!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, November 15, 2012

அகமதாபாத் நகர்வலம்

சமீபத்தில் இணையத்தில் மூழ்கிய போது ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. `உங்களிடம் கம்ப்யுட்டர் இருந்தால்  ஆன்லைனில் பஸ், டிரைன், பிளைட் டிக்கெட் புக் செய்யலாம். மொபைல் ரீசார்ஜ் மற்றும் இதர சேவைகளும் வழங்கலாம் ` என்று ஒரு விளம்பரம்.

வேலை இல்லாதோர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருப்பதால், ஆர்வமாக கவனித்தேன். தம்பியுடைய கடை இருக்கிறது. நமக்கும் கம்ப்யுட்டரை தினம் பார்க்கவேண்டும். இது சரிவரும் என தோன்றியது. `நாங்கதான் அடுத்த அம்பானி` என்று அவர்கள் பிலடப் கொடுத்திருந்ததால், போய் பார்ப்போம் என நினைத்தேன். அவர்களுடைய அலுவலகம் சூரத்தில். நான்கு மணி நேர பயணம்.

அந்த வருங்கால அம்பானி, நண்பனுடைய அலுவலகத்தில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு இருக்கிறார். இப்போதைக்கு அவருக்கு அட்ரஸ் இல்லை. அட்ரஸ் இல்லாத ஆட்களை நம்பமுடியாது என்பதால், பார்க்கலாம் என்று சமாளித்துவிட்டு வந்தேன்.  போன காரியம் தோல்வி. லாபம் ஒரு பதிவு. 

சிக்கனமா இருக்கனுமாம். அதாவது மக்கள்.. 

ஆன்லைனில் டிக்கெட் எடுக்கும்போதே ஒரு செய்தி. பிரின்ட் எடுக்காதீர், உங்கள் மொபைலில் வரும் மெசேஜே போதும் என்று. பேப்பர் மிச்சமாகுமாம். சந்தோசம்.

இதை முடித்துவிட்டு இணைய உலா போனால் அங்கே ஒரு செய்தி. டெல்லியில் காங்கிரஸ் தன் பலத்தை காட்ட பேரணி நடத்தி இருக்கிறது. 50000 பேருக்கு மேல் வந்தார்களாம். உபி, ஹரியானா மாநிலங்களிலிருந்து மக்கள் பெருந்திரளாக கூடி(?) இருகிறார்கள். 

இந்த 50000 பேரும் இந்த மாநாட்டுக்காக அனாவசிய பிரயாணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர்த்தால் பெட்ரோலும் மிச்சமாகும். சுற்றுச் சூழலும் மாசுபடாது.

தமிழ்நாட்டில் இப்படிபட்ட  செய்தியை  அடிக்கடி படிப்பேன். கட்சி அல்லது சங்கம்/ ஜாதி இயக்கம் என ஏதாவது ஓன்று அவ்வப்போது இந்த அநியாயத்தை செய்யும். மாநாடு/பேரணி என அவர்கள் தங்கள் பலத்தை காட்டிகொண்டிருப்பார்கள். இதில் `இத்தனை லட்சம் பேர் எங்கள் மாநாட்டுக்கு வந்தார்கள்` என்று பெருமை வேறு. தோராயமாக இத்தனை லட்சம் மக்களின் அனாவசிய பிரயாணத்துக்கு எவ்வளவு எரிபொருள் செலவாகி இருக்கும?. கணக்கு போட்டு பாருங்கள். ரத்தம்தான் கொதிக்கும்.

அதாவது உபதேசம் நமக்குதான் அவர்களுக்கல்ல.

கோவில் vs கழிப்பறை

அதிகாலையில் டிரெயின். அருகில்தான் ஸ்டேஷன் என்பதால் வாக்கிங். தமிழ் நாட்டில் இப்படி வாக்கிங் போகும்போது, கடைகளில் தொங்கும் வால்போஸ்டரை படித்தே நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளலாம். இங்கே அது முடியாது.

இருந்தாலும் வேறு சில விஷயங்களை கவனித்தேன். இங்கேயும் பக்தி வேஷம் அதிகம். ஒவ்வொரு தெருவிலும் கோவில் இருக்கும்.

