!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, August 26, 2012

லட்சம் கோடிகளை காப்பாற்ற, 300 கோடி போதும்


கடந்த வருடம்  `ஒரு கோடி பரிசு` என ஒரு பதிவு போட்டிருந்தேன். சமூகத்தில் நடக்கும் ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றை அரசுக்கு தெரிவிப்பவர்களுக்கு (அப்படி தெரிவிப்பவர்களில் ஒருவருக்கு), அரசு ஒரு கோடி பரிசை வழங்கலாம் என்றும், அப்படி ஒரு திட்டம் இருக்குமேயானால், பணத்தாசை காரணமாக பலர் துப்பறியும் புலிகளாக மாறி, ஊழல் குறித்த தகவல்களை அரசுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே தந்துவிடுவார்கள் என்று எழுதி இருந்தேன்.

தற்போதைய கிரானைட் ஊழலை பார்க்குபோது அது எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கு புரியும். அப்படி ஒரு நடைமுறை இருந்திருந்தால் கிரானைட் ஊழல் இந்த அளவுக்கு வந்திருக்காது. கோடிக்கு ஆசைப்பட்டு யாராவது ஒருவர் இதை அரசுக்கு முதலிலேயே போட்டுக் கொடுத்திருப்பார்.

Sunday, August 19, 2012

அகமதாபாத். சில பயண மற்றும் சிறை அனுபவங்கள்

அகமதாபாத் செல்வதாக கடலூரில் இருக்கும் ஒரு நண்பருக்கு சொல்லி இருந்தேன். நான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு கடலூருக்கு போகவில்லை. போகும் மனநிலையிலும் இல்லை. எனவே அவர் `நானே வந்து பார்க்கிறேன்` என்று ஊருக்கு போவதற்கு முதல்நாள் வந்தார்.

பழைய நண்பர்கள் சந்தித்தால் பேசுவதற்கு நிறைய விஷயம் இருக்கலாம். என்னிடம் இல்லை. காலம் என்னை மாற்றி இருந்தது. பேச்சு குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, மறுநாள் பயணம் என்பதால், வேறு வேலைகளும் இருந்தது. இப்படி பயண வேளையில் நான் பிசியாக இருந்தால் இவருக்கு போரடிக்குமே, என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினேன்.

Saturday, August 4, 2012

தற்காலிக விடுமுறை

நாளை அகமதாபாத் பயணம். இனி வசிப்பிடம் அங்கேதான். அங்கே நிலைமை செட்டாகும் வரை நேரம் கிடைப்பது சிரமமாக இருக்கலாம். எனவே அதுவரை பதிவுகளுக்கு தற்காலிக விடுமுறை.

இதுவரை பின்னூட்டங்களில் ஊக்கமளித்து, வாக்களித்து ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.