
ஆனால் நான் சந்தேகப்பேர்வழி. இங்கே சில செய்திகள் மர்மமாக இருக்கிறது. இந்த தாக்குதலை அமெரிக்காதான் செய்ததா அல்லது ஈரானில் இருக்கும் காமெனி எதிர்ப்பாளர்கள் இதை பயன்படுத்திக்கொண்டார்களா என்பது தெரியவில்லை.
ஈரானில் இருக்கும் உள்ளூர் எதிர்ப்பாளர்கள் காமேனியை போட்டுத் தள்ளிவிட்டு, `நாங்கள் தான் செய்தோம் எனத்தெரிந்தால் எங்களை உப்புக்கண்டம் போட்டுவிடுவார்கள்` என பயந்து அமெரிக்காவிடம் டீல் பேசியிருக்கலாம். நீங்கள் மும்பையில் குண்டு போடுங்கள். நாங்கள் சென்னையில் அவரை கொன்றுவிட்டு, அங்கே போட்ட குண்டால் இங்கே இவர் இறந்துவிட்டார் என கணக்கு காட்டிவிடுகிறோம் என பேசியிருக்கலாம். அல்லது வாட்சப் லொகேஷனை ஷேர் செய்து கதையை முடித்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்காவுக்கு இங்கே காரியம் முடிய வேண்டும். அவர் எப்படி செத்தால் என்ன, அது நடந்தால் போதும் என்ற நிலை. இன்னொரு பக்கம் டிரம்ப்புக்கும் இது லாபம்தான். எனவே இப்படி ஒரு நாடகம் அரங்கேறியிருக்கலாம்.
நான் ஏன் இப்படி சிந்திக்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் அரசியலை கவனிக்கும்போது சில விஷயங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. அந்த பகுதியில் துருக்கி முழுமையான ஜனநாயக நாடாகவும், கணிசமாக பெண்ணுரிமை பெற்ற நாடாகவும் இருக்கிறது. துருக்கியில் கருத்து சுதந்திரம் இருந்தாலும் 98 சதவிகிதம் முஸ்லிம்கள்தான். இங்கே மட்டும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
துருக்கி இப்படி கொஞ்சம் மாடர்னாக இருப்பதற்கு காரணம், கிறிஸ்துவர்கள் இவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருப்பதால், அந்த காற்று இயற்கையாகவே இவர்கள் மீதும் படுகிறது. அதற்காக கிறித்துவர்கள் யோக்கியம் என்று அர்த்தம் இல்லை. எல்லா மதங்களும் ஏதோ ஒரு முட்டாள்தனமான கருத்தியலை கொண்டிருந்தன. அதில் கிறிஸ்தவர்கள் கொஞ்சம் சீக்கிரம் திருந்திவிட்டார்கள். அவ்வளவுதான். இதில் இந்திய கிறிஸ்துவர்களை சேர்க்கவேண்டாம். அவர்கள் திருந்துவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.
ஆனால் ஈரான் வித்தியாசமாக இருக்கிறது. அவர்களின் அனைத்து அண்டை நாடுகளும் முஸ்லீம் நாடுகள்தான். இருந்தாலும் இங்கே ஓரளவு ஜனநாயகம் இருக்கிறது. பெண்ணுரிமையும் கணிசமாக இருக்கிறது. மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்தான் ஆள்கிறார். அதாவது ஈரானில் நடந்த தேர்தலில் யாருக்கும் 50 சதவிகித வாக்கு கிடைக்காத நிலையில் இறுதி சுற்று நடத்தப்பட்டு அதில் ஒருவர்தான் அதிபராக பொறுப்பேற்றுகிறார். இது ஒரு நல்ல ஜனநாயகம்தான்.
ஆனால் இவ்வளவு நல்ல செய்தி இருந்தும் இங்கே காமேனிதான் தலைவலி. யார் ஜெயித்தாலும் எல்லோரும் என் பேச்சைத்தான் கேட்கவேண்டும் என்று உச்சபட்ச அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இன்னமும் மதவாதியாக இருக்கிறார். அதனால் ஈரானிய ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறிப்போனது.
