கோவை கற்பழிப்பு இன்னும் ஒரு வாரம் ஓடும். அடுத்த பரபரப்பு செய்திக்காக வெயிட்டிங். இங்கே நீண்ட காலமாக இது போன்ற செய்திகளை கவனிக்கிறோம். ஆனால் இதுவரை தீர்வுதான் வரவில்லை. எனவே நாம் மாற்றி யோசிக்கவேண்டியதுதான்.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சில அடிப்படையான பிரச்சினைகள் என சில வகைப்படுத்தி அதற்கான தீர்வை கண்டுபிடிப்பது அவசியமாகிறது.
முதல் பிரச்சினை காலதாமதம். அந்தக்காலத்தில் பெண்கள் 14-15 வயதிலேயே `உலகத்தை` பார்த்தார்கள். பின்னர் அது 18-20 என மாறியது. இப்போது பெண்கள் முதுநிலை கல்வியையும் முடித்து பின்னர் வேலைக்கு போய் அங்கே இரண்டு வருடம் பணம் சம்பாதித்து, பெற்றவர்களுக்கு கொஞ்சம் உதவியாய் இருந்து அதன்பிறகுதான் 25-30 க்கு பிறகுதான் திருமணம் செய்து `உலகத்தை` பார்க்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. இது பெண்களுக்கு மட்டுமே இழைக்கப்படும் அநீதி.
ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. விரும்பும் போது அவர்கள் வெளியே போய் ஓட்டலில் `சாப்பிடலாம்`. வெளியே தெரிந்தாலும் அவமானப்படவேண்டாம்.
பெண்களுக்கும் பசிக்கிறது அவர்களுக்கும் நீதி வேண்டும் என்பதுதான் இங்கே உள்ள சிக்கல். அதை அடைவதில் உள்ள சிக்கல்கள்தான் இவ்வளவு தலைவலிக்கும் காரணம்.
காதலனுடன் போகிறார்கள் அல்லது பசிக்காக O N S போகிறார்கள் என்பது ஒரு காரணம். இன்னொரு தலைவலியும் இருக்கிறது. இப்போது பெற்றோர்கள் அவர்களின் பொருளாதார நிலைமைக்கு தகுந்தாற்போல் படிக்க வைக்காமல், மற்ற சொந்தக்காரர்கள் அவர்களுடைய பெண்களை எப்படி படிக்கவைக்கிறார்க்ளோ அதேபோலவே நம்ம பெண்ணும் படிக்கணும் என்ற மனநிலைக்கு வந்து கடன் வாங்கி, கஷ்ப்பட்டு சேர்த்துவிடுகிறார்கள்.
நம்மை சுற்றி இருக்கும் உறவுக்குள் என்னசெய்கிறார்களோ அதையே நானும் செய்வேன் என்று அம்மாக்களை எந்த வியாதி பிடிக்கிறதோ, அதே வியாதி அவர்களுடைய பெண்களையும் பிடிக்கிறது. அவர்களும் கூட படிக்கும் பணக்கார மாணவிகள் ஆடம்பரமாக வாழ்வதைப்போல் நாமும் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் வசதியில்லாத மாணவிகளுக்கு அதற்கான பணம் எங்கிருந்து வரும்? குடிக்கிற நபருடன் நீங்கள் பழகினால் மெல்ல மெல்ல அவர்கள் பாதைக்கு நீங்களும் போக்கவேண்டியதுதான். அவர்கள் பாதுகாப்பாக அனுபவிப்பார்கள், தப்பித்துவிடுவார்கள். உங்கள் கதை இப்படித்தான் போய்முடியும்.
இந்த பெண் இப்படி செய்தது குற்றமா, வியாதியா, நெருக்கடியா என்பது அந்த பெண்ணின் பொருளதார நிலைமையை கவனித்தபிறகுதான் சொல்லமுடியும்.
சரி இதுதான் பிரச்சினை என்றால், ஓட்டலில் ரூம் போடலாமே என நீங்கள் கேட்கலாம். நடிகை கஸ்தூரி கூட ஒரு பேட்டியில் `ரூம் போட வக்கில்லாதவன் கூட உனக்கென்ன வேலை` என கேட்டிருந்தார். இதற்கான பதில் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் தெரியாத மாதிரி நடிக்கிறார்கள்.
