!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, March 7, 2026

இந்தியாவின் மானம் போய்விட்டதா?


ஈரானிய கப்பல் அழிந்ததில் இந்தியாவின் மானம் போய்விட்டதாம். இந்த செய்தியை நான் கவனித்தபோது  எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டுக்கு வந்த விருந்தாளியை காப்பாற்ற வேண்டியது நம் கடமையாயிற்றே, என்ன நடந்தது என்று புரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெரியும். நம் நாட்டு பத்திரிக்கையாளர்கள் பரபரப்பு பரதேசிகள். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் என்பது எதுவும் தெரியாத ஏகாம்பரங்கள். நம்நாட்டு சமூக ஆர்வலர்கள் வேறு வகை. சமோசா சாப்பிட்டுக்கொண்டே சமூக அவலத்தை பேசுவார்கள். வடை சாப்பிடும்போது வரலாறு பேசிவிட்டு அப்படியே அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.

மொத்தத்தில் கல்யாண வீட்டுக்கு போய் `பிணத்தை எப்பப்பா எடுப்பீங்க` என்று கேட்கும் அளவுக்கு புத்திசாலிகள் இவர்கள். மங்களகரமான இசை, புத்தாடை அணிந்த மக்கள் என்றால் இது கல்யாண வீடு என்ற அடிப்படையே தெரியாத பிறவிகள் இவர்கள்.

ஆனால் நான் அப்படி இல்லை. நிறைய படிக்கவேண்டும், கவனிக்க வேண்டும். உண்மை எங்கோ ஒளிந்திருக்கும். அது கொஞ்சம் தாமதமாகத்தான் வெளிவரும். அதேசமயம் என்னாலும் உடனடியாக படிக்கமுடியவில்லை. வியாழக்கிழமை கிரிக்கெட் மேட்ச் வேறு.

வெள்ளிக்கிழமை ஷேர் மார்க்கெட். அது தொழில், அதை விட முடியாது. அதேசமயம் இந்த பக்கம் ஆர்டர் போட்டுவிட்டு  இன்னொரு டேபில் (TAP) செய்திகளை படிப்பதுண்டு. அப்படி ஒரு முறை செய்திகளில் ஆர்வமாக இருந்தபோது அரைமணி நேரம் போனது தெரியவில்லை. இந்த பக்கம் நிறைய பையிங் ஆகிவிட்டது. அன்று செவ்வாய்க்கிழமை வேறு. அரைமணி நேரத்தில் 25000 காலி. அதிலிருந்து அந்த தவறை செய்வதில்லை.

எனவே வெள்ளிக்கிழமை மார்க்கெட் முடிந்த பிறகு என்னதான் நடந்தது என்று படித்தேன். வழக்கம்போல் அதே கதைத்தான். நடந்தது ராமாயணம். இவர்கள் இங்கே அதை மகாபாரதமாக மாற்றிவிட்டார்கள்.

இனி இந்திய பத்திரிகைகள் மட்டுமின்றி பல சர்வதேச பத்திரிகைகளில் நான் படித்தது, கவனித்தது, புரிந்துகொண்டது இங்கே.

இந்தியாவின் அழைப்பை ஏற்று I F R என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 19 வெளிநாட்டு ராணுவ கப்பல்கள் வந்து கலந்துகொண்டன. இவர்களில் அனைவரும் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் நாட்டுக்கு திரும்பிப்போய்விட்டார்கள். ஆனால் ஈரானிய கப்பல் மட்டும் திரும்பி போகவில்லை.

ஏன் போகவில்லை? இங்கேதான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது. அங்கே ஈரானில் சன்டை வரப்போகிறது என தெரிந்தவுடன், `இங்கே நிலைமை சரியில்லை, எனவே நாங்கள் வரவில்லை` என ஈரான் சொல்லியிருக்கவேண்டும். அமெரிக்காவுடன் பேசிக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாம் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் ஒரு போர் கப்பலை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் அங்கே சண்டை வந்தவுடன் இவர்களால் திரும்பிப் போகமுடியாத சூழ்நிலை.

