இது ஒரு அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி. எனவே குறிப்பாக விஜய்யை வெறுப்பவர்கள் கொஞ்சம் மனதை தேற்றிக்கொள்வது நல்லது.
நான் நீண்ட காலமாக ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன். 20 ஆண்டுகளாக எவ்வளவோ கணக்குகள் போட்டு, நஷ்டமாகி, நொந்து போய் ஒரு வழியாக கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் வெற்றியில் இருக்கிறேன். அதாவது சமீபகாலமாக நஷ்டம் என்ற செய்தியே கிடையாது. இது ரொம்ப லேட்தான். இருந்தாலும், 'பெட்டர் லேட் தென் நெவர்' என்ற மனநிலை.
இப்படி ஷேர் மார்க்கெட் குறித்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் விலை ஏறிய ஷேர்களை மட்டும் ஆராய்வேன். அதில் சில ஒற்றுமைகள் தெரியும். அதே ஒற்றுமை வேறு ஷேர்களில் தெரிந்தால் உடனே வாங்கிவிடுவேன். அதில் 70 சதவிகிதம் எனக்கு லாபம்தான்.
அரசியலும் அப்படித்தான். இங்கே வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையை மட்டும் கவனித்தால், அங்கேயும் சில ஒற்றுமைகள் இருக்கும். அதே அறிகுறி அடுத்து வரும் தலைவர்களிடமும் இருந்தால், கிட்டத்தட்ட முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும்.
மகாத்மா காந்தி, பெரியார், இப்போது விஜய் - இதுதான் அந்த ஆராய்ச்சி.
முதலில் காந்தி. இவர் ஒரு சாதாரண மனிதராக வெள்ளையர்களின் விசுவாசியாகத்தான் இருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி காரணமாக அவரை ரயிலில் இருந்து இறக்கி அவமானப்படுத்திய போது, அவருக்குள் இருந்த தலைவன் எழுந்தான். வெள்ளையர்களை விரட்ட சபதம் பூண்டார். அதற்கான முதல் படியை அவர் எடுத்து வைத்த போது, அவர் நாற்பது வயதை தொட்டுவிட்டார்.
இதில் கூடுதல் தகவல்: காந்தியும் அவர் குடும்பத்தை அவ்வளவாக கவனிக்கவில்லை. பிள்ளைகள் பிரச்சினைளை கொடுத்தார்கள். அதில் ஒரு காலத்தில் காந்திக்கு கராச்சியில் ஒரு பெண் தோழியும் இருந்தாராம். பஞ்சாயத்து பிரச்சினை ராஜாஜி வரை சென்றது. இதற்கு காந்தி `அவர் எனக்கு ஸ்பிரிச்சுவல் வைப்` என சொன்னாராம். இந்த கோளாறுகளையும் தாண்டி அவர் ஜெயித்தார்; 'மகாத்மா' என்ற பெயரும் கிடைத்தது.
அடுத்து பெரியார்.
இவரும் சாதாரண மனிதராக இருந்தார். காசிக்கு போனார். அங்கே சாப்பிட போன இடத்தில "இது பிராமணர்களுக்கானது" என விரட்டிவிட்டார்கள். அந்த அவமானத்தில் அவருக்குள் இருந்த போராளி எழுந்தார்; பிராமணர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என களம் இறங்கினார். அப்படி ஒரு முடிவை எடுத்து அவர் காங்கிரசில் சேரும்போது அவரும் நாற்பதை தொட்டுவிட்டார்.
இந்த நாற்பது வயதில் ஆண்களுக்கு ஏதோ ஒரு உளவியல் மாற்றம் வரும் காலம் போலிருக்கிறது!
ஆனால் காங்கிரசில் பிராமணர்கள் அதிகமாக இருக்க, 'எதிரியே இவர்கள்தானே" என்று அங்கிருந்து விலகி சுயமரியாதை, நீதிக்கட்சி என கடந்து திராவிடர் கழகத்தை உருவாக்கினார். அது திமுகவாக உருமாறி விஸ்வரூபம் எடுத்து பிராமணர்களை கதற வைத்தது.
நான் சொல்வது அண்ணா தலைவராக இருந்த திமுக. அதன்பின் வந்தவர்கள் முன்றாவது தலைமுறை. அவர்களிடம் தரம் இருக்காது, அல்லது வீரியம் குறைந்திருக்கும்.
இங்கேயும் ஒரு சம்பவம். பெரியாருக்கு குழந்தை இல்லை. எனவே குடும்பத்தை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்திருந்தால் அவருடைய மனைவியும் விவாகரத்து கேட்டிருப்பார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்: இவருக்கும் ஒரு பெண் தோழி இருந்து, கடைசியில் திருமணமும் செய்தார். ஆனாலும் தமிழ்நாட்டில் அவர் கொண்டுவந்த சமுகப்புரட்சியால் 'தந்தை பெரியார்' என பெயர் பெற்றார்.
இப்போது விஜய் விஷயத்துக்கு வருவோம். கிட்டத்தட்ட இந்த எல்லா சம்பவங்களும் விஜய்க்கும் பொருந்தி வருகின்றன. அந்த தலைவர்கள் சந்தித்த அளவுக்கு இல்லை என்றாலும், ஏதோ சில அவமானங்களை இவரும் சந்தித்திருக்கிறார். உதயநிதி சொன்ன ஏதோ ஒரு வார்த்தை அவரை உசுப்பிவிட்டது. பெற்றோர், மனைவி மற்றும் பிள்ளைகளும் அவருடன் இல்லை. இது புரிந்துகொள்ள முடியாத ஒரு குழப்பம். கடைசியாக இவருக்கும் ஒரு பெண் தோழி இருக்கிறார்.
இது ஒரு வித்தியாசமான குழப்பம்தான். ஆனாலும், அந்த ஒற்றுமைகள் விஜய்க்கு பொருந்திப்போகிறது.
அந்த வகையில் இது போன்ற தனிமை பெரும்பாலும் மனிதர்களை பொதுநலனை நோக்கித்தான் திரும்பும். அது விஜய் வாழ்க்கையிலும் நடக்கலாம்; அதுதான் இதுவரை நடந்திருக்கிறது.
ஆனால் காந்தியும் பெரியாரும் இந்துக்களாக இருந்ததால் அவர்கள் மக்கள் ஆதரவை விரைவாக பெறமுடிந்தது. விஜய் பாதி இந்துவாக இருப்பதால் அந்த தியரி இங்கே வேலை செய்யுமா என தெரியவில்லை.
இது ஓரளவு நம்பக்கூடிய தியரி என்பது மட்டும் நிஜம்

0 comments:
Post a Comment