ரூம் போடுபவர்கள் ஓன்று பணக்காரர்களாக இருக்கவேண்டும் அல்லது எதற்கும் துணித்தவனாக இருக்கவேண்டும். அங்கே ரூமில் எவனாவது கேமரா வைத்து படம்பிடிப்பான். பின்னர் அதை வைத்து பிளாக்மெயில் செய்வான். அல்லது போலீசே தீடிரென்று ரெய்டு வரும். அந்த மாதிரி பெண் என்றால் கேஸ் போட்டுக்கங்க சார் என கூலாக போய்விடும். பணக்காரியாக /பணக்காரனாக இருந்தால், `எங்கப்பா பேர சொல்லவா` என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் இன்ஸ்பெக்ட்டர் வாயை முடிகொள்வார்.
இது மற்றவர்களுக்கு சாத்தியமில்லை. இது வெளியே தெரிந்தால் அசிங்கம் என நினைக்கும் சாதாரண மனிதர்கள். அவர்கள் பிளாக்மெயிலுக்கு பயப்படுவார்கள். இது போன்ற நிலையில் அந்த இன்ஸ்பெக்ட்டர்/ எஸ்பி போன்றவர்கள், `எங்களை போன்ற அதிகாரிகளுக்கு சில ஓட்டல்ல CCTV இல்லாத பரமேனன்ட் ரூம் (உபயம் . சவுக்கு சங்கர்) இருக்கும். கூப்பிடும்போதெல்லாம் அங்க வரணும்` என ஞானசேகரனாக அவதாரம் எடுப்பார்கள். இப்போது என்ன செய்வது? இதை புகாராகவும் கொடுக்கமுடியாது. இந்த செய்திதான் பெண்கள் மத்தியில் மவுத் டாக்காக உலா வரும். இனி எவளாவது லாட்ஜுக்கு போவதை பற்றி யோசிப்பாளா?
ஆகமொத்தத்தில் லாட்ஜுக்கு போனால் போலீஸ்காரன்...இங்க வந்தா ரவுடிங்க சீரழிப்பாங்க .... இதுதான் இன்றைய பதார்த்தம்.
இங்கே ஒரு முக்கியமான விஷயம். அந்த பெண் தப்பு செய்துவிட்டால், அந்த நேரத்தில் அதுபோன்ற இடத்துக்கு போகக்கூடாது என்று சொல்கிறார்கள். சொல்வது யார்? அறிவுஜீவிகள், சமூகஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், இன்னும் ஏகப்பட்ட புண்ணாக்குகள். அந்த பெண்/ஆண் செய்தது தவறு, முட்டாள்தனம்தான். இருந்தாலும் அதற்கான தண்டனை அவர்களுக்கு கிடைத்துவிட்டது.
அந்த ரவுடிகள் எதிர்காலத்தை தொலைத்தவர்கள். அவர்களும் அப்படித்தான். இருந்தாலும் அவர்களுக்கும் விரைவில் தண்டனை கிடைக்கபோகிறது. ஆனால் இங்கே வேறு சில பெருச்சாளிகள் இருக்கிறதே அதைப்பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?
இங்கே தொடர் குற்றவாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் திருந்துவதில்லை. ஆனாலும் அவர்களுக்கு பெயில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நீதிபதி இவர்களுடைய வரலாறு தெரியாமல் பெயில் கொடுத்திருக்கிறார். அவர் நிச்சயம் இந்த வழக்கு சார்ந்த இன்ஸ்பெக்ட்டரிடம் பெயில் கொடுக்கலாமா என கேட்டிருப்பார்/ கேட்கவேண்டும். நீதிபதியும் கேட்கவில்லை, போலீசாரும் எதையும் சொல்லவில்லை. . According to the section, after certain days, an accused is eligible for bail. No matter how many crimes he must have done, that is none of our business.The Law is Law. பெயில் கொடுத்துவிட்டார்கள்.
நீதிபதிகளுக்கு இங்கலீஷ் நல்லா படிக்க தெரியும் போலிருக்கிறது. எனவே சட்டப்புத்தகத்தில் எதை படித்தோமோ அதை அப்படியே நீதிமன்றத்தில் வந்து வாந்தி எடுத்துவிடுவார்கள். இந்த மாதிரி மாண்புமிகு பொள்ளமாரி நீதிபதிகள் இருக்கும்வரை சட்டம் ஒழுங்கு இப்படித்தான் இருக்கும்.
