!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, May 26, 2026

தவெக வை நோக்கி.. வரிசையில் மற்ற எம் எல் ஏக்கள்...

முடிவெடுப்பது எப்படி முக்கியமோ அதேபோல் அதை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும், அப்போதுதான் அது பலனளிக்கும்.

காங்கிரஸ், விசிக போன்றவர்கள் தேர்தலுக்கு முன்பே விஜய் பக்கம் திரும்பியிருந்தால், இன்று கணிசமான எம் எல் ஏக்களும் மேலும் பல மந்திரிகளும் கிடைத்திருக்கும், கோட்டைவிட்டுவிட்டார்கள்.

இப்போதும் அதே நிலைதான். தற்போது தவெக வை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளும் மட்டமான அரசியல் செய்யும் கட்சிகள் அல்ல, எனவே விஜய்க்கு ஆபத்து இல்லைதான். இருந்தாலும் ஒரு நிரந்தர ஆட்சியை உறுதி செய்ய, அடுத்த தேர்தலுக்கு முன் மேலும் ஒட்டு வங்கியை கூட்டுவதற்கும், சில `இழுபறிகள்` விஜய்க்கு தேவை. இதைத்தான் எல்லா கட்சிகளும் செய்தன, செய்கின்றன. எனவே அரசியல்வாதியாக விஜய்யும் அதைத்தான் செய்வார்.

இனி திமுக அதிமுகவிற்கு எதிர்காலம் இல்லை என்ற நிலையில், வேறு எந்த கட்சியும் விஜய்க்கு மாற்றாக இல்லை. எனவே இப்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு வேறு வழியில்லை. ஒன்று, யாராவது புதுமுகம் வந்தால் அங்கே போவது, அல்லது விஜய் பக்கம் தாவுவது.

விஜய் பக்கம் வருவது என்ற முடிவை மூன்று எம்எல்ஏக்கள் எடுத்துவிட்டார்கள். இது நல்ல விஷயம். ஆனால் இன்னமும் மதில் மேல் பூனையாக இருக்கும் அதிமுகவை சேர்ந்தவர்களும் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் விரைவில் முடிவெடுப்பதுதான் நல்லது. குறைந்தது 10 -15 தொகுதிக்காவது இடைத்தேர்தல் தேர்தல் வந்தால் நல்லது. ஆனால் இதில் மக்களுக்கு சோகமான விஷயம் என்னவென்றால் இனி எவனும் காசு கொடுக்கமாட்டான். 

இது சரியா தப்பா என்ற வாதமெல்லாம் இங்கே எடுபடாது. இப்படி தவெக, திமுக கூட்டணி கட்சிகளை அழைத்து ஆட்சி அமைத்தது, அதிமுக எம் எல் ஏக்களுக்கு வலை வீசுவது தவறென்றால், இது நடக்காமல் அதன்பிறகு நடக்க கூடிய அனைத்து சம்பவங்களும் அதைவிட மோசமாக இருக்கும்.

ஒரு பேச்சுக்கு தவெக இந்த வேலையை செய்யவில்லையென்றால், அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. அதன்பின் திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி என்றால், இரண்டு எதிரிகள் பதவிக்காக ஓன்று சேர்வது எப்படி நியாயமாகும்? சரி, அதுவும் வேண்டாம், மறுதேர்தல் என்றால்? அது இதை விட மிகப்பெரிய செலவு. மொத்தத்தில் இது `பெஸ்ட் அமோங் த ஒர்ஸ்ட்` வகை. அதாவது விஜய் செய்வதை நியாயப்படுத்தவும் முடியாது, அதேசமயம் வேறு வழியும் கிடையாது.

ஆனால் மறுபடியும் இணையத்தில் இந்த டுபாகூர் பத்திரிகையாளர்கள் மற்றும் இணைய உபிக்கள் பொங்குகிறார்கள். பல ஊடகவியலாளர்களின் முகத்தில் சவக்களை தெரிகிறது. விஜய் குதிரை பேரம் நடத்துகிறார், கட்சியை உடைக்கிறார் என்று கதறி அவர்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். 

இந்த 2026 தேர்தல் ஒரு இடியாப்ப சிக்கல். இயற்கையோ மக்களோ உருவாக்கியவை. இந்த சூழ்நிலையில் நிலைமையை மக்களிடம் எடுத்து சொல்லி ஒரு செகண்ட் ஒபினியன் கேட்பதில் தவறில்லை.

இப்போதும் இந்த உபிகளுக்கும், அரசியலே தெரியாத, புரியாத ஊடகவியலாளர்களும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் மீண்டும் இந்த இடைத் தேர்தலில் கடுமையாக விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்யலாம்;அவரை தோற்கடிக்கலாம்.

ஆனால் இருக்கும் நிலையை பார்த்தால் அப்போதும் மக்கள் இவர்கள் முகத்தில் கறியை பூசப்போகிறார்கள். இவர்கள் அந்த அசிங்கத்தையும் துடைத்துக்கொண்டு மறுபடியும் வந்து `நாங்கள் ஊடகவியலாளர்கள், எங்களுக்கு எல்லாம் தெரியும்` நமக்கு அரசியல் வகுப்பு எடுப்பார்கள்.

உடன்பிறப்புகள் பற்றி சொல்லவே வேண்டாம். `நாங்கதான் தமிழ்நாட்டு மக்களுக்கு வயிறார (கல்வி) சாப்பாடு போட்டோம், ஆனா எல்லாரும் ஒல்லியா (தற்குரியா)  ஏன் இருக்காங்கன்?`னு நம்மளையே கேள்வி கேட்பார்கள். நமக்குத்தான் தலை சுத்தும்.

எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட சகாப்தம் முடிந்துவிட்டது. இது நிதர்சனமான உண்மை.

விஜய் நிலைப்பாரா அல்லது திராவிட கட்சிகளுக்கு இவர் அல்வா கொடுத்தது போல், இவருக்கும் அல்வா கொடுக்க யாராவது வருவார்களா என்பது அடுத்த பத்தாண்டுகளில் தெரிந்துவிடும்.

0 comments:

Post a Comment