!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, August 7, 2026

வார்த்தைகளில் இருக்கும் கொழுப்பு ...

நான் ஏற்கனவே 'ஒருவேளை இப்படியும் இருக்குமோ?' என்று ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அது உண்மைதான் போலிருக்கிறது; ஆதவ் அர்ஜுனின் சட்டமன்ற பேச்சு அதை உறுதிப்படுத்துகிறது. இது வெளிப்படையாகக் கொடுத்த பணமாக இருக்கலாம். கருப்பாக எவ்வளவு கொடுத்தாரோ?

உதயநிதி "எங்கப்பா யார் தெரியுமா?" என்று அதிகாரத் திமிரில் ஏதோ ஓர் இடத்தில் விஜய்யிடம் தெனாவட்டாகக் கேட்டிருக்கிறார்.

இந்த பக்கம், அப்பா—அதாவது ஸ்டாலின்—மார்ட்டினிடம் "உங்களுக்கு நான் ஏதாவது செய்கிறேன்" என்று சொல்லி 900 கோடி வாங்கி நாமம் சாத்திவிட்டார். இந்தச் செய்தி சட்டமன்றத்திலேயே பதிவாகிவிட்டது.

விஜய்க்கு உதயநிதிக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வெறி. அங்கே மார்ட்டின் பணம் போன கடுப்பில், ஸ்டாலின் கதையை முடிக்க வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார். அதே சமயம், திமுகவின் ஒவ்வொரு அமைச்சரும் மற்ற திமுகவினரும் அதிகாரத்திற்கு வந்தாலே செய்யும் அளப்பறையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இப்போது மக்களும் திமுகவைச் சாற்றுவதற்கு வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொருபக்கம் எடப்பாடி, "ஈரான் அதிபர் கமேனிக்கே நான்தான் அரசியல் சொல்லிக் கொடுத்தேன்" என்ற இறுமாப்பில் யாரையும் மதிக்காமல் ஆணவத்தில் ஆடினார்.

இப்படி எல்லோரும் கடுப்பில் இருக்க, வாய்ப்பு 'விஜய்' எனும் சூறாவளி ரூபத்தில் வர, எல்லோருமாகச் சேர்ந்து திமுகவை அழவைத்துவிட்டார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? உடம்பில் இருக்கும் கொழுப்பை விட வார்த்தைகளில் இருக்கும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது! இந்த உண்மையை இப்போதுதான் திமுகவினர் உணர்ந்திருப்பார்கள்.

ஆனால் உதயநிதி உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு இன்னும் சில பாடங்கள் தேவைப்படுகின்றன; அவை விரைவில் வரும். அதன்பிறகுதான் அவருக்கு எதார்த்தம் புரியும். புரிந்தாலும் இனி திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை; ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.  

0 comments:

Post a Comment