!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, March 25, 2026

தட்டில் முகம் தெரிகிறது சிறுத்தைகளே...


ஒரு நீதிக் கதை. யார் வீட்டுக்காவது விருந்தாளியாக போனால் தட்டில் முகம் தெரிவதற்கு முன் வந்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். இணையத்தில் இருப்பவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்பதால் இதற்கு விளக்கம் தேவையில்லை.

திருமாவளவனின் கதை அப்படித்தான் இருக்கிறது. தன்மானம் சுயமரியாதை என பெரியாரிஸம் பேசுவார். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பது அவருக்கே தெரியாது போலிருக்கிறது. விண்ணில் பெரியார் இதையெல்லாம் பார்த்து இந்நேரம் தலையில் அடித்துக்கொண்டிருப்பார்.

தேமுதிக கூட்டணியில் வரும் முன்பே அவர்களுக்கான சீட்டை பேசி முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருப்பார்கள். ஆனால் அதை விசிகவுடன் ஒப்பந்தம் போட்ட பிறகு அறிவிப்பது என்பது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்.

இனி நம்முடைய வேலை ஏன், எதற்கு இப்படி நடக்கிறது என ஆராய்வதுதான். எனக்கு புரிந்த வரையில் இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

இந்தியில் கபில்ஷர்மா என்ற காமெடி ஷோ. அதில் ஒரு நடிகர் வந்திருப்பார். அந்த நடிகருக்கு ஒரு தயாரிப்பாளர் தொடர்ந்து பட வாய்ப்புகள் கொடுப்பார். `உங்களுக்கு மட்டும் எப்படி தொடர்ந்து வாய்ப்பு அவர் கொடுக்கிறார்?. அவருடைய சிடி ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?` என்று நகைச்சுவையாக கபில் அந்த நடிகரிடம் கேட்பார். அதுபோல் எனக்கும் சந்தேகம். திருமாவளவனும் அப்படி ஏதாவது திமுகவிடம் மாட்டிக்கொண்டாரா? இப்படி திமுகவிடம் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?

திராவிட கட்சிகளின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. என்னை எதிர்த்தால் பல விஷயங்கள் லீக்காகும் என்ற மிரட்டல் இப்போது சாதாரண அரசியலாகிவிட்டது. பிஜேபி அதில் இப்போது முன்னணியில் இருக்கிறது.

நான் பிரம்மச்சாரியத்தை நம்புவதில்லை. மோடியும் சரி திருமாவளவன் அவர்களும் சரி, எங்கேயாவது போய் டீ, காபி சாப்பிட்டிருக்கலாம். அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இல்லை என்பதால் அதை ஒரு பிரச்சினையாகவும் நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில் வில்லங்கம் இல்லாமல் அது பெய்ட் சர்விஸ் என்றால், சரி போ என விட்டுவிட வேண்டியதுதான்.

இதில் குடும்பஸ்தன் பயப்பட மாட்டான். ஆனால் பிரம்மச்சாரிகளுக்கு தங்கள் பிம்பம் உடைந்துவிடும் என்ற பயம். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அனுமானம்தான்.

இதில் மோடி எப்ஸ்டீன் ஃபைலில் இருக்கிறார் என்றெல்லாம் ஒரு கதை ஓடுகிறது. மோடியை வெறுப்பவர்களுக்கு அது அரசியல். நான் எதையும் லாஜிக்காக பார்ப்பவன். அவர் இந்தியாவில் எங்கேயாவது `டீ` சாப்பிட்டார் என்று சொன்னால் அதை நான் நம்புவேன். ஆனால் ஒரு அரசியல் தலைமை.. வெளிநாடுகளில்...அதற்கான வாய்ப்பு இல்லை.

இனி இன்னொரு காரணத்துக்கு வருவோம். ஊழல், வாரிசு, மதவாதம் என்பதெல்லாம் மக்களுக்கு பழகிவிட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு, ரவுடியிசம், கற்பழிப்பு போன்றவைதான் தற்போது திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இந்த திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

திருமாவளவன் உபிக்களை விட தீவிரமாக திமுகவிற்கு முட்டு கொடுக்கிறார். ஆனால் சிறுத்தைகள் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்குகிறார்கள் என்ற தகவல் புள்ளிவிவரங்களாக காவல்துறை மூலம் முதல்வருக்கு வந்திருக்கும்.

இங்கே ஸ்டாலின் லாப நஷ்ட கணக்கை போடும்போது, சிறுத்தைகளால் நஷ்டம் அதிகமாக தெரிகிறது. எனவே சிறுத்தைகளை கழட்டி விட, வேண்டுமென்றே அவர்களை அவமதிக்கிறார். அவர்களாக வெளியேறவேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால் திருமாவளவன் அவர்களோ, நீங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம், போக மாட்டோம் என அடம் பிடிக்கிறார்.

நியாயமாக பார்த்தால் விசிகவிற்கு சீட் கூடுதல்தான். ஆனால் பேரம் பேசுபவனுக்கு கிடைக்கும் மரியாதை விசுவாசத்திற்கு இல்லை என்பதுதான் இங்கே சிக்கல். எல்லா கட்சியிலும் இதுதான் நிலைமை. ஆனால் திருமாவளவன் தன்னை அடிக்கடி சுயமரியாதை சிங்கம் என்று சொல்வதால் அவரை மட்டும் இங்கே இழுக்க வேண்டியதாயிற்று.

0 comments:

Post a Comment