நடிகர் விஜய் திரிஷாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். எல்லோரும் கண்டிக்கிறார்கள். இது தவறுதான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் கனவு உள்ள நபர் இப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மர்மம் இதன் பின்னால் இருக்கிறது.
அவர் இப்போது இப்படி வெளிப்படையாக திரிஷாவுடன் வருவதன் முக்கிய காரணம், அவருடைய மனைவியை வெறுப்பேற்றத்தான். அந்த அளவுக்கு வெறுப்பு இவருக்கும் அவர் மனைவி மேல் இருக்கிறது. மனைவியை ஒதுக்குவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். அப்பா அம்மாவையும் ஒதுக்கும் அளவுக்கு அவர் ஒதுங்கி இருக்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மனக்காயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை அவர் வெளியே சொல்லாமல் மவுனம் காக்கிறார், தனிமையை தேடுகிறார். ஒருவேளை அந்த தனிமைதான் அவரை அரசியல் நோக்கி தள்ளுகிறதோ?
எனவே இதுபோன்ற நேரங்களில் அவர் மூத்த பத்திரிகையாளர்களை அழைத்து ஆப் த ரிக்கார்டாக அவருடைய பல்வேறு விஷயங்களில், குடும்ப விஷயமாக இருந்தாலும், அவருடைய நிலைப்பாட்டை பகிர்ந்துகொள்வது நல்லது. அது அவருக்கும் மனநிம்மதியை தரும்.
இங்கே பலர் அவர் குடும்பத்தை கவனிக்கவில்லை, பெற்றோரை கவனிக்கவில்லை எனவே அவருக்கு என்ன தலைமை பண்பு இருக்கிறது என்று ஒப்பாரி வைக்கிறார்கள். குடும்பத்தை, மனைவிகளை துணைவிகளை நன்கு கவனித்துக்கொள்ளும் திராவிட தலைவர்களின் யோக்கியதை மக்களுக்கு தெரியாதா?
நல்ல குடும்பஸ்தன் ஒருக்காலும் நல்ல தலைவனாக முடியாது. அதேபோல் வரலாற்றில் இடம்பெற்ற நல்ல தலைவர்கள் குடும்பத்தை கவனித்ததாகவும் வரலாறு இல்லை. பெரியாருக்கு குழந்தை இல்லை, பாரதியாருக்கு இருந்தும் அவர்களை கவனிக்கவில்லை. பெரும்பாலான வரலாற்று தலைவர்களின் நிலை இதுதான்.
அதற்காக விஜய் ஒரு மாபெரும் தலைவர் என்று சொல்லப்போவதில்லை. அதற்கான அறிகுறி இதுவரை தெரியவில்லை. ஆனால் குடும்பத்தை கவனிப்பவன்தான் நல்ல தலைவன் என்று யாராவது சொன்னால் அவன் ஒரு அரைவேக்காடாகத்தான் இருப்பான்.

0 comments:
Post a Comment