சரக்கு கப்பலாக இருந்தால், டயர் பஞ்சராகிவிட்டது என சொல்லி இங்கேயே சில மாதம் நிறுத்தி வைக்கலாம். போர் கப்பல்களுக்கு அப்படி கிடையாது. அவர்கள் வந்த வேலை முடிந்தவுடன் கிளம்பிவிட வேண்டும். இல்லையென்றால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே ஈரானின் IRIS Dena கப்பலுக்கு இரண்டு பக்கமும் சிக்கல்.

எனவே இந்திய கடல் எல்லையை தாண்டி எங்கே போவது எனத்தெரியாமல் இந்த கப்பல் தத்தளித்திருக்கிறது. இந்திய எல்லையிலும் அதைத்தாண்டிய கடல் எல்லையிலும் சரக்கு கப்பலுக்கு மட்டும் பாதுகாப்பது கொடுக்க வேண்டியதுதான் இந்தியாவின் கடமை. ராணுவ கப்பல்கள் இந்த விதிமுறையில் வராது. எனவே இந்தியாவுக்கும் தலைவலி.

`நிலைமை சரியில்லை, சரியாகும் வரை இந்தியாவில் இருக்கிறோம்` என ஈரான் ஒரு கடிதம் கொடுத்தால் இந்தியா அதற்கு ஒப்புக்கொண்டிருக்கும். ஆனால் அவர்கள் அதையும் செய்யவில்லை.

போதாக்குறைக்கு, சண்டை  ஆரம்பித்தவுடன், ஹார்முஸ் ஜலசந்தியில் ரஷ்ய, சீன கப்பலை தவிர்த்து மற்ற அணைத்து கப்பலுக்கு தடை, சுட்டு வீழ்த்துவோம் என்றும் ஈரான் அறிவித்துவிட்டது. இப்போது இந்திய கப்பலுக்கு அங்கே பாதுகாப்பு இல்லையென்றால், ஈரானிய கப்பலை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் அதன்பிறகும் இந்தியா ஒரு ஈரானிய கப்பலுக்கு கொச்சியில் அனுமதி அளித்து இருக்கிறது.

ஆக இங்கே சிக்கல் அவர்கள் இந்தியாவின் உதவியை கேட்கவில்லை என்பதும், சர்வதேச எல்லையில் ஒரு வாரமாக வீட்டுக்கு போக முடியாமல் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதுதான். இதில் யாரை குறை சொல்வது.

யுத்த நேரத்தில் வீட்டை விட்டு வந்தது தப்பு, ஆபத்தில் இருக்கிறோம் என் தெரிந்தும் இந்தியாவிடம் உதவி கேட்காதது ஒரு தப்பு, இந்திய கப்பல்களுக்கும் அங்கே தடை என்றால், இந்தியாவும் அதே கொள்கையைத்தான் கடைபிடிக்கும் என்ற உண்மையை உணராததும் ஒரு தவறு.

அல்ஜீரா பத்திரிக்கையில் ஒரு செய்தி. எழுதியவனும் ஒரு இந்தியன்தான். as it was returning home from naval drills hosted by India. During the “Milan” biennial multilateral naval exercise, அதாவது அந்த கப்பல் வீட்டுக்கு திரும்பி போய்கொண்டிருந்ததாம். விசாகபட்டணத்தில் கிளம்பி ஸ்ரீலங்கா போறதுக்கு 6 நாளா என ஆராய்ந்தால், அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.

அரபிக் கடலில் நுழைந்தால் அமெரிக்கா அடித்துவிடுவான். எனவே இந்தியாவிடம் உதவி கேட்பதா என்ற தெளிவான உத்தரவை ஈரானிலிருந்து எதிர்பார்த்து கப்பலை 10 கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டியிருக்கிறார்கள்.

ஈரானிலும் யார் தலைவன் என்றே தெரியவில்லை. இந்திய கப்பல்களை ஹார்முஸ்ல் ஜலசந்தியில் தடை செய்துவிட்டு எப்படி இந்தியாவிடம் உதவி கேட்பது என்றும் அவர்களுக்கு புரியவில்லை. இந்த குழப்பத்தில் இப்படி ஒரு சம்பவம்.  ஒரு நாட்டுக்கு சரியான தலைவன் அமையவில்லை என்றால் இதுதான் கதி.

இதுதான் நடந்தது யுவர் ஹானர். இனி தவறு யார் மீது என நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 

0 comments:

Post a Comment