இங்கே A T M ல் பணம் எடுக்கப்போனேன். அங்கே ஏற்கனவ மிஷினில் ஒரு கார்ட் இருந்தது. யாரோ எடுக்க மறந்துவிட்டார்கள். இந்த A T Mக்கு செக்கூரிட்டி யாரும் இல்லை. நான் அக்கறையாக அதை பக்கத்தில் இருந்த மெடிக்கலில் கொடுக்க... அவர் என்னிடம் மேலும் 20 கார்ட்டுகளை எடுத்துக் காட்டினார். `இப்படித்தான் கொடுத்துட்டு போறாங்க, ஆனால் யாரும் வந்து கேட்பதில்லை` என்றார்.
உண்மையில் இதை மறந்தவர், வேறு எங்கோ தேடிக்கொண்டிருப்பார். இந்த கடைக்காரருக்கோ அல்லது எனக்கோ இதை யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. S B I கார்டு. முகேஷ் அம்பானினு பேர் போட்டிருந்தா நான் லீவு போட்டுட்டு மும்பை போயிருப்பேன். ஆனா நீரவ் குமார்னு பேர்.
அந்த இருபது கார்டுகளை பார்த்ததும், நானே கொடுத்துவிடுகிறேன் என்று கார்டை நானே வைத்துக் கொண்டேன். பல கோடிகளை கொண்ட பெட்டி ஆனால் சாவி என்னிடம் இல்லை என்றால் எப்படி இருக்கும், அப்படி இருக்கிறது என் நிலைமை. அருகிலுள்ள கிளையில் கொடுத்துவிடலாம் என்று இருக்கிறேன். ஒரு வேளை இந்த நபர் வேறு ஊராக இருந்தால், அவர் அங்கே புகார் செய்வார். கார்ட் இந்த கிளையில். அவருக்கு கிடைக்குமா? பதில் இல்லை.
பல வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில நாவல்.படித்தேன். 60-70 களில் எழுதப்பட்டது. அதில் ஒரு தகவல். lost and found என்று துறை அல்லது சேவை மையம். எந்த நாடு என்பது நினைவில்லை. வழியில் ஏதாவது பொருள் கிடைத்தால் அதை இங்கே வந்து கொடுத்துவிட வேண்டும். தொலைத்தவரும் அவர் தேடியது போக, இங்கே வந்தும் கேட்டுப்பார்க்கலாம். யாரவது கொடுத்திருந்தால் கிடைத்துவிடும்.
உருப்படியான ஐடியா. வழக்கம்போல் இது நம் நாட்டு மக்களுக்கு வராது. வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான்.
இப்போது இணையம் வந்து உலகத்தை ரொம்பவே சுருக்கிவிட்டது. இனி தேடல் நம் கையில்தான். இப்போது கற்பனை செய்து பாருங்கள். இதற்கென்று ஒரு இணையம். நான் அதில் ATM CARD FOUND - Ahmadabad/ctm/axisbankatm/name-niravkumar-given nearby medical shop என்று மெசேஜ் போட்டுவிடலாம்.
தொலைத்தவர்கள் இந்த தளத்துக்கு வந்து அவர்கள் தொலைத்த ஏரியா அல்லது பொருள் டைப் செய்து தேடினால் கிடைக்கும் அளவுக்கு செய்யலாம்.
தொலைத்தவர் மறுநாள் கடைக்கு வந்து கேட்க, அந்த கடைக்காரர் `ஒரு ஜென்டில்மேன் நேத்து இந்த கார்ட் கொடுத்தார், அப்படியே 100 ரூபாய் சர்விஸ் சார்ஜ் கேட்டார் என்று சொல்ல, அதற்கு இவர் `புதுசா கார்ட் வாங்கணும்னா பேங்க்காரன் 300 சார்ஜ் பண்ணுவான். நீங்க அந்த நல்ல மனுஷனுக்கு 150 ரூபாயே கொடுங்கன்னு` சொன்னா எப்படி இருக்கும்.
நானும் நல்லது செஞ்சா பணம் கிடைக்குதப்பான்னு என்னை சுத்தி இருக்கிற எல்லா மனுஷனையும் நல்லவனா மாத்திடுவேன். நாடும் வளம் பெறும்.
சரி உண்மையிலேயே அப்படி ஒரு தளம் இருக்குதான்னு நெட்ல பார்த்தா...இணையத்தில் இதுபோல் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் பதிவு செய்ய சொல்கிறார்கள். ஒரு டேக் வாங்கி நாம அதுல இணைச்சுக்கணுமாம். இணைச்சா அது தொலைந்த இடத்தை காட்டுமாம். அப்படியே எடுத்த மனுஷனுக்கு புத்திமதி சொல்லி அதை திருப்பி கொடுக்க சொல்லுமாம்.😃😃😃
இதுக்கு கட்டணம் 300-1700 (இந்தியாவில்). இந்த காசுக்கு புது A T M வாங்கிடலாம். அது சரி நாம் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ பொருட்களை தொலைக்கிறோம். எல்லாவற்றுக்குமா டேக்? அவர்கள் வியாபாரிகள் அதற்கு தகுந்தாற்போல் யோசிக்கிறார்கள். சராசரி மனிதர்களுக்கு எளிமையான தீர்வு தேவை.
2 comments:
முடிவில் சொன்னதே சரி நண்பரே
வாங்க கில்லர்ஜி,
இதே ATM குறித்து இன்னொரு பதிவும் போட்டிருக்கிறேன். இந்தியாவில் முரண்பாடுகள் நிறையவே இருக்கிறது.
https://anindianviews.blogspot.com/2013/12/blog-post.html
Post a Comment