வயதின் காரணமாகவும், ஒரு காலத்தில் அமெரிக்காவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியவர் என்பதால் அங்கே பலருக்கு அவர் மீது மரியாதை. இருந்தாலும் மாறி வரும் உலகத்தை புரிந்து கொள்ளாத ஒரு அவுட் டேட்டட் தலைவர் அவர். இந்தியாவாக இருந்தால், வயசான அப்பாவை ஒதுக்கி வாரிசுகள் அதிகாரத்தை கைப்பற்றிவிடுவார்கள். அகிலேஷ் யாதவ்/ தேஜேஸ்வர் யாதவ் போன்றவர்களையும், தமிழ்நாட்டில் ஸ்டாலின், அன்புமனி என சிலரையும் பட்டியலிடலாம்.
ஈரானில் இது சாத்தியமில்லை. நிமிர்ந்து பார்த்தாலே கொன்றுவிடுவார்கள். இஸ்லாமிய வரலாறு அப்படி. எனவே ஈரானிய மக்கள் மற்றும் லிபரல் தலைவர்கள் இவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் எப்படியோ வண்டியை ஒட்டியிருக்கிர்ரகள். ஆனால் காலம் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கொடுக்குமல்லவா. அங்கேயும் சில பல போராட்டங்கள். அதில் உச்சபட்சமாக விலைவாசி ஏறி மக்கள் போராட்டத்தில் இறங்க, அந்த போராட்டத்தை அடக்க ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டபோதுதான், மக்களுக்கு அவர் மீதான வெறுப்பு அதிகரித்திருக்கிறது. அவருக்கான தேதி குறிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கு காமெனி போன்றவர்கள்தான் எதிரி, ஈரானிய மக்களோ அரசியல் தலைவர்களோ அல்ல. கணிசமான ஈரானியர்கள் அமெரிக்காவில் அகதிகளாக இருக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் அவன் வெறுக்கும் நாட்டில் போய் குடியேற மாட்டான். எனவே மக்களை பொறுத்தவரையில் அமெரிக்க எதிர்ப்புணர்வு அந்த அளவுக்கு இல்லை. காமேனி போய் சேர்வதுதான் நல்லது என்ற முடிவை ஈரானிய மக்களும் விரும்பிய பிறகுதான் அமெரிக்கா களத்தில் இறங்கியிருக்கிறது.
ஆனால் உள்நாட்டு போட்டி குழுக்களால் அவர் கொல்லப்பட்டால் அது அவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு அது உள்நாட்டு போரில் முடியும். இன்னொரு சிரியாவாக மாறும் அபாயம். எனவே அவர் போக வேண்டும், பழி நம் மீது விழக்கூடாது என்ற மனநிலையில் கணிசமான ஈரான் அரசியவாதிகளும் மக்களும் நினைத்தபோது, அமெரிக்கா அந்த வேலையை கச்சிதமாக முடிந்துவிட்டது, அல்லது அந்த பழியை ஏற்றுக்கொண்டது.
இனி கொஞ்சநாளைக்கு உள்ளூர் மக்களை ஏமாற்றவும், கனவுலகில் இருக்கும் வெளிநாட்டு இஸ்லாமியர்களையும் திருப்திப்படுத்த அங்கே சில குண்டு இங்கே சில குண்டு ஈரான் போட்டது என செய்தி மட்டும் வரும். பின்னர் நடைமுறை அரசியல் துவங்கும்.
இது ஜெயலலிதா மரணம் போலத்தான். நடந்தது ஓன்று, வெளியே சொல்லப்பட்டது வேறு ஒன்றாக இருக்கலாம். அநேகமாக என்ற வார்த்தையை அங்கங்கே போட்டுக்கொள்ளுங்கள்.
இனி ஈரான் இன்னொரு துருக்கியாக மாறும் என நம்புவோம். அதுவும் நல்ல செய்திதான்.
0 comments:
Post a Comment