!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, March 25, 2011

வைகோ, ஜெயலலிதா. யார் பாடம் கற்கவில்லை?




வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வைகோ எடுத்திருக்கிறார். இதற்காக வைகோ ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், இது ஒரு முட்டாள்தனமான அரசியல் தற்கொலைதான். இனி இவரை காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான்.

இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களை குறிப்பிடும்போது, `ஜெயலலிதா மாறியிருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மாறவில்லை` என்று குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டும் உண்மைதான். காலம் மனிதர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் இங்கே ஜெயலலிதா மட்டுமின்றி வைகோவும் எதையும் கற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை.

Thursday, March 17, 2011

தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியல் தற்கொலை!

எப்படியோ திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. இந்த கூட்டணி ஏற்படாமல் இருந்தால் நாட்டுக்கும் நல்லது, காங்கிரசுக்கும் நல்லது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் என் ஆசையில் காங்கிரஸ் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.

கூட்டணி உறுதியானாலும் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு கேள்விக்கு இங்கே பதில் இல்லை. நம்மிடம் சொல்லப்படும் எந்த ஒரு செய்தியும் கோர்வையாக இருந்தால்தானே அதை நம்பமுடியும்? `இந்த தேர்தலில் திமுக தோற்றால், அம்மா ஒரு பக்கமும் 2 ஜி ஊழல் இன்னொரு பக்கமும் திமுகவை பந்தாடும் என்பதால், (இவர்களே உருவாக்கிக் கொண்ட) பல அவமானங்களை தாங்கிக் கொண்டு திமுக காங்கிரசுக்கு பணிந்து போகிறது` என்ற செய்தி கோர்வையாக இருப்பதால், நம்மால் இதை நம்ப முடிகிறது.

Monday, March 7, 2011

கூட்டணி முறிவு.காங்கிரசுக்கு லாபமே அதிகம்!

காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைந்து விட்டது.உண்மையில் இது எனக்கும் சந்தோஷமான செய்திதான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். நடந்துவிட்டது.

ஆனால் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை வைத்து பலரும் தங்கள் விருப்பம் போல் அர்த்தம் கொடுத்துக் கொள்கின்றனர். ஒருவேளை நானும் அப்படி இருக்கலாம். இருந்தாலும் இது எனது அலசல்.

வெளிப்பார்வைக்கு திமுக ஏதோ  மிகத்திறமையாக செயல்பட்டு காங்கிரசின் மூன்றாவது அணி திட்டத்தை முறியடித்து விட்டதாவும், காங்கிரசை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் கருத்துக்கள் பரப்படுகிறது.  ஆனால் நிஜம்?

காங்கிரஸ் உண்மையிலேயே மூணாவது அணி அமைக்க முயற்சி செய்ததா?

Tuesday, March 1, 2011

சிறை அனுபவம்: (ஜீவி செய்தி) சிறையில் ராசா எப்படி இருக்கிறார் (இருப்பார்)?

ஆ.ராசாவை, அவரது மனைவி பரமேஸ்வரி பார்த்து சொன்ன செண்டிமெண்ட் வார்த்தைகளை கேட்டு ராசா கண்கலங்க, பரமேஸ்வரியும் அழுதுவிட்டாராம். கொசுக்கடியால் ஆரம்ப நாட்களில் தூங்க முடியாமல் தவித்தாராம் ஆ. ராசா. குளிர்காலம் என்பதால், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே ராசாவுக்கும் ஏழு போர்வைகளை ஜெயில் நிர்வாகம் வழங்கியது. அவற்றில் இரண்டை கீழே விரித்தும் இரண்டை தன் உடலில் போர்த்திக்கொண்டும் தூங்குகிறாராம். ஒன்றை தலைக்கு வைத்துக்கொள்கிறார்.

ஆ. ராசா அடைக்கப்பட்டுள்ள அறையில் ஜன்னல் கிடையாது. 15 -க்கு 10 என்கிற அளவுள்ளது. காலையிலும் மாலையிலும் ரோல்கால் நடக்கிறது. அப்போது மற்ற கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நிற்கிறார். அந்த சமயங்களில் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த் பெஹுராவுடன் பேசுகிறார். ஆங்கிலப் பத்திரிக்கைகளை படிக்கிறார். தமிழ் பத்திரிகை கேட்டிருக்கிறாராம். அவரது அறையை சுற்றி மட்டும் வாக்கிங் போக அனுமதிக்கிறார்களாம்.