!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, November 29, 2012

இந்த வாரம் எனக்கு நிறைய கெட்ட எண்ணங்கள் உதிக்கலாம்

சமீபகாலமாக அரசியல் குறித்த பதிவுகள் எழுத ஆரம்பித்தால், அது முற்றுபெறாமல் நின்று விடுகிறது. எனவே நானும் அங்கே அதை பார்த்தேன் இங்கே இதை கேட்டேன் என சொந்தக் கதையையும், நகர்வலங்களை பதிவாக்கி கொண்டிருக்கிறேன்.

அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு பதிவன் என்ற பார்வையில் எதை பார்த்தாலும் அங்கே ஒரு விஷயம் கிடைத்துவிடுகிறது. இந்தவாரமும் அப்படி சில...

அவனும் அப்படித்தானா?

சாப்பாட்டில் எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை. பொதுவாக எல்லோருக்கும் சிலது பிடிக்கும்; சிலது பிடிக்காது. இது இயற்கை. எனக்கு விருந்தாளி வாழ்கை என்பதால், இந்த விஷயத்தில் ஒரு சுதந்திரம் எனக்கு பறிபோனது.

Wednesday, November 28, 2012

யாராவது ஹெல்ப் பண்ணலாமே?

இணைய தொழில்நுட்ப நண்பர்களுக்கு,

பதிவுகள் எழுதி வாழ்கையை ஓட்டமுடியாது எனத்தெரியும். இருந்தாலும் அது ஓரளவாவது வருமானத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

எனக்கு ஆட்சென்ஸ் அப்ரூவலும் எப்போதோ கிடைத்துவிட்டது. இருந்தாலும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி என்ற கதையாய், அது எந்த சுகத்தையும் கொடுக்கவில்லை.

Thursday, November 22, 2012

நானும் அதை உண்மைன்னு நம்பிட்டேன் !

ஊரிலிருந்து உறவினர்கள் வந்தார்கள். ஸ்டேஷனுக்கு போயிருந்தேன். வந்தது 3 பேர். வரவேற்க போனது 7 பேர். இரண்டு ஆப்சென்ட்.

பொதுவாக பிரயாணம் என்றால், வண்டி ஏற்ற /அழைத்துவர உதவி தேவை. அதற்கு சிலர் போதும். எண்ணிக்கை அதிகமாக இருக்கவே நானும் தேவையா என நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாரும் புரோட்டகால் பார்க்கிறார்கள். எங்கே ரிசீவ் பண்ணவேண்டும், யார் வீட்டில் முதலில் சாப்பிடவேண்டும் என எல்லாவற்றிலும் கௌரவம் பார்ப்பதால், எதற்கு வம்பு என நானும் ஸ்டேஷனுக்கு போனேன்.

அங்கே எடுத்தவுடன் காமெடிதான். `பிளாட்பார டிக்கெட் வேண்டாம்; ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்` என்றார் ஒருவர். பிளாட்பாரம் டிக்கெட் 5 ரூபாய். ஆனால் இந்த மணிநகர் ஸ்டேஷனிலிருந்து வட்வா என்ற அடுத்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் 2 ரூபாய்தான். இது எப்படி இருக்கு? இப்படி இருக்கும்போது 5 ரூபாய் கொடுத்து யாரவது டிக்கெட் வாங்குவார்களா?

Thursday, November 15, 2012

அகமதாபாத் நகர்வலம்

சமீபத்தில் இணையத்தில் மூழ்கிய போது ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. `உங்களிடம் கம்ப்யுட்டர் இருந்தால்  ஆன்லைனில் பஸ், டிரைன், பிளைட் டிக்கெட் புக் செய்யலாம். மொபைல் ரீசார்ஜ் மற்றும் இதர சேவைகளும் வழங்கலாம் ` என்று ஒரு விளம்பரம்.

வேலை இல்லாதோர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருப்பதால், ஆர்வமாக கவனித்தேன். தம்பியுடைய கடை இருக்கிறது. நமக்கும் கம்ப்யுட்டரை தினம் பார்க்கவேண்டும். இது சரிவரும் என தோன்றியது. `நாங்கதான் அடுத்த அம்பானி` என்று அவர்கள் பிலடப் கொடுத்திருந்ததால், போய் பார்ப்போம் என நினைத்தேன். அவர்களுடைய அலுவலகம் சூரத்தில். நான்கு மணி நேர பயணம்.

Thursday, November 8, 2012

சில சட்டங்களும், சில அபத்தங்களும்

சமீபத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம், ஒரு முரண்பாடான சட்டம் கவனத்துக்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட முரண்பாடான சட்டம் நம் கவனத்துக்கு வருவது இது முதல்முறை அல்ல. இது தொடரும். 

சில சட்ட முரண்பாடுகள்

குஜராத்தில் (2002) பிஜேபி அரசு சட்டசபையை முன்கூட்டியே கலைத்தது. 6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டவேண்டும் என்ற விதி இருக்கிறது, எனவே விரைவில் தேர்தல் தேவை என்று வலியுறுத்தியது. மதஉணர்வு தலைதூக்கிய சூழ்நிலையில் அதை உடனடியாக அறுவடை செய்ய அவர்களுக்கு ஆசை.

Thursday, November 1, 2012

சின்மயி vs ட்வீட்டர்

இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின்மயி குறித்த செய்தி அல்லது பதிவுதான். கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவன் அப்புறம் அதிலேயே மூழ்கினேன். மோசமான ட்வீட்களை ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட, நானும் படித்து தொலைக்க, இவர்களை பொதுவெளியில் சாத்த வேண்டும் என்று ஒரு பதிவில் கருத்தும் சொல்லிவிட்டேன்.

அப்புறம் இது குறித்து கருத்து சொல்வது (கடமை!) என்ற முடிவுக்கு வர, இருதரப்பு வாதங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

இனி பிரச்சினையை பாப்போம். சின்மயியிடம் சிலர் கருத்துக்கள் கேட்க, அவர் மறுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் சொல்லிய வேறு சில கருத்துக்கள் பிரச்சினைகளை உருவாக்கி இருக்கிறது. இது போக வேறு சில விஷயங்களும் இருக்கிறது.