போலீசை பற்றி சொல்லவே வேண்டாம். பத்திரிகையாளர்களிடம் அவர்கள் பேசுவது வேறு மாதிரி இருக்கும். அவன் மீது இவ்வளவு வழக்கு இருக்கிறது, நாங்கள் உயிரை அடகு வைத்து பிடித்தோம். அவனை பிடிக்கும்போது காவலருக்கு அடிபட்டது அதையும் பொருட்படுத்தாமல் துரத்தி பிடித்தோம். அந்த காவலருக்கு ஒரு பாராட்டு பத்திரமும், கை செலவுக்கு 50 ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது என்றும், கமிஷனர் அவரை அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார் என்றல்லாம் செய்தி வரும். ஆனால் நீதிமன்றத்தில் அதை சொல்லமாட்டார்கள். அப்படி கஷ்டப்பட்டு பிடித்த குற்றவாளிகள் சில மாதங்களில் வெளியில் இருப்பார்கள். இதுதான் போலீசின் லட்சணம்.
ஆனால் இந்த முறை எனக்கு கூடுதலாக கொஞ்சம் கோவம் வருகிறது. காரணம் சவுக்கு சங்கர் மற்றும் அட்வகேட் தமிழ் வேந்தன் போன்றவர்களால்.
இதில் சவுக்கு சங்கர் மிஸ்டர் தமிழ்நாடு என பேர் எடுத்துவிட்டார். போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே கமிஷனர் ஒரு சைக்கோ என்று சொல்லும் அளவுக்கு துணிச்சல்மிக்கவர். ஆனால் அவருக்கும் நீதிபதிகளை பார்த்தால் பயம். எவ்வளவு வழக்குகளை இந்த திமுக அரசு போட்டாலும், நீதிபதிகள் அவரை காப்பாற்றிவிடுவார்கள். அவர்மீது உள்ள பாசத்தால் அல்ல. அவாளுடைய எதிரியான திமுகவை கடுமையாக எதிர்க்கிறார் என்பதனால். அவர்களையும் பகைத்துக்கொண்டால் அடுத்து உள்ளே போனால் அவ்வளவுதான். அந்த பயம் சவுக்கு சங்கருக்கு..
இப்போது புதிதாக கிளம்பியிருக்கும் அட்வகேட் புலி தமிழ்வேந்தன் வேறுவகை. அந்த பெண்ணுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்கிறார். இதுபோன்ற இடங்கள் ஆபத்தானவை என தெரிந்தும் அங்கே போகிறீர்கள் என்றால் நீங்கள் எல்லாம் எப்பேர்பட்டவர்கள் என தத்துவம் பேசுகிறார். இப்படி சொல்வதால் என்னை ஆணாதிக்கவாதி என்று சொல்லுங்கள். எனக்கு வருத்தமில்லை என்று உதார் விடுகிறார். இந்த விஷயத்தில் அவர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
ஆனால் தொடர் குற்றவாளிகள் திருந்தமாட்டேன்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களுக்கு பெயில் கொடுக்கும் இந்த நீதிபதிகளையும் கொஞ்சம் வாரியிருக்கலாமே? அந்த பெண் அங்கே போனது முட்டாள்தனம். இந்த குற்றவாளிகளுக்கு பெயில் கொடுத்தது அயோக்கியத்தனம். முட்டாள்தனத்துக்கு தண்டனை கிடைத்துவிட்டது. ஆனால் அயோக்கியத்தனம் செய்த நீதிபதிகள்/காவலர்கள் இன்னமும் சமுககாவலர்களாக உலா வருகிறார்கள்.
இதையெல்லாம் இந்த பில்டப் தமிழ்வேந்தன் பேசினால் அவருடைய வழக்கறிஞ்சர் தொழில் திவாலாகிவிடும். எனவே அவரும் யாரை பார்த்து குலைக்க முடியுமோ அங்கே மட்டும் குலைத்து தன்னை வீரராக காட்டிக்கொள்வர்.
இந்த பிரச்சினைக்கு பல தீர்வுகள் இருக்கின்றன. அதில் ஓன்று, குறைந்தபட்சம் கடைசியாக இந்த கிரிமினல்களுக்கு பெயில் கொடுத்த நீதிபதி யார், அது எந்த ஸ்டேஷன் சம்பந்தட்டது, அந்த இன்ஸ்பெக்ட்டர் யார் என தெரிந்து, அவர்களை கண்டித்து, முடிந்தால் அவர்களுடைய புகைப்படங்களை ஏந்தி அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்துங்கள், அவர்களை அவமானப்படுத்துக்கள். அதன்பின் தமிழ்நாட்டில் எப்படி ஒரு மாற்றம் வருகிறது என்று பாருங்கள்.

0 comments:
Post a Comment