ஒரு அமைச்சர் இந்தியாவில் கழிப்பறைகளை விட கோவில் அதிகம் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கினார். இந்த விஷயத்தில் நான் அவர் பக்கம் என்பதால், கோவில்களை அதிகமாக பார்த்தால் எனக்கும் கோவம் வரும். ஊருக்கு ஒரு சில கோவில் என்றால் பரவாயில்லை. இப்போது அது தெருவுக்கு ஓன்று என்ற அளவில் வந்திருக்கிறது.

அதிகாலையில் நடக்கும்போதுதான் குறிப்பிட்ட இடைவெளியில் சில பொதுக் கழிப்பறைகளையும் பார்த்தேன். சுத்தமாகவும் இருக்குமாம். சந்தோசம். கோவில்களோடு ஒப்பிட்டால் இது 10 சதவிகிதம் கூட தேறாது. இருந்தாலும், தமிழ்நாட்டோடு ஒப்பிடும்போது இங்கே அது அதிகம்தான். பாராட்டவேண்டிய விஷயம்.

புத்தகம்

இங்கே ஆண்களே செய்தி கேட்பது இல்லை. இதில் பெண்கள் எப்படி இருப்பார்கள்? டிவி சீரியல்தான் கதி.  அவர்களுக்கு ரசிக்கிறது. நமக்கு ரசிக்கவில்லை.

என்னதான் இணையம் செய்தியை கொட்டினாலும், வீட்டில் ஒரு புத்தகம் இருந்தால், இந்த கொடுமையிலிருந்து நான் தப்பிப்பேன். தமிழ் புத்தகம் சரிவராது. வேகமாக முடிந்துவிடும். ஆங்கில நாவல் இருந்தால் நல்லது என நினைத்தேன்.

அதேசமயம் ஒரிஜினல் வாங்கி படிக்கும் அளவுக்கு நிலைமை இல்லை. மாதம் இரண்டு என பார்த்தாலும் அது 500 ரூபாயில் போய் முடியும். லைப்ரரியும் கிடையாது. சென்னையில் பிளாட்பாரத்தில் செகண்ட்ஸ் கிடைக்கும். இங்கே கிடைக்காது.

சரி, சூரத் போகிறோம் அங்கேயாவது பாப்போம் என தேடினேன். ஒரு கடையில் இருந்தது. 250 ரூபாய் என்றார். எனக்கு அதிர்ச்சி. லைப்ரரிக்காக புக் வாங்கிய அனுபவம் எனக்கு இருக்கிறது. இது டூப்ளிகேட் என தெரியும். `அவ்வளோ இருக்காது` என்று நான் சொல்ல, `இது ஒரிஜினல். விலை அதிகம்` என நமக்கே காது குத்தினார். (இணையத்தில் தேடியதில் ஒரிஜினலே 180தான்) 

சரி, வேறு கடை பாப்போம் என தேடினேன். கடைகளே இல்லை. விலை குறைய ஓன்று போட்டி வேண்டும் அல்லது வியாபாரம் அதிகமாக இருக்கவேண்டும். இரண்டும் இங்கே கிடையாது. அதுதான் இவர் காட்டில் மழை.

என்ன செய்யலாம் என முழிக்க, சென்னையிலிருந்து உறவினர் வருவதாக தகவல், அவரிடமே சொல்லிவிட்டேன். விரைவில் வந்துவிடும்.

தேர்தல்

அடுத்த மாதம் இங்கே தேர்தல். இதுவரை எங்கேயும் ஒரு வால் போஸ்டர், பிளக்ஸ் பேனர் என எதுவும் கிடையாது. சுவர்களில் எந்த விளம்பரமும் இல்லை. ஒரு பேரணி, மாநாடு கிடையாது.

தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் அது திருமண நிகழ்ச்சி போல் பரபரப்பாக இருக்கும். இங்கே அது பிறந்த நாள் விழா என்ற அளவில் கூட இல்லை. அதுக்கும் பத்து பேர் வரணுமே.

