் என்பது ஊர்ஜிதமாகி இந்த திருமணம் செல்லாது என்று தீர்பளிக்க முடியுமா?