இங்கே தீபாவளிக்கு அடுத்தது 10 நாட்கள் விடுமுறையாம். ஸ்கூலுக்கும் அப்படித்தான்.  எனவே விடுமுறை கொண்டாட்டத்தில் இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒரு சந்தேகம்

பைரவி என்று ஒரு சீரியல். ஒய் ஜி மகேந்திரன் சாமியார். இந்த சீரியலில் ஒரு (சிறு) பெண்ணை ஒரு கெட்ட ஆவி பிடித்து ஆட்டுகிறது. அதற்கு தீர்வு அந்த பெண்ணை ....அம்மன் குடிகொண்டிருக்கும் அந்த ஊருக்கு கொண்டு செல்லவேண்டுமாம். அந்த அம்மனின் ஊர் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் கெட்ட சக்திகளால் ஒன்றும் செய்யமுடியாதாம். அவர் சொல்கிறார்.

வரவர கடவுளை உள்ளூர் இன்ஸ்பெக்டர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்க. அவரு ஏரியால போனாதான் அவர் ஆக்க்ஷன் எடுப்பாராம். மத்த ஏரியாவுல இருந்தா அது அவர் லிமிட் இல்லையாம். அப்புறம் என்ன வெண்டக்காய் கடவுள் இவர். இதுல அகிலாண்டேஸ்வரின்னு பட்டபெயர் வேற! 

உண்மையில் ஒய் ஜி மகேந்திரன் கடவுளை பாராட்டறாரா அல்லது ஓட்டறாரான்னே தெரியல. 


4 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

நல்லா ,கலவையா சொல்லி இருக்கீங்க!

//வரவர கடவுளை உள்ளூர் இன்ஸ்பெக்டர் ரேஞ்சுக்கு ஆக்கிட்டாங்க. அவரு ஏரியால போனாதான் அவர் ஆக்க்ஷன் எடுப்பாராம். மத்த ஏரியாவுல இருந்தா அது அவர் லிமிட் இல்லையாம். அப்புறம் என்ன வெண்டக்காய் கடவுள் இவர். இதுல அகிலாண்டேஸ்வரின்னு பட்டபெயர் வேற! //

ஹி...ஹி வாங்க நம்ம கட்சியில் ஐக்கியம் ஆகிடலாம்,நல்லா கேள்வி கேட்கிறிங்க.

நீங்களே தெருவுக்கு ஒரு கோயில் வந்து போச்சுன்னு சொல்லிட்டிங்க அதான் காரணம்.

ஒரே ஒரு கோயில் இருந்தப்போ டோட்டல் கண்ட்ரோல் இருந்துச்சு, நிறைய உப தெய்வங்கள் உருவானதால் ஜூரிஸ்ட்ரிகேஷன் லிமிட் சுருங்கிப்போச்சு :-))

அகிலாண்டேஷ்வரின்னு பொம்பளை சாமி கோவிலா இருந்தாலும் ஆம்பளை பூசாரி தான் அங்கே மணியாட்ட முடியும் , ஏன் அந்த கடவுள் ஒரு பெண் பூசாரி வைக்க சொல்லவில்லை :-))

பெண்களை எந்த கோவிலிலும் பூசாரியாக அனுமதிக்காத கடவுள் எப்படி சர்வ சக்தியோட இருக்குமோ :-))

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

ஆன்மிகம் என்பதே இப்போது காமெடி ஆகிவிட்டது. கடவுளுக்கு பில்டப் கொடுக்கிறேன்னு இவங்க பண்ற விஷயங்கள் இருக்கே... பெரிய பதிவே போடலாம்.

//ஒரே ஒரு கோயில் இருந்தப்போ டோட்டல் கண்ட்ரோல் இருந்துச்சு, நிறைய உப தெய்வங்கள் உருவானதால் ஜூரிஸ்ட்ரிகேஷன் லிமிட் சுருங்கிப்போச்சு//

இதுதான் விஷயமா! அப்ப அவரு நல்ல சாமி. கெட்ட ஆவிகளை பின்னி எடுத்துருவார்.

எவ்வளோ விஷயம் தெரிஞ்சிக்க வேண்டிஇருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்களுக்கு நன்றி...

சீரியல் எல்லாம் பார்ப்பதில்லை...
tm2

Unknown said...

பதிவும்,பதிவிடும் முறையும் அருமை.

Post a Comment